- Tuesday
- September 15th, 2026
யாழ்ப்பாணத்திலிருந்து மன்னாருக்கு செல்வதற்கு 6 ரூபாய் 50 சதம் பயண சீட்டை கொடுத்தமை, பயணிகளுக்கு பயண சீட்டை வழங்காமை, கணக்கிற்கு அதிகமாகவும், குறைவாகவும் பயண சீட்டு பணங்களை வைத்திருந்தமை முதலான குற்றச்சாட்டுக்களின் கீழ் பணி நீக்கம் செய்யப்பட்ட இலங்கை போக்குவரத்து சபையின் நடத்துனர்களுக்கு கடுமையான எச்சரிக்கையுடன் மீள பணியில் அமர்த்த யாழ்.மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்குறித்த...
யாழ். நாவற்குழியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்கள் குறித்த ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்யும் கோரிக்கையை யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் நிராகரித்துள்ளார். குறித்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை குறித்த முறைப்பாட்டில்...
வடமராட்சி கிழக்கு, அம்பன் – குடத்தனையில் வீடொன்றுக்குள்ளிருந்து வெட்டுக்காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அவரது தாயார் வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றது. “அந்த வீட்டில் தாயும் மகளுமே வசித்து வந்தனர். கொள்ளைக் கும்பல் ஒன்றே இந்தக் கொடூரச் செயலைச் செய்திருக்கும் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். நல்லதம்பி தேவகி...
பாசையூர் அந்தோனியார் கோவில் பகுதியில் இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் காரணமாக அந்தப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் குறித்த சம்பவத்தையடுத்து அங்கு பொலிஸார் மற்றும் விசேட படையினர் வரவழைக்கப்பட்ட நிலையில் நிலைமை சுமூகமடைந்துள்ளது பாசையூர் இளைஞர்களுக்கும் ஈச்சமோட்டை இளைஞர்களுக்கும் இடையில் இடம்பெற்ற இந்த மோதல் சம்பவத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ள நிலையில் யாழ். போதனா...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சந்தேகநபர்களான 5 பொலிஸ் உத்தியோகத்தர்களும் மீளவும் சேவையில் இணைக்கப்பட்டுள்ளனர். 5 பொலிஸாரும் சேவையில் மீள இணைக்கப்பட்டதனையடுத்து அவர்களின் பிணை நிபந்தனைகளில் ஒன்றை இலகுபடுத்தப்படுத்துமாறு முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்துக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் நேற்று முன்தினம் (27) அனுமதியளித்தது. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இந்த...
வவுனியா நகரப்பகுதியில் நிதி நிறுவனம் நடத்துவதாக தெரிவித்து வறிய மக்களிடம் பணமோசடி செய்த நபர் வழக்குத் தவணைகளுக்கு ஆஜராகாமல் மறைந்திருந்த நிலையில் பருத்தித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா நகர மத்தியில் விவசாய கால்நடை மீன்பிடி ஊக்குவிப்பு நிறுவனம் என்ற பெயரில் வறிய மக்களிடம் ஆசை வார்த்தைகளைக்கூறி கடன்...
யாழ்ப்பாணம் – அரியாலை மணியந்தோட்டம் பகுதியில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய, சிறப்பு அதிரடிப் படையின் புலனாய்வு உத்தியோகத்தர்கள் இருவரும் நிபந்தனையுடனான பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளசந்தேகநபர்கள் இருவரும் தலா 50 ஆயிரம் ரூபா ரொக்கப் பணம் மற்றும் 5 லட்சம் ரூபா சரீர பிணைகளில் விடுதலை செய்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன்...
கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிரு ந்த பெண்கள் மீது மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் வாளால் வெட்டியதில் 3 பெண்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவ தாவது, செம்மணி நாயண்மார்கட்டு பகுதியில் வைத்து மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் வாளாள் வெட்டியுள்ளார். வெய்யில் உகந்த பிள்ளையார்கோயில் இடம்பெற்ற வழிபாட்டிற்கு...
உடுப்பிட்டியில் திருட்டு முயற்சியில் ஈடுபட்டவர்கள், சாவகச்சேரி நுணாவில் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் புத்தளம், வவுனியா மற்றும் ஊர்காவற்துறையைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வடமராட்சி உடுப்பிட்டி இமையானன் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று முன்தினம் (புதன்கிழமை) திருட்டு முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது நான்கு திருடர்களும் பொதுமக்களால் சுற்றிவளைக்கப்பட்டனர். ஆனால் இதன்போது ஒருவர் மட்டுமே பிடிக்கப்பட்டார்....
சங்கானையில் ஆலயக் குருக்களை கொலை செய்து அவரது பிள்ளைகளைக் காயப்படுத்திவிட்டு நகை மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் தொடர்பில் இராணுவ சிப்பாய் உள்ளிட்ட மூவருக்கு யாழ். மேல் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அத்துடன், தானியங்கித் துப்பாக்கியைப் பயன்படுத்தியமைக்கு எதிரிகள் மூவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குருக்கள் மற்றும் அவரது...
