- Thursday
- August 20th, 2026
பதினெட்டு வயது மாணவன் இராஜேஸ்வரன் செந்தூரனின் தற்கொலை மரணத்தையிட்டு நாம் பெரும் அதிர்ச்சியும் ஆழ்ந்த கவலையும் அடைந்துள்ளோம். அவருடைய உணர்வுகளை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதை நாம் உணருகிறோம். அவரது இந்த செயல் சகல தரப்பினாலும் ஆழ்ந்த கவனத்தில் எடுத்துக்கொள்ளப் படவேண்டிய விடயம். அவரது குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த கவலையையும் அனுதாபத்தையும் தெரிவிக்க விரும்புகிறோம். இவ்விதமான ஒரு...
வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு நாளை சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா அறிவித்துள்ளார். இன்று காலை தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட மாணவன் செந்தூரனை நினைவு கூரும் வகையிலும் அவரது தற்கொலை காரணமாக ஏற்படக்கூடிய நிலைமைகளை தவிர்க்கும் பொருட்டும் இவ் விடுமுறை...
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட எம்.பி. சுமந்திரன் அவுஸ்திரேலிய வானொலி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்த குற்றச்சாட்டுக்களுக்கு முதலமைச்சர் அறிக்கை ஒன்றின் மூலம் பதிலளித்துள்ளார். முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கையின் முழுவிபரமும் பின்வருமாறு, இனப்படுகொலையும் நாமும் எனது அன்பிற்குரிய மாணவன் சுமந்திரன்...
கடந்த சில நாட்களாக வங்காள விரிகுடாக் கடலில் காணப்பட்ட தாழமுக்க வலயமானது தற்போது தாழமுக்கமாக வலுவடைந்துள்ளது. அது தற்போது இலங்கையின் வடகிழக்கிற்கு மிக அண்மையில் காணப்படுகிறது. இதன் தாக்கத்தினால் மேகமூட்டத்துடன் கூடிய மழை கொண்ட காலநிலை இன்றும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டிலும் சூழவுள்ள கடல் பிராந்தியங்களிலும் கடும் காற்றும் வீசும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக இலங்கைத்தீவின்...
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் சக தமிழ் அரசியல் கைதிகளின் மன அழுத்தங்களை ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கும் சர்வதேசத்திற்கும் தெளிவுபடுத்த வேண்டிய கடப்பாடு தமக்கு உள்ளதாக அண்மையில் பிணையில் விடுதலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்தனர். யாழ். ஊடக அமையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே இவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். அத்துடன் அவர்களால் “சாவின்...
என்னை கட்சியிலிருந்து நீக்கப்போவதாக கூறிய பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு தக்க பதில் வழங்க தான் தயாராகிக்கொண்டு உள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அண்மையில் அவுஸ்திரேலியா சென்ற போது அங்குள்ள வானொலி ஒன்றிற்கு, முதலமைச்சர் விக்னேஸ்வரனை கட்சியிலிருந்து நீக்குவதற்கு கட்சித் தலைமையிடம் கோரியுள்ளதாகவும், முதலமைச்சர் முன்னாள்...
தான் கூறும் கருத்துக்கள் பிளவுகளையும் பிரச்சினைகளையும் ஏற்படுத்துவதாக யாராவது கருதினால் அதற்கு தான் மனம் வருந்துவதாகவும் மனப்பூர்வமாக மன்னிப்பு கோருகின்றேன் .மக்களை குழப்பியதாக யாராவது குற்றஞ்சாட்டினால் அந்த குற்றச்சாட்டை தான் ஏற்றுக்கொள்வதாகவும் அதற்கு தயவுசெய்து தன்னை மன்னித்துக்கொள்ளுமாறும் - தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் அவுஸ்திரேலியாவில் வெள்ளிகிழமை இடம்பெற்ற...
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நடாத்தப்பட்ட தமிழீழத்தின் சமகால அரசியல் பற்றிய கருத்துரைகளும்இ கலந்துரையாடலும் எனும் நிகழ்வு கனடா றொரான்டோவில் 10.11.2015 அன்று பேராசிரியர் சந்திரகாந்தன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களும் வீடியோக் காணொளி மூலம் நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் ஆகியோர் பங்கேற்றிருந்தார்கள்....
யாழ்.மாவட்டத்தில் வைத்துக் கடத்தப்பட்டு காணாமல்போன லலித், குகன் வழக்கில் முன்னாள் தகவல் தொடர்பாடல் ஊடகத்துறை அமைச்சருக்கு யாழ்.நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. ஜே.வி.பி கட்சியிலிருந்து பிரிந்து சென்ற நிலையில் யாழ்.மாவட்டத்தில் அரசியல் பணியாற்றிய லலித், குகன் ஆகியோர் கடத்தப்பட்டுக் காணாமல்போயினர். இந்நிலையில் குறித்த சம்பவத்தையடுத்து முன்னாள் தகவல் தொடர்பாடல் ஊடகத்துறை அமைச்சராக இருந்த கெஹலிய ரம்புக்வெவல...
நயினாதீவு என்ற தீவின் பெயர் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சையைக் கவனத்தில் எடுக்குமாறு வடமாகாண அவைத் தலைவர் சிவீகே. சிவஞானம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவிற்கு கடிதமொன்றை எழுதியுள்ளார். அவர் எழுதிய கடிதம் பின்வருமாறு, "அத தெரண’’ என்ற இணையத் தளத்தில் நாகதீப என்ற தீவின் பெயரை நயினாதீவு என்று மாற்றம்...
