- Thursday
- August 7th, 2025

வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயப்பகுதியில் இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ள 11 கிராமசேவையாளர் பிரிவுகள் விடுவிக்கப்படமாட்டாது என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. தேசிய பாதுகாப்புக் காரணமாக அக்காணிகள் விடுவிக்கப்படாது எனவும், அந்தக் காணிகளின் உரிமையாளர்களுக்கு பொருத்தமான அளவில் இழப்பீடு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. இது தொடர்பான கடிதம் யாழ்.மாவட்டச் செயலகத்தினால் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள 171 குடும்பங்களுக்கு நேற்றைய தினம்...

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப் பிள்ளை பிரபாகரனுடைய பெயரை, இறுதிக் கட்ட ஈழப் போருக்குப் பின்னர் காணாமல் போனோர் தொடரபான அலுவலகத்தில் பதிவு செய்ய தான் தயாராக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சிவாஜிலிங்கம் கூறியுள்ளார். பிரபாகரனின் சகோதர, சகோதரிகள் சம்மதம் தெரிவித்தால் இதைச் செய்ய தான் ஆயத்தமாக இருப்பதாகவும் சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்....

அற்புதன் நடராஜன் மற்றும் மகேஸ்வரி உட்பட யாழில் நடைபெற்ற முக்கிய கொலைகளுடன் ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் உறுப்பினர்கள் பலர் சம்பந்தப்பட்டுள்ளதாக, அக் கட்சியின் நீண்டகால உறுப்பினராக இருந்த, சு.பொன்னையா தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். கடந்த 1990ம் ஆண்டு முதல்...

எங்கள் நிலங்களை விடுவிக்கும்வரை தொடர்ந்து போராடுவோம் என்றும், நில மீட்புக்கான போராட்டத்தில் உயிரை விட தயாராக உள்ளதாகவும் வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து மல்லாகம், கோணப்புலம் நலன்புரி முகாமில் தங்கியிருக்கும் மயிலிட்டி மக்கள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிடம் உறுதியாகத் தெரிவித்தனர். அத்துடன், தங்களுக்கு மாற்றுக் காணி, வீடு உள்ளிட்ட அரசாங்கத்தின் எந்த உதவியும் வேண்டாம் என்றும்,...

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் என்ற வகையில் நாடு பிளவுபடுவதற்கு தாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என எத்ர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் உறுதியளித்துள்ளார். நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றுபட வேண்டும் எனக் குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர், யுத்தத்தால் ஏற்பட்ட பாதிப்பு எதிர்கால சந்ததியினருக்கு ஏற்படாமல் இருக்க நடவடிக்கைககள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மாத்தறை...

இலங்கையில் தொடர்ந்தும் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு வருவதாகவும், மக்கள் தொடர்ந்தும் அச்சமான சூழலில் வாழ்ந்து வருவதாகவும் இன ரீதியான அநீதிகளை ஒழிப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் குழு தெரிவித்துள்ளது. ஐ.நா. சபையில் நடைபெற்று முடிந்த இன ரீதியான அநீதிகளை ஒழிப்பதற்கான சர்வதேச மாநாட்டின் இறுதியில் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும்...

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் தமிழ் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறசேனவுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார். அவர் அனுப்பியுள்ள அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, பேராதனை பல்கலைக்கழகக் கல்வி பயிலும் இணைந்த சுகாதார விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த தமிழ் பேசும் மாணவர்கள் பலர் தமது பெற்றோருடன் என்னை...

கிளிநொச்சியின் இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தில் அமைக்கப்படும் புத்த விகாரை திட்டமிட்ட குடியேற்றத்தை நோக்கமாக கொண்டது என்று கூறும் பெயர் குறிப்பிட விரும்பாத கிளிநொச்சி இராணுவ அதிகாரி ஒருவர், இதுவே தமிழ் - சிங்கள மக்களிடையே பாரிய பிரச்சினைகளை உண்டு பண்ணும் விளைவை கொண்டது என்று தாம் கருதுவதாகவும் குறிப்பிடுகிறார். கிளிநொச்சியின் இரணைமடு மற்றும் முறிகண்டியை...

இறுதி யுத்தத்தில் நாற்பதாயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறுவதும், அறுபதாயிரம் பொதுமக்கள் காணாமல்போனதாக கூறுவதும் பொய்யான கருத்தாகும் என இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பு பாதுகாப்பு மாநாடு தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இராணுவத்தளபதி இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த இராணுவத்தளபதி,...

"எனது மனைவி, பிள்ளைகள், உறவினர்களைப் படுகொலைசெய்த கருணா அம்மானை உடன் கைது செய்யுங்கள். எமது குடும்பத்தை அழித்தவர்களுக்கு மரண தண்டனை வழங்கினாலே எனது ஆத்மா சாந்தியடையும்."- இவ்வாறு ஏறாவூர் நகர் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நல்லிணக்க செயலணி அமர்வில் காமிது லெப்பை மீராசாகிப் (வயது - 78) என்ற வயோதிபர் தெரிவித்தார். அவர்...

