- Tuesday
- August 12th, 2025

உடுவில் மகளிர் கல்லூரி பிரச்சினை தொடர்பில் சட்டத்துக்கு உட்பட வகையில் தன்னாலான சகல நடவடிக்கைகளையும் எடுக்கவுள்ளதாக, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உறுதியளித்ததாக, போராட்டம் நடத்தும் தரப்பினர் தெரிவித்துள்ளனர். உடுவில் மகளிர் கல்லூரி அதிபரான சிராணி மில்ஸை, பாடசாலையின் ஆளுநர் சபை நீக்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த 3ஆம் திகதி தொடக்கம் பாடசாலை மாணவிகள் சிலரும் பெற்றோர்களும்...

தேசிய பாதுகாப்புக்காக வலிகாமம் வடக்கில் 1000 ஏக்கர் காணி தேவைப்படுவதாகவும் அதனை கையகப்படுத்துவதற்கு காணி அமைச்சரிடம் அனுமதியைக் கோரியுள்ளது இராணுவம். தற்போது இராணுவம் கையகப்படுத்தி வைத்திருக்கும் இந்தக் காணிகளிலேயே அந்த 1000 ஏக்கரும் அடங்கியுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். அத்துடன் வலிகாமம் வடக்கில் பொதுமக்களின் 700 ஏக்கர் காணிகளை விடுவிக்க...

தமிழ் மக்களின் உயிர் இழப்புகளுக்கான பரிகாரங்கள் என்ன? தம் அன்புக்குரியோரைப் பறிகொடுத்தவர்கள் நீதியையும் நியாயத்தையும் வேண்டி நிற்பதில் பிழை என்ன? தமிழ் மக்களுக்கு ஏதாவது விமோசனம் இதுவரையில் கிடைக்கப் பெற்றதா? இவை அனைத்தும் கேள்விக் குறிகளாகவே இருக்கின்றன என, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு...

போலிக்கடவுச்சீட்டின்மூலம் ஜேர்மனிக்குச் செல்லவிருந்த சுப்பையா சுதன் எனும் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் பூனே விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்டதையடுத்து, சிறீலங்காவுக்கு நாடுகடத்தப்பட்டார். கடந்த 1ஆம் திகதி லொஹேகான் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சுதன் சுப்பையா, விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினராகச் செயற்பட்டவர் எனத் தெரியவந்துள்ளதாக இந்திய புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆலங்கொட்டல் என்ற இடத்தைச் சேர்ந்த...

முல்லைத்தீவு, வட்டுவாகல் பாலத்தின் ஊடாக 500க்கு மேற்பட்ட இலங்கைக் கடற்படையினர், கோத்தாபாய கடற்படைமுகாமுக்கு இன்று சனிக்கிழமை (10) சென்றுள்ளனர். காலை 10 மணியளவில் முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தின் ஊடாக நூற்றுக்கு மேற்பட்ட சிங்கள மக்களும் 500க்கு மேற்பட்ட கடற்படையினரும் அணி அணியாக குறிப்பிட்ட முகாமுக்குள் சென்றுள்ளனர். குறித்த கடற்படையினருக்குச் சிறப்புக் கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளதாகவும் கடற்படையினர் உறவினர்களுடன்...

'வடக்கின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தடையாகக் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக்கொள்வதற்காக, திணைக்களங்கள், அதிகார சபைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வைப் பெற்றுத் தருவேன்' என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கு இன்று வெள்ளிக்கிழமை (09) விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 200ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வில் கலந்துகொண்டார்....

முன்னாள் போராளிகள் 26பேருக்கு முதற்கட்டமாக விச ஊசிப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் ஐந்து மாவட்டங்களிலும் உள்ள மருத்துவமனைகளில் இந்தச் சிறப்பு மருத்துவப் பரிசோதனைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் 9 முன்னாள் போராளிகளும், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தலா 7 முன்னாள் போராளிகளும், வவுனியா...

புனர்வாழ்வு பெறாத 275 முன்னாள் போராளிகள் வடக்கில் சுதந்திரமாக உலாவருவதாகவும், அவர்கள் தாமாக முன்வந்து சரணடையாத போதிலும் அவர்களால் தேசிய பாதுகாப்புக்கோ, பொதுமக்களுக்கோ எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்று, யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார். பலாலி இராணுவப் படைத் தலைமையகத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வொன்றில் கலந்து...

வடக்கில் மீண்டும் சாதி, பேதம் அதிகரித்துள்ளதாகவும், இதன் காரணமாக வடக்குமாகாண மக்கள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை மீண்டும் தேடுகின்றனர் என வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். சிங்கள தொலைக்காட்சி சேவையொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தற்போது, வடக்கில் சாதி, பேதம் அதிகரித்துள்ளதாகவும், இதனால் வடக்கு மாகாண மக்கள் தன்னிடம் தலைவர்...

