- Thursday
- November 20th, 2025
கிளிநொச்சி - தர்மபுரம் - புளியம்பொக்குன பகுதியில் பிறந்து ஒரேநாளான சிசுவொன்றை நீரோடையில் வீசிச் சென்ற பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அதிக இரத்தப் போக்கு காரணமாக மாங்குளம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வேளையே இவர் கைதாகியுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, பிறந்த போது குழந்தை இறந்திருந்தமையால் அதனை நீரோடையில் வீசியதாக, குறித்த பெண், பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்....
ஐ, நா. சபையின் மனிதவுரிமை அமைப்புக்கள் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் என்பன வெளியேற்றப்பட்ட பின்னணியில் நவீன உலக ஊடகத்துறை இருளில் வைக்கப்பட்டு, சர்வதேச நாடுகள் பார்த்திருக்க வன்னி மண்ணில் நடத்தப்பட்டஅந்தக் கொடூரம், பின்னர் காணொளிகளகக் கசிய, சனல் 4 போன்ற ஊடகங்களின் வெளியீடுகள் அவற்றை தெளிவாகப் போர்க்குற்றங்களாக நிரூபித்து ஆவணத் தொடர்கள் வெளியிட, ஐ....
முல்லைத்தீவு மாத்தளன் பகுதியில் இறந்த தனது உறவினர்களுக்காகவும், முள்ளியவளையில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்காகவும் மாணவி ஒருவர் பள்ளிச் சீருடையில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். இறுதிக்கட்டப் போரின்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த இனவிடுதலைப்போராட்டத்தில் மாணவர்களின் பங்களிப்பு அளப்பரியது. அந்தவகையில் தனது மக்களின் விடுதலைக்காக முதன்முதலாக உயிர் நீத்த முதல் மாணவ வீரன் பொன் சிவகுமார்...
பூநகரி – பள்ளிக்குடாப் பகுதியில் சிறீலங்காக் கடற்படையினருக்கு காணி சுவீகரிக்கும் பணி அப்பகுதி மக்களின் எதிர்ப்பினால் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இன்று காலை 9.30 மணியளவில் காணிகளை அளவீடுசெய்வதற்காக நிலஅளவையாளர்கள் அங்கு சென்றிருந்தவேளை அப்பிரதேசத்தைச் சேர்ந்த நூற்றிற்கும் மேற்பட்ட மக்கள் ஒன்றுதிரண்டு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து இப்பணி இடை நிறுத்தப்பட்டது. குறித்த காணி தேவாலயத்திற்குச் சொந்தமான காணி...
குடும்பத்தகராற்றின் போது கணவனை காட்டுக்கத்தியால் வெட்டி படுகாயமடையச் செய்த மனைவியை, தலா 75 ஆயிரம் ரூபாய் பெறுமதியான இரண்டு ஆட்பிணையில் செல்ல கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா, நேற்று செவ்வாய்க்கிழமை (10) உத்தரவிட்டார். உருத்திரபுரம், எள்ளுக்காடுப் பகுதியில் கணவன், மனைவி இருவருக்கு இடையில் திங்கட்கிழமை (09) தகராறு ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறியுள்ளது. இதன்போது...
வன்னி மாவட்ட தொண்டர் ஆசிரியர்கள் வடமாகாண சபைக்கு முன்பாக கூடி கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணிமுதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பல்வேறு போராட்டங்கிளன் பின் தங்களுக்கான நிரந்தர நியமனத்திற்கான பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ள போதிலும் அதனை விரைவில் வழங்குமாறு கோரியே இந்தப் போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. வடமாகாண சபை...
கிளிநொச்சி நகரின் மத்தியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் நேற்றய தினம் மூன்று ஆசிரியர்கள் சில நிமிடங்கள் தாமதமாக பாடசாலைக்கு வந்தமையினால் பாடசாலையின் பிரதான வாயிற்கதவை பூட்டி வெளியில் விட்டுள்ளார் அதிபர். இதனால் பிந்தி வந்த மாணவர்களுடன் ஆசிரியர்களும் பரிதாபமாக பாடசாலைக்கு வெளியில் நின்ற சம்பவம் பலரையும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. நேற்று காலை ஏற்பட்ட இச் சம்பவத்தினால் பாடசாலையின்...
கிளிநொச்சி, பூநகிரி பிரதேச செயலகத்துக்குட்பட்ட வெட்டுக்காடு கிராமத்தில் ஒரு பகுதியை இராணுவம் அபகரித்து, அவர்களது இராணுவத் தேவைக்குகாகப் பல வருடங்கள் உபயோகித்து வந்துள்ளது. இந்நிலையில் இன்று திங்கட்கிழமை (09) காலை, குறித்த பகுதியை இராணுவம் பதிவுசெய்யும் முயற்சியில் இறங்கியபோது, அது அப்பிரதேச பொதுமக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் ஆகியோரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. சுமார் 22...
கிளிநொச்சி விநாயகபுரம் பகுதியில் 13 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக பொலீஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சிறுமியின் வீட்டுக்கருகில் வசித்த அம்பாள்குளம் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரே சிறுதியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளதாகவும், குறித்த சம்பவம் இருவாரங்களுக்கு முன் இடம்பெற்றது என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பில் ஞாயிற்று கிழமை கிளிநொச்சி பொலீஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து சிறுமியின்...
கிளிநொச்சி மாவட்டத்தில் தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்குவதில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி வலயக் கல்விப் பணிமனையில் பெயர் விபரம் அடங்கிய பட்டியல் வெளிப்படுத்தப்பட்ட நிலையில், அப்பட்டியலில் முறைகேடான வகையில் பெயர் விபரம் இடம்பெற்றுள்ளதாக தொண்டர் ஆசிரியர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இப்பெயர்ப் பட்டியலில் 277 பேருடைய பெயர் விபரங்கள் அடங்கியுள்ள போதிலும், 200க்கு உட்பட்ட...
