- Wednesday
- September 10th, 2025

கனகராயன்குளம் பகுதியில் விறகு வெட்டச் சென்ற விதவைப் பெண்கள் மீது வனஇலாக அதிகாரிகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன் அவர்களின் கோடரிகளையும் பறித்துச் சென்றுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கனகராயன்குளம், மன்னகுளம் காட்டுப்பகுதிக்கு கடந்த சனிக்கிழமை மாலை 3 மணியளவில் போரின் போது தமது கணவன்மாரை பறிகொடுத்த நான்கு விதவைப் பெண்கள் தமது...

விஸ்வமடு பகுதியில் இன்று குற்றப்புலனாய்வு பிரிவினரால் முல்லைத்தீவு பதில் நீதவான் பரஞ்சோதியின் அனுமதியோடு இராணுவ வீரரின் சடலம் என சந்தேகித்து அகழ்வு நடைபெற்று வருகின்றது. இது குறித்து தெரிய வருவதாவது, குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் படியே அகழ்வு நடைபெறுவதாக கூறப்படுகிறது. நிட்டம்புவ அல்கம பகுதியைச் சேர்ந்த ஒருவர் இராணுவ சிவில் படைப்பிரிவில் விஸ்வமடுவில் கடமையாற்றி...

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறப்படும் எட்டு இந்திய மீனவர்கள் முல்லைத்தீவு நீதிமன்ற உத்தரவினை அடுத்து விடுவிக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு கடற்பரப்பில் கரையில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த, இலங்கை மீனவர் ஒருவரின் படகை, கூட்டமாக அந்தப் பகுதிக்குள் வந்த இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகளில் ஒன்று மோதியுள்ளது. இதனால் இலங்கை...

முல்லைத்தீவுப் பொலிஸாரின் அசண்டையீனத்தால் மூன்று பிள்ளைகளின் தாயான முன்னாள் போராளியின் சடலம் கடந்த நான்கு நாள்களாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிரேத அறையில் காத்திருக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. கடந்த 2ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு தீயில் எரிந்து ஆபத்தான நிலையில் முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு...

கடற்படையினரிடமிருந்து தமது காணிகளை மீட்பதற்கு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முள்ளிவாய்க்கால் கிழக்கு மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். முள்ளிவாய்க்கால் கிழக்கில் மக்களுக்குச் சொந்தமான 617 ஏக்கர் காணிகள் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த காணிகளை சொந்தமாக்கும் நோக்கில் இலங்கை கடற்படையினர் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் விழிப்படைந்த பொதுமக்கள் இன்று(04) வடமாகாண சபை உறுப்பினர்...

முல்லைத்தீவு மாவட்டத்தில் பொதுமக்களின் நிலங்களை கடற்படையினரின் தேவைக்காக கையகப்படுத்த அரசு எடுத்துள்ள முன்னெடுப்புக்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளன. அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே இறுதி யுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பிரதேசம் வட்டுவாகல் பகுதியில் அவ்வகையில் 617 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது தொடர்பில் உயர் அரச அதிகாரிகள் பங்குபெற்ற கூட்டமொன்றும் அங்கு சனிக்கிழமை...

2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி இலங்கையைத் தாக்கிய கடற்கோளின்போது, இலங்கையின் கரையோர மாவட்டங்களில் 40,000 பேர் வரையில் பலியாகினார்கள். முல்லை மாவட்டத்தில் 3000க்கும் அதிகமானோர் உயிர் துறந்தார்கள். அவர்களுக்கான நினைவஞ்சலி, கடற்கோள் நினைவுதினமான நேற்று சனிக்கிழமை (26.12.2015) முல்லைத்தீவில் அமைக்கப்பட்டுள்ள கடற்கோள் நினைவாலயத்தில் நடைபெற்றது. இந்து, இஸ்லாம், கிறீஸ்தவம் ஆகிய மூன்று மதமுறைகளிலும் இடம்பெற்ற...

கிளிநொச்சி ஏ-35 வீதியின் பரந்தன் சந்திக்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில், இளம் குடும்பஸ்தரான இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச சபையின் உத்தியோகத்தரான கோரக்கன்கட்டு முரசுமோட்டையைச் சேர்ந்த இந்திரராஜா சுதர்சன் (வயது 34) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சனிக்கிழமை மாலை (25) முரசுமோட்டையிலிருந்து பரந்தன் சந்திக்கு...

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் 14 வயது சிறுமி பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டள்ளதாக கிளிநொச்சி பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த சிறுமியை நேற்று மாலை 37 வயதுடைய சிறுமியின் சகோதரியின் கணவர் பாலியல் வல்லுறவு செய்துள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி கிளிநொச்சி வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன், சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளமை...

வடமாகாண சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில் இயற்கைப் பேரிடர் தணிப்புத்தின நிகழ்ச்சி கிளிநொச்சியில் நடைபெற உள்ளது. கரைச்சிப் பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் இன்று சனிக்கிழமை (26.12.2015) பி.பகல் 3 மணிக்கு ஆரம்பமாக உள்ள இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா கலந்துகொள்ள உள்ளார். விவசாய அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில் நடைபெற...

