- Thursday
- November 20th, 2025
கிளிநொச்சி நகரமே அதிர்ந்தது என்று வர்ணிக்கும் அளவுக்கு நேற்று ஞாயிற்றுக் கிழமை (01.05.2016) கிளிநொச்சியில் நடைபெற்ற கூட்டுறவாளர்களின் மேதினப் பேரணியில் பல்லாயிரக்கணக்கான கூட்டுறவாளர்கள் கலந்து கொண்டிருந்ததோடு நூற்றுக்கணக்கான ஊர்திகளும் பங்கேற்றிருந்தன. வடமாகாண கூட்டுறவு அமைச்சர் பொ. ஐங்கரநேசன் கொடி அசைத்துத் தொடக்கி வைக்க கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்தியில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பித்த மேதினப்...
வடக்கு கூட்டுறவாளர்களால் கொண்டாடப்படவுள்ள மேதினப் பேரணியிலும் பொதுக்கூட்டத்திலும் கட்சி பேதங்களற்று அனைவரையும் அணி திரளுமாறு கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்திருக்கும் ஊடக அறிக்கையில், வடமாகாண கூட்டுறவு அமைப்புகளும் கூட்டுறவுத் தொழிற்சங்கங்களும் இணைந்து இம்முறை மேதினத்தை கிளிநொச்சியில் மிகச் சிறப்பாகக் கொண்டாடுவதற்குத் தீர்மானித்துள்ளன வடக்கின் பொருளாதாரத்தில் கூட்டுறவுத்துறை காத்திரமான பங்களிப்பைச்...
புதுக்குடியிருப்பில் உள்ள இராணுவ முகாமிலுள்ள இராணுவத்தின் செயற்பாடுகளைச்சகித்துக் கொள்ள முடியாத பாடசாலை மாணவிகள், அவர்களுடைய செயலை வெளியில் சொல்லமுடியாமல் மூடி மறைக்கின்றனர். இவ்வாறு சாடியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்டநாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன். காலை, மாலை பயிற்சி என்று கூறி வீதியில் பயிற்சியை மேற்கொள்ளும்இராணுவத்தினர், மாணவிகளிடத்தில் முறைகேடாக நடந்து கொள்கின்றனர் என்று தமக்குமுறைப்பாடுகள் கிடைத்துள்ளன...
கிளிநொச்சி மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வு கடந்த திங்கட் கிழமை ஆரம்பமாகி நேற்று வரை நடைபெற்றது. இந்த அமர்வுகளில் கிளிநொச்சி மாவட்டத்தில் மொத்தமாக 1146 பேருக்கான அழைப்பினை விடுத்த போதும் 705 பேர் சாட்சிய பதிவுகளை மேற்கொண்டுள்ளனர். அத்தோடு 283 பேர் புதிதாக பதிவுகளை மேற்கொண்டுள்ளனர். கிளிநொச்சி...
நில அளவைத் திணைக்களத்தினால் பல இடங்களிலும் காணி அபகரிப்பு நடைபெறும் எனத் தெரிந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அக்கறை செலுத்தாமையால் கடந்த செவ்வாய்க்கிழமை செம்மலைப் பகுதியிலுள்ள 120 ஏக்கர் தென்னங்காணி படையினர் வசம் சென்றுவிட்டது. இது குறித்துத் தெரியவருவதாவது, படையினரின் பொதுத் தேவைக்காக காணிகளை அபகரிக்கும் நோக்கில் முல்லைத்தீவு மாவட்டத்தில் காணி அளவீடுகள் நடைபெற்று வருகின்றது....
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம், விசுவமடு, நாயாறு பிரதேசங்களில் இடம்பெறவுள்ள இராணுவத்தின் காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு எதிராக நேற்று புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. காலை 9 மணி முதல் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்னால் பாதிக்கப்பட்ட மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 'பிடிக்காதே பிடிக்காதே காணிகளைப் பிடிக்காதே', 'அரச அதிகாரிகளே இராணுவ...
கனகாம்பிகைக்குளம் பிரசேத்தைச் சேர்ந்த சரவணமுத்து துவாரகா என்ற தனது மகள் அருட்சகோதரிகளின் பாதுகாப்பில் உள்ளதாக தாயொருவர் காணாமல்போனோா் தொடா்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாம் நாள் அமா்வில் தொிவித்துள்ளாா். இதனையடுத்து ஆணைக்குழுவின் மூன்று அதிகாரிகள் கிளிநொச்சி – உருத்திரபுரத்தில் அமைந்துள்ள கன்னியர் மடத்திற்கு முறைப்பாடு செய்த தாயாருடன் சென்றனா். காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணை...
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து நீதிமன்றத்தின் அனுமதியுடன் தங்க அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டனர். தமிழீழ விடுதலைப்புலிகளின் நிர்வாகத்தில் இயங்கிவந்த தமிழீழ வைப்பகத்தின் தலைமைச் செயலகம், கேப்பாபுலவு வீதி, லூத்மாதா சந்தியில் உள்ள இரண்டாம் காணியில் 2009 ஆம் ஆண்டு வரை செயற்பட்டு வந்தது. குறித்த இடம் இராணுவக் கட்டுப்பட்டிற்குள் வரும் முன்னர் வைப்பகத்தின்...
கொக்கிளாய் பகுதியில் தனியார் காணியில் விகாரை அமைக்கப்பட்டு வரும் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இந்த வேலைத்திட்டத்தை உடனடியாக நிறுத்துமாறு காணியமைச்சினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கும் நிலையில் அந்நடவடிக்கை இடைநிறுத் தப்படாமல் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றது. கொக்கிளாய்ப் பகுதியில் கடந்த 2012 ஆண்டிலிருந்து இராணுவத்தினரின் முழு ஒத்துழைப்புடன் இந்த விகாரை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இந்தக் காணியின்...
தமது காணிகளை மீட்டெடுக்கும் வகையில் அரசிற்கும் இராணுவத்திற்கும் எதிராக போராடுவதற்கு முல்லைத்தீவு மக்கள் தீர்மானித்துள்ளனர். அரசின் காணி சுவீகரிப்பு நடவடிக்கை மூலம் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம், விஸ்வமடு, நாயாறு பிரதேசங்களில் காணி அளவீடு மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் மூன்று நாட்களுக்கு இந்த அளவீட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், இது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட...
ஓமந்தையில் இராணுவ வாகனத்தில் எனது மகனை ஏற்றியபோது அவருடன் பேசுவதற்கு அனுமதியுங்கள் என அருகில் நின்ற இராணுவச் சிப்பாயிடம் கேட்டிருந்தேன். அவர் என்னை அடிக்க வந்ததோடு உரிய இடத்தில் இருக்குமாறு அதிகாரதொனியில் தெரிவித்தார் என்று காணாமல்போன இராஜரட்ணம் ஜெயராஜ் (வயது 28) என்பவரின் தாயார் நேற்று காணாமல் போனோர் குறித்து விசாரிக்கும் ஆணைக்குழுவிடம் சாட்சியமளித் தார்....
முல்லைத்தீவு மல்லாவியில் வடக்கு விவசாய அமைச்சால் விவசாயிகளுக்கு சிறுபோகத்துக்கான விதைகள் வழங்கும் நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை (23.04.2016) நடைபெற்றுள்ளது. மல்லாவி மத்திய கல்லூரியில் இடம்பெற்ற இந்நிகழ்ச்சியில் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்துகொண்டு ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான விதைகளை வழங்கிவைத்துள்ளார். வடக்கு மாகாண விவசாய அமைச்சின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியில் இருந்து முல்லை...
எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கிளிநொச்சி காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி பரவிபாஞ்சானில் உள்ள இராணுவ முகாமிற்குள் அத்துமீறி பிரவேசித்ததாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த 16ம் திகதி கிளிநொச்சியில் இடம்பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் கூட்டம் ஒன்றை அடுத்து, அவர்கள் குறித்த முகாமிற்குள் பிரவேசித்ததாக...
