- Wednesday
- September 16th, 2026
யாழ்.நகரில் உள்ள உணவகம் ஒன்றின் மீது வாடிக்கையாளர் ஒருவர் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த உணவகத்தின் மீது பொதுச்சுகாதார பரிசோதகர்களினால் சோதனை நடத்தப்பட்டுள்ளதுடன், வழக்கும் பதிவு செய்யப்படவுள்ளது. குறித்த உணவகத்தில் கொத்து ரொட்டி பாசல் ஒன்றை வாங்கிய வாடிக்கையாளர் ஒருவர், அதனுள் தீக்குச்சி மற்றும் இறைச்சியில் அகற்றப்படாத ரோமம் ஆகியன உள்ளமை கண்டு குறித்த உணவகத்திற்குச்...
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்னால், HNDE மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தையடுத்து, 39 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் 5 பெண்களுடம் 2 பிக்குமாரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் ஆணைக்குழு நிறுவப்பட்டு ஒரு வாரம் கடந்துள்ள நிலையில், பொலிஸாருக்கு எதிரான பொதுமக்களின் முறைப்பாடுகள் நூற்றுக்கணக்கில் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு அமைய சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு கொழும்பை மையமாகக் கொண்டு செயற்படுகின்ற போதிலும், இலங்கையின் பல்வேறு பாகங்களில் ஒன்பது கிளை அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஆணைக்குழுவின்...
பணத்துக்காக குழந்தையின் தந்தையை மாற்றிய சம்பவம் ஒன்று யாழில் இடம்பெற்றுள்ளது. தாபரிப்பு பணத்தினை பெற்றுக் கொள்வதற்காக தனக்கு பிறந்த குழந்தைக்கு வேறொரு இளைஞன் ஒருவனை தந்தையாக்க பெண்ணொருவர் முயன்றுள்ளார். ஆனால் அக்குழந்தை அவ்விளைஞனுக்கு பிறந்தது அல்ல என்று மரபணு பரிசோதனையின் ஊடாக அம்பலமாகியுள்ளது. இந்நிலையில், தாபரிப்பு கேட்டு வழக்குத்தாக்கல் செய்த பெண், குறித்த இளைஞனுக்கு நட்டஈடு...
பாடசாலை மாணவர்கள் ஐவரை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் பளை - உடுதுறை பகுதியைச் சேர்ந்த ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவரை எதிர்வரும் 6ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உடுத்துறை பகுதி பாடசாலை ஒன்றின் மாணவர்கள் ஐவர் பளை பொலிஸில் முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைய இவர் கடந்த 26ம் திகதி...
கொக்குவில் பகுதியில் கஞ்சா மற்றும் பாவுல் ஆகிய போதைப்பொருட்களை மாணவன் ஒருவருக்கு விற்பனை செய்தவரையும் அவற்றை வாங்கி வைத்திருந்த மாணவனையும் கைது செய்துள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் பரிசோதகர் யு.கே. தெரிவித்தார். நேற்றைய தினம் கிடைத்த ரகசிய தகவலையடுத்தே இவர்கள் இருவரையும் தாம் கைது செய்ததாக அவர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,...
சுன்னாகம் நகரப் பகுதியில் மாணவர்கள் இருவரை, பியர் போத்தலால் வெட்டிய சந்தேகநபர்களில் பிரதான சந்தேகநபரை, எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், உத்தரவிட்டார். கடந்த 20ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவத்தில் உயர்தர வகுப்பு மாணவர்கள் இருவர் படுகாயங்களுக்குள்ளாகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு...
இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 34 பேர், இன்று செவ்வாய்க்கிழமை (27) கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணக் கடற்பரப்பில் வைத்து செவ்வாய்க்கிழமை (27) அதிகாலை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார். நெடுந்தீவுக்கு அண்மிய கடற்பரப்பில் 2 விசைப்படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்ட 13 மீனவர்களும்,...
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கூட்டு வன்புணர்வின் பின்னரான படுகொலைச் சந்தேக நபர்கள் 9 பேரின் மரபணு அறிக்கை மன்றில் சமர்ப்பிக்கபடாத நிலையில் எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலை நீடித்து ஊர்காவற்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்.ஊர்காவற்துறை நீதிமன்றில் மேற்படி வழக்கு விசாரணை இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன்போது, கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள...
துஷ்பிரயோகத்தின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட தனது மகள் குறித்து எவருக்கும் அக்கறை கிடையாது என சேயா சதெவ்மியின் தந்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில், கொண்டயா எனப்படும் துனேஷ் பிரியசாந்த தொடர்பில் சட்டத்தரணிகள் தீவிர அக்கறை காட்டுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். தனது மகளின் படுகொலை தொடர்பில் கைது செய்து விடுவிக்கப்பட்ட கொண்டயா...
