மதுபோதையில் ஆவணங்களுமின்றி வாகனம் செலுத்தியவருக்கு 92 ஆயிரத்து 500 ரூபாய் தண்டம்!!

மோட்டார் சைக்கிளின் ஆவணங்களின் மதுபோதையில் செலுத்திச் சென்றவருக்கு 92 ஆயிரத்து 500 ரூபாய் தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் நளினி சுதாகரன் உத்தரவிட்டார். யாழ்ப்பாணம் மாநகரில் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் வாகனத்தைச் செலுத்திச் சென்ற போது, வாகன வரி அனுமதிப்பத்திரம், காப்புறுதிப்பத்திரம் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம்...

குடத்தனையில் மணல் கடத்தல் விவகாரம்; 4 பெணளுக்கும் பிணை!!

வடமராட்சி கிழக்கு, குடத்தனை – மாளிகைத் திடலில் அரச உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் ஊரடங்குச் சட்டத்தை மீறியமை ஆகிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட 4 பெண்களையும் பிணையில் விடுவித்து பருத்தித்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது. “மணல் கடத்தல் கும்பல்களை நாம் ஆதரிக்க முடியாது. அவர்கள் சட்டத்தினால் தண்டிக்கப்படவேண்டியவர்கள். ஆனால் எந்தக் குற்றமும்...
Ad Widget

ஊரடங்குச் சட்ட காலத்தில் பொலிஸாருக்கு எதிராக 9 முறைப்பாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பதிவு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட மார்ச் 20ஆம் திகதியிலிருந்து இன்று மே முதலாம் திகதிவரை பொலிஸாருக்கு எதிராக 9 முறைப்பாடுகள் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப் பெற்றுள்ளன. இவ்வாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய இணைப்பாளர் கனகராஜ் தெரிவித்தார். கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதியிலிருந்து யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதிலிருந்து...

இணுவிலில் சட்டத்துக்கு புறம்பாக சிசுவை அகற்றி புதைத்தனர் என்ற குற்றச்சாட்டில் ஜோடி கைது!!

இணுவில் – மருதனார்மடம் பகுதியில் விடுதி ஒன்றில் சில மாதங்கள் தங்கியிருந்த ஆணும் பெண்ணும் தமது சிசுவை மண்ணுக்குள் புதைத்தனர் என்ற குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்ணின் கருவில் வளர்ந்த சிசுவை குறை மாதத்தில் நாவாலியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரால் அகற்றப்பட்டுள்ளது. அந்த சிசுவை அவர்கள் விடுதியின் முற்றத்தில் வெட்டிப் புதைத்துள்ளனர். யாழ்ப்பாணம் மூத்த...

யாழில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் கைது!

யாழ்.அத்தியடி பிள்ளையார் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் அத்தியடி பிள்ளயார் ஆலயத்தில் நேற்று சதுர்த்தியை முன்னிட்டு பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. அது தொடர்பக்க அறிந்து கொண்ட பொலிசார் ஆலயத்திற்கு விரைந்து பூஜை வழிபாட்டில் ஈடுபட்டிருந்த 17 பேரை கைது செய்து யாழ்ப்பாண...

வட்டுக்கோட்டை பொலிஸாரின் அடாவடி தொடர்கிறது; குடிதண்ணீர் எடுக்கச் சென்ற முதியவர் மீது தாக்குதல்

ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள நேரத்தில் வீதிகளில் நடமாடினார்கள் என குற்றம் சாட்டி முதியவர்கள் மீது வட்டுக்கோட்டை பொலிஸார் மூர்க்கத்தனமாக தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். [caption id="attachment_101888" align="aligncenter" width="1254"] crime scene tape focus on word 'crime' in cenematic dark tone with copy space[/caption] நாடுமுழுவதும் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள...

வெளிநாட்டவர்களின் இரண்டு வீடுகளை உடைத்துத் திருடிய குடும்பத்தலைவர் கைது!!

யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் அமெரிக்கா மற்றும் கனடா குடியுரிமை பெற்றவர்களின் குடும்பங்களின் இருவேறு வீடுகள் உடைக்கப்பட்டு அங்கிருந்த பொருள்கள் திருடப்பட்ட நிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த வீடுகளுக்கு அண்மையில் உள்ள வீட்டில் வசிப்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார். அந்த வீடுகளில் திருடப்பட்ட 9 லட்சத்து 45 ஆயிரம்...

கோப்பாயில் இரு நாட்களில் 50 பேர் கைது!

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் நிலையப் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்குச் சட்டத்தை மீறி வீதிகளில் நடமாடிய குற்றச்சாட்டில் கடந்த இரு நாட்களில் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். ஊரடங்குச் சட்டத்தை மீறி வீதிகளில் நடமாடியமை மற்றும் வியாபார நடவடிக்கைகளில் உரிய அனுமதியின்றி ஈடுபட்டமை போன்ற குற்றச்சாட்டுக்களில் குறித்த 50 பேரும் கைது செய்யப்பட்டதாக...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; ரியாத் பதியூதீன் கைது!!

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் பற்றிய விசாரணைகளுக்காக முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதீனின் இளைய சகோதரர் ரியாத் பதியூதீன் கைது செய்யப்பட்டுள்ளார் என்று நேற்று மாலை பொலிஸார் தெரிவித்தனர். 2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறன்று நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குற்ற விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது....

யாழில் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய மாணவன் கைது- கொரோனா சூழலில் நீதவான் விடுத்த உத்தரவு!

பதின்ம வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பதின்ம வயது (17-வயது) மாணவன் கைது செய்யப்பட்டார். பொலிஸ் விசாரணைகளின் பின்னர் நேற்று (வெள்ளிக்கிழமை) நண்பகல் சந்தேகநபர் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்ட நிலையில் தற்போதைய அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். தொழில்நுட்பக் கல்லூரியில் கற்கை நெறியைத் தொடரும் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த மாணவனே...

ஆவாவின் பிறந்தநாள் கொண்டாடிய வீடு இராணுவத்தினால் சுற்றிவளைப்பு; 3 பேர் கைது – பலர் தப்பிஓட்டம்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல்வேறு வன்முறைகளுடன் தொடர்புடைய வன்முறைக் கும்பலில் ஆவா என பொலிஸாரால் விழிக்கப்படும் வினோதனின் பிறந்தநாளைக் கொண்டாடியவர்கள் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வினோதன் உள்ளிட்ட பலர் தப்பித்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தப் பிறந்தநாள் கொண்டாட்டம் மல்லாகத்தில் நேற்று மாலை இடம்பெற்றது. ஆவா என பொலிஸாரால் விழிக்கப்படும் வினோதனின் பிறந்தநாள்...

சமூக வலைத்தளத்தில் போலி செய்தியை பரப்பிய பெண் கைது

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் சமூக ஊடகங்களில் பொய்ப் பிரசாரம் பரப்பியமை தொடர்பில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து, நேற்றையதினம் (05) வாதுவை பிரதேசத்தைச் சேர்ந்த இப்பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த சந்தேகநபர் நேற்றையதினமே...

பொன்னாலையில் பற்றைக்குள் கசிப்பு குகை முற்றுகை!!

ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள வேளையில், பொன்னாலை பற்றைக்காட்டில் கசிப்பு குகை ஒன்று பிரதேச இளைஞர்களும் வட்டுக்கோட்டை பொலிஸாரும் இணைந்து முற்றுகையிட்டுள்ளனர். அங்கு சட்டத்துக்கு புறம்பான கசிப்பு உற்பத்தி முறியடிக்கப்பட்டுள்ளது. கசிப்பு காய்ச்சிய நபர்கள் தப்பியோடிய நிலையில் அவர்களால் காய்ச்சப்பட்ட கசிப்பு, எஞ்சிய கோடா மற்றும் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த முற்றுகை நடவடிக்கை நேற்று (03)...