கிளிநொச்சி மாவட்டத்தில் 3701.5 ஏக்கர் நிலம் முப்படைகளினதும் கட்டுப்பாட்டில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இராணுவம், கடற்படை, விமானப் படை, மற்றும் பொலிஸ் ஆகியோரின் கட்டுப்பாட்டிலேயே இந்த நிலங்கள் காணப்படுகின்றன. இதில் அரசகாணி, தனியார் காணி, திணைக்களங்களுக்குச் சொந்தமான காணி, மற்றும் ஒதுக்கீட்டு காணி என்பன இதில் அடங்குகின்றன. அரசகாணிகள் 360 ஏக்கரும், தனியார் காணிகள் 229.5...
முல்லைத்தீவு மாவட்டத்தின் தென்னியங்குளம் பகுதியில் குடும்பஸ்தரொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, முல்லைத்தீவு மாவட்டத்தின் தென்னியங்குளம் பகுதியில் வசித்துவரும் இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார். வளமைபோன்று நேற்றயதினம் வீட்டுக்கு வந்த நபர் தன்னுடைய ஆண்மகனுடன் முற்றத்தில் படுத்துறங்கியிருக்கிறார். மனைவியும் பெண்பிள்ளையும் வீட்டினுள் தூங்கிக் கொண்டிருக்கின்றனர். அப்போது மனைவியை அழைத்து...
எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு பரவிபாஞ்சான் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் செல்வதற்கு வழியைத் திறந்துவிட்ட இராணுவ சிப்பாய்க்கு இராணுவ கேணல் அதிகாரி ஒருவர் கன்னத்தில் அறைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கிளிநொச்சிக்கு கடந்த 16 ஆம் திகதி பயணம் மேற்கொண்ட எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனிடம், மீள்குடியேற்றத்திற்கு இன்னும் அனுமதிக்கப்படாத பரவிபாஞ்சான் கிராம மக்கள் சிலர், தங்களின் காணிகள் உயர் பாதுகாப்பு...
கிளிநொச்சி, ஆனந்தபுரத்தை சேர்ந்த தாமோதரம்பிள்ளை ஜெயகாந்த் என்ற முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர், விடுதலை புலிகள் இயக்கத்தில் ஊடறுப்பு பிரிவில் இருந்து புனர்வாழ்வு பெறவில்லை என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் வவுனியா பயங்கரவாத தடுப்பு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக...
கிளிநொச்சி இரணைமடு, திருவிலாறு பிரதேசத்தில் 5 கிரனைட் குண்டுகள், பாதுகாப்பு படைகளால் நேற்று வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் 4 ஆயிரத்து 284 சிறுவா்கள் தந்தை அல்லது தாய், அல்லது இருவரையும் இழந்தவா்களாக காணப்படுவதாக மாவட்ட செயலக புள்ளி விபரத்தகவல்கள் தெரிவிக்கின்றன. 2014 ஆம் ஆண்டின் கணிப்பின் படி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.3 ஆயிரத்து 44 சிறுவா்கள் தந்தையையும், 764 சிறுவா்கள் தாயையும், 476 சிறுவா்கள் தாய் தந்தை இருவரையும் இழந்துள்ளனா். கரைச்சி...
முல்லைத்தீவு அம்பகாமம் பிள்ளையார் ஆலய வருடாந்த திருவிழாவிவை முன்னிட்டு ஒட்டுசுட்டான் சிவன் ஆலயத்திலிருந்து தனது நேர்த்திக் கடனை நிறைவேற்ற பறவைக் காவடி எடுத்துவந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உழவு இயந்திரம் குடைசாய்ந்ததினாலேயே அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட இடதுகரை முத்து ஜயன் கட்டையைச் சேர்ந்தவரே சம்பவத்தில் பலியாகியுள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணைகளிலிருந்து...
Loading posts...
All posts loaded
No more posts
