காலவரையறையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்! : அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

மாலபேயில் அமைந்துள்ள தொழில்நுட்பம் மற்றும் மருத்துவத்துக்கான தெற்காசிய நிறுவகத்தை (சைட்டம்) தேசியமயப்படுத்துமாறு கோரி, காலவரையறையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்த அச்சங்கத்தின் உப செயலாளர் நளிந்த ஹேரத், காலவரையற்ற இந்த வேலைநிறுத்தம், அனேகமாக இம்மாதம் 15ஆம் திகதியிலிருந்து ஆரம்பிக்கும் எனத் தெரிவித்தார். இது தொடர்பான இறுதி...

பலாலி படைத்தளத்தில் போர் வீரர்கள் தினம் அனுஷ்டிப்பு

யுத்தத்தில் உயிர்நீத்த படை வீரர்களின் நினைவுதினம், யாழ். பலாலி படைத் தலைமையகத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே பிரதம விருந்தினராக கலந்துகொண்டு, பலாலி படைத் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிக்கு மலரஞ்சலி செலுத்தினார். அத்தோடு, வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களினதும் அரசாங்க அதிபர்கள், யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா...
Ad Widget

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து மோடியுடன் கலந்துரையாடப்படும் : இரா.சம்பந்தன்

இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அரசியல் மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 11ஆம் திகதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதோடு, 12ஆம் திகதி கூட்டமைப்பை சந்திப்பாரென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் இச் சந்திப்பின் போது தமிழ்...

துணைவேந்தர் பதவிக்காக அரசியல்வாதிகளின் கால்களில் விழுவதா?

யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவு தொடர்பாக யாழ். மறைமாவட்ட ஆயர் வண. ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை கடும் விசனம் வெளியிட்டுள்ளார். முதலாவதாக தெரிவு செய்யப்பட்டவரை விட அடுத்த நிலையில் உள்ளவர் அரசியல்வாதிகளின் கால்களில் விழுந்து துணைவேந்தராக வந்திருக்கின்றார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். துணைவேந்தர்கள் இவ்வாறு அரசியல்வாதிகளின் கால்களில் வீழ்ந்து பதவிக்கு வந்தால் மாணவர்கள் மதிப்பார்களா?...

கனகம்புளியடியில் வாள்வெட்டு!! மூவர் படுகாயம்!

சாவகச்சேரி – கனகம்புளியடி சந்தியில் அமைந்துள்ள உணவு விடுதியினுள் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் உணவக உரிமையாளர் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்ற பிற்பகல் 4 மணியளவில் இடம்பெற்றதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர். இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த அறுவர் கொண்ட குழுவினரே இவர்கள் மீது வாள்களால் வெட்டிவிட்டுத் தப்பிச்சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுகிறது. சம்பவத்தில் உணவகத்தின்...

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மக்களுக்கு உண்மைகளை மறைத்து பொய்யாக செய்திகளை கூறிவருகின்றது

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மக்களுக்கு உண்மைகளை மறைத்து பொய்யாக செய்திகளை கூறிவருகின்றது உண்மையாகவே நாம் எதிர்பார்க்கக்கூடிய எந்த தீர்வும் கிடைக்கப்போவதில்லை என அமைச்சர் மனோகணேசன் பிரித்தானியாவில் தெரிவித்துள்ளார். நான் இவ்வாறு உண்மைகளை சொல்லுவது சம்பந்தன் சுமந்திரனுக்கு பிடிப்பதில்லை சந்திரனை தருகிறோம்,இந்திரனை பிடித்து தருகிறோம் என த.தே.கூட்டமைப்பு பம்மாத்து காட்டிவருகிறது என பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ள மனோ கணேசன் உண்மையாக...

