சிக்குன்குனியா, ஸீகா குறித்து சிவப்பு எச்சரிக்கை!

ஸீகா மற்றும் சிக்குன்குனியா போன்ற நோய்கள் குறித்து ஸ்ரீலங்காவில் சிவப்பு எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் கொழும்பு துறைமுகம் ஆகிய பகுதிகளில் இந்த நோய்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சிக்குன்குனியா இந்திய தலைநகர் புதுடில்லியில் வேகமாக பரவிவருவதுடன், ஸீகா வைரஸ் சிங்கப்பூரில் அதிகமாக பரவி வருவதாகவும் தற்போது தாய்லாந்திலும் அதன்...

தலைவர் பிரபாகரனின் வித்துடலை தகனம் செய்தோம்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வித்துடலை நாம் எரித்துவிட்டு அவ்விடத்தைவிட்டு அகன்றுவிட்டோம். அப்போது நான் அங்கிருந்து நினைவுப்பொருளாக அவரது அடையாள அட்டையினை எடுத்து வைத்திருந்தேன். அதனை என்னுடனேயே வைத்துள்ளேன். இறுதிக்கட்டப் போரில் தாம்தான் விடுதலைப்புலிகளின் தலைவரைக் கொன்றது எனக் கூறிக்கொள்ளும் 53ஆவது பிரிகேட்டிற்குத் தலைமைதாங்கிய மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன ஆங்கில ஊடகமொன்றுக்கு மேற்கண்டவாறு...
Ad Widget

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பதவி விலகவேண்டும்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் 2016ஆம் ஆண்டுக்குள் இனப்பிரச்சனைக்குத் தீர்வு கிடைத்துவிடும் எனச் சொன்னார். 2016ஆம் ஆண்டுக்குள் தீர்வு கிடைக்காவிட்டால் அவர் டேவிட் கமரூன் செய்ததைப்போல் உடனடியாகப் பதவி விலகவேண்டுமென தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்கு அதில் அங்கம்...

பூமியை நோக்கி வரும் பேராபத்து! உயிரினங்கள் அழிந்து போகுமா?

பூமிக்கு அருகாமையில் ஆபத்து ஒன்று ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாக புவியியல் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். பூமிக்கு அருகில் இன்று பயணிக்கும் பாரிய விண்கல் ஏதாவதொரு சமயத்தில் பூமி மீது மோதுண்டால், பாரிய அழிவுகள் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது. இந்த விண்கல்லின் நீளம் 200 அடி நீளம் கொண்டதென கண்டறியப்பட்டுள்ளது. எனினும் அவ்வாறான வாய்ப்புகள் மிகவும் குறைவு என துறைசார்...

யாழ். மாவட்ட செயலக நிர்வாகக் கட்டடம் பிரதமரால் திறந்து வைப்பு

யாழ். மாவட்ட செயலக நிர்வாகக் கட்டடத் தொகுதி இன்று (சனிக்கிழமை) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டு, பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. புதிய நிர்வாக அலுவலகத்தை திறந்து வைக்கும் முகமாக யாழ். சென்ற பிரதமருக்கு அங்கு பொன்னாடை போர்த்தி தமிழ் கலாச்சார முறைப்படி பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழ் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையிலான வாத்தியங்கள்...

உடுவில் மகளீர்கல்லுாரி தொடர்பாக பெற்றோர் சங்கம் விடுத்த அறிக்கை

உடுவில் மகளீர் கல்லுாரி தொடர்பாக பெற்றோர் சங்கம் அறிக்கை ஒன்றை ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளது. அந்த அறிக்கையின் முழு வடிவமும் இணைக்கப்பட்டுள்ளது. உடுவில் மகளிர் கல்லூரியின் புதிய அதிபர் நியமனம் தொடர்பாகவும், அதன் போது நடைபெற்றுள்ள நேர்மையற்ற செயற்பாடுகள் தொடர்பாகவும் பாடசாலை மாணவர்களின் பெற்றோர் என்ற வகையிலும், பாதிக்கப்பட்ட ஒரு தரப்பு என்ற வகையிலும், கல்லூரிச் சமூகத்தின்...

