- Wednesday
- August 27th, 2025

கடந்த மூன்று தசாப்பதங்களாக தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசு மேற்கொண்டு வந்த இனவழிப்பு யுத்த காலத்திலும், 2009 யுத்த முடிவில் ஸ்ரீலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்த மற்றும் உறவினர்களால் கையளிக்கப்பட்ட பின்னரும் காணாமல் போகச் செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் மற்றும் பொது மக்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றிய தகவல்கள் யுத்தம் முடிந்து 8 ஆண்டுகள்...

எதிர்வரும் 27ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள பூரண ஹர்த்தாலிற்கு ஒத்துழைப்பு வழங்கி போராட்டத்தினை பலமடையச் செய்யுமாறு, கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் இணைப்பாளர் ஆனந்தராஜா லீலாதேவி தெரிவித்துள்ளார். நேற்றயதினம் (செவ்வாய்க்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த காலங்களில் எங்களுடைய...

நாட்டில் நிலவுகின்ற ஆகக்கூடிய வெப்பம் காரணமாக, ‘வெப்ப அதிர்ச்சி’ ஏற்படக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும், ஆகையால், பிள்ளைகளை தண்ணீரில் விளையாட விடுமாறும் சிறுவர் நல வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். வெப்ப அதிர்ச்சி நிலைமையை இல்லாமற்செய்வதற்கு, தண்ணீரைக் கூடுதலாகக் குடிக்கவும் உடலை தண்ணீரில் நனைத்துக் கொள்ளவும் வேண்டும் என்றும் வைத்தியர் அறிவுரை கூறியுள்ளார். விசேடமாக, சின்னப்...

வடக்கு கிழக்கு மாகாணங்களில் வழமையான வெப்ப நிலையை விட அதிகளவிலான வெப்பநிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டுகளை விட இம்முறை வெப்ப நிலை அதிகரித்திருக்கிறது ஏனைய பிரதேசங்களில் வழமையை விட 3 செல்சியஸ் அதிகளவிலாக வெப்பநிலை நிலவுகிறது. திருகோணமலை மாவட்டத்தில் தற்சமயம் 37 பாகை செல்சியஸ் வெப்பநிலை நிலவுகிறது. மேலும் 3 செல்சியசினால்...

தமிழர் தாயக பிரதேசத்தில் படையினரிடம் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுக்கு நீதி கோரி நாளைமறுதினம் (வியாழக்கிழமை) நடைபெறவுள்ள போராட்டமானது, சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈரக்கவேண்டுமென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கேட்டுக்கொண்டுள்ளார். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது சங்கங்களின் அழைப்பின்பேரில் வடக்கு, கிழக்கில் அனுஷ்டிக்கப்படவுள்ள இப் போராட்டம் தொடர்பாக ஊடகம் ஒன்றிற்கு கருத்துத்...

எதிர்வரும் 27 ஆம் திகதி கடையடைப்பு செய்யப்பட மாட்டாது எனவும் வேறு வழிகளில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்க முடிவு எடுத்துள்ளதாக வவுனியா வர்த்தக சங்கத் தலைவர் ரி.கே.இராஜலிங்கம் தெரிவித்துள்ளார். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி எதிர்வரும் 27ஆம் திகதி பூரண கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு கோரி நேற்று (திங்கட்கிழமை)...

ஊர்காவற்றுறை பகுதியில் வீட்டில் தனித்திருந்த பெண்ணுக்கு மயக்க மருந்து விசிறி, வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்ற நபரை, எதிர்வரும் 5 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான், நேற்று உத்தரவிட்டுள்ளார். ஊர்காவற்றுறை பகுதியில் உள்ள வீடொன்றினுள் ஞாயிற்றுக்கிழமை (23) அதிகாலை 12.30 மணியளவில் புகுந்த சந்தேக நபர், அங்கு தனித்து இருந்த 18 வயதுடைய...

முல்லைத்தீவு, கேப்பாப்புலவில் 189 ஏக்கர் விஸ்தீரனமான தனியார் காணிகள் நிதிஒதுக்கீடுகள் கிடைத்ததன் பின்னர், 6 வாரங்களில் விடுவிக்கப்படும் என்று, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா உறுதி அளித்துள்ளார். அதேபோல், முள்ளிக்குளம் மக்களுக்குச் சொந்தமான விவசாயக் காணிகளை, தேசிய காணி விடுவிப்பதற்கான நடைமுறையின் கீழ் விடுவிக்க கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவிந்திர...

அக்கினிச் சிறகுகள் அமைப்பைச் சேர்ந்த சிலரிடம், பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. ”நொக் அவுட்” முறையிலான கால்பந்து சுற்றுப் போட்டியை, அக்கினிச் சிறகுகள் அமைப்பு, கிளிநொச்சியில் நடத்திவருகிறது. இதில், வடக்கு, கிழக்கிலுள்ள விளையாட்டு சங்கங்கள் பங்குபற்றுகின்றன. முள்ளிவாய்க்கால் ஞாபகார்த்த தினத்தை அடிப்படையாக கொண்டே, இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மே18...

கனியவள கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க உறுப்பினர்கள் மேற்கொண்டு வந்த பணிநிறுத்தப் போராட்டத்தை நிறுத்துவதற்கு தொழிற்சங்க ஓன்றியம் தீர்மானித்துள்ளது. நேற்று (24) மாலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, துறைசார் அமைச்சர் உள்ளிட்டவர்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் அடிப்படையில், தொழிற்சங்க போராட்டத்தை கைவிடுவதற்கு அவர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனியவள மற்றும் பெற்றோலிய வாயுத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி இதனைத் தெரிவித்தார். திருகோணமலையில்...

