Ad Widget

சுன்னாகம் பிரதேச சபையின் பெண் உறுப்பினரின் வீடு மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்

வலி.தெற்கு பிரதேச சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ரவிக்குமார் யோகாதேவி வீடு மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவத்தில் வீட்டு முற்றத்திலிருந்து உரையாடிக் கொண்டிருந்த பிரதேச சபை உறுப்பினர் மற்றும் அவர்களது உறவினர்கள் தெய்வாதீனமாக பாதிப்புகளின்றித் தப்பித்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் உடுவில் கந்தேரோடை பகுதியில் நேற்று இரவு 8.25 மணியளவில் இடம்பெற்றது.

மோட்டார் சைக்கிள்களில் வந்த நால்வர் வீட்டு வாயில் படலைக்குள் வந்து 3 பெற்றோல் குண்டுகளை வீசிவிட்டுத் தப்பிச் சென்றனர் என்று பிரதேச சபை உறுப்பினர் தெரிவித்தார்.

தானும் வெளிநாட்டிலிருந்து வந்த தனது மகள், குழந்தைகள் என அனைவரும் வீட்டு முற்றத்திலிருந்து உரையாடிக் கொண்டிருந்த போது சம்பவம் இடம்பெற்றதாகக் குறிப்பிட்ட அவர், தெய்வாதீனமாக எந்தப் பாதிப்புகளுமின்றி தாம் தப்பித்தாகக் கூறினார்.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வலி.தெற்கு பிரதேச சபையில் புளொட் கட்சி சார்பில் போட்டியிட்ட ரவிக்குமார் யோகாதேவி, உடுவில் கந்தரோடை வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts