- Tuesday
- August 26th, 2025

காய்ச்சல் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குடும்பஸ்தர், நேற்று (11) சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக, தெல்லிப்பழைப் பொலிஸார் தெரிவித்தனர். அளவெட்டி பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை தேவராஜா (வயது 58) என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபருக்கு, கடந்த 05ஆம் திகதி குளிருடன் கூடிய காய்ச்சல் ஏற்பட்டுள்ளது....

யாழ்.மாவட்டத்தின் வெப்பநிலை எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு பின்னர் 36 பாகை முதல் 37 பாகை செல்சியஸ் வரை அதிகரிக்கலாம் என யாழ்.வானிலை அவதான நிலைய பொறப்பதிகாரி ரி.பிரதிபன் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் மாலை 2 மணிக்கு பின்னரான நேரங்களில் ஒடுங்கல் மழைக்கான சாத்தியம் உள்ளதாகவம் அவர் கூறினார். இலங்கையின் மத்தியில் உச்சம் கொடுக்கும் சூரியன் படிப்படியாக...

இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்திற்கு வலுசேர்ப்பதற்கு மக்கள் பிரதிநிதிகள் தவறியுள்ளதாக கேப்பாப்பிலவு மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். தமது போராட்டத்தை வெற்றி பெறச்செய்வதற்கு பதவிகளை துறந்து போராட வருமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர்களை வலியுறுத்தியுள்ள போதிலும், மக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்பு குறைவாகவே காணப்படுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், தமது...

யாழ்ப்பாணத்தில் ஆவா குழு உறுப்பினர்கள் ஐந்து பேரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் சாவகச்சேரி அல்லாரை, மட்டுவில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பிலலேயே இந்த ஐந்து பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் 19 வயதிற்கும் 21 வயதிற்கும் உட்பட்டவர்கள் என பொலிஸாரின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. அத்துடன்...

“இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவிடமோ அல்லது என்னிடமோ, பாதிக்கப்பட்ட பெண்ணினால் முறைப்பாடு செய்யப்படுமாயின், நடவடிக்கை எடுக்கத் தயாராக உள்ளோம்” என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சி.சிறிதரன் தெரிவித்தார். சிறிதரன் எம்.பியின் பிரத்தியேக செயலாளரும் தமிழ் அரசுக் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளருமாகி வேழன் என்றழைக்கப்படும் அருணாச்சலம்...

யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்பு படைகளின் புதிய கட்டளை தளபதியாக கடமையேற்றிருக்கும் மேஜர் ஜெனரல் ஹெட்டியாராச்சி நேற்று (11) மாலை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனை அவருடைய இல்லத்தில் வைத்து சிநேகபூர்வமாக சந்தித்து கலந்துரையாடியுள்ளார். யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க பதவி உயர்வு பெற்று சென்றதை தொடர்ந்து புதிய கட்டளை...

முல்லைத்தீவு - நாயாறு களப்புப் பகுதியில் அத்துமீறி நுழைந்த 23 சிங்கள மீனவர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். அவர்களால் அடாத்தாக அமைக்கப்பட்டிருந்த 8 வாடிகளில் 6 வாடிகள் அகற்றப்பட்டும் உள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட மாகாண சபை உறுப்பினர் து. ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். மத்திய கடற்றொழில் அமைச்சின் பணிப்பாளரினால் கடந்த பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதி நாயாறு...
மருதங்கேணி கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தின் ஊடாகவே யாழ். மாவட்டத்தின் நீர்தேவை நிவர்த்தி செய்யப்படும் என வடமாகாண சபை முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். யாழ். மாவட்டத்திற்கு இரணைமடு நீர் வராது எனக் குறிப்பிட்ட அவர், கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கே வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். இரணைமடு - யாழ்ப்பாணம் குடிநீர் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமா? என சம காலத்தில்...

நாடளாவிள ரீதியில் இன்புலுவென்சா நோய்த் தாக்கம் அதிகரித்து வருகின்ற காரணத்தினால் பொது மக்கள் மிக அவதானத்துடன் இருக்குமாறு சுகாதார சேவைகள் பணியகம் தெரிவிக்கின்றது. காய்ச்சல், தலைவலி, உடல் வலி, தடிமன் உள்ளிட்ட நோய் தாக்கங்கள் முன்னறிகுறியாக தென்படும் பின்னர் நோய் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கும் எனவும் இதிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான வைத்திய ஆலோசனைகளை உரிய விதத்தில்...