வீடுகளுக்கு வந்து இலவசமாக இரத்த மாதிரி பரிசோதனை செய்வதாக கூறி எச்.ஐ.வி வைரஸ்ஸை பரப்புவோர் தொடர்பில் எச்சரிக்கை

வீடுகளுக்கு வந்து இலவசமாக இரத்த மாதிரி பரிசோதனை செய்வதாக கூறி எச்.ஐ.வி வைரஸ்ஸை ஊசி மூலம் உட்செலுத்துவதாக தற்போது சமூகவலைத்தளங்களில் செய்தியொன்று அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது. வீடுகளுக்கு வந்து இலவசமாக இரத்த மாதிரி பரிசோதனை செய்வதாக கூறி எச்.ஐ.வி வைரஸ்ஸை ஊசி மூலம் உட்செலுத்துவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஐ.எஸ் தீவிரவாதிகளின் திட்டம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிங்களம் மற்றும்...

மஹிந்தவை தோற்கடிக்க அமெரிக்க வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கிய ஒபாமா

மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்க சர்வதேச ரீதியாக செயற்பட்ட படைகளுடன் பராக் ஒபாமா அமெரிக்க வரவு செலவுத் திட்டத்தில் இருந்து 454 மில்லியன் நிதியை ஒதுக்கியதாக, பாராளுமன்ற உறுப்பினர் சீ.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதனை தற்போ​தைய அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் வௌிப்படுத்தியுள்ளதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினால் நேற்று நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு...

இந்திய ஆசிரியர்களை வரவழைக்கும் நடவடிக்கை ; இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்

ஊவா மாகாணத்தில் நிலவும் க.பொ.த உயர்தர விஞ்ஞான மற்றும் கணிதப் பிரிவுகளுக்கான ஆசிரியர் வெற்றிடங்களுக்காக இந்திய ஆசிரியர்களை வரவழைக்கும் நடவடிக்கையை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது. இதேவேளை, ஊவா மாகாணத்தில் உயர்தர விஞ்ஞான மற்றும் கணிதப் பிரிவு மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு தாம் தயாராகவுள்ளதாக, அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்தனர். ஊவா மாகாணத்தில் நிலவும்...

அரசியலமைப்பு விடயத்தில் அரசாங்கம் பின்வாங்கும் ஆபத்து!: சம்பந்தன்

அரசியலமைப்பு உருவாக்க முயற்சியில் மந்த கதியில் செயற்பட்டு வந்த அரசாங்கம், தற்போது அவ்விடயத்தில் பின்வாங்கும் ஆபத்து காணப்படுகிறது என எதிர்க்கட்சி தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அண்மையில் இடம்பெற்ற கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், முன்னாள் ஜனாதிபதி...

வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டமையால் போராட்டத்தில் ஈடுபடுகிறோம்

இரணைத் தீவுக்கு இரண்டு வாரத்தில் செல்லலாம், இரண்டு மாதத்தில் செல்லலாம் அனுமதியை பெறுவதற்கான முயற்சியில் இருக்கின்றோம் என அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்குறுதிகளை வழங்கினார்கள். ஆனால், அந்த வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டுவிட்டோம். இதனாலேயே போராட்டத்தில் ஈடுப்பட்டிருக்கிறோம் என இரணைத்தீவு மக்கள் தெரிவித்துள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை ஜந்தாவது நாளாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் ஊடகங்களுக்கு கருத்து...

மாணவியிடம் காதலை தெரிவித்தார் ஆசிரியர்!: பாடசாலை கல்வி செயற்பாடுகள் பாதிப்பு!!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்தில் பயிலும் மாணவியிடம் தனது காதலை தெரிவித்ததால், பாடசாலை செயற்பாடுகள் பாதிக்கப்பட்ட சம்பவம், இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம், அனலைதீவில் உள்ள பாடசாலையொன்றின் ஆங்கில ஆசிரியர் ஒருவர் அப்பாடசாலையில் கல்வி பயிலும் சாதாரண தர மாணவியிடம் தனது காதலைத் தெரிவித்துள்ளார். அதற்கு மறுப்புத் தெரிவித்த, மாணவி இந்த விவகாரம் தொடர்பில் தன்னுடைய உறவினர்களிடம்...

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு விரைந்து முடிக்கப்படும்!

புங்குடுதீவு மாணவி கொலை வழக்குடன் தொடர்புடைய ஆவணங்கள், யாழ். மேல் நீதிமன்றில் பாரப்படுத்தப்படின் குறித்த வழக்கை தொடர் விசாரணைகள் மூலம் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பேன் என, யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், இன்று (05) தெரிவித்தார். இதேவேளை, குறித்த வழக்கு தொடர்பான குற்றப்பகிர்வு பத்திரம், எதிர்வரும் 12ஆம் திகதிக்கு முன்னர் யாழ். மேல் நீதிமன்றில்...

