- Sunday
- August 10th, 2025

'யுத்தத்தை முன்னெடுத்துச் சென்றவர்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், உயிர்வாழ்பவர்கள் மத்தியில் இல்லை. அதேபோல, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஆட்சி அதிகாரத்தில் இல்லை. ஆகையால், பிரச்சினைகளை என்னுடன் இலகுவாகப் பேசித் தீர்த்துக்கொள்ளலாம்' என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பிரிவினைவாதக் குழுக்கள், வடக்கிலும் தெற்கிலும் இருப்பதனால், சிற்சில பிரச்சினைகள் எழுகின்றன. வடக்கில்,...

இலங்கை சிறைச்சாலைகளில் உரிய விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி கிளிநொச்சியில் கவன ஈர்ப்புப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. சிறை கைதிகளின் உறவினர்கள், காணாமல் போனோரின் உறவுகள், பொதுமக்கள் என பலரும் இதில் கலந்து கொண்டு கைதிகளின் விடுதலைக்காகக் குரல் கொடுத்தனர். நாட்டில் நல்லாட்சி மலர வேண்டும், அதன்...

கிளிநொச்சி மாவட்டம், பரவிபாஞ்சான் பிரதேசத்து மக்கள் இராணுவத்தினரால் அபக்கரிக்கப்பட்டுள்ள தமது காணிகளை மீள ஒப்படைக்குமாறு கோரி மீண்டும் 5ஆவது நாளாக தொடர்ந்தும் கவயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பரவிபாஞ்சான் பிரதேசத்தில் மூன்றரை ஏக்கர் காணியை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். கடந்த 31ஆம் திகதி குறித்த மூன்றரை ஏக்கர் காணி...

வலிவடக்கில் தமது சொந்த நிலங்களில் மக்களை மீள்குடியேற அனுமதிக்காவிடின் எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் அப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து அவர்கள் மீள்குடியேறுவார்கள் என வலிவடக்கு மீள்குடியேற்ற ஒன்றியம் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்றையதினம் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கமும் வலிவடக்கு மீள்குடியேற்ற ஒன்றியமும் இணைந்து யாழ்பாடி விருந்தினர் விடுதியில் செய்தியாளர் சந்திப்பை நடாத்திய வேளையே மேற்கண்ட எச்சரிக்கை...

பருத்தித்துறை நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டதாகக் கூறி, நேற்று சனிக்கிழமை (03) அதிகாலை 4 மணியளவில் வல்வெட்டித்துறை ஆதிகோயிலடிப் பகுதியிலுள்ள வீடு ஒன்றின் முன் கதவினை உடைத்து அத்துமீறி நுழைந்த பருத்தித்துறைப் பொலிஸார் வீட்டிலுள்ள அனைவரையும் துப்பாக்கிமுனையில் அச்சுறுத்தியுள்ளனர். தமிழ் உப பொலிஸ் பரிசோதகர் தலைமையில் அதிகாலையே மதுபோதையில் குறித்த நபரின் வீட்டுக் கதவினை அத்துமீறி உடைத்து...

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில், ஐக்கிய நாடுகளின் தலையீடு போதுமானதாக இருந்திருக்கவில்லை என ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கி மூன் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும் இறுதி யுத்தத்தில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றனவா என்பதை, இராஜந்தந்திர ரீதியில் இலாவகமாக மூன் தவிர்த்திருந்தார். தவிர, விசாரணைகளின்போது சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பை முன்மொழிவதாகவும் கட்டாயப்படுத்தவில்லை என்றவாறான கருத்துக்களையே மூன் வெளிப்படுத்தியிருந்தார்....

ஐ.நா செயலாளர் நாயகம் பான்கீ முன் அவர்களது யாழ் வருயை முன்னிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கவனயீர்பு போராட்டம் யாழ் பொது நூலகத்தின் முன்னால் இடம்பெற்றது. பெருமளவான மக்கள் அணிதிரண்டு இலங்கை அரசுக்கு எதிராகவும் ஐ.நாவின் ஆதரவு கோரியும் போராட்டங்களில் ஈடுபட்டனர். மேற்படி போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களை பானீகீனின் பிரதிநிதி ஒருவர்...

தமிழர் தாயகப் பிரதேசத்தில் இராணுவத்தின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பொதுமக்களின் காணிகளை விடுவித்தால் மாத்திரமே, மக்கள் தங்களது சொந்த வீடுகளுக்கு திரும்ப முடியும் எனவும் ஐ.நா பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக அமைப்புக்களுடைனான சந்திப்பில் உரையாற்றுகையில்...

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் கவனத்தை ஈர்க்கும் வகையில் யாழ் நூலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதேவேளை இன்று நண்பகல் 12.30 மணியளவில் யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக கூடிய சுமார் பல நூற்றுக்கணக்கான காணாமல்போனவர்களின் உறவுகள் தங்கள் உறவினர்களின் புகைப்படங்களையும் தாங்கியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில்...

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து வாழும் மக்களை எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் முழுமையாக மீள்குடியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ-மூனுடனான நேற்றை சந்திப்பு தொடர்பில் விளக்கமளிக்கும் வகையிலான ஊடக பிராதானிகளுடனான சந்திப்பு இன்று (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி மாளிகையில்...

