யாழில் கைக்குண்டுடன் இளைஞர் கைது!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்னால் கைக்குண்டு ஒன்றுடன் இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவத்தில் கிளிநொச்சி- பரந்தன் பகுதியைச் சேர்ந்த 22வயதுடைய இளைஞரையே பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள இளைஞன், யாழ்.போதனா வைத்தியசாலைக்கு முன்பாக மோட்டார் சைக்கிளுடன் சந்தேகத்திற்கிடமாக நின்றுள்ளார். இதனை அவதானித்த பொலிஸார் அவரை சோதனைக்கு உட்படுத்தியபோது,...

முல்லைத்தீவில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட விவகாரம் – இருவர் கைது!

முல்லைத்தீவு – முறிப்பு பகுதியில் இரண்டு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். முறிப்பு பகுதியில் மரக்கடத்தல் இடம்பெறுவதாகக் கிடைத்த தகவலுக்கமைய செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் இருவர் மீது கடந்த திங்கட்கிழமை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதன்போது காயமடைந்த குறித்த ஊடகவியலாளர்கள் இருவரும், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்....
Ad Widget

தெல்லிப்பழை வைத்தியசாலையில் புற்றுநோயாளர்களுக்கு கதிரியக்க சிகிச்சை சீராக இடம்பெறவேண்டும்!

“தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை கதிரியக்க சிகிச்சை தொழில்நுட்பவியலாளர்களின் பணிப்புறக்கணிப்பு புற்றுநோயாளர்களுக்கான சிகிச்சையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது. புற்றுநோயாளர்களுக்கான கதிரியக்கச் சிகிச்சை ஒழுங்குமுறையில் இடம்பெறவேண்டும்” என்று மல்லாகம் மாவட்ட நீதிமன்றம் இன்று கட்டாணை உத்தரவை வழங்கியது. புற்று நோயால் பாதிக்கப்பட்டு தெல்லிப்பழை வைத்தியசாலை கதிரியக்க சிகிச்சை மறுக்கப்பட்ட ஒருவரால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதே இந்த கட்டாணை உத்தரவை...

புங்குடுதீவில் பூசகர் கொலை; சந்தேக நபர்கள் மூவரும் கட்டுக்காவலில்

புங்குடுதீவு ஊரதீவு பாணாவிடை சிவன் ஆலய பூசகர் கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவரது உதவியாளர் உள்ளிட்ட மூவரை வரும் ஒக்டோபர் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதிவான் நிதிமன்றம் உத்தரவிட்டது. கிளிநொச்சியைச் சேர்ந்த இராசையா இராசரூப சர்மா (வயது-32) என்ற ஊரதீவு பாணாவிடை சிவன் கோவில் பூசகர் கொலை செய்யப்பட்ட...

விக்டர் சுந்தர் மீது வாள்வெட்டு; நிசா விக்டர் கைது – செம்மணியில் குண்டுகள் மறைத்து வைத்துள்ளதாகவும் வழக்கு

வன்முறைக் கும்பலைச் சேர்ந்த விக்டர் சுந்தர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆவா வன்முறைக் கும்பலைச் சேர்ந்த நிசா விக்டரை வரும் 22ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்தோடு செம்மணி பகுதியில் கைக்குண்டு மற்றும் ஜொனி ரக மிதிவெடி என்பனவும் நிசா விக்டரால் மறைத்து...

இலஞ்சம் வாங்கியபோது மாட்டிய இ.போ.ச வடபிராந்திய முகாமையாளருக்கு விளக்கமறியல்!

மன்னாரில் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை போக்குவரத்து சேவையின் வட பிராந்திய முகாமையாளர் எம்.அமீனை, நேற்று புதன் கிழமை(19) மாலை மன்னார் நீதிமன்றத்தில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். இதன் போது விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் எம்.கணேசராஜா இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் மன்றில் முன் வைத்த விண்ணப்பங்களை பரிசீலினை...

