Ad Widget

உடுவில் பகுதியில் வயோதிபத் தம்பதியை தாக்கி துணிகரக்கொள்ளை – வயோதிபர் படுகாயம்!

உடுவில் அம்பலவாணர் வீதியில் வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளைக் கும்பல், வயோதிபத் தம்பதியைத் தாக்கிவிட்டு சுமார் 15 தங்கப் பவுண் நகைகள் மற்றும் 5 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளது.

crime scene tape focus on word ‘crime’ in cenematic dark tone with copy space

வயோதிபத் தம்பதியைக் கட்டிவைத்துவிட்டு குடும்பத் தலைவரின் தலையில் கூரிய ஆயுதத்தால் கொத்தி கொள்ளைக் கும்பல் சித்திரவதை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் படுகாயமடைந்த குடும்பத்தலைவர், தெல்லிப்பழை வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று(செவ்வாய்கிழமை) அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன், வயோதிபத் தம்பதியின் 3 பிள்ளைகள் வெளிநாட்டில் உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

“வீட்டுக்குள் நுழைந்த 3 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல், எங்களைக் கட்டிவைத்தது. கணவரின் தலையில் கூரிய ஆயுதத்தால் கொத்தியது. எனது கன்னத்தில் அறைந்து. அதனால் நாம் நிலைகுலைந்தோம்.

சுமார் 3 மணிநேரம் சல்லடை போட்டு தேடுதல் நடத்தி, நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையிட்டு கும்பல் தப்பித்தது” என்று குடும்பப் பெண் விசாரணையில் தெரிவித்தார்.

மேலும் “கொள்ளையர்கள் மூவரும் 20 தொடக்கம் 24 வயதுக்குட்பட்டவர்களாதான் இருக்கும். அவர்களில் ஒருவன் கைகளில் கையுறை போட்டிருந்தான்.

வீட்டில் பிள்ளைகளின் நகைகளுடன் 15 பவுண் நகைகள் இருந்தன. 5 லட்சம் ரூபாய் பணமும் இருந்தது. அவை கொள்ளையிடப்பட்டுள்ளன” என்றும் அவர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மோப்ப நாய் அழைத்துவரப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Related Posts