- Tuesday
- August 4th, 2026
இலங்கையின் நல்லிணக்கம் தொடர்பில் அரசாங்கம், மேற்கொள்ளும் மெதுவான நடைமுறைகள் மற்றும் வெளிப்படைத் தன்மையில்லாமை என்பன குறித்து, மனித உரிமை காப்பாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக, சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 33வது அமர்வில் சர்வதேச மன்னிப்பு சபை எழுத்துமூல அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளது. அந்த அறிக்கையிலேயே மேற்கூறப்பட்ட விடயங்கள் கூறப்பட்டுள்ளது....
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு இரசாயன ஊசி ஏற்றப்பட்டதாக கூறப்படும் விடயம் குறித்து ஆராய, குழுவொன்றை நியமிக்குமாறு, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. தமிழ் வழக்கறிஞர்கள் அமையத்தினால் (Tamil Lawyers’ Forum) இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. விஞ்ஞானிகள் மற்றும் வைத்தியர்கள் அடங்களாக இந்த குழுவை நியமிக்குமாறு, அவர்கள் கோரியுள்ளனர். சில...
வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள மேலும் 700 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு பாதுகாப்பு தரப்பினர் இணங்கியுள்ளதாக யாழ்.அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் தெரிவித்துள்ளார். காங்கேசன்துறை, கீரிமலை மற்றும் மாவிட்டபுரம் ஆகிய பிரதேசங்களில் காணப்படும் காணிகளே இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். சுமார் 26 வருடங்களுக்கு மேல் இராணுவத்தினரின் பிடியில் காணப்படும் வலி வடக்கின்...
வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்ற முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனைகள் இந்த வாரமும் மேற்கொள்ளப்படவுள்ளன. வடமாகாணத்தின் ஐந்து மாவட்ட வைத்தியசாலைகளிலும் கடந்த 2 ஆம் மாற்று 9 ஆம் திகதிகளில் முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனை முன்னெடுக்கப்பட்டன. இந்நிலையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 16 ஆம் திகதி மீண்டும் முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனை இடம்பெறவுள்ளதாக...
யாழ் குடாநாட்டில் இடம்பெற்று வருகின்ற போதைப் பொருள் கடத்தல் போதைப் பொருள் வியாபாரம் மற்றும் அடாவடித்தனமான குற்றச் செயல்களுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளார். போதைப் பொருளை ஒழித்தல், யாழ் மத்திய கல்லூரியின் 200 ஆவது ஆண்டு விழா, யாழ் புதிய பொலிஸ் நிலையக் கட்டிடத்...
உடுவில் மகளிர் கல்லூரி பிரச்சினை தொடர்பில் சட்டத்துக்கு உட்பட வகையில் தன்னாலான சகல நடவடிக்கைகளையும் எடுக்கவுள்ளதாக, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உறுதியளித்ததாக, போராட்டம் நடத்தும் தரப்பினர் தெரிவித்துள்ளனர். உடுவில் மகளிர் கல்லூரி அதிபரான சிராணி மில்ஸை, பாடசாலையின் ஆளுநர் சபை நீக்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த 3ஆம் திகதி தொடக்கம் பாடசாலை மாணவிகள் சிலரும் பெற்றோர்களும்...
தேசிய பாதுகாப்புக்காக வலிகாமம் வடக்கில் 1000 ஏக்கர் காணி தேவைப்படுவதாகவும் அதனை கையகப்படுத்துவதற்கு காணி அமைச்சரிடம் அனுமதியைக் கோரியுள்ளது இராணுவம். தற்போது இராணுவம் கையகப்படுத்தி வைத்திருக்கும் இந்தக் காணிகளிலேயே அந்த 1000 ஏக்கரும் அடங்கியுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். அத்துடன் வலிகாமம் வடக்கில் பொதுமக்களின் 700 ஏக்கர் காணிகளை விடுவிக்க...
தமிழ் மக்களின் உயிர் இழப்புகளுக்கான பரிகாரங்கள் என்ன? தம் அன்புக்குரியோரைப் பறிகொடுத்தவர்கள் நீதியையும் நியாயத்தையும் வேண்டி நிற்பதில் பிழை என்ன? தமிழ் மக்களுக்கு ஏதாவது விமோசனம் இதுவரையில் கிடைக்கப் பெற்றதா? இவை அனைத்தும் கேள்விக் குறிகளாகவே இருக்கின்றன என, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு...
போலிக்கடவுச்சீட்டின்மூலம் ஜேர்மனிக்குச் செல்லவிருந்த சுப்பையா சுதன் எனும் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் பூனே விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்டதையடுத்து, சிறீலங்காவுக்கு நாடுகடத்தப்பட்டார். கடந்த 1ஆம் திகதி லொஹேகான் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சுதன் சுப்பையா, விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினராகச் செயற்பட்டவர் எனத் தெரியவந்துள்ளதாக இந்திய புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆலங்கொட்டல் என்ற இடத்தைச் சேர்ந்த...