இலங்கையிலிருந்து சென்ற யாழ்மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் M A சுமந்திரனுக்கெதிராக மெல்பேர்ணில் Scoresby, St Judes Community Centre க்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது. இதைத்தொடர்ந்து அந்த மண்டபத்தில் நடப்பதாக இருந்த பொதுக்கூட்டம் ரத்துச் செய்யப்பட்டதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருந்தனர். பிந்திய செய்தி குறித்த கூட்டம் பிறிதொரு இடத்தில்...
WT 1190F எனப் பெயரிடப்பட்டுள்ள மர்மப்பொருள் விண்வெளியில் இருந்து இலங்கை நேரப்படி இன்றுக்காலை 11.48 க்கு, இலங்கையின் தென் கடற்பகுதியில் விழும் என்று எதிர்வு கூறப்பட்டிருந்த நிலையில், அந்த மர்மப் பொருளானது பகல் 12.45 வரை விழவில்லை என்றும் அந்த மர்மப் பொருள் தொடர்பிலான தகவல்கள் எதுவும் தங்காலை கண்காணிப்பு மத்தியநிலையத்துக்கு கிடைக்கவில்லை என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஐக்கிய...
தேனீர் வழங்கும் போது,தேநீருக்குள் சீனியை கலக்காது,பிறிதொரு பாத்திரத்தில் சீனியை வைத்து தேவையான அளவு கலந்து கொள்ளும் விதத்தில்,ஹோட்டல்கள்,தேநீர்ச்சாலைகள்,சிற்றுண்டிண்டிச்சாலைகளில் வழங்குவது அவசியம், என சுகாதார அமைச்சின் விசேட சுற்று நிருபம் அறிவித்துள்ளது. நாளை(14) உலக சிறுநீரக நோயாளர் தினத்தை முன்னிட்டு ,இவ்விசேட விதிகள் நடைமுறைப்படுத்த உள்ளதாக ,சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் பாலித மகிபால அவர்கள் தெரிவித்துள்ளார்.சுகாதார...
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஏற்பாடு செய்யப்பட்ட கடையடைப்பு மற்றும் பணிப்புறக்கணிப்பை வெற்றியடையச் செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையின் முழுவிபரம் வருமாறு நீண்டகாலமாக விடுதலையின்றி அரசியல் கைதிகளாக சிறையில் வாடும் தமிழ் இளைஞர்கள் ”நல்லாட்சி” அரசு என்று கூறும் அரசாங்கமும்...
அரசியல் கைதிகளில் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் தொடர்பிலான தகவல்கள் உரியமுறையில் இன்னும் அவர்களின் பெற்றோர்களுக்கு தெரியவரவில்லை, இதனால் நேற்று பிணையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவரை மாத்திரமே இன்று அவர்களின் உறவினர்கள் சரீரப் பிணையில் அழைத்துச்சென்றனர். இவ்வாறு நேற்று சரீரப் பிணையில் செல்ல அனுமதிப்பட்டவர்களின் விபரங்கள் தரப்பட்டுள்ளன . 1. தங்கராஜா புவனேஸ்வரன் 2. சுந்தரலிங்கம் அகிலன் 3....
இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் தங்கள் விடுதலையினைக்கோரி தொடர்ந்து 5 தினங்களாக உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துவரும் நிலையில், குறித்த கைதிகளில் 18 கைதிகளின் உடல்நிலை மோசமாகியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே...
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் கட்டம் கட்டமாக விடுதலை செய்யப்படுவார்கள் என வடமாகாண சபை முதலமைச்சர் விக்கினேஸ்வரனிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தலைமையிலான குழுவினர் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். சந்திப்பு பற்றி முதலமைச்சர்...
அரசியல் கைதிகள் அனைவரதும் விடுதலையை வலியுறுத்தி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் வெள்ளிக்கிழமை(13-11-2015) திட்டமிட்டவாறு நடைபெறும் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் அறிவித்துள்ளார். அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது பல நூற்றுக் கணக்கானவர்கள் தசாப்தகாலமாக கொடிய பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் சிறைகளில் வாடும்போது ஒரு சிலருக்கு மட்டும் பிணைவழங்குவதன் மூலம் சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்கு...
பாடசாலை ஆசிரியைகள் தொப்புள் தெரிய சேலை அணியக்கூடாது என்ற விதியை கொண்டுவரப்போவதாக மேல்மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய விடுத்திருந்த அறிக்கை தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. பாடசாலை மாணவிகள் அணியும் நடன ஆடையைக் கூட தொப்புள் தெரிவது போல அணிய அனுமதிக்கப்போவதில்லை என்று முதலமைச்சர் விடுத்திருந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. தாம் அணியும் ஆடைகள்...
அமைச்சர் திலக் மாரப்பன தனது பதவியினை இராஜினாமா செய்ததனை தொடர்ந்து, அவருடைய அமைச்சுக்களானது, அமைச்சர் சகலா ரத்னாயக்க மற்றும் அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சகலா ரத்னாயக்க, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.மேலும், புனர்வாழ்வு, மீள்குடியமர்வு மற்றும் இந்து மதம் மத அலுவல்கள் அமைச்சர் டி.எம் சுவாமிநாதன்இ சிறைச்சாலைகள்...
Loading posts...
All posts loaded
No more posts
