Ad Widget

பிளாஸ்டிக் விளையாட்டு பொருட்களால் ‘புற்றுநோய் வரும்’

தரப்படுத்தப்படாத, கட்டுப்படுத்தப்படாத நச்சுப் பிளாஸ்டிக் விளையாட்டுப் பொருட்களால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் ஏற்படுவதால் பெற்றோர் இது குறித்து அவதானமாக இருக்குமாறு நுகர்வோர் உரிமைகள் பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது வெளிநாடுகளில் இருந்து பிளாஸ்டிக் விளையாட்டுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் விளையாட்டுப் பொருட்கள், எந்தவொரு தரக்கட்டுபாடு அற்ற விதத்தில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுவதாகவும் அவ்வாறான விளையாட்டுப்பொருட்களால் புற்றுறோய் ஏற்படும் அபாயம் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு பல நாடுகள் பல்வேறு சான்றிதழ்களை கோரும் நிலையில், இலங்கையானது வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் இவ்வாறான பொருட்களுக்கு எவ்வித தரச் சான்றிதழ்களையும் கோருவதில்லை” என, ஆடைத் தொழிற்சாலைகள் சங்கத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் ரொஹான் மாசக்கோரள தெரிவித்துள்ளார்.

எனவே, இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ள வெளிநாட்டு நிறுவனங்கள், எவ்விதமான இடையூறுகளும் இன்றி, இலங்கைக்கு இவ்வாறான பொருட்களை இறக்குமதி செய்கிறது. அதாவது, எந்த குப்பையையும் இறக்குமதி செய்கிறது.

இவ்வாறான பொருட்களில் உடல் நலத்துக்கு தீங்கான பொருட்கள் கலப்படம் செய்து இறக்குமதி செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, வலி நிவாரணிகளால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் ஏற்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொள்ளத் தொடங்கும் 30 நாட்களுக்குள் இந்நோய்க்கான அறிகுறி தென்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும், இந்த ஆய்வுகள் 100 சதவீதம் உண்மையில்லை என்றும்,இதற்கு ஏனைய காரணிகளும் அடங்குவதாக வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related Posts