- Wednesday
- August 6th, 2025

வலி.வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள மேலும் 460 ஏக்கர் பொதுமக்களின் காணியை மீள்குடியேற்றத்திற்காக விரைவில் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படும் என ஜனாதிபதி செயலகம் உறுதிசெய்தது. ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் நேற்று கொழும்பில் இடம்பெற்ற உயர்மட்ட கலந்துரையாடலிலேயே மேற்படி காணி விடுவிப்பு உறுதிசெய்யப்பட்டது. வடக்கின் மீள்குடியேற்றம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பதற்கான கலந்துரையாடல் ஒன்று நேற்று ஜனாதிபதி...

இடம்பெயர்ந்து 31 நிவாரண மையங்களில் தங்கவைக்கப்படுள்ள 971 குடும்பங்களை மீள்குடியேற்றும் வகையில் கீரிமலைப் பகுதியில் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணியில் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ் இராணுவத்தினருடன் இணைந்து முன்னாள் போராளிகள், ஈடுபட்டுள்ளனர். இச் செயற்றிட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி, இராணுவத் தளபதி லெப்டினன்...

யாழ்ப்பாணத்தில் இந்துக்களின் விரத நாளான ஆவணி ஞாயிறுதினத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்து ஆலயம் காவல்துறையினரின் பாதுகாப்புடன் இடித்தழிக்கப்பட்டு உள்ளது. குறித்த ஆலயத்தில் இருந்த முருகனின் வேலினை காவல்துறையினர் தம்முடன் எடுத்து சென்று உள்ளனர். யாழ்.காரைநகர் ஆலடி வேல் முருகன் ஆலயமே அவ்வாறு இடித்தழிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பில் தெரிய வருவதாவது , குறித்த ஆலயமானது...

மயிலிட்டிப் பிரதேசத்தில் சில பகுதிகளை விடுவிப்பதாக பலாலி இராணுவமுகாம் பொறுப்பதிகாரி மேஜர் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க மயிலிட்டிப் பிரதேச மக்களுக்கு உறுதியளித்துள்ளார். பலாலி இராணுவத் தளபதி தலைமையிலான குழுவினருக்கும், மயிலிட்டிப் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் வசிக்கும் சில முகாம்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்குமிடையிலான இரகசிய முக்கிய சந்திப்பொன்று நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை பலாலி...

பேராதனை பல்கலைக்கழக முதலாம் வருட விஞ்ஞான பீட தமிழ் மாணவர்களை 2 ம் வருட சிங்கள மாணவர்கள் திட்டமிட்டு தாக்கியதை போல் வழி மறித்து தாக்கிய சம்பவம் ஒன்று நேற்று(திங்கட்கிழமை) இரவு 7.00 மணியளவில் நடந்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, குறிஞ்சி குமரன் கோவிலுக்கு சென்று வரும் வழியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த முதலாம்...

புனர்வாழ்வு பயிற்சிகளை பெற்ற விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கு விஷ ஊசி போட்டப்பட்டுள்ளதா என்பதை அறிய மேற்கொள்ளப்பட உள்ள சர்வதேச மருத்துவப் பரிசோதனைக்கு ஆலோசனை வழங்க ஐவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் இந்த குழுவை நியமித்துள்ளார். வட மாகாண சுகாதார அமைச்சர் பீ. சத்தியலிங்கத்தின் பரிந்துரைக்கு அமைய இந்த...

சாவகச்சேரி – நாவக்குழி பிரதேசத்தில் பெண்ணொருவர் தீ வைத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளவர் கைதடி – நாவக்குழி பிரதேசத்தை சேர்ந்த 39 வயதான பெண்ணொருவர் என காவற்துறை தெரிவித்துள்ளது.அந்த பெண்ணின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி இவ்வாறு தீ வைத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த சம்பவம் தொடர்பில் அவரது கள்ள காதலரை கைது செய்துள்ளதாக சாவகச்சேரி காவற்துறை தெரிவித்துள்ளது.

தமிழர் தாயகத்தில் இடம்பெற்றுவரும் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று உமையாள்புரம் பிள்ளையார் கோவிலிலிருந்து கிளிநொச்சி நகர் வரையான நீதிக்கான நடை பயணம் ஆரம்பமாகியுள்ளது. இந்த நீதிக்கான நடை பயணத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், சாந்தி சிறிஸ்கந்தராசா மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்களான தம்பிராஜா குருகுலராஜா, சுப்பரமணியம் பசுபதிப்பிள்ளை, தமிழ்தேசிய...

'நல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்தும் காணிகளை விடுவிக்காது ஏமாற்றும் நடவடிக்கையினை மேற்கொள்ளுமாக இருந்தால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்குத் தயாராகுங்கள்' என வலி. வடக்கு மீள்குடியேற்ற குழுவின் தலைவர் எஸ்.சஜீவன் தெரிவித்துள்ளார். வசாவிளான், பலாலி தெற்கு சமூக நல அமைப்பின் வருடாந்த ஒன்றுகூடலும் புதிய நிர்வாகசபை தெரிவு செய்யும் நிகழ்வு, வசாவிளான் மேற்கு பொதுநோக்கு மண்டபத்தில் சனிக்கிழமை (20) இடம்பெற்றது....

யாழ்.குடாநாட்டில் திடீரென மீண்டும் இடம்பெறத் தொடங்கியுள்ள குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு நல்லூர் திருவிழாக் காலத்தை முன்னிட்டு, துரிதச் செயற்பாட்டு பொலிஸ் படையணியை (Rapid Action Police Force) உருவாக்கி சம்பந்தப்பட்டவர்களை உடனடியாகக் கைது செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தி யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு பணித்துள்ளார். யாழ்.குடாநாட்டுக்கான பிரதி...

