- Wednesday
- September 16th, 2026
இலங்கையில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்ட வீட்டுத் திட்டத்தின் புனரமைப்புப் பணிகளுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பில், பாலியல் இலஞ்சம் கோரப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இம் மாத ஆரம்பத்தில், வீடமைப்புத் திட்ட பயனாளியான கணவனை இழந்த பெண்...
நான்கு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் ஒருவர் அச்சுவேலி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 43 வயதான இவர், சுகந்திபுரம் பகுதியில் வைத்து கடந்த 18ம் திகதி சிறுமியை துஷ்பிரயோம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. சந்தேகநபரின் மூன்று வயது மகனுடன் விளையாடச் சென்ற பக்கத்து வீட்டு சிறுமியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார். பின்னர் சிறுமி தனது தாயிடம் நடந்தவற்றைக்...
சமூக வலைத்தளங்களில் தனி நபரை இழிவுபடுத்தும் வகையிலான பதிவேற்றங்களுக்கு எதிராக புதிய சட்டமொன்றை அரசாங்கம் கொண்டுவரவுள்ளதாக நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். மேலும் வழக்குகளின் காலதாமதத்தை குறைப்பதற்கு விசேட நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்கவுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். நீதி அமைச்சில் நேற்று (19) இடம்பெற்ற சட்டம் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுக்க ளின் பிரதிநிதிகளுடனான...
தனது வயோதிபத் தந்தையை நாய்க் கூட்டில் அடைத்து வைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட 42 வயதான பெண் எதிர்வரும் 2ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கண்டி - பலகோல்ல பகுதியிலுள்ள சொகுசு வீடொன்றில் வேறாக கட்டப்பட்டிருந்த கூட்டில் இருந்து வயோதிபர் ஒருவர் பலகோல்ல பொலிஸாரால் அண்மையில் மீட்கப்பட்டார். பின்னர் குறித்த வயோதிபர் அந்த வீட்டு உரிமையாளரின்...
கம்பஹா கொட்டதெனியா பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி சேயா கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட கொண்டயா எனப்படும் துனேஷ் பிரியசாந்த குற்றத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். சேயா கொலை வழக்கு இன்று (திங்கட்கிழமை) மினுவாங்கொட நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதவான் இத்தீர்ப்பை வழங்கியுள்ளார். அத்துடன், கொலையுடன் தொடர்புடைய கொண்டயாவின் அண்ணனை எதிர்வரும் நவம்பர் மாதம் 2ஆம் திகதிவரை விளக்கமறியலில்...
கைதடி மற்றும் நாவற்குழி பகுதியில் ஏ 9 நெடுஞ்சாலையின் பெரிய அளவிலான வீதி விளம்பரப் பலகைகளின் இரும்புக் குழாய்களையும், இரும்புச் சட்டங்களையும் நள்ளிரவு நேரத்தில் களவாட முற்பட்ட 8 இராணுவத்தினரையும் சாவகச்சேரி நீதவான் தலா 50 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதித்துள்ளார். எதிர்வரும் 29 ஆம் திகதி இவர்கள் சாவகச்சேரி நீதிமன்றத்த்pல் ஆஜராக...
யாழ்ப்பாணத்தில் இருந்து இயங்கும் ஊடக நிறுவனமொன்றின் விளம்பர பதாகையை விளம்பர நிறுவனமொன்று நாவற்குழிப் பிரதேசத்தில் அமைத்து இருந்தது. விளம்பர பதாகைகளை அமைக்கும் போது அவை காற்றால் விழாமல் இருக்க பாரிய இரும்பு கேடர்கள் கொண்டே அமைக்கப்பட்டு வருகின்றன. குறித்த விளம்பர நிறுவனம் அமைத்திருந்த ஏனைய நிறுவனங்களின் விளம்பர பதாகைகள் தொடர்ச்சியாக திருடப்பட்டு வந்துள்ளன. அந்த இரும்புகளை...
நயினாதீவு, விநாயகர் வீதியின் புனரமைக்காக வைக்கப்பட்டிருந்த கற்களை, அந்த வீதியை புனரமைப்பதற்காக ஒப்பந்த செய்திருந்த நபர், வீடு கட்டும் ஒருவருக்கு, விற்பனை செய்துள்ள விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பொதுமக்களால் பிடிக்கப்பட்ட குறித்த ஒப்பந்தகார், கிராமஅலுவலர் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்ட கற்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பெண் ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக தாயொருவருக்கும் மகனுக்கும் மரண தண்டனை விதித்து கண்டி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் மற்றும் கணவனின் தாய் ஆகிய இருவருக்குமே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு மாத்தளை, ரத்தொட்டை பிரதேசத்தில் 30 வயதுடைய பெண் ஒருவர் கூரிய ஆயுதங்கள் மற்றும் தடிகளால்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாணவிகளை பாலியல் துஸ்பிரயோக நடவடிக்கைகளுக்கு உட்படுத்திவந்ததாக குற்றம் சாட்டப்பட்டுவந்த இசைத்துறையின் தலைவர் விசாரணைக்காக தற்காலிக பணி இடைநிறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார். குறித்த விரிவுரையாளர் மாணவிகளை தனது பாலியல் இச்சைக்கு பயன்படுத்துவதற்காக பரீட்சை முடிவுகளில் கைவைப்பதான தொடர் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன. இது குறித்து மாணவிகள் துணிந்து சாட்சியமளிக்க தயங்கிய நிலையில் அண்மையில் பாதிக்கப்பட்ட மாணவி...
