- Tuesday
- September 15th, 2026
யாழ்.இருபாலை பகுதியில் உள்ள முன்பள்ளி மாணவர்களை முன் பள்ளிக்குள் வைத்து பூட்டி விட்டு முன்பள்ளி ஆசிரியை சென்றமையால் கல்வி திணைக்கள அதிகாரிகளால் குறித்த முன் பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது , இருபாலை தெற்கு கிராம சேவையாளர் பிரிவில் அமைந்துள்ள ஞான ஒளி சனசமூக நிலையத்தில் இயங்கி வந்த...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வலி. தெற்கு பிரதேச சபைக்கு போட்டியிட்ட வேட்பாளர் வேலாயுதம் செல்வகாந்தன் என்பவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த வேட்பாளர் விளையாட்டுக் கழகமொன்றின் நிர்வாக உறுப்பினராகவும் இருந்து வருகின்றார். இவ்விளையாட்டுக்கழகத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக புலம்பெயர் நலன்விரும்பிகளால் ஒரு தொகைப் பணம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. எனினும் விளையாட்டுக்கழகத்தின்...
ண்டபம் அகதிகள் முகாமில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கைக்கு வந்த நான்கு இலங்கை அகதிகள், கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அகதிகளுடன், யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு படகோட்டிகளும் கைது செய்யப்பட்டு, மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடற்படையினர், சர்வதேச கடல் எல்லையில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த வேளையில், சட்டவிரோதமான முறையில் படகொன்று நிற்பதை அவதானித்துள்ளனர்....
ஊர்காவற்றுறை கர்ப்பிணிப் பெண் கொலை வழக்கில் சுமார் 17 மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டடிருந்த சந்தேகநபர்கள் இருவரையும் நிபந்தனையுடனான பிணையில் விடுவிக்க யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று கட்டளை வழங்கியது. ஊர்காவற்துறை பகுதியில் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் திகதி ஒரு பிள்ளையின் தாயும் ஏழு மாத கர்ப்பிணியுமான ஞானசேகரன் ஹம்சிகா (வயது 27) என்பவர்...
யாழ்.தென்மராட்சி பகுதியில் குழந்தையின் கழுத்தில் வாள் வைத்து குடும்பத்தாரை அச்சுறுத்தி, நகை பணம் என்பவற்றைக் கொள்ளையடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தென்மராட்சி, அறுகுவெளி பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) நள்ளிரவு உட்புகுந்த நான்கு கொள்ளையர்கள் வீட்டில் உறங்கி கொண்டிருந்த குழந்தையின் கழுத்தில் வாளினை வைத்து வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தி கொள்ளையில் ஈடுபட்டனர். அதன்போது...
யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை முற்றாக ஒழிக்கும் வகையில் வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் றொஷான் பெர்னாட்டோவினால் சிறப்பு பொலிஸ் செயலணி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. குறித்த செயலணியின் பணிகள் அனைத்தும் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான விழிப்புணர்வு சுவரொட்டிகள் குடாநாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் ஒட்டப்படவுள்ளன. கடந்த காலங்களில்...
திருடனின் கத்திக் குத்துக்கு இலக்காகிய முதியவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாவடி வடக்கு பிள்ளையார் கோவிலுக்கு அருகிலுள்ள வீட்டுக்குள் கடந்த 10ஆம் திகதி வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு திருடன் ஒருவன் புகுந்துள்ளான். அந்த வீட்டில் தம்பதியரான சிவலோகநாதன் செல்வராசா (வயது – 62 ) செல்வராசா இராஜேஸ்வரி (வயது -58)...
யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய அப்பு என்ற பொலிஸ் உத்தியோகத்தர் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் மன்னார் பொலிஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். வாள்வெட்டுக் கும்பல்களுடன் தொடர்புகளைப் பேணி, பொலிஸாரின் விசாரணை நகர்வுகள் தொடர்பான தகவல்களை அவற்றுக்கு வழங்கினார் என்ற குற்றச்சாட்டையடுத்தே இந்த இடமாற்றத்துக்கு உத்தரவிட்டார் வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர். “யாழ்ப்பாணத்தில்...
நீர்வேலியில் கோவிலில் வைத்து இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவரை எதிர்வரும் 17 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டுள்ளது. நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவில் கடந்த திங்கட்கிழமை இளைஞர்கள் இருவர் மீது வாள்வெட்டு நடத்தப்பட்டது. சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த 23...
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தொடருந்தில் குடும்பப் பெண் ஒருவருடன் தகாத முறையில் நடந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தொடருந்து உத்தியோகத்தரை பிணையில் விடுத்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வருகைதந்த பிரிட்டன் வாழ் தமிழ் குடும்ப பெண்ணொருவர் வவுனியா தொடருந்து நிலையத்தில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்தார். இதன்...
யாழ்.மாநகர சபைக்கு சொந்தமான கட்டத்தினை வாடகை அறவிடாமல் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குனராஜா வழங்கியமையை தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் ந. லோகதயாளன் ஆதார பூர்வமாக ஆவணங்களுடன் சபையில் குற்ற சாட்டை முன் வைத்தார். யாழ்,மாநகர சபையின் இரண்டாம் அமர்வு நேற்றைய தினம் யாழ்.மாநகர சபை சபா மண்டபத்தில்...