நேற்றையதினம் (வியாழக்கிழமை) வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே கிளிநொச்சி மாவட்டத்துக்கு பயணம் செய்து கிளிநொச்சி பொதுச் சந்தையையும் கனகபுரத்தில் முன்னர் கட்டப்பட்ட பொருளாதார மத்திய நிலையத்தையும் பார்வையிட்டார். இதன்பின்பு அவர் மக்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கும்போது, நான் ஒரு அமைச்சர் கிடையாது, நான் ஒரு ஆளுநர் அதாவது ஜனாதிபதியின் ஒரு தூதுவர். இந்த வருடம்...

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதே செயலர் பிரிவில் செல்வபுரம் கிராமத்தில் தந்தை,தாய்,பிள்ளைகளென ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உண்ணாவிரத போராட்டத்தினை நேற்று (வியாழக்கிழமை) காலை முதல் ஆரம்பித்துள்ளனர். தமக்கு 7 வருடங்களாக அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தும், குறித்த பிரதேச செயலர் பிரிவில் கடமையாற்றும் கிராம சேவையாளரும், காணி அலுவலரும் ஒரு பக்கச் சார்பாக செயற்படுவதாக...

பிரிட்டனின் சசெக்ஸ் பிராந்தியத்தின் கெம்பர் சேண்ட்ஸ் கடலில் மூழ்கி 5 இலங்கைத் தமிழர்கள் உயிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இறந்தவர்களில் சகோதரர்கள் இருவரும் மேலும் ஒருவரும் புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. கடற்பரப்பில் உள்ள மண்திட்டியில் உதைபந்து விளையாடிக் கொண்டிருந்த இவர்கள் கடல் அலை அள்ளிச் சென்றதாகத் தெரிவிக்கபபடுகிறது. ரவி நிதர்ஷன் (வயது 22), ஶ்ரீஸ்கந்தராஜா...

பலாலியில் மீள்குடியேற்றம் செய்யப்படாத பகுதியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா ஆயல வருடாந்த பெருநாளைக் கொண்டாட பலாலி பாதுகாப்பு படைத்தலைமையகம் அனுமதி வழங்கியுள்ளது. பலாலி வடக்கு ஜே. 254 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள 1500 குடும்பங்கள் புனித ஆரோக்கிய மாதா ஆலய வருடாந்த திருநாள் திருப்பலி ஆவணி மாதம் 29 ஆம் திகதி கொடியேற்றத்துடன்...

யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற கைகலப்பு தொடர்பான வழக்கு விசாரணையினை எதிர்வரும் 22ஆம் திகதிக்கு யாழ். நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் வி.ரி.சிவலிங்கம் ஒத்தி வைத்துள்ளார். கடந்த மாதம் யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற புதுமுக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வின் போது, விஞ்ஞான பீட மாணவர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. அந்த மோதலின் போது, தன்னைத் தாக்கியது பல்கலைக்கழக மாணவர்...

வடக்கில் நூதனமான முறையில் மோசடியில் ஈடுபட்டு வருபவர்கள் தொடர்பில் இளைஞர் யுவதிகள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். யாழ்.மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த வேலையற்ற இளைஞர்கள், யுவதிகளை இலக்கு வைத்து மோசடி சம்பவம் இடம்பெற்று வருகின்றது. குறித்த மோசடி மூலம் இதுவரை நூற்றுக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, வேலையற்ற இளைஞர் யுவதிகளை...

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட 3 ஆம் பிட்டி கிராமத்திற்குச் செல்லும் பிரதான வீதிக்கு அருகில் இராணுவ முகாம் அமைப்பதற்கான காணியினை மாந்தை மேற்கு பிரதேச செயலர் வழங்கியுள்ளார். குறித்த காணி இராணுவத்தினருக்கு வழங்கப்பட்ட நிலையில் நேற்று நில அளவையாளர்கள் அப்பகுதிக்கு வந்து நில அளவீடு செய்து எல்லைக்கல் பதித்துவிட்டுச் சென்றுள்ளனர். பிரதேச செயலரின்...

இன அடக்குமுறைக்கெதிராக போராடுவதற்காக எதிர்வரும் 14ஆம் திகதி யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக அனைத்துத் தமிழ் மக்களையும் ஒன்றிணையுமாறு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் செயற்குழுவின் ஏற்பாட்டில் யாழ். மாவட்டத்தினைப் பிரதிநித்துவப்படுத்தும் பொது அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலொன்று அண்மையில் யாழ். பொதுநூலகத்தின் கேட்போர் கூடத்தில்...

தமிழ் அரசியல் கைதிகளை எவ்வித நீதியான விசாரணைகளும் இன்றி தொடர்ந்தும் தடுத்து வைத்துக்கொண்டு நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாதென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை நேற்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றியபோதே சம்பந்தன் மேற்குறித்தவாறு தெரிவித்தார். பயங்கரவாத தடைச்சட்டம்...

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுச்சுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள செல்வபுரம் கிராமத்தில் தனிநபர் ஒருவருக்குச் சொந்தமான காணியில் அரசாங்கத்தின் சிரமசக்தி வேலைத்திட்டத்திற்கான அடிக்கல் இன்று (செவ்வாய்க்கிழமை) நாட்டப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் சிரமசக்தி வேலைத்திட்டத்தின் கீழ், குறித்த பிரதேசத்தில் விளையாட்டு மைதானம் ஒன்றிணை அமைப்பதற்காகவே இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. குறித்த காணியானது, யுத்தத்தின் போது கணவனை...

All posts loaded
No more posts