கடுமையான போர்க்குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான இராணுவத்தின் உயர் அதிகாரிகளுள் ஒருவரான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, கஜபா காலாட்படை பிரிவின் தலைமை கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கஜபா படைப்பிரிவின் தலைமை தளபதியாக பதவி வகித்து வந்த மேஜர் ஜெனரல் உதய பெரேரா இவ்வாரம் ஓய்வுபெறவுள்ள நிலையில், அப் பதவிக்கு சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இறுதி...

“இறுதி யுத்தத்தில் நந்திக்கடல் பகுதியில் காணாமல் போன எனது 17 வயதான பெண்பிள்ளை குறித்த தகவல்கள் எதுவுமே தெரியாது. இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் வந்ததைக் கண்டதாக எமது உறவினர்கள் கூறினார்கள். எங்களுக்கு எமது பிள்ளைகள் கிடைக்கவேண்டும், இல்லையெனில் இவ்விடத்திலேயே செத்து விடுவோம்” என கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவான தாயொருவர்...

காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் நில மீட்பு தொடர்பான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், எதிர்வரும் 27ம் திகதி பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கு விடுத்துள்ள அழைப்பிற்கு, தமிழ் மக்கள் பேரவையும் தமது ஆதரவை தெரிவித்துள்ளது. வட மாகாணத்தில் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் நில மீட்புக்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிற்கு நீதி கோரும் வகையில், தமிழ்...

இலங்கை பெற்றோலிய வள கூட்டுத்தாபனத்தைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் சில வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன. திருகோணமலை துறைமுகத்திலுள்ள எரிபொருள் தாங்கியை இந்தியாவுக்கு வழங்க எதிர்ப்புத் தெரிவித்தல் உட்பட மூன்று கோரிக்கைகளை முன்னிருத்தி, இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக, இவர்கள் முன்னரே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, போராட்டத்தை அடுத்து, எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் நீண்ட வரிசையில் வாகன...

வேமாக பரவிவரும் இன்புளுவன்ஸா ஏ.எச்.வன்.என்.வன் தொற்று காரணமாக மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு சுகாதார சேவை அறிவுறுத்தியுள்ளது. நாட்டின் பல பாகங்களிலும் வேமாக பரவிவரும் இன்புளுவன்ஸா ஏ.எச்.வன்.என்.வன் தொற்று காரணமாக, பல உயிர்கள் காவுக்கொள்ளப்படுகின்ற நிலையில், இந்த அறிவுறுத்தல் முக்கிய விடயமாக பார்க்கப்படுகின்றது. இந்நிலையில், இது குறித்து மக்களுக்கு அறிவுறுத்தியுள்ள சுகாதார சேவை பணிப்பாளர் ஜயசுந்தர பண்டார,...

முள்ளிக்குளம் மக்களின் மண்மீட்பு போராட்டம் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்து, விரைவில் சிறந்த தீர்வுடன் உங்களை மீண்டும் சந்திப்பேன் என வட. மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே உறுதியளித்துள்ளார். மன்னார் ஆயர் இல்லத்தின் அழைப்பை ஏற்று நேற்று (வெள்ளிக்கிழமை) மன்னாருக்கு விஜயம் மேற்கொண்ட வட. மாகாண ஆளுநர், அங்கு மண்மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முள்ளிக்குளம் மக்களை...

தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துவதற்கு வடக்கு- கிழக்கு இணைப்பு அவசியமாக உள்ளது என வட. மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள துருக்கி நாட்டின் இலங்கைக்கான தூதுவர் துங்கா ஒஸ்காவிற்கும், வட.மாகாண முதலமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. இதன்போது வடக்கு- கிழக்கு இணைப்பு தொடர்பில் துருக்கி தூதுவர் வினவியிருந்த...

நாடு பூராகவும் உள்ள இலட்ச கணக்கான மக்கள் மீளவும் கடுமையான வரட்சிக்கு முகங்கொடுத்து வருகின்றனர். கடுமையான வெப்பநிலை நிலவுகின்றமையினால் நாட்டின் பல பாகங்களிலும் கடுமையான வரட்சி ஏற்பட்டுள்ளது. எனினும் மே மாதமளவில் பருவ பெயர்ச்சி கால மழைவீழ்ச்சி பதிவாகும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இந்த வருடம் ஜனவரி மாதம்...

வவுனியா மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட 115 பேரின் பேர் விபரங்கள் வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கத்திடம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் நேற்று(வெள்ளிக்கிழமை) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தயாகத்தில் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் நடை பெறும் இடத்துக்கு கடந்த மாதம் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரட்ண விஜயம்...

15 வயது சிறுமி 13 பேர் கொண்ட மோட்டார் ஊர்திகளில் வந்த குழுவினரால் கடத்தப் பட்டுள்ளார். தர்சனா கோவிந்தசாமி எனும் இந்த சிறுமி (April 20, 2017) காலை 10 மணியளவில் பிரமந்தனாறு கிளிநொச்சியில் உள்ள தனது வீட்டில் உணவருந்திக் கொண்டிருந்த வேளையிலேயே கடத்தப்பட்டுள்ளார். இவர் உரித்திரபுரத்திலுள்ள மகாதேவா இல்லத்தில் வசித்து கல்வி பயில்பவரெனவும் விடுமுறைக்காக...

All posts loaded
No more posts