புங்குடுதீவில் நெல்வயல்களுக்குப் பாதுகாப்பு வேலிகளை அமைப்பதற்காக வடக்கு விவசாய அமைச்சு முட்கம்பிச் சுருள்களை வழங்கியுள்ளது. வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் புங்குடுதீவு கமநல சேவைகள் திணைக்கள அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை (24.12.2015) விவசாயிகளைச் சந்தித்து முட்கம்பிச் சுருள்களை வழங்கி வைத்துள்ளார். புங்குடுதீவில் கட்டாக்காலி மாடுகளால் நெற்செய்கை பாதிக்கப்படுவது விவசாய சம்மேளனங்களால் வடக்கு விவசாய அமைச்சரின் கவனத்துக்குக்...

கிளிநொச்சி கரைச்சிக் கல்விக்கோட்ட பாடசாலை ஒன்றில் அதிபரின் கைத்தொலைபேசி காணாமல் போன சம்பவம் தொடர்பாக தரம் 6 மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட மூன்று சந்தேக நபர்களை தலா ஐம்பதாயிரம் ரூபாய் பிணையிலும் தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான ஆட்பிணைகளிலும் செல்லுமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் திங்கட்கிழமை (21) உத்தரவிட்டுள்ளார். கிளிநொச்சி...

முல்லைத்தீவில் யுத்த காலத்தில் கைவிடப்பட்ட வாகனங்களுக்காக நட்டஈடு வழங்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இறுதி யுத்தம் நடைபெற்ற காலப் பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்களை மக்கள் கைவிட்டுச் செல்ல நேரிட்டது. யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து பொது மக்கள் கைவிட்டுச் சென்றிருந்த ஆயிரக்கணக்கான வாகனங்களை பாதுகாப்பு தரப்பினர் கைப்பற்றியிருந்தனர். முல்லைத்தீவின் அநேகமான இடங்களில் இந்த...

பாதுகாப்பான ரயில்வே கடவையை அமைத்துத் தரக் கோரி கிளிநொச்சியில் நேற்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி ரயில் நிலையத்திற்கு முன்பாக காலை 9.30 மணியளவில் மேற்படி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்ட எல்லைக்குட்பட்ட முறிகண்டி முதல் முகமாலை வரையான பகுதியில் பாதுகாப்பான புகையிரத கடவை இல்லாததனால் இதுவரை 19 பேர் ரயிலில் மோதி பலியாகி...

தனது அலைபேசியை திருடியதாகக் கூறி, 6ஆம் தர மாணவர்கள் மீது 9ஆம் தர மாணவர்களைக் கொண்டு தாக்குதல் நடத்திய ஸ்கந்தபுரத்திலுள்ள பிரபல தமிழ் பாடசாலை அதிபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் இன்று புதன்கிழமை உத்தரவிட்டார். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 6 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள்...

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த தர்மலிங்கம் தினேஸ்வரன் (வயது 26) எனும் இளைஞர் இவ்விபத்தில் உயிரிழந்துள்ளதுடன், அதேபிரதேசத்தைச் சேர்ந்த ஆரியரத்னா வசந்தன் (வயது 20) எனும்...

"யாழ். குடாநாடு மற்றும் தீவகப் பகுதிகளின் குடிதண்ணீர்ப் பிரச்சினைக்கு இரணைமடு குடிதண்ணீர்த் திட்டமே நிரந்தரத் தீர்வாகும்'' என்று நாடாளுமன்றில் தெரிவித்த நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம், வடக்கு மக்களின் பிரதிநிகள் இதற்கு ஒத்துழைப்பு வழங்கினால் அந்த மக்களுக்கு மிகக் குறைந்தளவான செலவில் இரணைமடு பாரிய குடிதண்ணீர்த் திட்டத்தை அமுல்படுத்த முடியும் என்றும்...

கிளிநொச்சி ஆனந்தபுரம் பகுதியில் புகையிரதத்துடன் மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று செவ்வாய்கிழமை பிற்பகல் மூன்று மணியளவில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதி உதயநனகர் கிழக்கைச் சேர்ந்த இராமசாமி பழனியாண்டி (76) என்பவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் அருகில் உள்ள கிளிநொச்சி புகையிரத நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு...

கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைகளில் ஆள்மாராட்டம் செய்த ஒருவர் பூநகரி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். நேற்று இடம்பெற்ற கணித பாடத்திற்கு பரிட்சார்த்திக்கு பதிலாக சந்தேகநபர் பரீட்சை மத்திய நிலையத்திற்கு வந்திருந்ததாக தெரியவந்துள்ளது. இது தொடர்பில் கண்காணிப்பாளரினால் பூநகரி பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து இவர் கைதாகியுள்ளார். மேலும் இவர் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 22 வயதான ஒருவராவார். இவரை...

All posts loaded
No more posts