சமகாலத்தில் நிலவிவரும் அதிக சூரிய வெப்பம் காரணமாக கண் நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியப்பாடுகள் அதிகம் காணப்படுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கண் சிகிச்சைப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ஐ.எல். மொஹமட் ரிபாஸ் தெரிவித்துள்ளார். சூரிய வெப்பம் அதிகமாக காணப்படும் காலப் பொழுதான, முற்பகல் 11.00 மணி முதல் மாலை 4.00 மணி வரையில் தேவையற்ற பயணங்களைத்...
ஊழியர் சேமலாப நிதியத்திலுள்ள பணத்தை மீளப் பெறுவதற்கு குறித்த வயதெல்லையை அடைந்திருந்த போதிலும், குறித்த நபர் வேறு தொழிலில் இணைந்திருந்தால், நிதியைப் பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என ஊழியர் திணைக்களம் அறிவித்துள்ளது. ஊழியர் சேமலாப நிதி சட்டத்தின் கீழ், ஒரு ஆண் ஊழியர் 55 வயது நிறைவடைந்த பின்னரும், ஒரு பெண் ஊழியர் 50...

இலங்கையின் வடக்கு கிழக்கில், 200 மில்லியன் ரூபா பெறுமதியான பாரிய சுகாதார அபிவிருத்தித் திட்டத்தை மேற்கொள்ளத் தயார் என லைக்கா ஞானம் அறக்கட்டளையின் இணைத் தலைவர்களில் ஒருவரும், லைக்கா குழுமத்தின் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்திற்கு இலங்கை அரசாங்கம் அனுமதியினையும் ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். வவுனியா பூந்தோட்டம்...

பாதுகாப்பு அமைச்சினால் முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவில் அமைக்கப்பட்ட 150 கோடி ரூபா பெறுமதியான கட்டடத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியில் இராணுவம் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இக் கட்டடம் அமைந்துள்ள தமக்குச் சொந்தமான காணிகளை விடுவிக்குமாறு அங்குள்ள மக்கள் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக போராடி வருகின்ற நிலையில், மக்களுக்கு மாற்றுக் காணிகளும் பணமும் வழங்குவதற்கு அரச அதிகாரிகளுடன்...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற மனித படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பான அனைத்து உண்மைகளையும் விரைவில் வெளிப்படுத்துவோம் என அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சரான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அதன் பின்னர் பொது எதிரணியின் ஆயுட்காலம் முடிவடைந்து விடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தை விரைவில் வீழ்த்துவோம்...

வடக்கு கிழக்கு மாகாணங்கள் அடுத்துவரும் மாதங்களில் மிகப்பெரிய நீர்ப்பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும் என யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நா. பிரதீபராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார். சித்திரை சிறுமாரி சிலவேளை பெய்யாவிட்டால் அல்லது தீவுப் பகுதிக்கு முதலாவது இடைநிலைப் பருவகால மழை கிடைக்காவிட்டால், மே ஆரம்பப் பகுதியில் நீர்ப் பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும் என்றும்...

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மரணமானது குறித்தான வழக்கில் சந்தேகநபர்களாக பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும், ஐந்து பொலிஸாரும், தமது வழக்குகளை இடமாற்றம் செய்யுமாறு கோரி மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். யாழ். நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்கை கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு சந்தேகநபர்கள் ஐவரும் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்கள்...

போர்க்குற்றம் இடம்பெறவில்லையென அண்மையில் யாழ்ப்பாணத்தில் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்ததாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், தான் அவ்வாறு குறிப்பிடவில்லையென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சரின் கருத்து தொடர்பாக நாடாளுமன்றில் நேற்று (வெள்ளிக்கிழமை) கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கண்டனம் தெரிவித்து உரையாற்றிய போது, ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய அமைச்சர் ராஜித இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்....

வலிகாமம் வடக்கில், இரண்டு கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய சுமார் 28.8 ஏக்கர் நிலப்பரப்பு, நேற்று வெள்ளிக்கிழமை (07) இராணுவத்தினரால், பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஊறணி மற்றும் மயிலிட்டிதுறை ஆகிய பகுதிகளே மக்களிடம் மீள கையளிக்கப்பட்டுள்ளது. 1990ஆம் ஆண்டில், இராணுவ நடவடிக்கை மூலம் இந்தப் பகுதி, கடந்த 27 வருடங்களாக உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ளடங்கியிருந்தது. மக்களின்...

இலங்கையில் அகதிகள் இல்லாத நிலையை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டுமென ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் பணிப்பாளர் டெய்ஸி டெல் வலியுறுத்தியுள்ளதாக வட.மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ். மாவட்டத்திற்கு இன்று (வெள்ளிக்கிழமை) விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் பணிப்பாளர், வட. மாகாண முதலமைச்சரை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். குறித்த சந்திப்பை தொடர்ந்து...
நெடுந்தீவு சிறுமி கொலை வழக்கின் குற்றவாளிக்கு, மரண தண்டனை வழங்கி யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2012ம் ஆண்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நெடுந்தீவு சிறுமி குறித்த வழக்கு யாழ்.மேல் நீதிமன்றில் இடம்பெற்று வந்த நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) இறுதி தீர்ப்பு வெளியாகியுள்ளது. தீர்ப்பின் பிரகாரம், பாலியல் குற்றசாட்டில் ஈடுபட்டமைக்காக...

All posts loaded
No more posts