- Tuesday
- September 15th, 2026
யாழ்ப்பாணத்தில் வழிப்பறி கொள்ளைகள் அதிகரித்துள்ள நிலையில் , இருவேறு வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடுவில் பகுதியில் சில தினங்களுக்கு முன்னர், வீதியில் சென்ற பெண்ணொருவரின் 3 இலட்ச ரூபாய் பெறுமதியான தங்க சங்கிலி , மோட்டார் சைக்கிளில் வந்த வழிப்பறி கொள்ளையர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில்...
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் - வேரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் திருடுவதற்கு சென்ற திருடர்கள் அங்கு சமைத்து சாப்பிட்டு ஓய்வெடுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டிற்கு திருடச் சென்ற திருடர்கள் வீட்டில் யாரும் இல்லாத நிலையில், அங்கு சமைத்து சாப்பிட்டு, மது அருந்திவிட்டு போதையில் தூங்கிவிட்டனர். இந்நிலையில் நேற்றையதினம் காலை வீட்டின் உரிமையாளர்...
ஆபாச காணொளியை காட்டி , 7 வயதான தனது மகளை வன்புணர்ந்தார் எனும் குற்றச்சாட்டில் 30 வயதான குடும்பஸ்தர் சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் தந்தை , தனது 7 வயதான மகளுக்கு கையடக்க தொலைபேசியில் ஆபாச காணொளிகளை காண்பித்து , மது போதையில் மகளை...
யாழில் இயங்கி வரும் ஆயுதமேந்திய கும்பலைச் சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவர் மூன்று கூரிய வாள்களுடன் யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக யாழ்.பொலிஸ் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. யாழ்.பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம், தாவடி பிரதேசத்தில் உள்ள வீடொன்றை சோதனையிட்ட போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்....
யாழ்ப்பாணத்தில் 13 வயது சிறுமியை வன்புணர்வுக்கு உள்படுத்திய குற்றச்சாட்டில் வயோதிபர் ஒருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் பொலிஸ் பிரிவில் இருபாலையைச் சேர்ந்த 73 வயது முதியவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த 13 வயது சிறுமி ஒருவர் வயோதிபரினால் வன்புணர்வுக்கு உட்படுத்தி கர்ப்பமாகி உள்ளார் என்று சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கடந்த...
யாழ்ப்பாணத்தில் 17 வயது சிறுமிகள் இருவரை கடத்திச் சென்றமை மற்றும் தகாத செயலில் ஈடுபட்டமை என்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் பேருந்து சாரதிகள் இருவர், நடத்துநர்கள் இருவர் உட்பட ஐவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், வீட்டைவிட்டு வெளியேறி குற்றச்செயலில் ஈடுபட்ட சிறுமிகள் இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. இந்த கைது...
நல்லூர் கந்த சுவாமி ஆலய வளாகத்தில் கைக்குழந்தையுடன் நின்ற பெண்ணிடம் தங்கச் சங்கியை அபகரித்துச் சென்ற பெண் யாழ்ப்பாணம் மாவட்ட புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பெண்ணிடம் கொள்ளையிட்ட 4 லட்சம் பெறுமதியான தங்கச் சங்கிலியும் சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டது என்று பொலிஸார் கூறினர். இந்தக் கொள்ளைச் சம்பவம் நேற்று முன்தினம் (13) இடம்பெற்ற நிலையில்...
ஆசிரியர்களை அவர்களது வீடுகளுக்கு அருகிலுள்ள பாடசாலைகளுக்கு சேவைகளில் ஈடுபடுத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்த நடவடிக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ம் திகதி வரை மாத்திரமே செலுப்படியாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மாகாண கல்வி அமைச்சின் பணிப்பாளர்கள் மற்றும் வலய கல்வி பணிப்பாளர்களுக்கு இதற்கான அதிகாரத்தை வழங்கும் வகையில், கல்வி அமைச்சின் செயலாளரினால் சுற்று...
சட்டவிரோதமான முறையில் அவுஸ்ரேலியா நோக்கி செல்ல முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 64 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை கடற்பரப்பில் இன்று காலை முன்னெடுக்கப்பட்டிருந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை, முலைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்கள் திருகோணமலை...
யாழ்ப்பாணம் வல்லை பகுதியில் அமைந்துள்ள மதுபானசாலையில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்களில் இருவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் வல்லை பகுதியில் அமைந்துள்ள மதுபான நிலையத்தில் கடந்த 3ஆம் திகதி இரவு இரு இளைஞர்கள் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட தர்க்கம் போத்தல் குத்தில் முடிவடைந்ததில்...
குருநகரில் இளைஞன் கொலையுடன் முதன்மை சந்தேக நபரான ரெமி என அழைக்கப்படுபவர் உள்பட மூவர் சுமார் 8 மாதங்களின் பின்னர் நேற்று தமது சட்டத்தரணி ஊடாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சரணடைந்தனர். மூவரையும் விளக்கமறியலில் வைக்க யாழ்பபாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா உத்தரவிட்டார். 2021ஆம் ஆண்டு ஓகஸ்ட் 22ஆம் திகதி பட்டப்பகலில் குருநகரில் வீதியில் வைத்து...
திருட்டுச் சம்பவம் ஒன்றின் சந்தேக நபரிடம் 30 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்ற இளவாலை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை - பொன்னாலை வீதியில் வைத்து அவர் நேற்று (05) இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார். இளைவாலை பொலிஸ் பிரிவில் வீடுடைத்து திருட்டில் ஈடுபட்ட...
யாழில் கடந்த காலங்களில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தந்தையும் மகனும் மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வந்த நிலையில் மானிப்பாய் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட...
ஊர்காவற்றுறை பகுதியில் 2017 ஜனவரி 24ஆம் திகதி கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட 7 மாத கர்ப்பிணித் தாயின் வழக்கு விசாரணைகள் 5 ஆண்டுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் முதன்மை சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நெடுந்தீவில் 12 வயதுச் சிறுமியை வன்புணர்ந்து கொலை செய்த குற்றத்துக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட ஈபிடிபியின் முன்னாள் உறுப்பினரே...
வரலாற்று தொன்மை வாய்ந்த நல்லூர் மந்திரி மனை யன்னல் மற்றும் யன்னல் கம்பிகள் களவாடப்பட்டுள்ளன. மந்திரி மனையின் பின் பக்கமாக காணப்பட்ட யன்னல்களின் கம்பிகள் மற்றும் யன்னல் என்பவையே பெயர்த்தெடுக்கப்பட்டு திருடப்பட்டுள்ளன. இது தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். கட்டிடத்தின் வரலாற்று பின்னணி மந்திரி மனை...
யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட போலி அடையாள அட்டையுடன் தங்கி இருந்த யுவதி கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட போலி அடையாள அட்டையை காண்பித்து , தான் மருத்துவ பீட மாணவி என கூறிதிருநெல்வேலி பகுதியில் வாடகை அறையில் தங்கி இருந்துள்ளார். அவரது நடவடிக்கைகள் நடத்தைகளில் வீட்டு உரிமையாளர் சந்தேகம்...
15 வயது சிறுமியை பெற்றோரின் பாதுகாப்பில் இருந்து கடத்தி சென்று, குடும்பம் நடாத்திய 18 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். ஊர்காவற்துறை பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 18 வயது இளைஞனும் 15 வயதான சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு...
யாழ்ப்பாணம் சோமசுந்தரம் அவனியூ பகுதியில் வீடொன்றில் வயோதிப பெண்ணொருவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த செவ்வாய்கிழமை 22ஆம் திகதி மதியம் இடம்பெற்ற குறித்த கொலை சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த மரியநாயகம் காணிக்கையம்மா ஜெயசீலி (வயது 72) எனும் பெண்ணே அடித்துக்கொலை செய்யப்பட்டு இருந்தார். அப்பெண் தனிமையில் இருந்த...
கடல் ஆய்வில் ஈடுபட்டு வரும் அமெரிக்க பிரஜையின் உடைமைகள் சில குருநகர் கடற்பகுதியில் களவாடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க பிரஜை ஒருவர் இலங்கை கடற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொண்டு வவருகிறார், அதன் ஒரு கட்டமாக யாழ்ப்பாணத்திற்கு கொழும்பில் இருந்து கடந்த 19 ஆம் திகதி சிறிய படகொன்றில் வந்துள்ளார். படகில் யாழ்ப்பாணம்...
சாவகச்சேரியில் குழந்தைகளுடன் யாசகம் பெற்றவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணத்திலுள்ள விடுதி ஒன்றின் உரிமையாளர், தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களை கூலிக்கு அமர்த்தி யாசகம் பெறுவதாக அண்மைய நாள்களில் பல்வேறு இடங்களில் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அதனடிப்படையில் சாவகச்சேரி நகரில் யாசகம் பெற்றவர்கள் நேற்றையதினம் (திங்கட்கிழமை) கைது செய்யப்பட்டனர். இவ்வாறு யாசகம் பெறுபவர்களின் பணம் விடுதி உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டதும்...
Loading posts...
All posts loaded
No more posts