எழுக தமிழ் மக்கள் பேரணி எழுச்சியுடன் அமைய வேண்டும் : சித்தார்த்தன் எம்.பி அழைப்பு

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் 24ஆம் திகதி நடத்தப்படவுள்ள எழுக தமிழ் எனும் தொனிப்பொருளிலான மக்கள் பேரணி பாரிய எழுச்சியுடன் அமைய வேண்டும் என தெரிவித்துள்ள த.தே. கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், இதில் அனைத்து தமிழ் மக்களும் பங்கேற்க வேண்டுமெனவும் அழைப்பு விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே...

யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் அநீதிக்கெதிராகப் போராடியபோது படித்தவர்கள், பாமரர்கள் அமைதியாக இருந்தது ஏன்?

அண்மையில் யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் அநீதிக்கெதிராக போராடியபோது படித்தவர்கள், பாமரர்கள் என்ன செய்தார்கள்? என யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ஒரு அநீதியினைத் தட்டிக் கேட்பதற்கு அந்த மாணவிகள் ஓடிச் சென்ற இடங்களைப் பார்க்கின்றபோது எனக்கு வெட்கமாக இருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார். அகில இலங்கை கம்பன் கழகம் நடாத்தும் கம்பன் விழா நேற்றைய...

கிளிநொச்சியில் பாரிய தீ விபத்து! பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் நாசம்!!

கிளிநொச்சி பொதுச் சந்தையில்,வெள்ளிக்கிழமை 16-08-2016 இரவு ஏற்பட்ட பாரிய தீ காரணமாக புடவை மற்றும் பழக் கடைகள் என்பன முற்றாக எரிந்து அழிந்துள்ளன. தீயை கட்டுப்படுத்த முயன்றவர்களில் 5 இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது நேற்றிரவு , 8.30 க்கும் ஒன்பது மணிக்கும் இடையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்துக் காரணமாக சந்தையின் அனைத்து...

‘திலீபனின் ஆசையை நிறைவேற்றுவோம்’ : முன்னாள் போராளிகள் சபதம்

‘தியாகி திலீபனின் அஹிம்சை வழிப் போராட்டத்தினை முன்மாதிரியாகக் கொண்டு அஹிம்சை வழியில் போராடி தமிழ் மக்களுக்கான ஜனநாயக உரிமைகளை வென்றெடுப்போம்’ என முன்னாள் போராளிகள் சபதம் எடுத்துள்ளனர். தியாகி திலீபன் அஹிம்சை வழிப் போராட்டத்தின் 29வது நினைவு நாளான இன்று (வியாழக்கிழமை) யாழ்.நல்லூர் வடக்கு வீதியில் அவர் உண்ணாவிரதம் இருந்த இடத்திலும், நல்லூர் வீதியில் உள்ள...

வலி வடக்கில் பின்நகர்த்தப்படும் இராணுவத்தினரது பாதுகாப்பு வேலிகள்!!

அடுத்த மாதம் 2 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருகை தரும் போது வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்து விடுவிப்பதற்கு இனங்காணப்பட்ட 800 ஏக்கர் காணிகளிலும் மக்களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான முன்னாயத்தங்கள் அரச அதிகாரிகளினாலும், இராணுவத் தரப்பினாலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக இனங்காணப்பட்ட பகுதிகளில் உள்ள உயர்பாதுகாப்பு வலய...

எழுக தமிழ்! : தமிழ் மக்கள் பேரவை

தமிழர் தாயகத்தில் சிங்கள – பௌத்த மயமாக்கலை உடன் நிறுத்தக் கோரியும் தமிழ் தேசியத்தின் இறைமை, சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான ஒரு சமஸ்டித் தீர்வை வலியுறுத்தியும் யுத்தக் குற்றங்களுக்கும், இனப்படுகொலைக்குமான சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் உலகின் கவனத்தை ஈர்ப்பதற்கான மாபெரும் பேரணி ! செப்ரெம்பர் 24, 2016 (சனிக்கிழமை) அன்று யாழ் நகரில் !! வடக்கு...

கிளிநொச்சி பளை பகுதியில் கோர விபத்து : மேலும் ஒருவர் பலி

கிளிநொச்சி பளை, புதுக்காடு சந்திக்கு அருகில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் ஐவர் பலியாகியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புநோக்கி பயணித்த தனியார் பேரூந்துடன், வவுனியாவில் யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த வான் ஒன்று மோதியுள்ளது. வவுனியாவில் இடம்பெற்ற மரண வீடொன்றில் பங்கேற்றுவிட்டு யாழ்ப்பாணம் திரும்பிக்கொண்டிருந்தவர்களே இந்த விபத்தில் சிக்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இன்று...

