- Wednesday
- August 27th, 2025

“விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை இந்தியாவே செய்தது, அது என்னுடைய யுத்தம் மட்டும் அல்ல மாறாக இந்தியாவிற்கும் இதில் பாரிய பங்குள்ளது” என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய விசேட செவ்வியில் கருத்து வெளியிட்ட மஹிந்த ராஜபக்ஷ, விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்துக்கு நான் இந்தியாவை உதவி செய்யச்...

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பிலான விசாரணைகளை உள்நாட்டு நீதிபதிகளை கொண்ட குழுவினராலேயே முன்னெடுக்கப்படும் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள சிதம்பரம் ஆலயத்தில் வழிபாடு செய்த அவர் இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். உள்ள நாட்டில் இடம் பெற்ற...

விடுதலைப்புலிகளின் புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் பொட்டு அம்மானின் சடலம் கிடைக்கவில்லை என்பது உண்மை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். “பொட்டு அம்மான் உயிருடன் இருக்கின்றாரா?” என்பது குறித்து கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில், இறுதி யுத்தத்தின்போது பொட்டு அம்மானின் சடலம் கிடைக்கவில்லை....

வடக்கு காணி விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு, கள விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது. அந்தக் கள விஜயத்தின் பின்னரே, காணிப்பிரச்சினைக்கு உரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்கமுடியும் என்றும் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அதன்பிரகாரம், நாளை 19ஆம் திகதி முல்லைத்தீவுக்கும் மறுநாள் 20 ஆம் திகதி காலையில் யாழ்ப்பாணத்துக்கும், மாலையில் கிளிநொச்சிக்கும் சென்று...

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதவி விலகுவது தான் தமிழ் மக்களுடைய பிரச்சனைக்குத் தீர்வாக இருக்குமென்றோ அல்லது தமிழ் மக்களுடைய பிரச்சனைகளுக்குத் தீர்வை ஏற்படுத்துவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதவி விலக வேண்டுமென்றோ இருந்தால், நாங்கள் அதனைச் செய்யத் தயங்க மாட்டோம். பதவி விலகுவதென்பது எங்களுக்கு புதிய விடயமல்ல. " என்று, தமிழரசுக் கட்சியின் தலைவரும் த.தே.கூவின்...

இலங்கையின் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது, யாழ். மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுவதாக யாழ். பல்கலைக்கழக திட்டமிடல் துறையில் கல்விபயிலும் மாணவியான அ. ஏஞ்சல் தெரிவித்துள்ளார். அதிகரித்து வருகின்ற காலநிலை மாற்றமே இதற்கு காரணம் என்றும் குறிப்பாக, காடழிப்பு மற்றும் அதிகரித்த வாகனங்களின் பாவனை, நீர் வீண்விரயோகம் போன்ற காரணிகள் வெயில் அதிகரித்தமைக்கான காரணம்...

நாட்டின் சகல பகுதிகளிலும் தீவிரமாக பரவியுள்ள இன்புளுவென்சா வைரஸ் காய்ச்சலுக்கான மருந்துகளுக்கு அரச வைத்தியசாலைகளிலும் தனியார் மருந்தகங்களிலும் பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சிறு குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் வயோதிபர்களை இலகுவாகத் தாக்கும் இந்த நோய்க்கு, உரிய சிகிச்சைகள் மேற்கொள்ளப்படாவிட்டால் அது நிமோனியா காய்ச்சலுக்கு வழிவகுப்பதுடன் மரணத்தையும் ஏற்படுத்தும் என்று வைத்தியர்கள் எச்சரிக்கை...

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஜெயந்தன் படையணியின் புலனாய்வுப் பிரிவின் தலைவர் நாட்டுக்குள் ஊடுருவியுள்ளாரா என்பது குறித்து தேடுதல் வேட்டை நடத்தி வருவதாக பாதுகாப்புத் தரப்பினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற அந்த அணியைச் சேர்ந்த நபர்கள் தென்னிந்தியா போன்ற இடங்களில் இருந்து மீண்டும் நாட்டுக்குள் சட்டவிரோதமாகப் பிரவேசித்துள்ளனரா என்பது பற்றி தாம் பல கோணங்களில்...

இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்களின் சொந்த காணிகளை நாம் எக்காரணங்கொண்டும் விட்டுக்கொடுப்பதற்கு தயாராக இல்லை என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சருடனான சந்திப்பின் பின்னர் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “மக்களின் நியாயமான போராட்டத்திற்கு தீர்வு கிடைக்கவேண்டும்....

நாட்டின் தென் கடற்பரப்பிற்கு அப்பால் பூமியதிர்ச்சி உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பூமியதிர்ச்சி காலி வெலிகம பிரதேசத்திலிருந்து 1512 கிலோமீற்றர் தூரத்தில் இந்து சமுத்திரத்தில் உணரப்பட்டுள்ளது. மேலும், குறித்த பூமியதிர்ச்சி 5.7 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலக சுகாதார நிறுவனம் அனுமதி வழங்கியுள்ள டெங்கு காய்ச்சலுக்கான தடுப்பூசியை இலங்கையில் பயன்படுத்துவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் அநுர ஜயவிக்ரம தெரிவித்துள்ளார். அண்மையில் சுகாதார அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்போது ‘டெங்கு வெக்சியா’ என இந்த தடுப்பூசி...

தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட புலனாய்வுப் பிரிவு தலைவர்களில் ஒருவர் படகு மூலம் இலங்கைக்குள் பிரவேசித்துள்ளார் என சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. மட்டக்களப்பு சந்திவெளி பகுதியில் புலிகளின் புலனாய்வு பிரிவு தலைவராகவும், ஜெயந்தன் படையணியின் தலைவர்களில் ஒருவராகவும் கடமையாற்றிய ஜெயந்தன் எனப்படும் மோகனதாஸ் என்பவரே இவ்வாறு சட்டவிரோதமாக நாட்டுக்குள் பிரவேசித்துள்ளார். கடந்த வாரம்...

தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறுப்பின் கீழிருந்த மற்றும் யுத்தகாலத்தில் கைவிடப்பட்ட வீடுகளிலிருந்து மீட்கப்பட்ட தங்க ஆபரணங்கள் மற்றும் ஏனைய பெறுமதிமிக்க பொருட்களை, உரியவர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன என்று, பாதுகாப்பு அமைச்சின் தகவல் தெரிவிக்கிறது. அவ்வாறு மீட்கப்பட்ட, சுமார் ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான பொருட்களை முதற்கட்டமாக கையளிப்பதற்கான செயற்பாடுகளே முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும் அந்த தகவல்...

யாழில் இன்புளுவென்சா நோய் அறிகுறிகளுடன் 36 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்திய சாலையின் பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் எஸ். ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் என்1,எச் 1 வைரஸ் காய்ச்சல் தொடர்பிலான மக்கள் தெளிவுப்படுத்தும் ஊடகவியாளர்கள் சந்திப்பு ஒன்று நேற்று யாழ். போதனா வைத்திய சாலையில் நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். யாழ்.போதனா வைத்தியாசாலையில்...

மானிப்பாய் பொன்னாலை வீதியில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் வீடு புகுந்த இனம்தெரியாத குழுவினர் வாள் முனையில் 19 வயது யுவதியினை கடத்திக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மானிப்பாய் பொன்னாலை வீதியில் உள்ள வீட்டிற்குள் இரவு 9 மணியளவில் ஓர் கார் மற்றும் 3 மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்கள் குழு...

முல்லைத்தீவில் கேப்பாபுலவு இராணுவத் தலைமையகம் முன்பாக தமது பூர்வீகக் காணிகளை மீட்கப் போராடும் மக்களுடன் இராணுவத்தினர் புத்தாண்டை கொண்டாடியுள்ளனர். இம் மக்கள் கடந்த மாதம் முதலாம் திகதி ஆரம்பித்த போராட்டத்தை 56ஆவது நாளாகவும் இன்றும் தொடர்கின்றனர். இந்த நிலையில் இராணுவத் தலைமையகம் முன்பாக கூடாரம் அமைத்து போராட்டத்தில் ஈடுபடும் மக்களை இராணுவத்தினர் சென்று சந்தித்து புத்தாண்டு...

அரசியல் கைதிகள் தீர்வுகள் தொடர்பில் விரைவில் நல்லாட்சி அரசாங்கத்துடன் இறுக்கமான பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் வலி.வடக்குப் பிரதேச சபை தலைவர் சுகிர்தன் ஆகியோர் சித்திரைப் புத்தாண்டு தினமான நேற்று(வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு சென்றிருந்தனர். யாழ்.சிறைச்சாலையில்...

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கறுப்பு ஆடை அணிந்து கவனயீர்ப்பை முன்னெடுத்துள்ளனர். கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்டு நேற்று வெள்ளிக்கிழமை 54 ஆவது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சித்திரை புதுவருடத்தில் கறுப்பு ஆடை அணிந்தும் கறுப்பு கொடிகளை ஏந்தியவாறு தங்களது கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டனர். சித்திரை புதுவருட...

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவம் உட்பட படையினர் வென்றெடுத்த வெற்றியை நிலைபெறச் செய்ய வேண்டும் என ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பிறந்துள்ள ஏவிம்பி புதுவருட வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். தமிழர் தாயகப் பிரதேசங்களில் காணிகளை மீட்பதற்கும், காணாமல் போன தமது உறவுகளை கண்டறிந்துதருமாறு கோரி தொடர் போராட்டங்களில் மக்கள் ஈடுபட்டுள்ள நிலையில் அவர்களின்...

வடமாகாணத்தின் பல பகுதிகள் வறட்சியினால் பெருமளவில் பாதிப்பு ஏற்படும் என யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நா. பிரதீபராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார். குறிப்பாக தீவகப் பகுதிகள் மார்ச் மாதத்திலேயே குடிநீர் பிரச்சினையை எதிர்கொண்டு வந்த நிலையில், தற்பொழுது குடிநீருக்காக மக்கள் அலைந்து திரிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலத்துடன் ஒப்பிடும்...

All posts loaded
No more posts