- Tuesday
- September 15th, 2026
ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நாரந்தனைப் பகுதியில் வைத்து இன்று முற்பகல் வாள்வெட்டுக்குள்ளானார் என பொலிஸார் தெரிவித்தனர். சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே பொலிஸ் உத்தியோகத்தர் மீது வாள்வெட்டு நடத்தப்பட்டது. திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவரே, பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்தினார்" என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவத்தில்...
45 இலட்சம் ரூபா பண மோசடியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தபாலதிபரை வரும் 16ஆம் திகதிவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது. அனுராதபுரம் பகுதியில் தபாலதிபராக கடமையாற்றும் சந்தேகநபர், முஸ்லிம் வர்த்தகர் ஒருவரிடமிருந்து 45 இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக் கொண்டு திருப்பிக் கொடுக்காமல் அவரை ஏமாற்றியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது....
சமுக வலைத்தளங்கள் ஊடாக வௌிநாடுகளில் பணி புரிகின்ற இலங்கையர்களிடம் மோசடியில் ஈடுபடுகின்ற குழுவொன்று சம்பந்தமாக அறியக் கிடைத்துள்ளதாகவும், இதுபோன்ற மோசடிக்காரர்களிடம் சிக்க வேண்டாம் என்றும் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் கேட்டுக் கொண்டுள்ளது. வெளிநாட்டு தொழிலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு என்று பல்வேறு பெயர்களில் இந்த கும்பல் இயங்குவதாக தெரிய வந்துள்ளது. வௌிநாடுகளில் பணி புரிகின்ற...
நடன ஆசிரியையின் சகோதரியின் குடும்ப விடயத்தில் தலையிடக் கூடாது என ஈபிடிபி உறுப்பினர்கள் இருவரை எச்சரித்த நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, இனி எந்தப் பிரச்சினையும் இடம்பெறாது என தெரிவித்திருந்தார் என்ற விடயம் பொலிஸாரின் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் நடன ஆசிரியையின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த வாள்வெட்டுக் கும்பல், ஆசிரியையும் அவரது...
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்களான செஸ்ரியான் ரமேஸ் மற்றும் நடராஜா மதனராஜா ஆகிய இருவரையும் லண்டனிலிருந்து நாடு கடத்த நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா திணைக்களத்திடம் பாதுகாப்பு அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த காலங்களில் ஊர்காவற்துறை பகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா உள்ளிட்டவர்கள் மீது குறித்த கட்சியினர் தாக்குதல் நடத்தியபோது...
யாழ்ப்பாணத்தில் சிறைச்சாலை வாகனத்தின் மீது தாக்குதலை மேற்கொண்ட இளைஞரொருவரை யாழ். பொலிஸார் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 8 மணியளவில் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் – அரியாலையைச் சேர்ந்த நிரஞ்சன் என்பவரே இச்சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்.பிரதம தபால் நிலையத்தின் முன்பாக சுமார் நான்கு பேர் மதுபோதையில் நின்றுள்ளதுடன், கைகளால் சிறைச்சாலை வாகனத்தின் கண்ணாடியை உடைத்ததுடன்,...
“வெப்பம் அதிகமாக உள்ளதால் குளுமைக்காக ஆசிரியர் மது அருந்தினார். ஆனால் அவர் முடாக் குடிகாரர் இல்லை” இவ்வாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட ஆசிரியர் சார்பில் மூத்த சட்டத்தரணி ஒருவர் மன்றிடம் உரைத்தார். கோப்பாய் பொலிஸ் பிரிவில் வீதிப் போக்குவரத்து கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த பொலிஸாரால், ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் மதுபோதையில் வாகனம் செலுத்திய...
கொக்குவில் முதலி கோவில் பகுதியில் வைத்து நேற்று மாலை 4 மணியளவில் ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். “ஆவாக் குழுவைச் சேர்ந்த மோகன் அசோக் என்பவரே இந்த தாக்குதலை மேற்கொண்டார். அவருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளன” என்றும் பொலிஸார் தெரிவித்தனர். வாள்வெட்டில் படுகாயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்...
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைமை அலுவலகம் இயங்கும் ஸ்ரீதர் திரையரங்கின் உரித்தை மீளப் பெற்றுத் தருமாறு யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுதாரர்களாக இராட்ணசபாபதி ஸ்ரீதர் உள்ளிட்ட 6 பேர் மனுதாரர்களாகவும், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தாவை எதிர்மனு தாரராகவும் குறிப்பிட்டு சட்டத்தரணி கேசவன் சயந்தன்...
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 27 பேர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் தண்டிக்கப்பட்டனர். இது தொடர்பாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று (வியாழக்கிழமை) ஒரே நாளில் 37 பேருக்கு எதிராக கோப்பாய் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்தனர். குறித்த வழக்கு விசாரணைகள் யாழ்ப்பாணம் நீதிமன்ற...
வவுனியா நுண்நிதி நிறுவனத்தில் கடன் பெற்ற பெண்ணொருவர் அந்நிறுவனத்தின் ஊழியர் ஒருவரின் முறைகேடான செயற்பாட்டின் காரணமாக நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. வவுனியா, மறவன்குளம் கிராமத்தில் வசிக்கும் சக்திவேல் சசிகலா (வயது 22) என்ற ஒரு பிள்ளையின் தாயார் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,...