தனது சாவிற்கு சட்டத்தரணி ஒருவர் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு யுவதி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று யாழில் பதிவாகியுள்ளது. யாழ்ப்பாணம் அரியாலையைச் சேர்ந்த 23 வயதுடைய நாகேஸ்வரன் கௌசிகா என்ற யுவதியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். யாழ். மருதடியிலுள்ள தனது நண்பியின் இல்லத்தில் இவர் நேற்று பிற்பகல் யாரும்...
முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டானைச் சேர்ந்த தொண்டர் ஆசிரியை ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. எனினும் தனது சகோதரியான ஆசிரியை தற்கொலை செய்யவில்லை. திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது சகோதரர் சண்முகராஜா ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார். தற்போது அவுஸ்திரேலியாவில் வாழும் சண்முகராஜா ஸ்ரீஸ்கந்தராஜா ஊடகங்கள் வாயிலான இதன் உண்மைத் தன்மையை அம்பலப்படுத்தியுள்ளார். இது குறித்து...
யாழ்ப்பாணம் தாவடிப்பகுதியில் வீட்டுக்குள் அத்துமீறி உள்நுழைந்த பொலிஸார், வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தியுள்ளதாக சுன்னாகம் பொலிஸாருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் அலுவலகத்தில் நேற்று (21) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் தாவடி வடக்குப்பகுதியில் வீடு ஒன்றினுள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (18) மாலை 6 மணியளவில் அத்துமீறி உள்நுழைந்த பொலிஸ் குழு ஒன்று, அங்கு இருந்த...
ஊர்காவற்றுறை, கர்ப்பிணி பெண் கொலை வழக்குத் தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. குறித்த கொலை வழக்கு நேற்று (புதன்கிழமை) ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. நேற்றைய வழக்கு விசாரணையின் போது ஆரம்பத்தில் குற்றப்புலனாய்வு பிரிவினரின் விசாரணையில் தாமதம் காணப்படுவது தொடர்பாக சட்டத்தரணி ஷாலினி...
காச நோய் இருப்பது இனங்காணப்பட்டு அதற்கு உரிய சிகிச்சைப் பெறாது உள்ளவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இவ்வாறு சிகிச்சைப் பெறாதிருப்பின் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என, சுவாச நோய் நிபுணர் வைத்தியர் பிரசன்ன மெதகெதர தெரிவித்தார். எதிர்வரும் 24 ஆம் திகதி உலக காசநோய் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே...
துன்னாலை பகுதியில் கசிப்பு உற்பத்தியைத் தடுக்கச் சென்ற பொலிஸார் மீது பிரதேசவாசிகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவில் உடையில் சென்ற பொலிஸார் மீதே கல்வீச்சு மற்றும் பொல்லுகளால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச் சம்பவம் நேற்று (14) மாலை குடவத்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், தாக்குதல் மேற்கொண்ட நபர்களை...
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவருக்கு வழங்க என 180 மில்லிக் கிராம் ஹெரோயின் போதைப்பொருளை பற்பசைக்குள் மறைத்து சூட்சுமமாகக் கடத்திச் சென்ற இளம் பெண் மற்றும் இளைஞர் ஒருவரும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களிடம் சிக்கிக்கொண்டனர். இந்தச் சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. சந்தேகநபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் பொலிஸார் ஊடாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். அவர்களை வரும் 20ஆம்...
தனியார் பேருந்து சாரதி ஒருவரை தாக்கி, அச்சுறுத்தியமை தொடர்பில், பொலிஸ் புலனாய்வு உத்தியோகத்தர் மற்றும் அவரது முகவராகச் செயற்பட்டவருக்கு தலா 1500 ரூபாய் தண்டப்பணமும், தலா இரண்டு மாதங்கள் சிறைத்தண்டனையும் வழங்கி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதவான் நீதிமன்றத்தில், பொலிஸ் புலனாய்வு உத்தியோகத்தர் மற்றும் அவரது முகவராகச் செயற்பட்டவரை முன்னிலைப்படுத்தியப்போது நீதவான் சின்னத்துறை சதீஸ்வரன்...
இனங்களுக்கு இடையில் மோதல் ஏற்படும் வகையில் பேஸ்புக் ஊடாக பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்த கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 26ம் திகதி வரையில் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. அண்மையில் குற்ற விசாரணைப் பிரிவினரால் அந்த மாணவன் கைது செய்யப்பட்டிருந்தார். 18 வயதுடைய...
ஊடகவியலாளரின் கடமைக்கு இடையூறு விளைவித்து, அவரின் புகைப்பட கருவியை சேதமாக்கி ஊடகவியலாளரை அச்சுறுத்திய இருவரை பிணையில் செல்ல யாழ்.நீதிவான் நிபந்தனை அடிப்படையிலான பிணையில் செல்ல அனுமதித்துள்ளார். யாழ்.கொக்குவில் சந்திக்கு அருகாமையில் உள்ள வர்ண நிறபூச்சு (பெயின்ட்) விற்பனை நிலையம் ஒன்றின் மீது கடந்த வெள்ளிக்கிழமை இளைஞர் குழு ஒன்று தாக்குதலை மேற்கொண்டது. குறித்த தாக்குதல் சம்பவம்...
Loading posts...
All posts loaded
No more posts
