விடுதலைப் புலிகளின் செயற்கைக் காடுகள் அழிக்கப்படுகின்றன!

வட மாகாணத்தில் உள்ள மாவட்டங்களில் நிலப்பரப்பு அளவில் முதலிடத்தில் இருப்பது முல்லைத்தீவு மாவட்டமாகும். இலங்கையிலேயே நிலப் பயன்பாட்டில் பெரும்பகுதி காடுகளால் நிறைந்துள்ள மாவட்டங்களில் முல்லைத்தீவு முக்கியமானது. இங்குள்ள காடுகளில் வைர மரங்களான முதிரை, பாலை, வீரை, காட்டாமணக்கு, ஒதி முதலிய மரங்கள் இயற்கையாக காணப்படுகின்றன. அவற்றை விட. தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் தேக்கு மரங்கள்...

கிளிநொச்சி வைத்தியசாலை பரிசோதகர் திடீர் மரணம்!! வைத்தியசாலையின் கவனயீனம் காரணமா

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் பணியாற்றுகின்ற பெண் பரிசோதகர், மூன்று நாள் காய்ச்சலை தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் மரணமடைந்ததால் அவரது உடல் யாழ் போதானா வைத்தியசாலையின் உடற்கூற்று பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி விநாயகபுரத்தைச் சேர்ந்த 44 வயதுடைய ராசா றமணி என்பவர் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு,...
Ad Widget

பெண் சட்டத்தரணியின் குடும்பத்துக்கு அபகீர்த்தி: அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு

கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றின் பெண் சட்டத்தரணியின் குடும்பத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் வெளியான செய்தி தொடர்பாக தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அறிக்கையை பெற்று, நீதிமன்றுக்கு சமர்ப்பிக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா வியாழக்கிழமை (04) உத்தரவிட்டுள்ளார். கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற பெண் சட்டத்தரணி ஒருவருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில், அவரது கணவர்...

பெண் சட்டத்தரணிக்கு அபகீர்த்தி: சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம்

கிளிநொச்சியில் உள்ள பெண் சட்டத்தரணி ஒருவருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் இணையத்தளங்களில் வெளியாகிய செய்தி தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. 'கிளிநொச்சியில் உயர்பதவியில் இருக்கும் பெண் சட்டத்தரணி ஒருவருக்கு அபகீரத்தியை ஏற்படுத்தும் வகையில் அவரது கணவர் தொடர்பாகவும் அவரது குடும்பத்துக்கு அவப்பெயரை உருவாக்கவும் நீதிமன்றை அவமதிக்கும் வகையிலும் வெளியான செய்தி...

மக்களின் மனம் அறியாது உறுப்பினர்கள் செயற்படுகின்றார்கள்

வடமாகாண மக்களின் மனம் அறியாது நிலை அறியாது உறுப்பினர்கள் பலர் செயற்பட்டு வருகின்றார்கள். செய்ய வேண்டிய வேலைகள் இருக்கும் போது சிறுபிள்ளைத்தனமான பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். அமைச்சர்களைப் பற்றி அவதூறுகளை எடுத்து விளம்பவே சபையைப் பாவிக்கப் பார்க்கின்றார்கள். பல நன்மைகளை எதிர்பார்த்து மக்கள் இருக்கின்றார்கள். அதற்காகப் பாடுபடாது எதிர்மறையான காரியங்களிலேயே சிலர் தம் காலத்தைக்...

ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தூங்கிய எம்.பி

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம், இன்று வியாழக்கிழமை (02) நடைபெற்றது. இணைத்தலைவர்களான வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் ரிஷாட் பதியூதீன், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கே.காதர் மஸ்தான் ஆகியோரின் தலைமையில் இந்த கூட்டம் இடம்பெற்றது. முல்லைத்தீவு வைத்தியசாலை காணி தொடர்பில், நீண்டகாலமாக இடம்பெற்று வரும் சர்ச்சைகள் தொடர்பாக, இந்த கூட்டத்தின் போது...

சாவகச்சேரி தற்கொலை அங்கி மீட்பு: கிளிநொச்சியில் நபர் கைது

அண்மையில் சாவகச்சேரி பகுதியில் தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி, பாரதிபுரம் பகுதியில் இந்த நபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டு, கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 46 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே பயங்கரவாத தடைச்...

வலிகளைச் சுமந்த வடக்கு மண்ணிலிருந்து முதல் படைப்பாளி உருவாகவேண்டும்!

கடந்த காலங்களில் தமிழ் மக்கள் பெரும் வலிகளையும் வேதனைகளையும் சுமந்தவர்கள் என்ற ரீதியில், தென்னிந்தியாவைத் தவிர இந்த மண்ணிலிருந்து ஒரு சிறந்த படைப்பாளி உருவாகவேண்டும் என்றால் அவர் ஈழத்திலிருந்தே உருவாகவேண்டும் எனத் தென்னிந்திய திரைப்படநடிகரும், நடிகர் சங்கத் தலைவருமான நாசர் தெரிவித்துள்ளார். ஏனென்றால் ஒரு படைப்புக்கு வலி என்பது மிகவும் முக்கியமானது எனவும் குறிப்பிட்டுள்ளார். முல்லைத்தீவு...

கிளிநொச்சியில் ஒருதொகை வெடிபொருட்கள் மீட்பு

கிளிநொச்சி - இரத்தினபுரம் பகுதியில் இருந்து ஒரு தொகை வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 10 கிளைமோர் குண்டுகள், 65 கைக்குண்டுகள் மற்றும் மோட்டார் குண்டுகள் போன்றவே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது. இராணுவத்திற்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, அப் பகுதியிலிருந்த கிணறு ஒன்றில் இருந்து இவை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர்...

யுத்தத்தின் கொடூரம் கிளிநொச்சியில் 282 போ் கண்களை இழந்துள்ளனா்.

நாட்டில் இடம்பெற்ற கொடிய யுத்தத்தின் விளைவால் தமிழ் மக்கள் அதிகளவுக்கு பல இழப்புக்களைச் சந்தித்துள்ள நிலையில் 282 போ் தங்களுடைய கண்களை இழந்துள்ளமை பதிவாகியுள்ளது. யுத்தம் பலரை பலியெடுத்துள்ள நிலையில் மிஞ்சியிருப்பவா்களில் பெரும்பாலானவா்கள் தங்கள் உடலின் ஏதோ ஒரு அங்கத்தை இழந்தவா்களாவும் காணப்படுகின்றனா். அத்தோடு பெரும்பாலானவா்கள் இரும்புத் துண்டுகளை உடலில் சுமந்தவாறும் வாழ்ந்து வருகின்றனா். இந்த...

தற்காலிக வீடுபோதும் : ஒன்றரை மாதக் குழந்தையின் தந்தை மன்றாட்டம்

நிரந்தர வீடு தேவையில்லை தற்காலிக வீட்டைடொன்றை அமைத்து தந்தால் போதும் என கிளிநொச்சி - சிவபுரம் கிராமத்தைச் சேர்ந்த கும்பஸ்தர் ஒருவர் கேட்டுக்கொண்டுள்ளார். வீட்டுச் சுவருக்கு முட்டுகொடுத்த தடியை எடுத்துவிட்டால் சுவர் விழுந்து விடும் இதுதான் எமது நிலை எனவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார். யுத்தப் பாதிப்புக்களால் மீளமுடியாமல் தவிக்கும் தமக்கு இயற்கையும் இடையூறு விளைவிப்பதாக...

யாழ் இந்துக்கல்லூரியின் 2005 உயர்தர மாணவர்களால் துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு

தொடர்ந்து 3 வருடங்களாக யாழ் இந்துக்கல்லூரியின் 2005 உயர்தர மாணவர்கள் பல கல்விக்கான செய்ற்றிட்டங்களை குறிப்பாக வன்னிப்பகுதியில் யுத்ததினால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மற்றும் பாடசாலைகளுக்கு மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் 2016ம் ஆண்டுக்கான கல்விக்கான செயற்றிட்டத்தின் முதற்க்கட்டமாக கடந்த மாசி (09.02.2016)மாதம் தெரிவு செய்யப்பட்ட உயர்தர மற்றும் சாதாரணதர மாணவர்களுக்கான கடந்த கால வினாத்தாள்கள்...

சிறீதரனின் தந்தையார் காலமானார்

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் தந்தையார் சின்னத்துரை சிவஞானம், இன்று புதன்கிழமை காலமானார். மண்டைதீவு அல்லைப்பிட்டியில் பிறந்த இவர் 1950களில் வன்னியை நோக்கிய படித்தவாலிபர் திட்ட குடியேற்றத் திட்டங்களினூடாக கிளிநொச்சி வட்டக்கச்சியில் குடியேறினார். நெடுந்தீவைப் பூர்வீகமாகக் கொண்ட கந்தையா கதிராசிப்பிள்ளையின் மகளாகிய இலட்சுமியை வாழ்க்கைத் துணையாக ஏற்று வட்டக்கச்சியில் வாழ்ந்து வந்தார். மனைவியின் பிரிவிற்கு பின்னும்...