பூநகரி பிரதேச மருத்துவமனையில் அதிகரித்துள்ள நீர்ப்பற்றாக்குறையால் நோயாளர்களை பராமரிக்க முடியாதுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் நோயாளர்கள் நாளாந்தம் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படுவதாக வைத்தியசாலை வைத்தியர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தெரியப்படுத்தப்பட்டும், இதுவரை எந்தவொரு மாற்று நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை...
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த புகையிரதத்தில் சிக்குண்டு, இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்விபத்துச் சம்பவம், கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (08) இடம்பெற்றுள்ளது. வட்டக்கச்சிப் பிரதேசத்தைச் சேர்ந்த பரந்தன் பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட 24 வயதுடைய ரிக்ஷன் எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞனுடன் மேலும் இருவர் பயணித்தாகவும் அவர்கள் அலைபேசியில் கதைத்துக்கொண்டு சென்றமையினால்...
முல்லைத்தீவு - கொக்கிளாய் பிரதேசத்தில் படையினரின் ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்டு வரும் புதிய விகாரை அமைக்கும் பணிகளை நிறுத்துவதற்கு காணி உரிமைப் பத்திரத்தில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை தடையாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. தந்தையின் பெயரில் காணி உரிமைக்கான அனுமதிப்பத்திரம் உள்ளதால் தனது காணியையும் உள்ளடக்கி நிர்மாணிக்கப்பட்டு வரும் விகாரையின் நிர்மாணப்பணிகளை சட்டத்தின் மூலமும் நிறுத்த முடியவில்லையென காணியின் தற்போதைய...
தமிழீழ வைப்பகத்தின் தங்க நகைகளை மீட்கும் பணி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.நீதிமன்றத்தின் அனுமதியுடன் காவல்துறையினரும் இராணுவத்தினரும் இணைந்து தங்க நகைகளை மீட்கும் பணியை ஆரம்பித்துள்ளனர். கேப்பாப்புலவு லூர்த்துமாதா வீதியில் உள்ள தமிழீழ வைப்பகத்தின் தலைமைச்செயலகம் அமைந்துள்ளது. 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்தத்தின்போது இந்தத் தலைமைச் செயலகத்துக்கு முன்னால் உள்ள காணியின் கிணற்றுக்குள் தங்க நகைகளைப் போட்டு...
கிளிநொச்சி உதயநகரில் 30வீட்டுத்திட்டத்தில் வசித்துவந்த 31 வயது இளைஞன் ஒருவர் நேற்று தற்கொலை செய்துள்ளார். சிவலிங்கம் சிவச்செல்வன் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டவராவார். இவருக்கு கடந்த யுத்தத்தின்போது மனநோய் ஏற்பட்டதாகவும், பின்னர் மனநோய்க்கான சிகிச்சை எடுத்துவந்ததாகவும் தெரியவருகின்றது. இந்நிலையிலேயே இவர் தனக்குத்தானே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என மரணவிசாரணையின்போது தெரியவந்துள்ளது என இவரது மரணவிசாரணையை விசாரணைசெய்த...
இரனைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர்கொண்டு செல்லப்படுவது தவிர்க்கபட முடியாதது. என நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் தெரிவித்துள்ளார். நேற்று(02) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் வட மாகாண குடிநீர்திட்டம் தொடர்பிலான உயர் மட்ட கலந்துரையாடலின் பின்னர் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்...
பிரமந்தனாறு, மயில்வாகனபுரம் பகுதியில் தனியார் பஸ் ஒன்று தீக்கிரையாகியுள்ளது. இச்சம்பவம், இன்று திங்கட்கிழமை அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த பஸ், தீப்பிடித்து எரிவதை அவதானித்த சாரதி மற்றும் அவரது குடும்பத்தார், நீர் ஊற்றி அணைக்க முயன்ற போதிலும், அது பயணிக்காத நிலையில், குறித்த பஸ் முற்றாக தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீக்கிரையான பஸ்ஸின் உரிமையாளர் கண்டியைச்...
கொக்கிளாய் பிரதேசத்தில் அமைக்கப்பட்டு வரும் பௌத்த விகாரையை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் கடிதம் எழுதியுள்ளார். கொக்கிளாய் பிரதேசத்தில் தனியாருக்குச் சொந்தமான காணியொன்றில் பாரிய பௌத்த விகாரையொன்று கட்டப்பட்டு வருகின்றது. குறித்த நிர்மாணம் தொடர்பில் நேரடியாக ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாக வடக்கு மாகாண ஆளுனர்...
கிளிநொச்சிக்கு விஜயம் செய்த நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம், வடமாகாணத்துக்கான நீர் விநியோகம் தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொண்டார். நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினால் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த கலந்துரையாடல், திங்கட்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் ஆரம்பமானது. வடமாகாணத்தின் நீர்வழங்கல்...
மல்லாவி, கோட்டை கட்டிய குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள், நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) அதிகாலை அத்துமீறி உள்நுழைந்த திருடர்கள், 12 பவுண் நகை மற்றும் 8 ஆயிரம் ரூபாய் பணம் என்பவற்றைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது என மல்லாவிப் பொலிஸார் தெரிவித்தனர். அதிகாலை வேளை, வீட்டுக்கதவைத் திருடர்கள் தட்டியபோது, வீட்டிலிருந்தோர் கதவைத்...
Loading posts...
All posts loaded
No more posts
