சிவாஜிலிங்கத்தின் வீட்டிற்கு சென்று தான் இருக்க வேண்டிவரும் ; நாவற்குழி சிங்கள மக்கள்

எங்களுக்கு வீடுகளை வழங்ககக் கூடாது எங்களை வெளியேற்றுங்கள் என்றால் எங்கள் சொந்த இடத்திலிருந்து நாங்கள் எங்கு செல்வது, அவ்வாறு எங்களை விரட்டினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் வீட்டிற்குச் சென்று தான் இருக்க வேண்டி வரும் என நாவற்குழியில் குடியமர்ந்திருக்கின்ற சிங்கள மக்கள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் நாவற்குழியில் குடியமர்ந்துள்ள தமிழ்,...

எழிலன் உள்ளிட்ட ஐந்து பேரின் ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போகச்செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் எனப்படும் சின்னத்துரை சசிதரன் உள்ளிட்ட ஐந்து பேரின்ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை மார்ச் மாதம் 2 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்கொண்ர்வு மனு தொடர்பிலான வழக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் எஸ்.எம்.எஸ் சம்சுதீன்...
Ad Widget

பெண்மீது கத்திக்குத்து: சந்தேக நபர் கைது

யாழ்ப்பாணம், கல்லுண்டாய் வெளிபகுதியில் பெண் மீது, முகத்திலும் மார்பிலும் கத்தியால் குத்திய சம்பவம் தொடர்பில், பொம்மை வெளிபகுதியினை சேர்ந்த 42 வயதுடைய நபரை ஞாயிற்றுக்கிழமை, கைது செய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். சோமசுந்தரம் வீதி ஆணைக்கோட்டை பகுதியினை சேர்ந்த எஸ்.வசந்ததேவி (வயது 38) என்றப் பெண், கத்திக்குத்துக்கு சனிக்கிழமை இலக்கானார். காயங்களுக்கு உள்ளாகி மயங்கி கிடந்த...

இலங்கைக்கு ஆதரவாக டிரம்பின் அதிரடி தீர்மானம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு இலங்கை இராணுவம் யுத்தக் குற்றச் செயல்கள் புரிந்ததாக முறைப்பாடுகளை தயார் செய்து முன்வைத்ததாக கூறப்படும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் பணிபுரியும் நான்கு பேரை டொனல்ட் டிரம்ப் பதவி நீக்கம் செய்துள்ளார். புதிய இராஜாங்க செயலாளராக ரெக்ஸ் மிலர்சன் நியமிக்கப்பட்டு, இந்த அதிகாரிகள் 4 பேர் நீக்கப்பட்டமையினால் தமிழீழ புலம்...

கொலை முயற்சி, தீர்வைக்கண்டு அஞ்சுபவர்களின் செயலாக இருக்கலாம் ; சுமந்திரன்

புதிய யாப்பு ஊடாக தேசியப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வு வந்துவிடுமோ என்ற அச்சத்தில் தென்னிலங்கையில் உள்ள இனவாத சக்திகள் தன்னை படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டியிருக்கலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். எம்.ஏ.சுமந்திரனைப் படுகொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட சதித் திட்டம் ஒன்றை ஸ்ரீலங்கா அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதாக இந்திய...

புனர்வாழ்வளிக்கப்படாத 300 புலிகள் வடக்கில்!

வடக்கில் புனர்வாழ்வளிக்கப்படாத 300 விடுதலைப் புலிகள் உள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடையாத 300 விடுதலைப் புலிகள் வடக்கில் வாழ்கிறார்கள். இவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் வாழும் விடுதலைப்புலிகளுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருகின்றனர் என இராணுவத்தினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இவ்வாறு புனர்வாழ்வு அளிக்கப்படாத முன்னாள் புலி உறுப்பினர்கள்...

புலிப்பயங்கரவாதத்தை அழித்த மாபெரும் தலைவனே எங்கள் மகிந்த ராஜபக்ஷ!

இந்த நாட்டுக்கே விடுதலையைப் பெற்றுத்தந்த ஒரு மாபெருந் தலைவன்தான் எங்களுடைய தலைவர் மதிப்பிற்குரிய தலைவர் மகிந்த ராஜபக்ஷ என கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் நேற்று மகிந்த ஆதரவான கூட்டு எதிரணியின் புதிய மாற்றத்திற்கான ஆரம்பம் என்ற கூட்டத்தில் உரையாற்றும்போது தெரிவித்துள்ளார். அவர் உரையாற்றும்போது மேலும் தெரிவிக்கையில், இன்று ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷவை ஒருவராலுமே...