வலி.வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்டுள்ள மயிலிட்டிப் பகுதியில் 10 கிலோ கிராம் வெடி மருந்துடன் ஒருவர் நேற்றயதினம் காலை கைது செய்யப்பட்டார் என்று காங்கேசன்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். “சந்தேகநபர், யாழ்ப்பாணம் குருநகர் பகுதியைச் சேர்ந்தவர். அவர் வெடிமருந்தை எதற்காகக் கொண்டு சென்றார் என்ற தகவல் வெளியாகவில்லை. விடுவிக்கப்பட்ட பகுதிகளில் இருந்த வெடிபொருள்களிலிருந்து அவற்றை சந்தேகநபர் பெற்றுக்கொண்டாரா? என்ற...
யாழ்ப்பாண பொலிஸ் பிரிவில் பணியாற்றும் இரகசியப் பொலிஸ் உத்தியோகத்தர் காயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நேற்றயதினம் இரவு இடம்பெற்ற உதைபந்தாட்டப் போட்டியில் மைதானத்துக்கு வெளியே இடம்பெற்ற இரு தரப்பினருக்கு இடையேயான மோதலின் போதே இரகசிய பொலிஸ் உத்தியோக்கத்தரான யாபா காயமடைந்தார் என பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கையில் ஓட்டோ வண்டிகளை செலுத்தும் சாரதிகளுக்காக புதிய சட்டத்தை அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த சட்டத்துக்கு அமைய, பயணிகளின் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக ஓட்டோக்களை பயன்படுத்தும் சாரதிகளின் வயதெல்லை 35 இற்கு மேல் இருக்க வேண்டியது கட்டாயமாக்கபடவுள்ளது. இந்த சட்ட திட்டத்தினை மீறும் ஓட்டோ சாரிகளுக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின்...
தென்மராட்சியில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் மீது தாக்குதல் யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நாவற்குழி பகுதியில் கடமையாற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் மீது பொதுமகன் ஒருவர் தாக்குதல் நடத்தியதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் 2:15 மணியளவில் நாவற்குழி பகுதியில் நடைபெறும் அபிவிருத்தி வேலைகளை பார்வையிட சென்றபோது இடம்பெற்றுள்ளது. தகாத...
பயணிகளுக்கு பற்றுச்சீட்டு வழங்கும் வகையில் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண அறவீட்டு மீட்டர் பொருத்துவது இன்று முதல் கட்டாய நடைமுறைக்கு வருகிறது. இந்த சட்டத்தை மீறும் முச்சக்கர வண்டி சாரதிகளை கைது செய்வதற்கு அல்லது அபராதம் விதிப்பதற்கு பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாக வீதிப் பாதுகாப்பு சம்பந்தமான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட கூறினார். முச்சக்கர வண்டிகளுக்கு...
வீதி விதிமீறல்கள் தொடர்பாக பரிந்துரைக்கப்பட்ட 25 ஆயிரம் ரூபாய் அபாராதத் தொகையை 3 ஆயிரம் ரூபாவாக குறைப்பட்டுள்ளதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாகன போக்குவரத்து சட்டங்கள் கீழான 3 கட்டகளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். தெரிவுசெய்யப்பட்ட 33 வீதி விதிமீறல்கள் தொடர்பில் அபராதத் தொகையை...
கோப்பாயில் மனைவியைக் கடுமையாகத் தாக்கினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கணவனை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிவான் நீதிபதி சி.சதீஸ்தரன் உத்தரவிட்டார். குடும்பத் தலைவர் ஒருவர் அவரது மனைவியைத் தாக்கியமையைத் தொடர்ந்து கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் அவரது மனைவி முறைப்பாடு செய்திருந்தார். அம்முறைப்பாட்டின் அடிப்படையில் கணவனைக் கைது செய்த பொலிஸார் யாழ். நீதிவான் நீதிமன்றில் முற்படுத்திய...
வவுனியா நெடுங்கேணி பிரதேசத்தில்; மாணவியை துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர் ஒருவருக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தீர்ப்பளித்துள்ளார். வவுனியா நெடுங்கேணியில் பாட்டியின் பராமரிப்பில் வசித்து வந்த சிறுமி 2014ஆம் ஆண்டளவில் சாதாரண தர பரீட்சைக்காக பரீட்சை வினாத்தாள்களைக் கோரியுள்ளார். இந்நிலையில், குறித்த சிறுமியை வீட்டுக்கு வரவழைத்த...
“சிறுப்பிட்டி படைமுகாமுக்குள் இளைஞர்கள் இருவரையும் இராணுவத்தினர் அழைத்துச் சென்றனர். அதனை என் கண்களால் கண்டேன். சிறிது நேரம் அந்த இடத்தில் நின்று பார்த்தேன். எனினும் இளைஞர்கள் இருவரும் வெளியே வரவில்லை” இவ்வாறு சிறுப்பிட்டி இளைஞர்களைக் கடத்திக் கொலை செய்யப்பட்ட இராணுவத்துக்கு எதிரான வழக்கில் பெண் ஒருவர் சாட்சியமளித்தார். யாழ்ப்பாணம் சிறுப்பிட்டிப் பகுதியில் இளைஞர்கள் இருவர் கடத்தப்பட்டு...
Loading posts...
All posts loaded
No more posts
