நெடுந்தீவில் இந்திய மீனவர்கள் கைது!

இந்திய மீனவர்களது 7 இழுவைப்படகுகளை கடற்படையினர் பிடித்துள்ளதாக யாழ். மாவட்ட கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. (more…)

பெண் கொலை; சந்தேகத்தில் ஒருவர் கைது

யாழ். நாச்சிமார் கோவில் தேர் கட்டிடத்திலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பாக ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். சிறுகுற்றத் தடுப்புப் பொலிஸார் இன்று திங்கட்கிழமை (28) இதனைத் தெரிவித்தனர். (more…)
Ad Widget

இராணுவத்திற்க்கு எதிராக 2007 – 2012 வரை 11 பாலியல் முறைப்பாடுகளே பதிவு – இராணுவ பேச்சாளர்

வடக்கில் படையினரால் தமிழ் பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என இராணுவம் தெரிவித்துள்ளது. (more…)

குடும்பத்தைக் கடத்தி கப்பம் வாங்கிய இருவர் இரண்டு வருடங்களின் பின்னர் சிக்கினர்

படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மகனை மீட்டுத் தருவதாகத் தொலைபேசியில் தெரிவித்து அந்தக் குடும்பத்தைக் கொழும்புக்குக் கடத்திச் சென்று 28லட்சம் ரூபாவைப் கப்பமாகப் பெற்ற இருவரைச் சாவகச்சேரிப் பொலிஸார் கைது செய்துள்ளனர். (more…)

வாக்காளராகப் பதியாமல் விட்ட கிராம அலுவலர் மீது னித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

2012 ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப்பட்டியலில் தமது பெயர்கள் இணைக்கப்படாமை அடிப்படை மனித உரிமையை மீறும் செயல் எனத் தெரிவித்து யாழ். வாசிகள் இருவர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர். (more…)

யாழில் மகனை தாக்கிய பொலிஸாரைத் தடுக்க முயன்ற தாய் மீது கொடூரத் தாக்குதல்

யாழ்ப்பாணம் குடத்தனை வடக்கினைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர் மீது ஆண் பொலிசார் கொடூரமாகத் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.திருமதி யோகராசா கமலாதேவி (வயது 50) என்ற பெண்ணே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். குறித்த பெண்ணின் மகனான யோகராசா கஜேந்திரன் (வயது 19) மீது சுமத்தப்பட்ட திருட்டுக் குற்றச்சாட்டினைத் தொடர்ந்து, குடத்தனையிலுள்ள அவரது வீட்டிற்கு வாகனத்தில் கொண்டு வந்த...

வடமாகாண எதிர்க்கட்சித் தலைவரின் மெய்ப்பாதுகாவலர் கைது

வடமாகாண எதிர்க்கட்சித்தலைவரும் ஈழமக்கள் ஜனாநாயக் கட்சியின் அமைப்பாளருமான கமலேந்திரனின் மெய்ப்பாதுகாவலர் பயங்கரவாதக் குற்ற புலனாய்வுப் பிரிவினரால் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். (more…)

வைத்தியர்கள் இடம்மாற்றம் தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கை

யாழ் போதனா வைத்தியசாலையில் வருடாந்த இடமாற்றம் பெற்றுள்ள சுமார் 44 வைத்தியர்களை யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் பவானி பசுபதிராஜா விடுவிக்க மறுத்து வருவதால் (more…)

இராணுவம் தாக்கியதாக அரச ஊழியர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

வட மாகாண சபைத் தேர்தல் தினத்தன்று இராணுவத்தினர் தன்னை அடித்துக் காயப்படுத்தியதாக அரச ஊழியர் ஒருவர் யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். (more…)

சுயேட்சைக்குழுவின் ஆதரவாளர் மீது வாள் வெட்டு

வட்டுக்கோட்டை பகுதியில் சுயேட்சைக்குழுவொன்றின் ஆதரவாளர் இனந்தெரியாத நபர்களின் வாள்வெட்டுக்கிலக்காகிய நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)