போர்க் குழாய்க் கிணறுகளால் பாரிய தாக்கம் ஏற்படும் அபாயம்!

வடக்கு மாகாணத்தில் அமைக்கப்படவுள்ள 65ஆயிரம் பொருத்து வீடுகளிற்கு அமைக்கப்படவுள்ள போர்க் குழாய்க் கிணறுகளினால் பாரிய தாக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண நீரியல்வள அபிவிருத்தி ஆய்வரங்கு இன்று யாழ்ப்பாண பொது நூலகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர்...

நாடுகடத்தப்பட்ட முன்னாள் போராளிக்கு 30 ஆயிரம் யூரோ இழப்பீடு

முன்னாள் விடுதலைப் புலிப் போராளியொருவரின் புகலிடக் கோரிக்கையை நிராகரித்து அவரைச் ஸ்ரீலங்காவிற்கு திருப்பியனுப்பியமைக்காக மனித உரிமைக்கான ஐரோப்பிய நீதிமன்றம் அவருக்கு 30,000 யூரோக்களை இழப்பீடாக செலுத்தும்படி சுவிட்சர்லாந்து அரசிற்கு உத்தரவிட்டிருக்கின்றது. பெயர் குறிப்பிடப்படாத இந்த முன்னாள் போராளியையும், அவரது குடும்பத்தினதும் புகலிடக்கோரிக்கையினை நிராகரித்திருந்த சுவிட்சர்லாந்து அரசாங்கம் அவர்களை 2013 ஆம் ஆண்டு ஸ்ரீலங்காவிற்கு திருப்பியனுப்பிருந்தது. முன்னாள்...

சுமந்திரனைப் படுகொலை செய்ய சதி ; நான்கு முன்னாள் போராளிகள் கைது!

மிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைப் படுகொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட சதித் திட்டம் ஒன்றை சிறிலங்கா அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. தீவிரமான பாதுகாப்பு அச்சுறுத்தில் இருப்பது தொடர்பாக சிறிலங்கா பிரதமர் செயலகத்தில் இருந்து, இந்த மாத முற்பகுதியில் சுமந்திரனுக்குத் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இந்த தகவல் சுமந்திரனுக்குப் பரிமாறப்பட்டது என்று சிறிலங்கா...

யாழ்.பல்கலையில் பகிடிவதையால் இரு மாணவர்கள் வைத்தியசாலையில்

யாழ்.பல்கலைக்கழகத்தில் பகிடிவதையால் கடுமையாக பாதிக்கப்பட்ட இரண்டு மாணவர்கள் நேற்று முன்தினம் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாதரவத்தை மற்றும் கொடிகாமத்தை சேர்ந்த கலைப்பீட இரண்டாம் வருட மாணவர்கள் இருவரே மேற்படி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24ஆம்திகதி குறித்த மாணவர்கள் உள்ளிட்ட 8 மாணவர்களை ஏனைய மாணவர்கள் சிலர் பகிடிவதைக்கு உட்படுத்தி கடுமையான முறையில் தாக்கியுள்ளனர். இதில்...

ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை சாட்சியத்திற்கு உயிர் அச்சுறுத்தல்!

ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலையின் சாட்சியான சிறுவனின் வீட்டுக்கு பாதுகாப்பு வழங்குமாறு ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் இ. சபேசன் காவல்துறையினருக்கு உத்தரவு இட்டுள்ளார். சாட்சியான சிறுவனின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது என சிறுவர் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் நேற்று வெள்ளிக்கிழமை ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் இ.சபேசனின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்....

கர்ப்பிணி பெண் கொலை : கண்டனம் தெரிவித்து மனித சங்கிலி போராட்டம்

ஊர்காவற்றுறை பகுதியில் 7 மாத கர்ப்பிணி பெண் நாநேந்திரன் கம்சிகா அடித்து கொலை செய்யப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து மனித சங்கிலி போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. மனித சங்கிலி போராட்டத்தின் நிறைவில் அப்பகுதி மக்களினால் ஊர்காவல்துறை உதவி பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை பகுதியில் கடந்த 24 ஆம் திகதி 7...

ஸ்ரீலங்காவில் தொடரும் சித்திரவதை: நாடுகடத்தலை நிறுத்துமாறு ஐ.நா கோரிக்கை

ஸ்ரீலங்காவில் சித்திரவதைகளுக்கு ஆளாகக்கூடிய அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ள ஈழத் தமிழர்களை நாடு கடத்த வேண்டாம் என ஐக்கிய நாடுகள் சபை வெளிநாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளன. ஸ்ரீலங்காவில் கடந்த ஏப்ரல் மாதத்திலும் வெள்ளைவான் கடத்தல்கள் இடம்பெற்றுள்ளதாக ஆதாரங்களுடன் தகவல்களை வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைகளுக்கு எதிரான குழு, சிறிலங்காவின் நீதிமன்றம் சட்டமா அதிபர் திணைக்களம்...

முன்னாள் போராளிகள் அனைவரும் வெளிநாடு செல்லலாம்!

2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் பின்னர் இராணுவத்தினரிடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்று விடுதலையான அனைத்து முன்னாள் போராளிகளும் வெளிநாடு செல்லலாம் என அரசாங்கம் அறிவித்துள்ளது. வவுனியா புனர்வாழ்வு முகாமிலிருந்து புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் மூவர் நேற்றைய தினம் சமூகத்துடன் இணைத்துக்கொள்ளப்பட்டனர். இவர்களை விடுதலை செய்வதற்கான நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த புனர்வாழ்வுத் திணைக்களத்தின் வன்னிப்...

மாணவர்கள் இருவர் படுகொலை : குற்றப்புலனாய்வு பிரிவினர் அறிக்கை சமர்ப்பிப்பு

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கின் மேலதிக விசாரணை அறிக்கை குற்றப்புலனாய்வு பிரிவினரால் இன்று (வெள்ளிக்கிழமை) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி சவீஸ்கரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபட்டது. இதன்போது, வழக்கு குறித்த மேலதிக விசாரணை அறிக்கையினை குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிபதியிடம் சமர்ப்பித்துள்ளனர். குறித்த வழக்கு...

இன்றும் நாளையும் நாட்டின் பல பிரதேசங்களில் கடும் மழை பெய்யக்கூடும்!

நாட்டின் பல இடங்களில் இன்றும் நாளையும் இடியுடன் கூடிய கடுமையான மழை பெய்யக்கூடுமென எதிர்பார்ப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அடுத்து வரும் 48 மணித்தியாலத்துக்குள் வடக்கு, கிழக்கு உட்பட வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் கடுமையான மழை எதிர்பார்க்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மட்டக்களப்பில் கடும் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், மக்களின் அன்றாட...

காணாமல் போனவர்களின் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது

லங்கையில் காணாமல் ​போனவர்கள் தொடர்பில் அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும் எனக் கோரி நான்கு நாட்களாக நடைபெற்ற காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நேற்று வியாழக்கிழமை மாலை அரசாங்கம் அளித்த உறுதிமொழியொன்றையடுத்து கைவிடப்பட்டிருக்கின்றது. உண்ணாவிரதம் இருந்தவர்களை நேரடியாக வந்து சந்தித்துப் பேச்சுக்கள் நடத்திய பிரதி பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜேவர்தன எழுத்து மூலமாக அளித்த உறுதிமொழிக்கமைவாகவே தாங்கள்...

உண்ணாவிரத போராட்டத்திற்கு பல்கலைக்கழக மாணவர்களும் ஆதரவு

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் உண்ணாவிரத போராட்டத்திற்கு தொடர்ச்சியாக ஆதரவு பெருகி வருவதாக அறியமுடிகின்றது. வவுனியாவில் இன்று நான்காவது நாளாகவும்  இன்று உண்ணா விரதப் போராட்டம் தொடர்ந்து வருகின்றது. இந்நிலையில், உண்ணாவிரதமிருப்போருக்கு ஆதரவாக அறவழிப் போராட்டமொன்றும் வவுனியாவில் இடம்பெற்று வருகின்றது. இதற்கு ஆதரவாக மதத்தலைவர்கள் , பிரதேசவாசிகள் , அரசியல் பிரமுகர்கள் என...

உண்ணாவிரதத்திற்கு ஆதரவாக முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம் பேரணி

காணாமல் போனோரின் உறவினர்களால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, வவுனியா முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கத்தினர் பேரணியொன்றை முன்னெடுத்துள்ளனர். வவுனியா குடியிருப்பு பகுதியிலிருந்து இன்று காலை ஆரம்பமான குறித்த பேரணி, வவுனியா நகரை சென்றடைந்து தற்போது உண்ணாவிரதம் இடம்பெற்றுவரும் பிரதான தபாலக முன்றலுக்குச் செல்வதாக எமது பிராந்திய செய்தியாளர்...
Loading posts...

All posts loaded

No more posts