- Monday
- December 29th, 2025
வித்தியாவின் படுகொலையுடன் சம்பந்தப்பட்ட 9 சந்தேக நபர்களின் விளக்கமறியல் எதிர்வரும் மார்ச் மாதம் 05 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டு வண்புனர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார். இந்த சம்பவத்தில் மாணவியின் படுகொலையுடன் சம்பந்தப்பட்ட 9 சந்தேக நபர்களுக்குமான பிணை வழங்க...
வடக்கிலுள்ள ராணுவத்தை வெளியேற்றும் நோக்குடன் அரசியல் பின்புலத்துடன் நடத்தப்படும் போராட்டமே கேப்பாப்பிலவு போராட்டம் எனத் தெரிவித்துள்ள பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியராரச்சி, குறித்த போராட்டங்களுக்கு அஞ்சி காணிகளை விடுவிக்க முடியாதென குறிப்பிட்டுள்ளார். ராணுவம் மற்றும் விமானப்படையினர் வசமுள்ள தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கேப்பாப்பிலவு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பிலக்குடியிருப்பு மக்கள் இன்றுடன்...
மாலபே சயிடம் தனியார் மருத்துவக் கல்லூரியை தடைசெய்யக் கோரி அனைத்துப்பீட மாணவர் ஒன்றியம் மற்றும் மருத்துவபீட மாணவர் ஒன்றிய குழு ஆகியன இணைந்து யாழ். நகரில் நேற்று போராட்டம் ஒன்றை நடத்தினர். இதன்போது, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் உருவபொம்மையும் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.
கோப்பாபுலவு பிலக்குடியிருப்பிலுள்ள காணிகளை மீளப் பெற்றுத் தருமாறு வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமது பெற்றோர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், அதற்கான பொறுப்பை ஸ்ரீலங்கா அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் பிள்ளைகள் தெரிவித்துள்ளனர். அதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் பிள்ளைகள் பாடசாலைக்கு செல்லாது, பெற்றோர்களுடன் இணைந்து தாமும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். ஸ்ரீலங்கா விமானப்...
படையினர் வசமுள்ள தமது காணிகளை நாளை காலை 8 மணிக்கு முன்னதாக விடுவிக்காவிட்டால் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவோம் என முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பிலக்குடியிருப்பு மக்கள் உறுதியாக தெரிவித்துள்ளார். தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி அம் மக்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) 8ஆவது நாளை எட்டியுள்ளபோதும் அரசாங்கத்திடமிருந்து எந்தவொரு சாதமான...
விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவரான நெடியவன் எனப்படும் பேரின்பநாயகம் சிவபரன் உள்ளிட்ட குழுவினரே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலைசெய்ய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், நெடியவனை சர்வதேச பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கு நோர்வே அரசாங்கம் மறுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நோர்வேயில் விடுதலைப் புலிகளின் தலைவராக நெடியவன் செயற்பட்டு வருவதாக குறிப்பிடப்படுவதோடு, புலிகள்...
என்னை அசிங்கப்படுத்தி, என்மீது தாக்குதல் நடாத்தத் திட்டமிட்டுள்ளதாலேயே தான் கேப்பாப்புலவு மக்களைச் சந்திக்கச் செல்லவில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தாம் கடந்த மாதம் 31ஆம் நாளிலிருந்து தமது காணியை மீட்க இரவு, பகலாகப் போராடிக்கொண்டிருக்கும் நிலையில் தமது போராட்டம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனோ, சுமந்திரனோ...
யாழ்ப்பாணம் பல்கலைகழத்தின் கிளிநொச்சி, அறிவியல்நகா் பீடங்களில் சிறியளவில் பிள்ளையாா் கோவில் அமைத்து வழிபடும் மாணவா்களின் முயற்சிக்கு, நிர்வாகம் மறுப்புத் தெரிவித்துள்ளதாக மாணவர்கள் கூறினர். இது தொடா்பில் மேலும் தெரியவருவதாவது, “யாழ். பல்கலைகழகத்தின் கிளிநொச்சி வளாகம், மீள்குடியேற்றத்தின் ஆரம்ப காலங்களில், பாரிய இராணுவ முகாமாக காணப்பட்டது. முன்னைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், இராணுவத்திடம் இருந்து மீளப்பெறப்பட்ட காணி,...
முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்பிலவு மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய இடங்களில் தமது காணிகளிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும் எனக் கோரி பொதுமக்கள் நடத்தி வருகின்ற போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. கடந்த 31ம் திகதி தமது காணிகள் விடுவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டதையடுத்து, காணிகளைப் பொறுப்பேற்கச் சென்ற கேப்பாப்பிலவைச் சேர்ந்த 84 குடும்பங்களுடைய காணிகள் விடுவிக்கப்படாததையடுத்து இந்தப் போராட்டம்...
யாழ். மருதடி வீதியில் உள்ள இந்திய துணைத்தூதரகத்தின் பெயர்ப்பலகை சேதமாக்கப்பட்டுள்ளதுடன், அருகில் இருந்த கடைகளின் கதவுகள் வாளால் வெட்டி சேதமாக்கப்பட்டுள்ளன. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில கடை உரிமையாளர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். வாள்வெட்டுக்குழுக்கள் தொடர்பாக அண்மைய காலமாக பல்வேறு தகவல்கள் வெளியாகிவரும் நிலையில் இடம்பெற்றுள்ள இச் சம்பவத்தால்,...
ராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக நுழைவாயிலை மறித்து கடந்த 4 தினங்களாக சத்தியாக்கிரக போராட்டத்தை நடத்தி வந்த மக்கள், இன்றைய தினம் பிரதேச செயலகத்திற்குள் அதிகாரிகளை செல்லவிடாமல் தடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டுள்ள மக்கள், தமது காணிகளை விடுவிப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்தரன் மீது மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் கொலை அச்சுறுத்தல் தொடர்பில் பல்வேறு கோணங்களில் நாளாந்தம் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைப் படுகொலை செய்வதற்கான திட்டம், பிரான்சில் தீட்டப்பட்டதாக கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. புனர்வாழ்வு பெற்ற...
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த ஊறணியில் மேலும் 500 மீற்றர் நீளமான கரையோர பகுதி மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அண்மையில் மக்களிடம் வழங்கப்பட்ட கரையோரப்பகுதியில் மேலும் 500 மீற்றர் நீளமான கரையோரப்பகுதியே கையளிக்கப்பட்டுள்ளது. ஊறணி பகுதியில் கடந்த ஆண்டு இறுதியில் மக்கள் மீள்குடியேற்றப்பட்டபோதும், மக்களுடைய அடிப்படை வாழ்வாதாரத்திற்கான கடற்றொழிலை செய்வதற்கான கடற்பகுதி விடுவிக்கப்படவில்லை. இதனையடுத்து தேசிய...
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தனும் ஊடகப் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரனும் பேப்பட்டம் கட்டுவதற்கு முயற்சிக்கின்றனரா? என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர். கேப்பாபுலவு புலக்குடியிருப்பு பகுதியிலுள்ள காணியை விடுவிக்குமாறு வலியுறுத்தி இன்று ஏழாவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தம்மை சம்பந்தனோ? சுமந்திரனோ? தொலைபேசி ஊடாகவேணும் தொடர்பு கொண்டு கலந்துரையாடவில்லை எனவும்...
பொறுப்புக்கூறல் தொடர்பான விவகாரங்களில், சிறீலங்கா அரசாங்கம் மெதுவாகவே செயற்படுகின்றது என ஐநா மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கவலை வெளியிட்டுள்ளார். டாவோசில் கடந்த மாதம் நடைபெற்ற உலகப் பொருளாதார மாநாட்டில் சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டிருந்தார். இந்நிலையில், மாநாட்டின் ஒருபக்க நிகழ்வாக சிறீலங்காப் பிரதமர் ரணில்...
யாழ்ப்பாண குடா நாட்டில் வாள் போன்ற கூரிய ஆயுதங்களை கொண்டுள்ள 17 குழுக்கள் இயங்கி வருவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கண்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொஸிஸ் புலனாய்வு பிரிவினர் இது தொடர்பாக தகவல் வௌியிட்டுள்ளனர். இந்த குழுக்களின் பெரும்பாலானவை வாள், கத்தி போன்ற கூரிய ஆயுதங்களை கொண்டிருப்பது முக்கிய அம்சம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில்...
படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி முல்லைத்தீவு கேப்பாப்பிலவு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பிலக்குடியிருப்பு கிராம மக்கள் இரவு பகலாக முன்னெடுத்துவரும் சத்தியாக்கிரக போராட்டம், ஆறாவது நாளாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) தொடர்கின்றது. யுத்தம் நிறைவடைந்ததன் பின்னரும் இப்பகுதி மக்களுக்குச் சொந்தமான காணிகளை கையகப்படுத்தி விமானப்படையினரும் ராணுவத்தினரும் முகாமிட்டுள்ளனர். குறிப்பாக பிலக்குடியிருப்பு கிராமத்தில் 84 குடும்பங்களுக்குச்...
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் முன்னால், 5 அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து, நேற்போறு ராட்டத்தில் ஈடுபட்ட மக்களை அச்சுறுத்தும் வகையில், இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர். சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், காணாமலாக்கப்பட்டவர்களுக்கு பதில் கூற வேண்டும், ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் விடுவிக்கப்பட வேண்டும், தொடர்ந்தும் காணிகள் ஆக்கிரமிப்பது நிறுத்தப்பட...
கொழும்பு, காலிமுகத்திடலில் இன்று இடம்பெற்ற, 69ஆவது வருட சுதந்திரதின நிகழ்வில், எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் கலந்துகொள்ளவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் மட்டுமே கலந்து கொண்டார். 'திருகோணமலையில் உள்ள ஆலயமொன்றில் இடம்பெறும் கும்பாபிஷேக நிகழ்வில் கலந்துக்கொள்ளச் சென்றுள்ளமையால், எதிர்க்கட்சித் தலைவரால் சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்ள...
சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட புதியதோர் தேசத்தில் சமாதானமும் சுபீட்சத்துடனும் வாழும் பாக்கியம் எமக்கு கிட்ட வேண்டும் - ஜனாதிபதி நீதி மற்றும் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட புதியதோர் தேசத்தில் சமாதானமும் சுபீட்சமும் கிடைக்கப்பெற்ற மக்களாக வாழும் பாக்கியம் எமக்கு கிட்ட வேண்டும் என்று 69ஆவது சுதந்திர தினத்தையிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்...
Loading posts...
All posts loaded
No more posts