புனர்வாழ்வு பெற்று சமூகத்தடன் இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் உடல்நலம் தொடர்பில் மருத்துவ ஆலோசனைகள் வழங்கும் நடவடிக்கை இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளது. வடக்கு மாகாணத்தில் 5 மாவட்டங்களிலும் தெரிவுசெய்யப்பட்ட வைத்தியசாலைகளில் மருத்துவ அதிகாரிகளிடம் ஆலோசனைகள் மற்றும் சேவைகளை முன்னாள் போராளிகள் பெற்றுக்கொள்ள முடியும் என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணசபையில் எடுக்கப்பட்ட...

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம், பான்கீ மூன் அவர்கள் நாளை வெள்ளிக்கிழமை (02-09-2016) யாழ்ப்பாணம் விஜயம் செய்யவுள்ளார். அவரது விஜயத்தின்போது யுத்தம் முடிந்து ஏழு ஆண்டுகளாகியும் மீள் குடியேற அனுமதிக்கப்படாதுள்ள மயிலிட்டி, பலாலி உள்ளிட்ட வலிவடக்கு, கேப்பாபிலவு உட்பட வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இடம்பெயர்ந்த மக்களின் உடனடி மீள் குடியேற்றத்தை வலியுறுத்தியும்! போரின் போதும்,...

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் உடைக்கப்பட்ட புத்தர் சிலைக்குப் பதிலாக புதிய புத்தர் சிலையொன்று சிங்கள தேசிய அமைப்பு என்ற அமைப்பின் செயலாளர் அறம்பொல ரத்தனசார தேரரின் தலைமையில் புதன்கிழமை மாலை வைக்கப்பட்டுள்ளது. கனகராயன்குளத்தில் புத்தர் சிலை உடைக்கப்பட்டதாகத் தகவல் கிடைத்ததும், அனுராதபுரத்தில் புதிய புத்தர் சிலையொன்றைப் பெற்று அதனை எடுத்துச் சென்று அங்கு பிரதிஸ்டை செய்ததாக...

விச ஊசி விவகாரத்திற்கு தீர்வு காணும் முகமாக முன்னாள் போராளிகளுக்கு இவ்வாரம் முதல் மருத்துவப் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மத்தியில் தமது உடல்...

யுத்தம் காரணமாக துப்பாக்கி, மோட்டார், குண்டுகள் மற்றும் துப்பாக்கி சன்னங்கள் ஆகியவற்றை உடலில் தாங்கியவாறு யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் 410 பேர் வாழ்கின்றமை இனங்காணப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கருத்து தெரிவிக்கையில், 'தற்போது இனங்காணப்பட்டுள்ளவர்களில் 113 பேர் பாடசாலை...

இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பிரதேசத்திலுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த காலங்களில் மக்கள் பல போராட்டங்களை முன்னெடுத்து வந்திருந்த நிலையில், அவர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் அளித்த வாக்குறுதியின் பிரகாரம் இன்று (புதன்கிழமை) ஒரு தொகுதி காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் காரியாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இராணுவத்தின் தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வந்த சுமார்...

இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடைபெற்ற போது, பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவருக்கு பணம் கொடுத்து, 200-க்கும் மேற்பட்ட விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் நாட்டை விட்டு தப்பியோடியதாக தெரிவித்துள்ள வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர இவர்களுக்குள் அந்த அமைப்பின் முக்கிய தலைவர்களும் இருப்பதாகவும் இவ்வாறு தப்பியோடிய நபர்களும் காணாமல் போனோரின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த...

கிளிநொச்சியில் வெள்ளை வானில் வந்தோரால் ஏ9 வீதி 155ஆம் கட்டைப் பகுதியில் வைத்து முன்னாள் போராளி ஒருவர் பின் புறமாக விலங்கிட்டு இனந்தெரியாத நபர்களால் கைது செய்யப்பட்டுள்ளார். நான்கு வருடங்கள் புனர்வாழ்வுப்பெற்று விடுதலையாகியிருந்த கிளிநொச்சி தொண்டமான் நகரைச் சேர்ந்த மோகனசீலன் நிசாந்தன் வயது 26 என்பரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று பிற்பகல் மூன்று மணியளவில்...

'வலிகாமம் வடக்கில் இனிமேல் காணிகள் விடுவிக்கப்படமாட்டாது எனவும் அதற்காக நியாயமான நட்டஈடு பெற்றுக்கொள்ளுமாறும் ஒரு போதும் தான் அறிவிக்கவில்லையென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனிடம் தெரிவித்துள்ளார்' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா கூறினார். இந்த விவகாரம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வலிகாமம் வடக்கில் இன்னமும் உயர்பாதுகாப்பு...

கனகராயன் காவல்துறை நிலையத்துக்கருகிலிருந்து புத்தர் சிலையை இன்று அதிகாலை இனந்தெரியாதோர் அடித்து நொருக்கியுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது, கனகராயன் குளப் பகுதியில் அமைந்துள்ள விசேட காவல்துறை நிலையத்துக்கருகிலிருந்த 210ஆவது கிலோமீற்றர் கல்லுக்கு முன்னால் 3அடி உயரத்தில் புத்தர் சிலை ஒன்றும் ஒன்றரை அடி புத்தர் சிலையும் இனந்தெரியாதோரால் அடித்து நொருக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று அதிகாலையே...

All posts loaded
No more posts