- Friday
- May 16th, 2025

வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட 200 இற்கு மேற்பட்ட தீர்மானங்களுக்கு என்ன நடந்த்து? குறித்த தீர்மானங்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? எனக்கேட்டு மாகாண சபை உறுப்பினர் ஜீ்.ரி.லிங்கநாதன் விநோத போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். மாகாண சபையின் 33 வது அமர்வு தற்போது நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் வவுனியா மாவட்ட மாகாண சபை உறுப்பினர் ஜீ.ரி.லிங்கநாதன் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை...

தன்னிச்சையாக இயங்கும் இணையத்தள ஊடகங்கள் அவதூறான செய்திகளை வெளியிடுவதனால், அந்த ஊடகங்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு முன்வைக்கப்பட்ட பிரேரணை ஒன்று வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்டது. வடமாகாண சபை கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை கூடியபோது, வடமாகாண சபையின் உறுப்பினர் ஐயதிலக வடமாகாணத்தில் உள்ள சில ஊடகங்கள் தன்னிசையாக, அவதூறான செய்திகளை வெளியிட்டு வருவதனால், அதனைத் தடுக்கும் வகையில்,...

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலையடுத்து வடமாகாண சபைக்கு மூன்று புதிய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதன்படி வடக்கு மாகாண சபை உறுப்பினர்களாக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த தர்மலிங்கம் சித்தார்த்தன், முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர். சிவமோகன் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்டு மாகாண சபை உறுப்பினரான அங்கஜன் இராமநாதன் ஆகியோர்...

வட மாகாணத்திற்கு உட்பட்ட 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மாதாந்தம் 2000 ரூபாய் வாழ்வாதாரக் கொடுப்பணவு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உரிய அதிகாரிகளை வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தௌிவுபடுத்தியுள்ளார். அவர்களில் இருதய நோய் போன்ற நிரந்தர நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் தேவையைப் பொறுத்து 5000 ரூபா வரை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் அதிகாரிகளுக்கு...

தமிழர்களின் அரசியல் பலத்தை தமிழர்களாகிய நாம்தான் தீர்மானிக்க வேண்டும். அதற்காக, எதிர்வரும் பொதுத் தேர்தலின் போதும் எமது அரசியல் பலத்தை மீண்டும் நாம் நிரூபித்துக்காட்ட வேண்டும் என வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். கிளிநொச்சி, பூநகரி, வலைப்பாடு ஜெகமீட்பர் விளையாட்டுக் கழகத்தில் புதன்கிழமை (12) நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு...

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டுவர முடியாது. அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தில் அதற்கான அனுமதி இல்லை என்று வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தலில் முதலமைச்சர் நடுநிலை வகிக்கப்போவதாக அறிவித்தமையால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் சிலர், முதலமைச்சருக்கு எதிராக வடமாகாண சபையில் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக்...

"தமிழர்களாகிய நாம் நமது தேசியத்தைக் கட்டிக்காக்கவேண்டும் என்றால் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒவ்வொரு தமிழனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் தமது வாக்குரிமையை சரியான முறையில் பயன்படுத்தி வாக்களிப்பதன் மூலமே கட்டிக்காக்க முடியும்.'' - இவ்வாறு வடமாகாண போக்குவரத்து மற்றும் மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், "ஒவ்வொரு கிராமங்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் முடிவடையும் வரையில் தான் ஊமையாக இருக்கப்போவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். பிரம்மகுமாரிகள் நிலையத்தின் புதிய கட்டடத் திறப்புவிழா நிகழ்வில் இன்று செவ்வாய்க்கிழமை கலந்துகொண்டு திரும்பிய முதலமைச்சரிடம், 'உங்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று கொண்டுவரப்படவுள்ளதாக பேசப்படுகின்றதே, இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?' என்று ஊடகவியலாளர் ஒருவர்...

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படவுள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும் வெளிவந்த செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்படவேண்டும் என சில கட்சிகள் திட்டமிட்டுச் வெளிப்படுத்தும் வதந்தியான விடயமே இதுவெனவும் வடமாகாண அவைத்தலைவர் சுட்டிக்காட்டினார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின்போது தான்...

வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரனின் காணொளியில் சந்தேகம் இருப்பதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் மக்களோடு மக்களாக செயற்படுவதில்லை, தமது குடும்பங்களை இந்தியாவில் வைத்துக்கொண்டு செயற்படுகின்றனர் என, வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்திருந்தார். இதுதொடர்பிலான காணொளி சமூக வலைத்தளங்களில் ஒன்றான முகப்புத்தகத்தில் (பேஸ்புக்கில்) வெளியாகியூள்ளது. இதுதொடர்பில்...