முல்லைத்தீவில் நெல்லியடியை சேர்ந்த ஆணின் சடலம் மீட்பு

முல்லைத்தீவு முள்ளியவளை 4ம் வட்டார புதறிகுடா குளத்திற்கு அருகில் நேற்றுக் காலை 11மணியளவில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவரின் பையினுள் இருந்த வங்கி புத்தகத்தின்படி யாழ் நெல்லியடியை சேர்ந்த 74 வயதான TS சிவபாதன் என்பவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது. மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் விசாரணைகள் தொடர்வதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இராணுவத்தினரும் விடுதலைப்புலிகளும் ஒன்றிணைவதே எனது எதிர்பார்ப்பாகும்!

சிறீலங்கா இராணுவத்தினரும் விடுதலைப்புலிகளின் போராளிகளும் ஒன்றிணைவதே எனது எதிர்பார்ப்பாகும் என வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். அத்துடன் சிங்கள இராணுவத்துடன் முன்னாள் போராளிகளும் தமிழ் இளைஞர்களும் இணைய முன்வரவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி இராணுவ ஒத்துழைப்பு மையத்தின் ஏற்பாட்டில் வெசாக் தின நிகழ்வு நேற்று கிளிநொச்சியில் நடைபெற்றது. இதன்போது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட 29...

குளங்களின் நீர் பற்றாக் குறை தொடர்பாக ஆராயப்படுகின்றது

'குளங்களின் நீர் பற்றாக்குறை தொடர்பாக விவசாய அமைச்சருடனும் மத்திய அமைச்சுக்களுடனும் பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றோம். இக்குளங்களைப் புனரமைத்தல் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட குளங்களை ஒன்றாக இணைத்து நீர் மட்டங்களைக் கூட்டுதல், அதன் மூலம் இரண்டு போக பயிர்ச் செய்கைகளுக்கான நீரைத் தேக்கி வைத்தல் ஆகிய திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டு வருகின்றது. இவ்வாராய்ச்சிகள் முடிவடைந்ததும் உங்கள் குளங்கள்...

சரணடைந்தோரின் விபரம் ஜுலை 14ஆம் திகதி சமர்பிக்குக;நீதிமன்றம் உத்தரவு

தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த எழிலன் உட்பட இறுதிப் போரில் சரணடைந்தவர்களின் விபரங்கள் எதிர்வரும் ஜுலை மாதம் 14ஆம் திகதி நிச்சயம் சமர்பிக்கப்பட வேண்டும் என்று முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட முல்லைத்தீவு 58ஆம் படைத்தளத்தின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சாணக்ய குணவர்தன...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; முல்லைத்தீவில் பூரண கடையடைப்பு! முக்கிய தலைவர்கள் பங்கேற்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை முன்னிட்டு பூரண கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மே 18 நாளான இன்று, வடக்கு மாகாணத்தில், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் முழுமையான ஹர்த்தால் கடைப்பிடிக்கப்படும் என்று, வர்த்தக சங்கங்கள் அறிவித்தல் விடுத்தன. இதனையடுத்து, 'வன்முறைகள், படுகொலைகளுக்கு உள்ளாக்கப்பட்டு உயிர்நீத்த உறவுகளை விசுவாசமாகவும், நன்றியுணர்வாகவும் நினைவுகூர்ந்து அஞ்சலிப்பதை, தமது தேசியக்...

வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி!

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார். எங்கள் பெருமைமிகு வரலாறின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல் ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி, உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதாக அவர் தெரிவித்தார். இன்று (புதன்கிழமை)...

70 வருடங்களின் பின் கிளிநொச்சியில் அதிக மழை பதிவாகியுள்ளது!

கிளிநொச்சியில் 70 வருடங்களின் பின் அதிகளவு மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இங்கு 373.2மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், மன்னார் பகுதியில் பெய்த கடும் மழையுடன் கூடிய காற்றினால் பேசாலைப் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்து சுமார் 40 வரையான மீன்பிடிப்படகுகள் முற்றாகச் சேதமடைந்துள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
Loading posts...

All posts loaded

No more posts