இளைஞர் வெட்டிக் கொலை :ஒருவர் அடையாளம் காணப்பட்டார்

மானிப்பாய் - சங்குவேலி பகுதியில் இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். சங்குவேலி - சிவஞானப்பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த சிவகுமாரன் பிரணவன் (வயது 31) என்பவர் கடந்த மாதம் 17ம் திகதி, வெட்டிக் கொலை செய்யப்பட்டார். குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பிரதேச குற்றப் புலனாய்வு...

வான் ஒன்றும் பேருந்தும் மோதிக்கொண்டதில் நால்வர் பலி

கிளிநொச்சி, பளை பிரதேசத்தில் வான் ஒன்றும் பேருந்து ஒன்றும் மோதிக்கொண்டதில் நான்கு பேர் உயிரிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமாகாணத்தில் அரச சேவையில் இணைத்துக்கொள்ளும் வயதெல்லை அதிகரிப்பு

வட மாகாணத்தில் அரச சேவையில் இணைத்துக்கொள்பவர்களின் வயதெல்லையை 40 ஆக உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளதாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். அரச சேவையில் இணைத்துக்கொள்ளும் வயதெல்லை தற்போது 35 ஆக காணப்படுகின்ற நிலையில், வேலையற்ற பட்டதாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களின் கோரிக்கைகளை ஆராய்ந்த பின்னர் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். யாழ் நகரிலுள்ள...

வன்னியில் படை முகாம்கள் அகற்றப்பட்டால் மனிதப் புதைகுழிகள் வெளிவரும்: வீரவன்ச எச்சரிக்கை

வன்னியிலுள்ள படை முகாம்கள் அகற்றப்பட்டால் அங்குள்ள மனிதப் புதைகுழிகள் வெளிவரும் அபாயம் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்கட்சியின் முக்கியஸ்தரான நாடாளுமுன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச அச்சம் வெளியிட்டுள்ளார். அவ்வாறான நிலை ஏற்பட்டால் சிறிலங்கா இராணுவம் மீது போர் குற்றங்கள் சுமத்தப்பட்டு தண்டனை விதிக்கப்படலாம் என்று குறிப்பிட்டுள்ள அவர் இந்த நிலைமையைத்...

 இறுதி யுத்தத்தின்போது இலங்கை மீது அமெரிக்கப்படை தாக்கவிருந்தது

'இறுதிக்கட்ட யுத்தத்தின்போது, இலங்கை மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தக்கூடிய சாத்தியம் இருந்தது. இது தொடர்பில் அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் சீனாவின் இராணுவத் தளபதியும் எச்சரிக்கை விடுத்திருந்தனர் என்று, இறுதி யுத்தத்தின் போது, புலிகள் இயக்கத்துடன் போரிட்ட 53ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியாகச் செயற்பட்ட மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார். 35...

வெள்ளை வானில் மூவர் கடத்தல்: யாழ் நீதிமன்ற வளாகத்தில் பதற்றம்

யாழ்ப்பாணத்தில் நீதிமன்ற வழக்கினை நிறைவு செய்து வெளியில் வந்த மூன்று இளைஞர்களை, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் வெள்ளை வானில் ஏற்றிச்சென்றுள்ளதால் பிரதேசத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை சம்பவத்தின் பின்னர் இடம்பெற்ற கலவரத்தின் போது, யாழ்.நீதிமன்ற கட்டிடத் தொகுதி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறித்த வழக்கு, இன்று செவ்வாய்க்கிழமை யாழ்.நீதிமன்றில் நடைபெற்றது. குறித்த...

யாழ் பல்கலைக்கழக ராக்கிங் கொடுமையால் கல்வியை இடைநிறுத்திய மாணவன்!!

யாழ் பல்கலைக் கழகத்தில் இடம்பெறும் பகிடி வதைக் கொடுமையினால் தனது பல்கலைக் கழக கல்வியினை இடை நிறுத்தி தினக் கூலிவேலைக்காக மாணவன் செல்லும் அவலம் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பகுதியினைச் சேர்ந்த மாணவன் இந்த ஆண்டு முதலாம் ஆண்டில் ஆண்டில் இணைந்து கொண்டார் . இணைந்த நாட்கள் முதல் ஒரே பகிடிவதைக் கொடுமையால் பாதிக்கப்பட்டதாகவும் இதன் காரணத்தினால்...
Loading posts...

All posts loaded

No more posts