வல்வெட்டித்துறைப் பகுதியில் குடும்ப பெண்ணைக் கடத்திய குற்றச்சாட்டில் அவரது கணவன் உட்பட 9 பேரை வல்வெட்டித்துறை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். நேற்று முன்தினம் தாயாருடன் பருத்தித்துறை நீதிமன்றத்தில் இடம்பெற்ற தாபரிப்பு, தொடர்பான விசாரணைக்கு தாயாருடன் வந்து கொண்டிருந்த வல்வெட்டித்துறையைச் சேர்ந்த குடும்ப பெண் ஒருவரை, வல்வெட்டித்துறைப் பகுதியில் வைத்து வெள்ளை வானில் வந்த கும்பல்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைப் பீடத்தின் துறைத்தலைவர் ஒருவர் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டார். பாலியல் சார் குற்றச்சாட்டுத் தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை கட்டாய விடுமுறையில் அனுப்பட்டிருந்த அவரை நேற்று முன்தினம் கூடிய பேரவை சேவையில் இருந்து இடைநிறுத்தியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணையும் நடத்தப்படவுள்ளது. குறித்த துறைத்தலைவருக்கு எதிராக நிர்வாகத்திடம் பல்கலைக்கழக மாணவிகளால் பாலியல் குற்றச்சாட்டுக்கள்...
கோப்பாய் பொலிஸாரின் செயற்பாட்டை விசாரணை செய்யக்கோரி வடமாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சிரேஷ்ட உதவிப் பொலிஸ்மா அதிபர் மற்றும் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு நேற்று முன்தினம் யாழ். மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி பெ. சிவகுமார் உத்தரவிட்டுள்ளார். கோப்பாய் பொலிஸ் பிரிவில் நிகழும் சம்பவங்களின் வழக்கு விசாரணை அறிக்கைகள் திருப்தி இல்லை எனவும் அத்துடன்...
மனைவியைக் கொலையற்ற மரணம் செய்த கணவனுக்கு 16 வருடங்கள் கடூழியச் சிறையும் 10 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளார் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன். கடந்த 2009 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 27 ஆம் திகதி கைதடி கிழக்கில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கத்தரிக்கோலால் குத்திக் கொலை செய்த குற்றச்சாட்டில் கணவரை...
இலங்கைக் கடற் பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டதாகத் தெரிவித்து இன்று புதன்கிழமை பருத்தித்துறை கடற்ப்பரப்பில் வைத்து 9 இந்திய மீனவர்கள் காங்கேசன்துறைக் கடற்ப்படையினர் கைது செய்துள்ளனர். இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் இழுவைப்படகு ஒன்றில் பருத்தித்துறை கடற்ப்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர்...
யாழ் நீதிமன்றம் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான 20 வழக்குகளில், கடந்த 5 மாதங்களாக விளக்க மறியலில் இருந்து வந்த சந்தேக நபர்களுக்கு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் கடும் நிபந்தனையுடன் பிணை வழங்கியுள்ளார். இந்த வழக்குகளிலும் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களுக்கு பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட 20 வழக்குகள் நீதிபதி இளஞ்செழியன், முன்னிலையில் விசாரணைக்கு...
பாரிய போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையதாக கூறி கைதுசெய்யப்பட்ட வெலே சுதா எனப்படும் சமந்த குமாரவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
2001 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் பிரசாரக் காலப்பகுதியில் ஊர்காவற்றுறைப் பகுதிக்கு பிரசார நடவடிக்கைகளுக்காக கூட்டமைப்பினர் சென்றபோது ஈ.பி.டி.பி. உறுப்பினர்களினால் தாக்குதல் மேற் கொள்ளப்பட்டிருந்தது. இந்த சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டதுடன் 22 பேர் காயமடைந்திருந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று திருமலை மேல் நீதிமன்ற நீதிபதி டி.சசி மகேஸ்வரன் முன்னிலையில் இடம் பெற்றது. இந்த...
நாங்கள் குற்றவாளிகள் அல்ல எங்களை பிணையில் செல்ல அனுமதியுங்கள் என புங்குடுதீவு மாணவியின் கொலை சந்தேக நபர்கள் நீதவானிடம் கோரிக்கை விடுத்து இருந்தனர். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு நேற்றய தினம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் எடுத்து கொள்ளப்பட்டது. அதன் போது ஒன்பது சந்தேக நபர்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர். அதன் போது...
தனது தந்தையை நாய்க் கூட்டில் அடைத்து வைத்திருந்த மகள் ஒருவர் பலகொல்ல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். 42 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கைதாகியுள்ளார். பலகொல்ல பொலிஸார் அந்தப் பகுதியால் சென்ற வேளை குறித்த கூட்டினைக் கண்டுள்ளனர். இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த வயோதிபரின் மகளே அவரை கூட்டில் அடைத்து வைத்தமை தெரியவந்துள்ளது. பின்னர் 73 வயதான...
Loading posts...
All posts loaded
No more posts