30 தொழிற்சங்கங்கள் இன்று காலை முதல் பணிப்பகிஷ்கரிப்பில்

சுகாதாரம்,கல்வி மற்றும் போக்குவரத்து துறைகளைச்சார்ந்த சுமார் 30 இற்கு மேற்பட்ட தொழிற் சங்கங்கள் இன்று (05) வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். எனினும் இந்த வேலை நிறுத்தம் காரணமாக ஆபத்தான நிலையிலுள்ள நோயாளர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட மாட்டாதெனவும், மகப்பேற்று மற்றும் சிறுவர்...

ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனங்கள்!

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள் 1,000 பேருக்கு முதற்கட்டமாக கால மூப்பு அடிப்படையில் நியமனங்கள் வழங்குவதற்கு அனுமதி கிடைத்துள்ளது என அம்மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், தெரிவித்தார். மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் போராட்டங்களில் ஈடுபட்டுவரும் வேலையற்ற பட்டதாரிகளை, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் உள்ளிட்டோர் இந்த வாரம் சந்தித்துக்...

மைத்திரி மஹிந்த இரகசிய சந்திப்பு?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும் இடையில் நேற்றிரவு இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கொழும்பு கறுவாத் தோட்டத்தில் உள்ள விடுதி ஒன்றிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பில், அமைச்சர்களான மஹிந்த அமரவீர, சந்திம வீரகொடி, லசந்த அழகியவன்ன மற்றும் டிலான் பெரேரா ஆகியோர்...

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு சந்தேகநபர்களின் விளக்கமறியல் எதிர்வரும் 17ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டு உள்ளது. ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.ரியால் முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சந்தேக நபர்கள் பத்து பேரும் மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அதனை தொடர்ந்து சந்தேக நபர்கள் பத்து பேரையும் எதிர்வரும் 17ஆம் திகதி வரையில் விளக்கமறியலில்...

சுன்னாகம் பொலிஸ் நிலைய சித்திரவதை வழக்கு ; பொலிஸ் அதிகாரிகளுக்கு 10 ஆண்டு கடூழிய சிறை

சுன்னாக பொலிஸாரினால் சிறிஸ்கந்தராசா சுமணன் என்ற இளைஞர் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்தமை தொடர்பான வழக்கில் அப்போதைய சுன்னாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிந்தக்க பண்டார உள்ளிட்ட 6 பொலிஸாரை குற்றவாளியாக கண்ட யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீரப்பளித்துள்ளார். அதேவேளை குறித்த வழக்கின் 3 ஆவது...

அரசாங்கத்திற்கு எதிராக கறுப்பு கொடி போராட்டம் நடத்தப்படும்: சிவாஜிலிங்கம்

வடக்கு கிழக்கிற்கு வரும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக மக்கள் வீதிக்கு இறங்கி கறுப்பு கொடி போராட்டத்தில் ஈடுபடுவர் என வட. மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் இன்று (வியாழக்கிழமை) கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வலி. வடக்கு விடுவிக்கப்படும் என ஜனாதிபதி வாக்குறுதி அளித்திருந்த...

வடமாகாணசபை அபிவிருத்திக்கு கிடைத்த சந்தர்ப்பங்கள் அனைத்தையும் தவறவிட்டிருக்கின்றது!

வடமாகாணத்தில் என்ன அபிவிருத்தி நடந்திருக்கிறது? என கேள்வி எழுப்பியிருக்கும் வடமாகாணசபை எதிர்கட்சி தலைவர் சி.தவராசா வடமாகாணசபை அபிவிருத்திக்கு கிடைத்த சந்தர்ப்பங்கள் அனைத்தையும் தவறவிட்டிருக்கின்றது எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார். வடமாகாணசபையின் மூன்றரை வருட செயற்பாடுகள் தொடர்பாக யாழ். ஊடக அமையத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும்...
Loading posts...

All posts loaded

No more posts