இலங்கையில் பதிவு செய்யப்பட முடியாத, ஒரு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய நவீன ரக அதிவேக மோட்டார் சைக்கிள்கள் ஐந்துடன் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனுடன் இரண்டு போலி இலக்கத் தகடுகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஹோமாகம பிராந்திய குற்றவியல் பணியகத்தின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில், அத்துருகிரிய – ஹோகந்தர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஹோகந்தர பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய வர்த்தகர் என தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக அத்துருகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.