முல்லைத்தீவு, வட்டுவாகல் பாலத்தின் ஊடாக 500க்கு மேற்பட்ட இலங்கைக் கடற்படையினர், கோத்தாபாய கடற்படைமுகாமுக்கு இன்று சனிக்கிழமை (10) சென்றுள்ளனர். காலை 10 மணியளவில் முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தின் ஊடாக நூற்றுக்கு மேற்பட்ட சிங்கள மக்களும் 500க்கு மேற்பட்ட கடற்படையினரும் அணி அணியாக குறிப்பிட்ட முகாமுக்குள் சென்றுள்ளனர். குறித்த கடற்படையினருக்குச் சிறப்புக் கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளதாகவும் கடற்படையினர் உறவினர்களுடன்...
'வடக்கின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தடையாகக் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக்கொள்வதற்காக, திணைக்களங்கள், அதிகார சபைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வைப் பெற்றுத் தருவேன்' என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கு இன்று வெள்ளிக்கிழமை (09) விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 200ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வில் கலந்துகொண்டார்....
முன்னாள் போராளிகள் 26பேருக்கு முதற்கட்டமாக விச ஊசிப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் ஐந்து மாவட்டங்களிலும் உள்ள மருத்துவமனைகளில் இந்தச் சிறப்பு மருத்துவப் பரிசோதனைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் 9 முன்னாள் போராளிகளும், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தலா 7 முன்னாள் போராளிகளும், வவுனியா...
புனர்வாழ்வு பெறாத 275 முன்னாள் போராளிகள் வடக்கில் சுதந்திரமாக உலாவருவதாகவும், அவர்கள் தாமாக முன்வந்து சரணடையாத போதிலும் அவர்களால் தேசிய பாதுகாப்புக்கோ, பொதுமக்களுக்கோ எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்று, யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார். பலாலி இராணுவப் படைத் தலைமையகத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வொன்றில் கலந்து...
வடக்கில் மீண்டும் சாதி, பேதம் அதிகரித்துள்ளதாகவும், இதன் காரணமாக வடக்குமாகாண மக்கள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை மீண்டும் தேடுகின்றனர் என வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். சிங்கள தொலைக்காட்சி சேவையொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தற்போது, வடக்கில் சாதி, பேதம் அதிகரித்துள்ளதாகவும், இதனால் வடக்கு மாகாண மக்கள் தன்னிடம் தலைவர்...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தொழிற்சங்க ஆலோசகருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட 5 பேருக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
கிளிநொச்சி பரவிபாஞ்சான் மக்கள் தங்களின் அனைத்து காணிகளும் விடுவிக்க வேண்டும் எனக் கோரி தொடர்ச்சியாக ஏழு நாட்களாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்த மக்கள் இன்று எட்டாவது நாள் முதல் உண்ணாவிரத பேராட்டமாக மாற்றியுள்ளனர். தாங்கள் எல்லோராலும் கைவிடப்பட்ட நிலையிலேயே இவ்வாறு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட தீா்மானித்ததாக அவா்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனா். இது தொடர்பில் மேலும்...
உடுவில் மகளிர் கல்லூரியின் அதிபர் சிரானி மில்ஸை பதவியிலிருந்து நீக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கல்லூரி மாணவிகளினால் கடந்த 3 ஆம் திகதி சனிக்கிழமை முதல் முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம், நேற்று செவ்வாய்க்கிழமை (06) முதல், உண்ணாவிரதப் போராட்டமாக மாறியுள்ளது. பாடசாலை மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். உணவு தவிர்ப்பில்...
உயர் மட்டத்தின் உத்தரவுகளினால் இராணுவம் தவறிழைத்திருக்கலாம் எனவும் அவை தொடர்பில் விசாரணை நடத்தி உண்மையைக் கண்டறிவதில் தவறில்லை எனவும் இராணுவம் குற்றமிழைத்திருந்தால் அதன் உண்மைத்தன்மை தொடர்பில் தெரிந்து கொள்ள முயற்சிப்பதில் எவ்வித தவறும் கிடையாது எனவும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார். யுத்தக்குற்றச்சாட்டு தொடர்பிலான விசாரணைக் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் மங்கள சமரவீர...
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒழுக்கமானவராக திகழ்ந்திருக்கின்றார் என இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்றுள்ள மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, 800 பக்கங்களில், ‘நந்திக்கடலுக்கான பாதை’ என்ற நூலை எழுதி வெளியிட்டுள்ளார். இந்நிலையில் கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு அவர் வழங்கிய நேர்காணல்...
Loading posts...
All posts loaded
No more posts