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தொழிற்சங்க ஆலோசகருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட 5 பேருக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

கிளிநொச்சி பரவிபாஞ்சான் மக்கள் தங்களின் அனைத்து காணிகளும் விடுவிக்க வேண்டும் எனக் கோரி தொடர்ச்சியாக ஏழு நாட்களாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்த மக்கள் இன்று எட்டாவது நாள் முதல் உண்ணாவிரத பேராட்டமாக மாற்றியுள்ளனர். தாங்கள் எல்லோராலும் கைவிடப்பட்ட நிலையிலேயே இவ்வாறு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட தீா்மானித்ததாக அவா்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனா். இது தொடர்பில் மேலும்...

உடுவில் மகளிர் கல்லூரியின் அதிபர் சிரானி மில்ஸை பதவியிலிருந்து நீக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கல்லூரி மாணவிகளினால் கடந்த 3 ஆம் திகதி சனிக்கிழமை முதல் முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம், நேற்று செவ்வாய்க்கிழமை (06) முதல், உண்ணாவிரதப் போராட்டமாக மாறியுள்ளது. பாடசாலை மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். உணவு தவிர்ப்பில்...

உயர் மட்டத்தின் உத்தரவுகளினால் இராணுவம் தவறிழைத்திருக்கலாம் எனவும் அவை தொடர்பில் விசாரணை நடத்தி உண்மையைக் கண்டறிவதில் தவறில்லை எனவும் இராணுவம் குற்றமிழைத்திருந்தால் அதன் உண்மைத்தன்மை தொடர்பில் தெரிந்து கொள்ள முயற்சிப்பதில் எவ்வித தவறும் கிடையாது எனவும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார். யுத்தக்குற்றச்சாட்டு தொடர்பிலான விசாரணைக் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் மங்கள சமரவீர...

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒழுக்கமானவராக திகழ்ந்திருக்கின்றார் என இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்றுள்ள மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, 800 பக்கங்களில், ‘நந்திக்கடலுக்கான பாதை’ என்ற நூலை எழுதி வெளியிட்டுள்ளார். இந்நிலையில் கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு அவர் வழங்கிய நேர்காணல்...

கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தினர் வசமிருந்த காணிகளில் சுமார் 142 ஏக்கர் காணிகள் அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதன்படி கரைச்சி பிரதேசத்தில் கனகாம்பிகைகுளம், திருவையாறு, ஆனந்தபுரம், செல்வாநகர், ஸ்கந்தபுரம் ஆகிய பகுதியில் 108 ஏக்கரும், கண்டாவளை பிரதேசத்தில் கல்மடுநகர், புளியம்பொக்கனை ஆகிய கிராமங்களைில் 24 ஏக்கர்களும் பூநகரி பிரதேசத்தில் முழங்காவில் பொன்னாவெளி ஆகிய பிரதேசங்களை...

யாழ். பல்கலைகழகத்தினுள் இருக்கும் முஸ்லீம் மாணவர்களின் தொழுகை அறை மீது மூன்றாவது தடவையாகவும் இனம் தெரியாத நபர்களினால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. யாழ். பல்கலைகழகத்தினுள் இருக்கும் மாணவர் பொது மண்டபத்தில் உள்ள அறை ஒன்று முஸ்லீம் மாணவர்கள் தொழுகை செய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த அறையின் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை (5) வழமை போன்று அவ்வறைக்கு...

நாட்டில் உள்ள நிதி நிறுவனங்களில் வடக்கில் மட்டும் 450 நிதி நிறுவங்கள் உள்ளன இந்நிறுவனங்கள் வறிய மக்களிடம் சென்று அல்லது கிராமம் கிராமமாக சென்று மக்களுக்கு கடன் அடிப்படையில் பல நிதி உதவிதிட்டங்களை செய்கின்றன. ஆனால் அதை வசூலிப்பதற்காக கிராமங்களிற்கு அல்லது கடனாலிகளின் வீட்டிற்கு நேரகாலமின்றி கடனை வசூலிப்பதற்காக recovery officer என்றொருவர் சென்று கடன்களை...

கிளிநொச்சி – பரவிபாஞ்சான் பகுதியில் இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி இன்று ஆறாவது நாளாகவும் பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். தமது காணிகளை விடுவிக்க கோரி பிரதேச மக்கள் முன்னெடுத்த தொடர் போராட்டம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில், கடந்த 17 ஆம் திகதி...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் புகாருக்கமைய வடக்கு மாகாண அரசாங்க அதிகாரிகளுக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் இடமாற்றம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வடக்கில் பணியாற்றும் அரச அதிகாரிகளை தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவருவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முற்சிகளைப் மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு செயற்பாடாகவே, வடக்கு மாகாணத்தில் செயற்பட்டு வரும் பிரதேச செயலர்கள், உதவிச் செயலாளர்கள்...

All posts loaded
No more posts