பயங்கரவாதத் தடைச் சட்டக் காவலில் இருந்து விடுக்கப்பட்ட இனியபாரதி விளக்கமறியலில்!!

திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் உள்ளிட்ட 6 மனிதப் படுகொலைகள் தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்டப் பொறுப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ‘இனியபாரதி’ என அழைக்கப்படும் கே. புஷ்பகுமாரை...

இணையவழியில் நீதி மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைது

இணையம் ஊடாக வியாபாரம் செய்து பணம் சம்பாதிக்க முடியும் எனக் கூறி, 4,386,219 ரூபாயை மோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வடமேல் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பேஸ்புக் மற்றும் டெலிகிராம் ஊடாகத் தொடர்புகளை ஏற்படுத்தி இந்த மோசடிகள் செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது....
Ad Widget

அதிவேக மோட்டார் சைக்கிள்களுடன் வர்த்தகர் கைது!

இலங்கையில் பதிவு செய்யப்பட முடியாத, ஒரு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய நவீன ரக அதிவேக மோட்டார் சைக்கிள்கள் ஐந்துடன் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனுடன் இரண்டு போலி இலக்கத் தகடுகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. ஹோமாகம பிராந்திய குற்றவியல் பணியகத்தின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில், அத்துருகிரிய - ஹோகந்தர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்...

நீதிமன்ற வளாக இரட்டைப் படுகொலை சூத்திரதாரி விமான நிலையத்தில் கைது!!

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினரான ‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவரின் துப்பாக்கிதாரியாகச் செயற்பட்டதாகக் கூறப்படும் “மாட்டியா” எனப்படும் போம்புவல தேவகே சுரங்க சஞ்சீவ கருணாரத்ன கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மலேசியாவில் தங்கியிருந்த போது அந்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதன் பின்னர், நேற்று...

கனேடிய யுவதி 35 கோடி பெறுமதியான போதைப்பொருளுடன் கைது!

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ரூ. 352.65 மில்லியன் மதிப்பிலான போதைப்பொருளுடன் 18 வயதுடைய கனேடிய யுவதி ஒருவர் இலங்கைச் சுங்கப்பிரிவின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் (NCU) கைது செய்யப்பட்டுள்ளார். சுங்க திணைக்கள ஊடகப் பேச்சாளரும் அதன் பணிப்பாளருமான சந்தன புஞ்சிஹேவா இதனைத் தெரிவித்தார். நேற்று (23) இரவு 10.40 மணியளவில் துபாயிலிருந்து எமிரேட்ஸ்...

10 இலட்சம் ரூபாய் லஞ்சம் கோரிய பொலிஸ் பரிசோதகர் கைது!

களுத்துறை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் ஒருவர், இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின் கீழ் இயங்கும் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றி வந்த பொலிஸ் பரிசோதகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. களுத்துறை பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்குச்...

காங்கேசன்துறையில் தங்கம் கடத்தல் : 26 பயணிகள் தடுப்பு 8 பேர் இது வரை கைது

இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்த முற்பட்டனர் என்ற சந்தேகத்தில் காங்கேசன்துறையில் இருந்து புதன் கிழமை நாகைபட்டினம் பயணிக்கவிருந்த 26 பயணிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர் காங்கேசன்துறை - நாகப்பட்டினம் இடையே இடம்பெறும் சிவகங்கை பயணிகள் கப்பல் சேவையில் நேற்று காலை நாகைபட்டினத்தில் இருந்து 117 பயணிகள் காங்கேசன்துறையை வந்தடைந்தனர். இவ்வாறு வந்த கப்பலில் காங்கேசன்துறை துறைமுகத்தில்...

யாழில் வாள் மற்றும் போதை மாத்திரைகளுடன் நால்வர் கைது!!

யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் பகுதிகளில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கைகளின்போது நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களிடமிருந்து ஒரு வாள், 860 போதை மாத்திரைகள், 4 கைபேசிகள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்கள் 24 முதல் 28 வயதுக்குட்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள்...

வடக்கு கடலில் வைத்து 12 இந்திய மீனவர்கள் கைது !

பருத்தித்துறையை அண்மித்த கடற்பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படைப் பேச்சாளர் தெரிவித்தார். இன்று செவ்வாய்க்கிழமை (12) அதிகாலை பருத்தித்துறையை அண்மித்த கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட போது குறித்த 12 இந்திய மீனவர்களும் கைதுசெய்யப்பட்டதுடன் அவர்கள் பயணித்த படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

புளியங்கூடல் கோவில் நகைகள் மீட்பு; உதவி குருக்கள் கைது

யாழ்ப்பாணம், புளியங்கூடல் முத்து விநாயகர் கோவில் நகைகளைக் கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் 28 வயதான உதவிக் குருக்கள் யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆலயத்தினுள் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 62 பவுண் நகைகள் மற்றும் 8 லட்சம் ரூபா பணம் என்பன காணாமல் போயிருந்தன. இது தொடர்பாக ஊர்காவற்றுறைப் பொலிஸ் நிலையத்தில்...

4 வயது மகளுக்கு சிறுநீரக பாதிப்பென பொய் கூறி யாசகம் பெற்றவருக்கு விளக்கமறியல்!!

காத்தான்குடி பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் வந்து , தனது மகளுக்கு சிறுநீரக சிகிச்சைக்கு பணம் வேண்டும் என பொய் கூறி யாசகம் பெற்ற தந்தை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் , கல்வியங்காடு சந்தை பகுதியில் 4 வயது சிறுமியை சக்கர நாற்காலியில் இருத்தி , சிறுமியின் இரு சிறுநீரகங்களுக்கு பழுதடைந்துள்ளதாகவும் , அதற்கான...