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளருக்கு, வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணையை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரியே அவர் குறித்த கடிதத்தை அனுப்பியுள்ளார். ஜெனீவாவில் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வில், போர்க்குற்றங்கள் குறித்த...

போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறுவது தொடர்பான பொறிமுறை உருவாக்கும் கலந்துரையாடல்களில், வடக்கு மாகாணசபையும் உள்ளடக்கப்படுவது கட்டாயம்' என்று ஐக்கிய நாடுகள் சபை நம்புவதாக ஐ.நா. பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் மீண்டும் தெரிவித்துள்ளார். இலங்கை அரசு கேட்டுக்கொண்டதற்கு அமைய, எல்லாப் பங்காளர்களுடனும் கலந்துரையாடல்களை நடத்தி, பரந்தளவிலான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியை வழங்க ஐ.நா. முன்வந்தது. உள்நாட்டில் இடம்பெயர்ந்த...

வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் குருநாகல் தேர்தல் மாவட்டத்தில் சுயேட்சையாகப் போட்டியிடுவது கோமாளித்தனமான செயல் என வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். சிவாஜிலிங்கம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றமை மற்றும் வியாழக்கிழமை (23) நடைபெற்ற வடமாகாண சபை அமர்வில் கலந்து கொண்டமை தொடர்பில் அவைத்தலைவரிடம் விளக்கம் கேட்டவேளையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர்...

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திர மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு விசாரணைக்குழு ஒன்றை அமைத்துள்ளதென வட மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். வட மாகாண சபையின் 32 ஆவது அமர்வு நேற்று வியாழக்கிழமை கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் இடம்பெற்றது. அதன்போதே அவைத் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். வவுனியா...

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தயாரிக்கும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மூன்று முக்கியமான விடயங்கள் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என கோரி அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தின் விவரம் வருமாறு 01) எமது 65 வருடகால இலக்கும் கோட்பாடுமான வடக்கு-கிழக்கு இணைந்து தாயகத்தில்...

வட மாகாண சபை அமர்வு இன்று இடம்பெற்று வரும் நிலையில் அதில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடும் எம்.கே.சிவாஜிலிங்கம் பங்கேற்றுள்ளார். வட மாகாண சபை உறுப்பினர்களாக உள்ள த.சித்தார்த்தன், க.சிவநேசன், க.சிவமோகன், எம்.கே. சிவாஜிலிங்கம், இ.அங்கஜன், ஜயதிலக ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இவர்களில் ஐந்து பேர் தற்போதைக்கு விடுப்பு பெற்றுள்ளனர். ஆனால் சிவாஜிலிங்கம் மாத்திரம்...

சர்வதேச தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் லண்டனில் நேற்று நடத்திய “சிறப்புரையும் கலாச்சார மாலையும்” நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் இலங்கை என்ற நாட்டில் இரு தேசிய இனங்கள் உள்ளன திம்புக்கோட்பாட்டின்னடிப்படையில் தீர்வு தேவை என்று கூறிய அதேவளை கூட்டமைப்பினை தனது உரையில் கடுமையாக சாடினார். உரையின் முழு வடிவம் அமெரிக்க பயணத்தின்...

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரித்தானிய கிளையினருக்கும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று நேற்று பிரித்தானியாவில் நடைபெற்றது. இந்த விசேட சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரித்தானிய கிளை சார்பாக இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) ஆகிய கட்சிகளின் அங்கத்தவர்கள் பங்கேற்றன....

வடமாகாணத்தில் வதியும் மாற்றுத்திறனாளிகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் அவர்களின் தரவுகள் கணினி மயப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர்களின் மருத்துவ விபரங்கள் அடங்கிய விசேட அடையாள அட்டைகளை வழங்கவுள்ளதாகவும் வடமாகாண சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பில் அவ்வமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'வடமாகாணத்தில் விசேட தேவைக்குட்பட்டவர்கள் ஆயிரக்கணக்கானோர் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக, நடந்து முடிந்த யுத்தத்தினால்...

வடமாகாணத்தின் முதலாவது பிளாஸ்ரிக் மீள்சுழற்சி மையத்துக்கான அடிக்கல் நாட்டு விழா யாழ் மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட காக்கைதீவில் இன்று வெள்ளிக்கிழமை (10.07.2015) நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் வடமாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு கட்டிடத்துக்கான அடிக்கல்லை நாட்டி வைத்துள்ளார். மனித ஆரோக்கியத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் பெருங்கேடு விளைவிக்கும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் கழிவுகளை...

All posts loaded
No more posts