நவராத்திரி பூஜை வழிபாடுகளை முடிந்து இரவு நடந்து சென்ற குடும்ப பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற புத்தூர் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய சாரதி ஒருவரை எதிர்வரும் நவம்பர் மாதம் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் கறுப்பை ஜீவராணி, வெள்ளிக்கிழமை (23) உத்தரவிட்டாhர். கடந்த 22ஆம் திகதி...
இலங்கை பொலிஸார் குற்றவியல் கைதிகளை வழமையாகவே சித்திரவதை செய்து, முறையற்ற வகையில் நடத்துகின்றனர் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்டித்துள்ளது. இது குறித்து அந்த வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- பொலிஸ் அமைப்பை கண்காணிக்க ஒரு சுயாதீன அமைப்பை அரசாங்கம் அமைக்க வேண்டும் என்றும் பொலிஸாரின் துஷ்பிரயோகங்களை தடுக்க ஆக்கபூர்வமான நடவடிக்கை...
இன்றுகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் விசாரணை செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். இன்று காலை விமல் வீரவன்சவிடம் வாக்குமூலம் பதிவு செய்து கொண்ட பின்னர் அவரை கைது செய்து நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்ருவன் குணசேகர தெரிவித்தார்....
தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட கடற்படை சிப்பாயின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் சக சிப்பாய் ஒருவரை ஊர்காவற்துறை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். அல்லைப்பிட்டி கடற்படை முகாமில் கடமையாற்றி வந்த பசற பகுதியைச் சேர்ந்த எஸ். பி.ஏ. லக்மல் ஜெயதிலக நேற்று முன்தினம் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார் என்றும் அவரின் சடலம் யாழ்....
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் இன்று வெள்ளிக்கிழமை காலையில் காத்தான்குடிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டடிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். 2008 ஆம் ஆண்டு மட்டக்களப்பு காத்தான்குடிப் பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதியில், வீட்டில் வைத்து ஆசிரியரான தமிழ்நாட்டு மனோகரன் எனப்படும் கிருஷ்ணப்பிள்ளை மற்றும் அவரது மனைவி தயாளினி ஆகியோர் ஒரே நேரத்தில் சுட்டுக்...
காங்கேசன்துறை கடற்படை முகாமில் பணிப்புரியும் கடற்படை சிப்பாய் ஒருவர் ஆனமடுவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலை மாணவி ஒருவருக்கு தனது மர்ம பிரதேசத்தை காட்டியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இந்த கடற்படை சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார். காங்கேசன்துறை கடற்படை முகாமில் பணியாற்றும் 33 வயதான இந்த கடற்படை சிப்பாய் விடுமுறையில் வீட்டிற்கு வந்திருந்தாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது....
60 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இருவர் கொடிகாமம் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். கலால் திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் வசமிருந்து 30 கிலோ கிராம் கேரள கஞ்சாவும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் இந்தியாவின் - இராமேஸ்வரம் கடல் மார்க்கமாக இவற்றை நாட்டுக்குள் கொண்டுவந்து வல்வெட்டித்துறை...
குறித்த நிறுவனம் சட்டவிரோதமான முறையில் தொலைகாட்சி, வானொலி நிலையம் என்பவற்றை இயக்கியதாகவும், அதனால் குறித்த நிறுவனம் கொழும்பில் இருந்து வந்த தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணையக அதிகாரிகளால் மூடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நிறுவனத்தில் இருந்து தொலைக்காட்சி மற்றும் வானொலி என்பவற்றின் ஒலிபரப்புக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் என்பவை கைபற்றப்பட்டதுடன் அலுவலகத்தில் இருந்த பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒருவரும் கைது...
யாழ்ப்பாணம் நீதிமன்ற கட்டடத் தொகுதியின் மீது, தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 8 பேரையும் பிணையில் செல்ல யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் பெ.சிவகுமார் அனுமதித்தார். 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான தலா ஐந்து ஆட்பிணையில் செல்வதற்கு ஒவ்வொருவரும் நீதவான் அனுமதியளித்தார். கடந்த வழக்குத் தவணையில் 16 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 8...
சுட்டுக்கொல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கின் சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபர் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார். இந்த வழக்கு நேற்று அழைக்கப்பட்டபோது குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் இதனை கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் அறிவித்தனர் என சந்தேகநபர்கள் தரப்பு வழக்கறிஞர் ஸ்ரீலால் தன்தெனிய தெரிவித்தார். ரவிராஜ் கொலை சம்பந்தமாக கைதுசெய்யப்பட்ட...
Loading posts...
All posts loaded
No more posts