தென்னிலங்கை பெண்கள் இருவர் யாழில் கைது!

பாலியல் தொழிலில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் தென்னிலங்கை பெண்கள் இருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நல்லூர் முன் வீதியில் அமைந்துள்ள தங்குமிட விடுதியில் தனித்திருந்து இரு பெண்களை யாழ்ப்பாணம் பொலிஸார் இன்று(வியாழக்கிழமை) கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக...

தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் உட்பட நால்வர் கைது

கிளிநொச்சி தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் திணைக்கள அதிகாரிகளால் குறித்த நான்கு பேரும் நேற்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள குறித்த நால்வரும் மதுபோதையில் சுயேச்சைக் குழு வேட்பாளர் ஒருவரின் வீட்டிற்கு கற்களால் எறிந்தும் வேலிகளை அடித்து உடைத்தும் அட்டக்காசத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது வீட்டின்...

கொலை செய்யும் நோக்குடன் கைக்குண்டுடன் பயணித்த சந்தேக நபர் சிக்கினார்!!

யாழ்ப்பாணத்தில் பல்வேறு கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர், ஒருவரை கொலை செய்யும் திட்டத்துடன் பயணித்த போது கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வழிப்பறி, கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய 35 வழக்குகள் நீதிமன்றங்களில்...

பெண்ணை மிரட்டி பட்டப்பகலில் கொள்ளை!! ; கொள்ளையர்கள் மூவர் சிக்கினர்

தனித்து வாழ்ந்த வயோதிப் பெண்ணை கத்தியைக் காட்டி அச்சுறுத்தி 5 லட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்டுத் தப்பித்த கொள்ளையர்கள் மூவர் வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தொண்டமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்துக்கு அண்மையில் உள்ள வீடொன்றில் இந்தக் கொள்ளைச் சம்பவம் கடந்த 8ஆம் திகதி பட்டப்பகலில் இடம்பெற்றது....

கோவிட் -19 நோய்ப் பரவலுக்கு ஏதுநிலை ஏற்படுத்தினர் -யாழில் ஐவரிடம் தண்டம் அறவீடு!

யாழ்ப்பாணம் மாநகரில் திண்மக் கழிவை வீதியில் வீசி டெங்கு மற்றும் கோவிட் -19 நோய்த் தொற்று பரவலுக்கு ஏதுநிலையை ஏற்படுத்திய குற்றத்துக்கு 5 குடியிருப்பாளர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர மருத்துவ சுகாதார அதிகாரி பணிமனைக்கு உள்பட்ட பொதுச் சுகாதாரப் பரிசோகர் ஒருவரால் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான்...

கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 26 பேர் கைது ; இருவருக்கு பிணை, 24 பேருக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் நண்பர்கள் இருவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தை நடத்திய போது, சட்டவிரோத கூட்டத்தைக் கூட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 26 பேரில் 24 பேரை வரும் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் போது வழக்கில் முற்படுத்தப்பட்ட 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இருவரையே ஒரு லட்சம் ரூபாய் ஆள் பிணையில்...

கொடிகாமத்தில் ஊரடங்கு வேளை வீடு புகுந்து இளம் பெண் வெள்ளை வானில் கடத்தல்!!

கொடிகாமம் பகுதியில் உள்ள வீடொன்றினுள் ஊரடங்கு நேரத்தில் புகுந்த வெள்ளைவான் கும்பல் ஒன்று இளம் பெண் ஒருவரைக் கடத்தி சென்று சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் விடுவித்துள்ளனர். கொடிகாமம் பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று அதிகாலை ஊரடங்கு நடைமுறையில் இருந்தவேளை வெள்ளை வானில் வந்த 7 பேர் கொண்ட குழுவினர் வாளுகள், கொட்டான்கள், இரும்பு...

வீதியால் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு விளக்கமறியல்!!