யாழ் சுண்டுக்குழியில் விபச்சார விடுதி முற்றுகை! உரிமையாளர் கைது!

நீண்டகாலமாக AT தங்கும் விடுதி எனும் பெயரில் யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்த விபச்சார விடுதி பொலிசாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.சுண்டுக்குளி மகளிர் பாடசாலைக்கு அருகில் தங்கும் விடுதி எனும் பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதியே நேற்று (24) புதன்கிழமை இரவு சுற்றி வளைக்கப்பட்டது. இதன்போது, விபச்சாரத்தில் ஈடுபட்ட நான்கு பெண்களும், விபச்சார விடுதி உரிமையாளரும் கைது செய்யப்பட்டனர்....

யாழில் ஆட்டோக்காரர்கள் அட்டகாசம்!! Taxi App சாரதி மீது தாக்குதல்!!

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் ஆட்டோ சாரதி ஒருவர் மீது தரிப்பிட முச்சக்கரவண்டி சாரதிகள் ஒன்றுகூடி அச்சுறுத்தல் விடுத்ததுடன் தாக்குதலும் நடத்தியுள்ளனர்.குறித்த சம்பவம் பலாலி வீதியில், திருநெல்வேலி நொதேன் வைத்தியசாலை அருகில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. தாக்குதல் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய சென்றபோதும் பொலிஸாரும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில்...

யாழில் போலி நாணயத்தாள் அச்சிடும் இயந்திரத்துடன் இளைஞர் கைது!!

போலி நாணயத்தாள்களை அச்சிடும் மின்னியல் இயந்திரத்துடன் 18 வயது இளைஞர் ஒருவர் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் (08.05.2023)ஆம் திகதி யாழ்ப்பாணம் நகரில் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை வீதியில் பெண்கள் தங்கும் இல்லத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மின்னியல் அச்சு இயந்திரத்தை வேறு இடத்துக்கு மாற்ற முற்பட்ட வேளையிலே இளைஞர் கைது...

வவுனியாவைச் சேர்ந்தவரை கடத்திவந்து யாழில் சித்திரவதை!! 3 பெண்கள் உள்பட 11 பேர் கைது!!!

வவுனியாவைச் சேர்ந்த நபர் ஒருவரை கடத்தி வந்து வீடொன்றில் அடைத்து வைத்து சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் 3 பெண்கள் உள்பட 11 பேர் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஹஏஎஸ் வான் ஒன்றும் மற்றும்ங3 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் யகத்...

முன்னாள் தவிசாளர் கைது!!

தீவகத்தில் முறையற்ற வகையில் பரம்பரை காணியை மோசடியான முறையில் தனது பெயருக்கு உரிமம் மாற்றிய குற்றச்சாட்டில் நெடுந்தீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கைது செய்யப்பட்டுள்ளார். [caption id="attachment_99954" align="aligncenter" width="1000"] Arrested man in handcuffs with hands behind back[/caption] அவரது மோசடிக்கு துணை நின்றனர் என்ற குற்றச்சாட்டில் முன்னாள் கோட்டக்கல்வி பணிப்பாளர்...

யாழ். நெடுந்தீவில் பரபரப்பை ஏற்படுத்திய ஐவரின் கொலை விவகாரம்! ஒருவர் கைது

யாழ். நெடுந்தீவு பகுதியில் வீடொன்றிலிருந்து ஐந்து பேர் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் ஜேர்மனியில் இருந்து திருப்பி அனுப்பட்டவர்  என தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் குறிந்த சந்தேகநபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்படுகின்றது. சந்தேகநபர் படுகொலை செய்யப்பட்டவர்களின் வீட்டில் தங்கியிருந்த நபர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது....

நெடுந்தீவில் ஐவர் வெட்டிப் படுகொலை! ஆறாவது நபர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி ! விசாரணைகள் தீவிரம்!

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு பகுதியில் இறங்கு துறைக்கு அண்மித்த வீடொன்றில் இன்று(22) காலை ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.3 பெண்களும் இரண்டு ஆண்களும் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், ஒருவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இன்று காலை இனந்தெரியாத சிலர் குறித்த வீட்டுக்குள் பிரவேசித்து இந்த கொலையை புரிந்திருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். கொலையுண்டவர்களில் 3 பேர் வெளிநாடொன்றில்...

மதுபானம் பருக்கி சிறுமி கூட்டு பாலியல் வல்லுறவு!! இருவர் கைது!

அச்சுவேலி - தென்மூலை பகுதியில் சிறுமி ஒருவர் கூட்டு வன்புணர்வுக்கு உள்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி யாழ்.போதனா மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டு சட்ட மருத்துவ வல்லுனர் முன்னிலையில் இடம்பெற்ற பரிசோதனையில் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டமை மற்றும் சிறுமி போதையில் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது. அச்சுவேலி தென்மூலை...

யாழில் பொது மக்களை கொடூரமாக தாக்கி துன்புறுத்திய சந்தேகநபர் கைது

யாழ்ப்பாணத்தில் மீட்டர் வட்டிக்கு பணம் கொடுத்தவர்களிடம் பணத்தை மீள வசூலிப்பதற்காக அடித்து துன்புறுத்தும் நபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். அளவெட்டியைச் சேர்ந்த அவரை யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் சந்தேகநபரை கைது செய்துள்ளனர். மீட்டர் வட்டிக்கு பணம் பெற்ற இருவரை தோட்டக் காணி ஒன்றுக்கு அழைத்து வந்து கொடூரமாகத் தாக்கி துன்புறுத்தும் காணொளி...
Loading posts...

All posts loaded

No more posts