வதந்திகளை பரப்பிய பல்கலைக்கழக மாணவனுக்கு விளக்கமறியல்!

கொரோனா தொடர்பாக இணையத்தளத்தில் வதந்திகளைப் பரப்பிய பல்கலைக்கழக மாணவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய குறித்த மாணவர் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வவுனியாவில் ஆராதனை நடத்திய 20 பேர் கைது!

வவுனியா, செட்டிகுளம் முதிலியார்குளம் பகுதியில் இன்று ஆராதனை நடத்திய 15 இற்கும் மேற்பட்டோர் செட்டிக்குளம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு எச்சரிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர். கொரோனோ வைரஸ் தாக்கத்தினைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அத்தியவசியத் தேவைகள் நிமித்தம் வெளியில் திரிவோரைத் தவிர ஏனையவர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்படுவர் என அரசாங்கம் அறிவித்துள்ளதுடன் ஆலயங்களில்...

இரும்புத் துண்டுகள் பொறுத்தப்பட்ட பொல்லுகளுடன் மூவர் கைது!!

சைக்கிள் செயின் பிறிவில் பொறுத்தப்பட்ட பொல்லுகளுடன் வன்முறைச் சம்பவம் ஒன்றுக்கு சென்று கொண்டிருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்கள் மூவரும் வன்முறைச் சம்பவம் ஒன்றுக்காக மானிப்பாயிலிருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை சங்கானை பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். “சந்தேக நபர்களிடமிருந்து 6 பொல்லுகள்...

வித்தியா கொலை வழக்கு: தடயப்பொருளை பயன்படுத்திய பொலிஸ் பரிசோதகர்- விசாரணைகள் ஆரம்பம்

யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை ஆவணங்களில் பதிவிடாமலும் தடயப் பொருளாக நீதிமன்றத்தில் ஒப்படைக்காமலும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா பயன்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர். தடயப்...

பகிடிவதையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கும் மாணவனின் வீட்டின் மீது தாக்குதல்!!

பகிடிவதைக் குற்றச்சாட்டு விசாரணைகளை முன்னெடுக்கும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகங்களுக்குள் உள்நுழைய இடைக்காலத் தடைவிதிக்கப்பட்ட மாணவனின் வீட்டுக்குச் சென்ற நால்வர், மாணவன் அங்கு இல்லாத நிலையில் வீட்டிலிருந்த பொருள்களை அடித்து உடைத்துவிட்டுச் சென்றுள்ளனர் என்று மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். இந்தச் சம்பவம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைக்கோட்டை மூத்த விநாயகர் கோவிலடியில் நேற்றையதினம்...

புதையல் தோண்ட முற்பட்ட படை அதிகாரி உள்ளிட்ட 21 பேரும் விளக்கமறியலில்!!

கிளிநொச்சியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 5 இராணுவத்தினர் உள்பட 21 பேரையும் வரும் 13ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. கிளிநொச்சி- தரும்புரம், கட்டைக்காடு பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டதாகத் தெரிவித்து அதிநவீன ஸ்கனர் கருவிகளைப் பயன்படுத்தி புதையல் தோண்டும் முயற்சி சிறப்பு அதிரடிப்படையினரால் முறியடிக்கப்பட்டது....

512 பேருக்கு பொதுமன்னிப்பு! அறிவிப்பை வெளியிட்டாா் – ஜனாதிபதி

இலங்கையின் சுதந்திர தினத்தை ஓட்டி 512 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கும் தீா்மானத்தை ஜனாதிபதி அறிவித்துள்ளதுடன், நாளைய தினம் இவா்கள் விடுதலை செய்யப்படவுள்ளனா். அரசமமைப்பின் 34 வது பிரிவுக்கு அமைவாக நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட சீர்திருத்த அமைச்சர் நிமல் சிறிபாலா டி சில்வா அவர்களின் பரிந்துரையின் படி ஜனாதிபதிக்கு உரித்தான அதிகாரங்களுக்கு உட்பட்டு இந்த...
Loading posts...

All posts loaded

No more posts