அனந்தி சசிதரன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இராணுவத்தினர் தொடர்பு: – கபே அமைப்பாளர் அகமட் மனாஸ்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை வேட்பாளர் திருமதி அனந்தி சசிதரன் மீது நேற்று நள்ளிரவு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இராணுவத்தினர் தொடர்பு உள்ளது என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே அமைப்பின் தேசிய அமைப்பாளர் அகமட் மனாஸ் தெரிவித்துள்ளார். (more…)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சுற்றி வளைத்து இராணுவம் தாக்குதல்:

த.தே.கூ ஆதரவாளர்கள் இருவர் மீது தாக்குதல்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் இருவர் நேற்று இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டுள்ளனர். (more…)

பிரபாகரனின் புகைப்படத்துடன் துண்டுப்பிரசுரம்; நால்வர் கைது

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படத்துடன் கூடிய துண்டுப்பிரசுரங்களை விநியோகித்த நான்கு பேரை கைதுசெய்துள்ளதாக கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எதிரிசிங்க தெரிவித்தார். (more…)

குளிர்பானங்களுக்கு குளிர் ஏற்றல் கட்டணம் அறவிடும் வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை

குளிரூட்டப்பட்ட பானங்களுக்கு கட்டணம் அறவிடும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பாவணையாளர் அலுவல்கள் அதிகார சபையின் யாழ். மாவட்ட அதிகாரி என். சிவசீலன் தெரிவித்தார். (more…)

அரசின் தேர்தல் பிரசாரங்களில் ஆளுநர் ஈடுபடுவதை நிறுத்த கோரிக்கை

அரசாங்கத்தின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் வட மாகாண ஆளுநர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி ஈடுபடுவதை நிறுத்துமாறு கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. (more…)

கொடிகாமத்தில் இரண்டு பெண்கள் கொடூரமாக வெட்டிக் கொலை!

தென்மராட்சி, கொடிகாமம் - கச்சாய்ப்பகுதியில் மனைவியையும் மகளையும் வெட்டிக்கொன்ற சந்தேகநபரொருவர் தலைமறைவான சம்பவமொன்று இன்று அதிகாலை 12.15க்கு இடம்பெற்றுள்ளது. (more…)

யாழ் பல்கலைக்கழகத்தில் நூல் கொள்வனவில் நிதி மோசடி! விசாரணைகள் ஆரம்பம்

யாழ் பல்கலைக்கழகத்தில் நூல்கள் கொள்வனவுசெய்யப்பட்டது தொடர்பில் பல லட்சம் ரூபா கையாடல் செய்யப்படிருப்பதாக தெரியவந்துள்ளது.கொள்வனவு செய்யப்படாத புத்தகங்களுக்காக பல லட்சம் ரூபா பணம் நிறுவனம் ஒன்றிற்கு காசோலையால் செலுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இவ்வாண்டுக்கான புதிய கொள்வனவுக்கு விண்ணப்பித்த வேளையில் முன்னரேயே இவ்வாண்டில் கொள்வனவு நடைபெற்றிருப்பதான பதிவுகள் காணப்பட்டதனால் அவற்றினை உறுதி செய்ய முற்பட்ட வேளையில் இந்த மோசடி...

தபால் மூல வாக்கு பதிவின் போது பிரசாரம் மேற்கொண்டதாக முறைப்பாடு

தபால் மூல வாக்களிப்பின் போது, கட்சி வேட்பாளர் ஒருவரினால் பிரச்சாரம் மேற்கொண்டதாக யாழ். மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. (more…)

இராமநாதனின் பிணை மனு ஒத்திவைப்பு

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வடமாகாண சபை வேட்பாளர் அங்கஜன் இராமநாதனின் தந்தையான சதாசிவம் இராமநாதன் சார்பில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு மீதான விசாரணை எதிர்வரும் 13ஆம் திகதிக்கு யாழ்.மேல் நீதிமன்றினால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts