Ad Widget

ரூ. 20 இலட்சம் பண மோசடி செய்த நபர் கைது

arrest_1வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி 20 இலட்சம் ரூபா பணம் மோசடி செய்த நபரை யாழ். பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ். குருநகர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் அதே இடத்தினைச் சேர்ந்த நபர் ஒருவரை வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி 20 இலட்சம் ரூபாவை ஏமாற்றியுள்ளார்.

ஏமாற்றப்பட்ட பெண் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ததை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட கணவன் மனைவி யாழ். பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டனர்.

விசாரணையின் போது, குறித்த கணவன் மனைவி இருவரும் தமது உறவினர் ஒருவருக்கு பொறுப்பு நின்று 20 இலட்சம் ரூபா பணம் வாங்கி கொடுத்துள்ளனர்.

வெளிநாட்டிற்கு பணம் வாங்கி கொடுத்த நபர் தொடர்பான விபரங்கள் தமக்கு தெரியாது என பொலிஸாருக்கு தெரிவித்ததை தொடர்ந்த பொலிஸார் பொறுப்பு நின்ற நபரை கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட நபர் பணம் வாங்கி கொடுத்தவர் தொடர்பான விபரங்களை பொலிஸாருக்கு தெரிவிக்கும் வரையில் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளவுள்ளனர்.

விசாரணையின் பின்னர் யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜாப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் கூறினார்.
அத்துடன், பணம் கொடுக்கல் வாங்கல் செய்யும் போது சட்டத்தரணி ஊடாக எழுத்து மூலம் பணத்தினை கொடுக்கல் வாங்கல் செய்யுமாறும் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தினம் சுமார் 50 ற்கு மேற்பட்ட முறைப்பாடுகள் பண கொடுக்கல் வாங்கல் தொடர்பாக கிடைக்கின்றதாகவும், பண கொடுக்கல் வாங்கல்களில் விழிப்புடன் செயற்படுமாறும் யாழ். பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Related Posts