- Wednesday
- August 27th, 2025

பலாலி விமான நிலையத்தினைச் சூழவுள்ள பகுதிகளை விடுவிப்பது குறித்து முடிவுகள் எட்டப்படவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார். யாழ்.மாவட்ட செயலகத்தில் வலி.வடக்கு காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல் நேற்று வெள்ளிக்கிழமை (21) நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், தமிழ் தேசிய கூட்டமைப்பின்...

பூமி தினமான நாளை சனிக்கிழமை முதல் அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளில், பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பொருள்களின் பாவனையை முற்றாகத் தடை செய்யவேண்டும். உணவுச்சாலைகளிலும், திருமண மண்டபங்களிலும் இவற்றின் பாவனையை இல்லாதொழிக்கவேண்டும். இவ்வாறு யாழ்ப்பாண மாநகர சபையினால் அனுப்பப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடக்கு மாகாண சபை எடுத்துக் கொண்ட தீர்மானத்துக்கு...

“மீதொட்டமுல்லயில் இறந்தால் மட்டும்தான் உயிர்களா? எமது பிள்ளைகளின் உயிர்களைப்பற்றி அரசாங்கத்திற்கு அக்கறை இல்லையா? பிள்ளைகளை விசாரணைக்காக ஒப்படைக்கும்போது நாங்கள் மட்டும்தானே கண்கண்ட சாட்சிகள்” என கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்த தகவல்களை வெளிப்படுத்தவேண்டும் எனத் தெரிவித்து, அவர்களது உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் சத்தியாக்கிரகப்...

மக்கள் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை காணிகள் விடுவிக்கப்படும் வரை கைவிட வேண்டாம் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். நேற்றயதினம் கேப்பாபுலவு மக்களை முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் இன்றுடன் 52 ஆவது நாளாக இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்களுக்கும்,...

தென்மராட்சி பிரதேச கிராம அலுவலர்கள், நேற்று முதல் மறு அறிவித்தல் வரை தமது பிரிவுக்குக் கடமைக்குச் செல்வதில்லை என தெரிவித்துள்ளனர். அல்லாரை கிராம அலுவலர் பிரிவில் உள்ள ஒரு வீட்டில் உள்ளவர்கள், புதுவருட தினத்தில் இருந்து 3 நாட்களாக, ஒலிபெருக்கி மூலம் பாடல்கள் ஒலித்ததுடன், இரவு- பகலாக தாமும் பாடி அயலவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தியுள்ளனர். இதுதொடர்பில்...

தமிழ் தேசிய கூட்டமைப்பினை சிதைக்கும் எண்ணம் தனக்கில்லை எனவும் எவ்வாறான எதிர்ப்புக்கள் வந்தாலும் அதனை கூட்டமைப்பிற்குள் இருந்தவாறே சமாளிக்க தயார் என்றும் வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் சில அரசியல் தலைமைகளினால் புதிய அரசியல் கட்சி உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளியான தகவல்கள்...

கேப்பாப்பிலவு மக்களின் காணிகளுக்கு பதிலாக மாற்றுக் காணிகள் அல்லது நஷ்டஈட்டுத்தொகையே வழங்கப்படும் என இராணுவத்தினர் உறுதியாக கூறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். கேப்பாப்பிலவு மக்களின் காணியிலுள்ள முல்லைத்தீவு இராணுவ கட்டளைத் தலைமையகத்தை அகற்றி அந்த காணிகளை மக்களிடம் மீளக் கையளிப்பது தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நேற்று (புதன்கிழமை) அரசாங்க அதிபர் மற்றும்...

கடல் நீரை நன்னீர் ஆக்கும் திட்டத்தால் மீன் வளங்கள் அதிகரிக்குமே தவிர மீன் வளங்கள் அழியாது என இலங்கை கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள கடலடி ஆய்வுபிரிவான நராவின் தலைமை அதிகாரி கலாநிதி கே.அருளானந்தனம் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , வடமராட்சி, மருதங்கேணி...

அகிம்சை போராட்டத்தின் மூலம் தமிழர்களின் போராட்டத்தை முழு உலகத்தையும் திரும்பிப் பார்க்கச் செய்த அன்னை பூபதியின் 29ஆவது ஆண்டு நினைவு தினம், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் கிளிநொச்சி அலுவலகமான அறிவகத்தில் இடம்பெற்றது. இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்ற இந் நினைவுதின நிகழ்வில், வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான சு.பசுபதிப்பிள்ளை, ப.அரியரத்தினம் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டு,...

“எமது பிள்ளைகள் ராணுவத்தினரின் பிடியிலேயே உள்ளனர். இதற்கான போதிய ஆதாரங்கள் காணப்படுகின்ற நிலையிலும் அவர்கள் ஏன் இன்னும் விடுவிக்கப்படவில்லை?” என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கிளிநொச்சியில் கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (புதன்கிழமை) 59ஆவது நாளாகவும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது....

நாட்டில் தற்பொழுது காணப்படும் சூடான காலநிலை அடுத்த மாதம் முதல் வாரம் வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. எமது நாட்டுக்கு சூரியன் உச்சம் கொடுத்திருப்பதும், மாலை நேரத்தில் பெய்வதற்கிருந்த மழை பெய்யாமல் இருப்பதும், மழை மேகங்கள் உயர்ந்திருப்பதும், காற்று குறைந்து காணப்படுவதும் இந்த சூடான கால நிலைக்கு காரணமாகும் எனவும் திணைக்களம் மேலும்...

மருதங்கேணி கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் சுற்றுச்சூழலை பாதிப்படையச் செய்யும் என விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் மேற்படி திட்டத்தை உடனடியாக நிறுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றய தினம் (செவ்வாய்கிழமை) நடைபெற்ற மேற்படி கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் தொடர்பான சாத்தியகூறு குறித்த ஆய்வு கூட்டத்திலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இரணைமடு- யாழ்ப்பாணம் குடிநீர் திட்டத்திற்கு...

காணாமல்போனோர் அலுவலகத்தை அமைப்பது குறித்த சட்டம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரைவில் முடிவெடுப்பார் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். நேற்று (செவ்வாய்கிழமை) கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “காணாமல்போனோர் அலுவலகத்தை நிறுவும் சட்டம் கடந்த வருடம் இறுதிப்...

இயேசு கிறீஸ்துவை இறை தூதனாக ஏற்றுப் பணிந்து வருபவன் நான்!! திரிவுபடுத்தப்பட்ட செய்திக்கு வருத்தம்!!!
கிறீஸ்தவ மக்களின் மனங்களை உண்மையில் புண்படுத்தி விட்டதென்றால் அதற்காக நான் மனவருத்தம் அடைகின்றேன். ஆனால் மன வருத்தம் அடைய வேண்டிய விதத்தில் எதுவும் சொல்லப்படவில்லை என்பதே என் வாதம். என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டு உள்ளார். முதலமைச்சரால் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது,...

வடக்கு, கிழக்கு மாகாணத்தில் வேலையில்லா பட்டதாரிகளின் போராட்டத்திற்கு தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். அதனை முகாமைத்துவ திணைக்களத்திற்கு அனுப்பி அதற்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான அமைச்சரவையின் அனுமதிகள் கிடைத்த பின்னர் அதற்கான விண்ணப்பக் கோரல்கள் இடம்பெறும் என்று சுமந்திரன் தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் செயலகத்தின் ஏற்பாட்டில் தமிழ்,...

இன்புளுவன்சா நோயாளிகளுக்கு வழங்கும் டெம்ப்லு மருந்துக்கு எந்தவொரு பற்றாக்குறையும் இல்லை என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஜெயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார். டெங்கு, வைரஸ் காய்ச்சல் மற்றும் இன்புளுவன்சா போன்ற நோய்களுக்கு வழங்கும் குறித்த மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம்சாட்டியிருந்தது. இது குறித்து அச் சங்கத்தால் வௌியிடப்பட்ட அறிக்கையிலேயே இந்த...

யாழ்ப்பாண மக்கள் எல்லா பிரச்சினைகளுக்கும் என்னிடமே வருகின்றார்கள். நான் அமைச்சரும் அல்ல, அரசியல்வாதியும் அல்ல. ஒரு ஆளுநர் என வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று (18) மதியம் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஆளுநரிடம் பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு தொடர்பாக கேட்டபோதே இதனைத் தெரிவித்துள்ளார். பட்டதாரிகளுக்கு வேலை கொடுப்பது...

முல்லைத்தீவு கொக்குளாய் பகுதியில் சிங்கள மீனவர்களுக்கும் தமிழ் மீனவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. மீன்பிடிப்பதற்கான கரைவலைப்பாடு தொடர்பிலான அளவீட்டின் போதே, இந்த அமைதியின்மை இன்றைய தினம் ஏற்பட்டதாக அறியமுடிகின்றது. யுத்தத்தினால் கொக்குளாய் பகுதியில் பாரம்பரிய மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவந்த தமிழ் மீனவர்கள் இடம்பெயர்நத நிலையில், தமிழர்களின் கரைவலைப்பாடுகளை நீர்கொழும்பு, சிலாபம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்துவந்த...

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.விக்னேஸ்வரன் இயேசுக்கிறிஸ்துவை விமர்சித்து கருத்து வெளியிட்டமைக்கு பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது. பாலியல் வழக்கில் சிக்கியுள்ள பிறேமானந்த சுவாமியுடன் இயேசுவை ஒப்பிட்டு, வடக்கில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றுக்கு விக்னேஸ்வரன் வழங்கிய செவ்வி தொடர்பில் அந்த சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்...

காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களை நினைத்து தினமும் கண்ணீருடன் வாழும் தமக்கு, தமது உறவினர்களின் நிலை தொடர்பில் அறிவிக்குமாறு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) 58வது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இப் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள...

All posts loaded
No more posts