Ad Widget

சம்பந்தனின் முறைப்பாட்டினால் ஜனவரியிலிருந்து அரச அதிகாரிகள் இடமாற்றம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் புகாருக்கமைய வடக்கு மாகாண அரசாங்க அதிகாரிகளுக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் இடமாற்றம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

வடக்கில் பணியாற்றும் அரச அதிகாரிகளை தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவருவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முற்சிகளைப் மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு செயற்பாடாகவே, வடக்கு மாகாணத்தில் செயற்பட்டு வரும் பிரதேச செயலர்கள், உதவிச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகசேவை அதிகாரிகள் என மக்கள் மயப்பட்ட அரசாங்க அதிகாரிகளை இடமாற்றம் செய்வதற்கு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த வாரம் சிறீலங்காப் பிரதமரைச் சந்தித்துக் கலந்துரையாடியபோதே இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்போது யாழ்ப்பாணத்தில் டக்ளஸ், ஆளுநர் போன்று அமைச்சர்களுக்கு விசுவாசமான அரசாங்க அதிகாரிகளே பதவிகளில் இருக்கின்றனர் எனவும் அவர்கள் எவரும் தமது உத்தரவுகளை கருத்திலெடுப்பதில்லையெனவும் கூட்டமைப்பினர் தமது அதிருப்தியை பிரதமரிடம் வெளியிட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன்காரணமாகவே, ஐந்து வருடங்களுக்கு மேலாக பதவியிலிருப்பவர்களை வேறு இடங்களுக்கு மாற்றுவதற்காக அவர்களது விபரங்களை பிரதமரின் செயலாளர் கோரியிருப்பதாகவும் தெரியவருகின்றது.

Related Posts