யாழ்ப்பாணம் கீரிமலைப் பிரதேசத்தில் புதிதாக 100 வீடுகளை அமைக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கான நிதியை சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியமர்வு, இந்துமத அலுவல்கள் அமைச்சு வழங்கியுள்ளது. இந்த நிர்மாணப் பணிகளில் இராணுவத்தினர், புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள், மற்றும் வீட்டுப் பயனாளிகளும் ஈடுபட்டுள்ளனர். ஒக்டோர் மாதம் மழை காலம் ஆரம்பிப்பதற்கு முன்னர் இதற்கான பணிகள் பூர்த்தி செய்யப்படவுள்ளன. நலன்புரி...

கிளிநொச்சி, இரணைமடு, கனகாம்பிகை அம்மன் ஆலய வளாகத்தில் புத்த விகாரை அமைப்பது பௌத்தர்கள் இல்லாத இடங்களில் திட்டமிட்டு பௌத்த சின்னங்களை அமைப்பது உள்ளிட்ட செயற்பாடுகளை கண்டித்து நாளை திங்கட்கிழமை கிளிநொச்சியில் மாபெரும் பேரணி ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி ஆனையிறவில் இருந்து கரடிப் போக்கு சந்தி வரை இடம்பெறவுள்ள இந்தப் பேரணிக்கு கிளிநொச்சி மாவட்ட பொது...

விடுதலைப்புலிகள் நடாத்திய பொங்குதமிழை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நடாத்த முயற்சிப்பதாக சிங்கள ஊடகம் ஒன்று குற்றம் சுமத்தியுள்ளது. விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் பேரவையினால் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி கிளிநொச்சியிலும் 9ஆம் திகதி யாழ்ப்பாணத்திலும் பொங்கு தமிழ் நிகழ்வுகள் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு முன்னதாக இங்கே விடுதலைப்புலிகள் பொங்குதமிழ் நிகழ்வுகளை நடாத்தியதாகத்...

ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க கடற்படை மற்றும் விமானப்படை மருத்துவக்குழு முன்னாள் போராளின் உடல்நிலையைப் பரிசோதிக்க மறுத்துள்ளதாக வட மாகாண முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தடுப்பு முகாம்களில் வைத்து முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி மற்றும் விசம் கலந்த உணவு வழங்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில், 59 ஆவது வடமாகாண சபை அமர்வின்போது முன்னாள் போராளிகளின்...

யாழ்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 3 மாணவர்களை யாழ் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை யாழ் நீதிமன்ற நிதிபதி இழஞ்செழியன் பிறப்பித்துள்ளார். கடந்த மாதம் யாழ் பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் இவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கலை, முகாமைத்துவம் மற்றும் வர்த்தகப் பிரிவுகளை சேர்ந்த 3 மாணவர்களே...

சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கோ அச்சுறுத்தல்களுக்கோ ஒரு போதும் அடிப்பணிய போவதில்லை. அனைத்து சவால்களையும் எதிர் கொண்டு நாட்டை பாதுகாப்போம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நல்லாட்சி அரசாங்கத்தின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு நேற்று மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். நாங்கள் ஆட்சியை பொறுப்பேற்பதற்கு முன்னர் இலங்கை...

சுழிபுரம் காட்டுப்புலம் பகுதியில் வீடொன்றுக்குள் நேற்று இரவு 11 மணியளவில் புகுந்த இனந்தெரியாத மூவர் இளம் குடும்பஸ்தர் ஒருவரை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். சரமாரியாக வெட்டியதில் குடும்பஸ்தர் உயிரிழந்தார். அவரது மனைவி வெட்டுக் காயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்களின் இரட்டைக் குழந்தைகள் இவர்களுக்கு அருகில் இருந்தபோதும் இந்தச் சம்பவத்தில் அவர்களுக்குக்...

புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் போராளிகளை இன்று மருத்துவப் பரிசோதனைக்காக கலந்துகொள்ளுமாறு வடக்கு மாகாணசபையிலிருந்து அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபை கட்டட அலுவலகத்துக்கு வருகை தந்த முன்னாள் போராளிகள் நீண்டநேரமாகக் காத்திருந்துவிட்டு வீடு திரும்பியுள்ளனர். அண்மையில் வடக்கு மாகாணசபையில் புனர்வாழ்பின் விடுதலைசெய்யப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படவேண்டும் என தீர்மானம்...

வடக்கில் அமைக்கப்பட்டுவரும் பௌத்த விகாரைகளை அகற்ற முடியாது என்று புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். பௌத்த விகாரைகளை அமைப்பதற்கு பிக்குகள் உட்பட சிங்கள மக்களுக்கு சகல உரிமைகளும் இருப்பதாகத் தெரிவித்துள்ள அமைச்சர் சுவாமிநாதன், நிர்மாணிக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைகளையோ, புத்தர் சிலைகளையோ அகற்ற முடியாது என்று குறிப்பிட்டதுடன், அவ்வாறு செய்ய தான் தயாரில்லை...

வடக்கு மாகாணத்தில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவதில் என்ன தவறு இருக்கின்றது என்று வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே கேள்வி எழுப்பினார். யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து சிங்கள மக்களே இல்லாத தமிழர் பிரதேசங்களில் ஏராளமான புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளதுடன், தமிழ் மக்களின் காணிகளையும், இந்து ஆலயங்களின் காணிகளையும் ஆடாத்தாகப் பிடித்து பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டுவருவது...

All posts loaded
No more posts