வீதியால் சென்ற பெண்ணுக்கு வார்த்தைகளாலும் சைகைகளாலும் பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மடம் வீதியில் நடந்து சென்ற 30 வயதுடைய பெண் ஒருவரை நோக்கி வார்த்தைகளாலும் சைகளாலும் பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் குறித்த இளைஞர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்....

சுன்னாகம் பகுதியில் தாக்குதலுக்கு தயாராகவிருந்த சிலர் கூரிய ஆயுதங்களுடன் கைது

யாழில் வாள்கள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடன் தாக்குதல் ஒன்றுக்கு தயாராகவிருந்த வன்முறைக் கும்பல் ஒன்றைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். உடுவில் அம்பலவாணர் வீதி, காலி கோவிலடியில் வைத்து நேற்று (திங்கட்கிழமை) மாலை மூவரும் கைது செய்யப்பட்டனர் என்றும் பொலிஸார் கூறினர். ‘சம்பந்தப்பட்ட இடத்தில் பெருமளவு கூரிய ஆயுதங்களுடன் சந்தேகத்துக்கு...

ஊரடங்கு தளர்த்தப்பட்டு சில மணி நேரங்களில் யாழில் வாள்வெட்டு – இருவர் காயம்

யாழில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு சில மணி நேரங்களில், கமி என்றழைக்கப்படும் வாள்வெட்டுக் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளனர். அத்தோடு, மோட்டார் சைக்கிள் மற்றும் இரு முச்சக்கரவண்டிகள் ஆகியன சேதமாக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, புங்கன்குளம் வீதி வழியாக யாழில் நேற்று (திங்கட்கிழமை) மதியம் 2.00 மணியளவில் 10 மோட்டார் சைக்கிளில் சென்ற கமி...

உடுவில் கொள்ளை; பொதுமக்களால் பிடித்துக் கொடுத்த சந்தேக நபரை விடுவித்த சுன்னாகம் பொலிஸார்

உடுவில் அம்பலவாணர் வீதியில் கடந்த கடந்த 5ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புள்ளவர் என முறைப்பாட்டாளரால் அடையாளம் காட்டப்பட்ட கொள்ளைச் சந்தேக நபரை சுன்னாகம் பொலிஸார் விடுவித்தமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பணித்துள்ளார். உடுவில் அம்பலவாணர் வீதியில் கடந்த 6ஆம் திகதி (கொள்ளை இடம்பெற்று...

நீர்வேலியில் 3 வீடுகளில் கைவரிசை; கொள்ளைக் கும்பலில் மூவர் ஏழாலையில் சிக்கினர் – அடகுவைத்ததாக இரண்டு பெண்களும் கைது

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீர்வேலியில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த வேளையில் மூன்று வீடுகளில் கொள்ளை மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டமை மற்றும் கொள்ளையிட்ட நகைகளை அடகு வைத்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் 2 பெண்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவம் கடந்த முதலாம் திகதி அதிகாலை இடம்பெற்றது. இரண்டு வீடுகளுக்குள்...

உடுவில் பகுதியில் வயோதிபத் தம்பதியை தாக்கி துணிகரக்கொள்ளை – வயோதிபர் படுகாயம்!

உடுவில் அம்பலவாணர் வீதியில் வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளைக் கும்பல், வயோதிபத் தம்பதியைத் தாக்கிவிட்டு சுமார் 15 தங்கப் பவுண் நகைகள் மற்றும் 5 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளது. [caption id="attachment_101888" align="aligncenter" width="1254"] crime scene tape focus on word 'crime' in cenematic dark tone with copy...

மிருசுவில் கொலை; சகோதரர்கள் மூவர் கைது!!

தென்மராட்சி மிருசுவில்-மன்னன் குறிச்சிப்பகுதியில் உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரும் சகோதரர்கள் எனவும் அவர்கள் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என பொலிஸார் கூறினர். இந்தச் சம்பவம் நேற்றிரவு 7.30 மணியளவில் இடம்பெற்றது. சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த ராஜகோன் சிவகுமார் (வயது-40)...
Loading posts...

All posts loaded

No more posts