Ad Widget

தொழில் வாய்ப்பின்றித் தவிக்கும் முன்னாள் போராளிகள்!

போர் முடிந்து 7 வருடங்களாகியும் பெருமளவான முன்னாள் போராளிகள் இன்னும் தொழில் வாய்ப்பின்றி உள்ளனர் என்று செய்திச்சேவை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கிளிநொச்சியில் வாழும் சிவலிங்கம் ரவீந்திரதாஸ் என்ற முன்னாள் போராளியை கோடிட்டுள்ள செய்திச்சேவை, அரசாங்கத்தின் புனர்வாழ்வு மையத்தில் 3 வருடங்களை கழித்த அவர், தற்போது தொழில் வாய்ப்பின்றி உள்ளார் என்று தெரிவித்துள்ளது.

புனர்வாழ்வின் போது தமக்கு தொழில் பயிற்சிகள் வழங்கப்பட்ட போதும் தொழில் ஒன்றை தேடிக்கொள்ள முடியாதுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை வடக்கில் பாரிய வீதி அபிவிருத்திகள் போன்ற விடயங்கள் முன்னெடுக்கப்படுகின்ற போதும் அவற்றில் முன்னாள் போராளிகளுக்கு தொழில் வாய்ப்புக்கள் குறைவாக உள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது அரசாங்கத்தின் இயலாமையை காட்டுவதாக ஆய்வாளர்களை கோடிட்டு குறித்த செய்திச்சேவை தமது தகவலை பிரசுரித்துள்ளது.

இந்தநிலையில் தனியார் துறையினரின் அதிக முதலீடுகள் வடக்கை நோக்கி செயற்படுத்தப்படும் போதே முன்னாள் போராளிகளின் தொழிலற்ற நிலைமைக்கு தீர்வு கிடைக்கலாம் என்று இலங்கை வர்த்தக சம்மேளனம் தெரிவித்துள்ளது.

Related Posts