Ad Widget

வித்தியா வழக்கை கொழும்பு மேல் நீதிமன்றுக்கு மாற்ற வேண்டாம் : மக்கள் போராட்டம்

புங்குடுதீவு வித்தியா பாலியல் வன்புணர்வு கொலை வழக்கு விசாரணையானது யாழ்.மேல் நீதிமன்றில் இருந்து கொழும்பு மேல் நீதிமன்றுக்கு மாற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கானது ரயலட்பார் முறையில் யாழ்.மேல் நீதிமன்றிலேயே இடம்பெற வேண்டும் என்பதையும் வலியுறுத்தி புங்குடுதீவு பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை நேற்று மேற்கொண்டிருந்தனர்.



இதன்படி புங்குடுதீவு கந்தசாமி கோவிலடியில் இருந்து எதிர்ப்பு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகள் தாங்கியவாறு பேரணியாக நடந்து புங்குடுதீவு 11 வட்டாரம் ஆலடி சந்திவரை சென்றிருந்தனர்.

பின்னர் அப் பகுதியில் ஒன்றுகூடிய மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.



இப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், குறித்த மாணவியின் கொலை சம்பவம் இடம்பெற்ற இடமானது யாழ்ப்பாண மேல் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதியாக உள்ள நிலையில் தற்போது எதற்காக இவ் வழக்கு கொழும்பு நீதிமன்றுக்கு மாற்றப்பட வேண்டியுள்ளது.

இவ் செயற்பாடனாது யாழ்.மேல் நீதிமன்றின் நீதித் தன்மையை கேள்விக்குள்ளாகியுள்ளதாகவும் இம் மக்கள் தெரிவித்துள்ளனர்.



மேலும் குறித்த சம்பவம் இடம்பெற்றதும் யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த ஜனாதிபதி குறித்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் விஷேட நீதிமன்றம் அமைத்து நீதி வழங்குவதாக தெரிவித்திருந்த நிலையில் தற்போது குறித்த வழக்கை கொழும்புக்கு மாற்றுவதானது ஜனாதிபதி கூறிய வாக்குறுதியை மீறுகின்ற செயற்பாடெனவும் குறிப்பிட்டிருந்தனர்.


எனவே ஜனாதிபதி கூறியது போன்று யாழ்ப்பாணத்திலே குறித்த விஷேட நீதிமன்றத்தை அமைத்து திருகோணமலை யாழ்ப்பாணம் போன்ற இடங்களிலுள்ள தமிழ் நீதிபதிகளை நியமித்து இவ் வழக்கை விசாரணை செய்து தீர்ப்பளிக்க வேண்டும் எனவும் இம் மக்கள் இதன்போது தெரிவித்திருந்தனர்.



அத்துடன் குறித்த வழக்கு விசாரனையை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இருந்து கொழும்பு மேல் நீதிமன்றுக்கு மாற்றக்கூடாது என்ற தமது கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றினை இப் பகுதி மக்கள் அதில் கையெழுத்திட்டு அம் மகஜரினை வடமாகண ஆளுநர், ஜனாதிபதி, பிரதம நீதியரசர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும் மக்கள் தெரிவித்திருந்தனர்.


Related Posts