- Sunday
- July 13th, 2025

வன்னியில் 3 சிறார்களுக்கு பன்றிக் காய்ச்சல் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டு அவர்களுக்கு வைத்தியசாலைத் தனிப் பிரிவில் வைத்துச் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.இந்த நோய்த்தொற்று அச்சுறுத்தல் வடக்கு மாகாணம் முழுவதும் உள்ளது என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.ஹதொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிகையில்"2008ஆம் ஆண்டுக்குப் பின்னர் வடக்கு மாகாணத்தில் பன்றிக் காய்ச்சல் அச்சுறுத்தல்...

கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரைக்கும் பல கிராமங்களில் மின் இணைப்பு வழங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை மின் கட்டணத்திற்கான சிட்டைகள் வழங்கப்பட்டவில்லை. ஆனால் பல கிராமங்களுக்குரிய நூற்றுக்கணக்கான மின் கட்டண சிட்டைகள் வீதிகளில் சிதறிக்கிடக்கின்றன. கிளிநொச்சி பரந்தன் பூநகரி வீதியில் பொறிக்கடவை சந்தி தொடக்கம் குடமுறுட்டி பாலம் வரையான பகுதிகளில் இவ்வாறு கிளிநொச்சி மின்சார சபையின்...

முல்லைத்தீவு – கேப்பாபுலவு, பிலவுக்குடியிருப்பில் விமானப்படையினர் வசமுள்ள காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என்ற ஜனாதிபதியின் உறுதிமொழியை, அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக வழங்கியதை ஏற்றுக்கொள்வதற்கு மக்கள் மறுப்புத் தெரிவித்துள்ளனர். அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், காணி விரைவில் விடுவிக்கப்படும் என கூறியமை தொடர்பான தகவலை, கேப்பாபுலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிடம் நேரில் சென்று மாவட்ட அரசாங்க...

கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பிரதேசத்தில் படையினர் நிலைகொண்டுள்ள பகுதிகளான மொத்தம் 9 ஏக்கரையும் படையினரின் பயன்பாட்டிற்கே வழங்குமாறு இராணுவத்தினரால் பிரதேச செயலாளரிடம் மீன்டும் கோரப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள பரவிப்பாஞ்சான் கிராமத்தின் பெரும் பகுதியை இராணுவத்தினர் ஆக்கிரமித்திருந்தனர். இதற்குள் மக்களின் நிரந்தர உறுதிக்காணிகள் பலவும் அடங்கியிருந்தன. இவற்றினை விடுவிக்குமாறு கோருக்கை...

கடும் மழைக்கு மத்தியிலும் முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்களின் காணி மீட்பு போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மக்களின் கோரிக்கைக்கு தீர்வுகள் எதுவும் வழங்கப்படாத நிலையில், இன்று 15 ஆவது நாளாகவும் அம் மக்கள் தொடர் போராட்டத்தை மேற்கொண்டுவருகின்றனர். விமானப் படையினரால் விடுவிக்கப்பட்டதாக கூறப்பட்ட காணிகளை தம்மிடம் கையளிக்க வேண்டும் என வலியுறுத்தியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளளது....

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள அம்பகாமத்தை அண்டிய பகுதிகளில் நடமாடும் புலிகளினால் இதுவரை 14 மாடுகளை பிடித்துச் சென்று விட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் குறித்த பகுதி மக்கள் மேலும் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுடிசுட்டான் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட அம்பகாம் மற்றும் மம்மில் பிரதேசங்களில் புலிகளினால்...

கேப்பாபுலவு போராட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கு ஆதரவு வழங்க மற்றும் உதவிகளை வழங்க செல்வோரை விமான படையினர் தமது அலைபேசியில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்து வருகின்றார்கள். அத்துடன் வருபவர்களின் வாகன இலக்கங்களையும் குறிப்பெடுத்து கொள்கின்றனர். கேப்பாபுலவு மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி, கடந்த 14 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனார். அப்பகுதி மக்களின்...

படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளருடன் நடைபெற்ற சந்திப்பு தோல்வியில் முடிவடைந்துள்ள நிலையில், முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு மக்கள் இன்று முதல் 48 மணித்தியால சுழற்சிமுறையிலான உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். பிரதேச செயலாளருடனான கலந்துரையாடலின்போது, தாம் இவ்விடயம் தொடர்பாக மாவட்ட செயலாளருக்கு அறிவித்துள்ளதாகவும் மாவட்ட செயலாளரிடமிருந்து பதில் கிடைக்கவில்லையென்றும் பிரதேச செயலாளர்...

முல்லைத்தீவு கேப்பாப்பிலவு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பிலக்குடியிருப்பு மக்களின் தொடர் சத்தியாக்கிரக போராட்டம் இன்று (திங்கட்கிழமை) 14ஆவது நாளை எட்டியுள்ளது. மக்களது காணிகளை கையகப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள விமானப் படைத்தளம் மற்றும் ராணுவ முகாமை அகற்றி தமது காணிகளை மீளக் கையளிக்குமாறு கோரி கடந்த ஜனவரி மாதம் 31ஆம் திகதி இம் மக்கள் ஆரம்பித்த போராட்டம், இரவு...

கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மக்கள் முன்னெடுக்கும் போராட்டம் இன்று 14 ஆவது நாளை எட்டியுள்ளது. பிலவுக்குடியிருப்பில் விமானப்படையினரால் விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் காணிகளில் தம்மை விடுவிக்குமாறு கோரிக்கை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மக்கள் முன்னெடுத்துள்ள இந்த போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். கடந்த 30 ஆம் திகதி தமது காணிகள் விடுவிக்கப்படும் என தெரிவித்து,...

