Ad Widget

புதைகுழிக்குள் மறைந்து கிடக்கும் கொலைகளை விசாரிக்கவே சர்வதேசத்தை நாடி நிற்கின்றோம்: தவராசா

நிரூபிக்கப்படாது புதைகுழிகளுக்குள் மறைந்து கிடக்கும் ஆயிரக்கணக்கான கொலைகளை குறித்து விசாரணை நடத்துவதற்காகவே மக்கள் சர்வதேச தரத்திலான நீதி முறைமையை கோரி நிற்கின்றனர் என வட. மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் தவராசா தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த தமிழ் மக்களுக்கான நினைவேந்தல் வாரத்தின் முதல் நாளான இன்று (வெள்ளிக்கிழமை) செம்மணி மண்ணில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வை தொடர்ந்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு மேலும் தெரிவித்த அவர், “சுமார் 600இற்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டு இந்த செம்மணி மண்ணில் புதைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆட்சி காலத்தில் விசாரணைகள் நடத்தப்பட்டன. அதன் வாயிலாக மாணவி கிரிஷாந்தி கொலை வழக்கு நிரூபிக்கப்பட்டது.

எனினும், நிரூபிக்கப்படாத ஆயிரக்கணக்கான கொலைகள் இன்னும் புதைந்து கிடக்கின்றன. அவற்றை விசாரணை செய்வதற்கே நாம் சர்வதேச நீதி முறைமையை கோரி நிற்கின்றோம்” என்றார்.

Related Posts