சிங்கப்பூரில் இருந்து இலங்கை வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு யுவதிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளரும் துணை இயக்குனருமான சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான 1.1 கிலோ தங்க ஆபரணங்களை கைப்பற்றியுள்ளதாக அவர் கூறினார். குறித்த இருவரும்...
இலங்கை இரயில் திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவரின் நடவடிக்கை தொடர்பாக மனிதவுரிமை ஆணைக்குழுவிலும் யாழ். இரயில் நிலைய அதிபரிடமும் முறைப்பாடு செய்யப்பட்டமையை அடுத்து, குறித்த ஊழியர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்படி ஊழியர் யாழ். ரயிலில் பயணித்த பெண்ணொருவருடன் தகாத வார்த்தைப் பிரயோகம் மேற்கொண்டமை தொடர்பில் காணொளி உட்பட முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டமையை அடுத்தே இன்று...
தெல்லிப்பழை எட்டாம் கட்டைப் பகுதியில் வாள்வெட்டுக் கும்பல்களின் அட்டகாசம் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இரு குழுக்களிடையே ஏற்பட்ட முரண்பாட்டால், தெல்லிப்பழை எட்டாம் கட்டைப் பகுதியில் ,வாள்கள், இரும்புக் கம்பிகள் என்பவற்றுடன் சுமார் 20 பேர் , 10 மோட்டார் சைக்கிள்களில் இரவிரவாக அந்தப் பகுதியில் நடமாடியதால் பொதுமக்களிடையே பெரும் அச்சநிலை தோன்றியிருந்தது. மாற்றுக்...
சிறிலங்கா புகையிரத திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தமிழ் பெண்ணொருவருடன் தகாத முறையிலும் இனத்துவேசமாகவும் நடந்து கொண்டதால் நேற்று (07) யாழ்.நோக்கி வந்த புகையிரதத்தில் பதற்றம் நிலவியிருந்தது. இந்த சம்பவம் நேற்றைய தினம் காலை 6.30 மணிக்கு கோட்டையிலிருந்து புறப்பட்டு யாழ்.நோக்கி வந்த புகையிரத நிலையத்திலேயே சம்பவம் நடைபெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழுவிலும், யாழ்.புகையிரத...
யாழ். நீர்வேலிப் பகுதியில் இளைஞர்கள் இருவர் மீது வாள்வெட்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த வாள் வெட்டு சம்பவத்தில் காயமடைந்த இருவரும் யாழ்.போதனா வைத்தியசாலை அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவில் பகுதியில் வைத்து நேற்று (திங்கட்கிழமை) மாலை சரமாரியாக வெட்டியுள்ளனர். அதே இடத்தினைச் சேர்ந்த இருவர்...
இலங்கை மின்சார சபையில் பெருமளவு மோசடிகள் இடம்பெறுகின்றன என கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் குற்றஞ்சாட்டியுள்ளார். “இலங்கை மின்சார சபைக்கு வரும் ஒவ்வொரு நிலக்கரி கப்பலுக்கும் 120 மில்லியன் ரூபா மோசடி செய்யப்படுகிறது. விநியோகிக்கப்படும் மின்சாரத்தில் ஒவ்வொரு அலகுக்கும் 14 ரூபா மோசடி செய்யப்படுகிறது. மின்சாரத் துறையில் முதலீடு செய்ய முன்வந்த வெளிநாட்டு...
ஆஸ்ரேலியா, நியூசிலாந்து நோக்கி பயணம் செய்த எண்ணெய்க் கப்பல் ஒன்றில் இருந்து 131 இலங்கையர்கள் மலேசியக் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். மலேசியாவின், ஜோகோர் மாகாணத்தின், தன்ஜுங் ஜெமுக் துறைமுகத்துக்கு அப்பால் உள்ள கடலில் பயணித்த எற்ரா ( Etra) என்ற எண்ணெய் தாங்கி கப்பலில் இருந்தே, 131 இலங்கையர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மே முதலாம்...
தமிழக ஈழ அகதிகள் முகாமிலிருந்து சட்டவிரோதமாக படகில் தாயகம் திரும்பிய 14 பேர் காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து இன்று அதிகாலை 2 மணியளவில் கைது செய்யப்பட்டனர் என கடற்படையினர் தெரிவித்தனர். திருகோணமலையைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் விசாரணைகள் மற்றும் மலேரியா தடுப்பு பரிசோதனையின் பின்னர் காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்” என்று கடற்படையினர் தெரிவித்தனர்...
சுன்னாகம் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையினால் ஆவாக்குழுவினைச் சேர்ந்த 5 பேர் வாள்களுடன் நேற்று இரவு (04) கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் கைதடி மற்றும் நுணாவில், வவுனியா பகுதியைச் சேர்ந்த 5 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 4 வாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. சுன்னாகம் பகுதியில் வாள் வெட்டினை மேற்கொள்வதற்கு எத்தணித்த போதே பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம்,...
Loading posts...
All posts loaded
No more posts