சொந்த காணிகளில் குடியமர்த்தப்படும்வரை தமது போராட்டம் தொடரும் எனத் தெரிவித்து முல்லைத்தீவு, கேப்பாப்பிலவு- பிலக்குடியிருப்பு மக்கள் இன்று (சனிக்கிழமை) 12ஆவது நாளாகவும் சத்தியாக்கிரகப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். கேப்பாப்பிலவு மக்களின் இம் மண்மீட்பு போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்ற நிலையில், நேற்றைய தினம் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அங்கு சென்று தமது...

யுவதி ஒருவரை காதலிப்பதாக கூறி, அவரை 5 மாத கர்ப்பிணியாக்கிய இராணுவச் சிப்பாய், இராணுவ அதிகாரிகளால் வியாழக்கிழமை (09) இரவு கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் கிளிநொச்சி ஊற்றுப்புலம் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. படைச் சிப்பாய் அங்குள்ள யுவதி ஒருவரை காதலிப்பதாக கூறி அவருடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இதன் காரணமாக குறித்த யுவதி தற்போது...

வன்னியில் பன்றிக் காய்ச்சல், பீடிக்கப்பட்ட மூன்று பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று கிளிநொச்சி சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் வட்டகச்சி சம்புக்குளம், முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமடு றெட்பானா, மாங்குளம் மற்றும் பெரியகுளம் ஆகிய பிரதேசங்களில் சிறுவர்கள் மூவருக்கு பன்றிக் காய்ச்சல் தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது எனவும் சுகாதார பிரிவினர் அறிவித்துள்ளனர். பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள்...

படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிப்பதற்காக தொடர்ந்து போராடிவரும் கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் தெற்கில் தவறாக பிரச்சாரம் செய்யப்பட்டு வருவதாக தென்னிலங்கை சிவில் சமூகப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் இன்றுடன் 11ஆவது நாளாகவும் தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையில் நேற்றைய தினம் இம்மக்களை தென்னிலங்கையிலிருந்து வருகை தந்த தேசிய மீனவர் இயக்கம், பங்குத் தந்தையர்கள், அருட்சகோதரிகள்...

படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்கமாறு கேப்பாப்புலவு மக்கள் இன்று பத்தாவது நாளாக போராட்டம் நடாத்திவரும் நிலையிலும், அவர்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாகவும், தமது காணிகளை மீட்பதற்காகவும் புதுக்குடியிருப்பில் இன்று ஆறாவது நாளாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் இம்மக்களின் போராட்டத்திற்கு பல்வேறு மட்டங்களிலிருந்தும் ஆதரவு பெருகி வரும் நிலையில், இன்று திடீரென முல்லைத்தீவு மாவட்டத்தைச்சேர்ந்த...

படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டு வரும் மக்களுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ள நிலையில், விமானப்படையினர் பயணிக்கும் வீதியை மறித்து மக்கள் தமது போராட்டத்தை நடத்திவருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். குறித்த பிரதேசத்திற்கு இன்று காலை திடீர் விஜயம் மேற்கொண்டிருந்த முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர், கரைத்துரைப்பற்று...

முல்லைத்தீவு, மூங்கிலாறுப் பகுதியிலில் பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றின் வீட்டுக்கு, விசமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளதாக, புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த வீட்டின் குடும்ப உறுப்பினர்கள், அருகிலுள்ள அவர்களின் உறவினர் வீட்டுக்குச் சென்று இரவுநேரத்தில் தங்குவதாகவும், சம்பவ தினமான, திங்கட்கிழமை இரவும், உறவினர் வீட்டுக்குச் சென்றபோது, இவர்களின் வீட்டுக்கு, இனந்தெரியாதோர் தீ வைத்துள்ளதாக...

புதுக்குடியிருப்பு கேப்பாபிலவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்களும் நேற்று முதல் இணைந்து கொண்டுள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை எட்டாவது நாளாக முன்னெடுதிருந்த நிலையில் மாணவர்களும் தங்கள் ஆதரவை தெரிவித்து போராட்ட இடத்திற்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இன்று ஒன்பதாவது நாளாக கேப்பாபுலவு மக்கள் தமது சொந்த காணிகளை விடுவிக்குமாறுகோரி அகிம்சை வழியில் தொடர்ந்து போராடி வருகின்றனர்....

தமது காணிகளைப் பெறுவதற்காக போராடிக்கொண்டிருக்கும் கேப்பாப்புலவு மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து ஆதரவு தெரிவித்துவரும் நிலையில் சில சிங்கள மக்களும் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம், பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சட்டத்தரணி சம்பத் புஸ்பகுமார, மனித உரிமைச் செயற்பாட்டாளர் ருக்கி பெர்னாண்டோ ஆகியோர் கேப்பாப்புலவு மக்களின் போராட்டத்திற்கு தமது முழுமையான...

கோப்பாபுலவு பிலக்குடியிருப்பிலுள்ள காணிகளை மீளப் பெற்றுத் தருமாறு வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமது பெற்றோர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், அதற்கான பொறுப்பை ஸ்ரீலங்கா அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் பிள்ளைகள் தெரிவித்துள்ளனர். அதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் பிள்ளைகள் பாடசாலைக்கு செல்லாது, பெற்றோர்களுடன் இணைந்து தாமும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். ஸ்ரீலங்கா விமானப்...

All posts loaded
No more posts