- Thursday
- July 17th, 2025

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக வடமாகாணத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், அதனை முதலமைச்சர் பொறுப்பற்ற விதமாக கையாண்டதாகவும் வெளியாகிக் கொண்டிருந்த பொய்களுக்கு முதலமைச்சர் இன்றைய தினம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். கடந்த சில தினங்களாக ஊடகங்களில் ஐ.நா அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக வழங்கப்பட்ட நிதி தொடர்பில் முதலமைச்சர் மீது குற்றஞ்சாட்டும் செய்திகள் வெளியானதும், கடந்த 35வது...

எமது மக்களின் சகஜ வாழ்வுக்கு முட்டுக் கட்டையாக இருக்கும் காரணிகள் பல திடமாக ஐக்கிய நாடுகள் ஆய்வறிக்கையில் ஆராயப்படவில்லை என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். இன்றைய தினம் “பாதுகாப்பான உணவு மற்றும் நிலையான விவசாயம்” என்ற எண்ணக் கருவின் உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி மைத்திரிபால தலைமையில் இரணைமடுவிலிருந்து தொடக்கப்படுகின்றது....

நாங்கள் “நிலத்தில் எண்ணை, எண்ணை” என்று சில காலத்திற்கு முன்னர் கூக்குரல் இட்டுக் கொண்டிருந்தோம். ஆனால் எமக்கு நீரின் பாதிப்பு எண்ணையில் இருந்து வருவதிலும் பார்க்க பல மடங்கு அதிகமாக அசேதனப் பசளைப் பாதிப்பால் வருவது இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முக்கியமாகப் புகையிலைப் பயிர் செய்வோர் தீவிர அசேதனப் பசளைப் பாவிப்பால் நிலத்தடி நீரை வெகுவாகப் பாதிப்படையச்...

இந்திய தூதரக ஏற்பாட்டில் யாழ் இந்துக்கல்லுாரியில் இந்திய துணைத் தூதுவர் ஏ.நடராஜன் தலைமையில் சர்வதேச அகிம்சை தினம் நடைபெற்றுள்ளது. சபாலிங்கம் அரங்கில் இந்த நிகழ்வுஇடம்பெற்றது விழாவுக்கு சிறப்பு விருந்தினராக இலங்கை எதிர்கட்சித்தலைவர் இரா சம்பந்தன் அவர்களும் ஈழமக்கள் ஜனநாயக கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவான் வடக்கு மாகாண சபை...

போரால் பாதிக்கப்பட்ட மக்களுக் கான இந்திய வீட்டுத் திட்ட உதவியை வழங்குவதற்கு பாலியல் லஞ்சம் கோரப்பட்டுள்ளது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்தத் திட்டத்தின் கீழான பயனாளிப் பெண் ஒருவரிடம் இருந்து பாலியல் லஞ்சம் கோரப்பட்டுள்ளது. இது குறித்து இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தில் அந்தப் பெண் நேரடியாக...

யாழ்.இந்து கல்லூரி மாணவன் ஒருவர் கல்லூரிக்கு அருகில் உள்ள ஆட்களற்ற வீடொன்றில் இருந்து கை மணிக்கட்டில் வெட்டுக்காயத்துடன் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். கச்சேரி நல்லூர் வீதியை சேர்ந்த 14 வயது மாணவனே அவ்வாறு மீட்கப்பட்டு உள்ளான். மாணவன் மீட்கப்பட்ட வீட்டு கிணற்றில் இருந்து மாணவனின் பாடசாலை பை (bag) மீட்கப்பட்டு உள்ளது....

அமெரிக்காவின் திருத்த யோசனைக்கு 25 நாடுகள் இணை அனுசரணையை வழங்கியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை குறிப்பிட்டுள்ளது. இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில், அமெரிக்காவின் திருத்த யோசனையில் பல பரிந்துரைகள் இணைக்கப்பட்டுள்ளன. இலங்கையின் மனித உரிமை, நல்லிணக்கம், பொறுப்புக்கூறுதல் ஆகியனவற்றை, மேம்படுத்தல் என்ற தலைப்பின் கீழ் இந்த யோசனை இன்று ஜெனீவா மனித உரிமை பேரவையில்...

வடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினராக சிவக்கொழுந்து அகிலதாசை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நியமித்திருப்பது இயற்கைநீதிக்கு முரணான செயல் எனவும், மக்கள் வழங்கியஆணைக்கு மதிப்பளிக்காது செயற்படுவதாகவும் இதனை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் தவராசா சுட்டிக்காட்டியுள்ளார். மாகாண சபை உறுப்பினராக இருந்த அங்கஜன் இராமநாதன் பாராளுமன்ற உறுப்பினராக நியமனம்...

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30வது கூட்டத்தொடரில் இலங்கை இனப்படுகொலை விசாரணை தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய உரை யில் இவ்வாறு தெரிவித்தார் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தினால் நடாத்தப்பட்ட விசாரணையானது மட்டுப்படுத்தப்பட்ட காலப்பகுதியை மட்டும் விசாரித்து இருந்த போதிலும், இதுவரைகாலத்தில் வந்துள்ள அறிக்கைகளுள் இலங்கையில் பாரியளவில் இழைக்கப்பட்ட மிகக்கொடூரமான குற்றங்கள் பற்றிய தகவல்களை...

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு சர்வதேச சமூகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.அரசியல் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது தந்தையர்களை விடுதலை செய்ய கோரி இன்று யாழில் சிறுவர்கள் போராட்டம் நடாத்தி இருந்தனர்.அந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்து கொண்ட...

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 125 ஆவது ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு யாழ் இந்துக்கல்லூரி புகைப்பட கழகம் மற்றும் இளசுகள் அமைப்பின் ஒருங்கிணைந்த ஏற்பாட்டில் பழைய மாணவா்களான தமிழருவி கவிஞர் அ.உமாகரன் மற்றும் இசையமைப்பாளா் த.மதீசன் ஆகியோரின் கைவண்ணத்தில் “தாய் மடியே..” எனும் ஒளிப்பட இறுவட்டும், “தோழா” என்கின்ற இசைத்தட்டும் 26.09.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று கல்லூரியில்...

யாழ். கொக்குவில் பகுதியில் வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரிடம் ரவுடி கும்பல் நேற்று பிடிபட்டுள்ளது.இதன்போது குறித்த ரவுடிகளிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்கள்,கத்தி,வாள் உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அத்துடன் இக்குழுவில் 5 பேர் கைது செய்யப்பட்டு தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட கைத்தொலைபேசியில் இருந்து நீலப்படங்கள்,பாடசாலை மாணவிகளின் புகைப்படங்கள்...

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் கருத்துக்கள் உள்வாங்கப்படவேண்டும் மாறாக குற்றவாளிகளான இலங்கை அரசாங்கத்தின் விருப்பம் உள்வாங்க தேவையில்லை, சர்வதேச சமூகம் இது சம்பந்தமாக முடிவெடுக்க வேண்டுமென அமெரிக்கத் தீர்மானம் குறித்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கருத்து தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் ஐக்கிய நாடுகளின் மனிதஉரிமை ஆணையகத்தின் 30 வது கூட்டத் தொடர் நடைபெற்றுவரும்நிலையில் அதில் கலந்துகொண்ட தமிழ்த் தேசிய மக்கள்...

இலங்கை தொடர்பான உத்தேச வரைவுத் தீர்மானம் தொடர்பாக தமிழ் அரசியற் கட்சிகள், சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் தொழிற் சங்கங்கள் கூட்டறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளன. அறிக்கை வருமாறு . ‘இலங்கையில் நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும் மனித உரிமைகளையும் மேம்படுத்தல்’ எனும் தலைப்பில் செப்ரெம்பர் 30ம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கும்...

யாழ்ப்பாணத்தின் நிலைமைகள் குறித்தும், அங்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் நீதிபதி இளஞ்செழியன் பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியபோது தெரிவித்ததாவது: பாடசாலை மாணவர்கள் பகிரங்க இடங்களில் மது அருந்துவதாக முறைப்பாடுகள் வந்துள்ளன. அவ்வாறான மாணவர்களை சாராயப் போத்தல்களும் கையுமாகக் கைது செய்ய வேண்டும். மாணவர்கள் பாடசாலை நேரத்தில் சீருடையில் வீதிகளில் காணப்பட்டால் அவர்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்....

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் ஏற்பாட்டில் கல்லுாரியின் 125 வது ஆண்டு நிறைவை முனை்னிட்டு இன்று(26) இரத்ததானம் இடம்பெற்றது இதில் பெருமளவில் பழையமாணவர் பங்கேற்றனர். நிகழ்வு ஆறு திருமுருன் , சின்மய மிசன் சுவாமிகள் ஆகியோரின் ஆசியுரைகளுடன் ஆரம்பமாகியது . இன்றைய நாளில் விழாக்கொண்டாட்டங்கள் எதுவும் நடைபெறாத நிலையில் இந்த இரத்ததானம் மட்டும் நிகழ்ந்தது....

யாழ்ப்பாணம் இந்துக் கல்லுாரியின் 125 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு செம்டெம்பர் 26ம் திகதி சனிக்கிழமை மாபெரும் இரத்த தான முகாம் ஒன்றினை யாழ் இந்துக்கல்லுாரி யின் யாழ்ப்பாணம் பழையமாணவர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது . காலை 9 மணிதொடக்கம் 3 மணிவரை இடம்பெறவுள்ள இந்த இரத்ததானத்தில் பங்குகொண்டு கல்லுாரிக்கும் கல்லுாரிக்கு பெருமைசேர்த்தவர்களுக்கும் பெருமை சேர்க்குமாறு பழையமாணவர்சங்கம்...

யாழ் இந்துக்கல்லூரி 125 ஆண்டு நிறைவு விழாக்கொண்டாட்டத்திற்காக சர்ச்சைக்குரிய ரங்கா அவர்கள் விழா இணைப்பாளராக நியமிக்கப்பட்டு ரங்காவை முன்னிலைப்படுத்துவதால் பழையமாணவர்சங்கம் விழாவினை புறக்கணிக்கும் முடிவை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதே வேளை இன்று பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் வெளியிடப்பட இருந்த சிறப்பு மலரில் இணைப்பாளரின் வாழ்த்துச்செய்திகள் அடங்கிய பக்கங்கள் பழையமாணவர்களால் கிழித்தெறியப்பட்டு கல்லுாரி வீதி ஓரம் குப்பையில் வீசப்பட்டுள்ளது.முன்னதாக...

யாழ் இந்துக்கல்லூரி 125 ஆண்டு நிறைவு விழாக்கொண்டாட்டங்களை பழைய மாணவர்சங்கம் புறக்கணித்துள்ள நிலையில் இன்றைய(24) முதல் நாள் நிகழ்வுக்கு மத்திய கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவம்ச பிரதம விருந்தினராக வந்து கலந்து கொண்டார்.யாழ் இந்துக்கல்லுரிக்கு கல்வியமைச்சர் உலங்கு வானூர்தியில் வந்திறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. [caption id="attachment_50594" align="aligncenter" width="587"] Daya Aviation என்ற தனியார் நிறுவனத்தின் கெலியில் 300,000...

இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்று சொல்லமுடியாது என சுவிஸ் அமைதி அமைப்பினால் 18.9.2015 இல் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார் திரு.சுமந்திரன், திரு.சுரேன், சிங்கள வழக்கறிஞர் திரு.நிரன் மற்றும் தமிழ் அமைப்பினர், சுவிஸ் அரசாங்கத்தினர்,மே17 இயக்கம் , மனித உரிமை அமைப்பினர் சிங்கள சிவில் சமூகம் எனப்பலர் கலந்து கொண்ட உள்ளரங்க...

All posts loaded
No more posts