யாழ் இந்துவின் மைந்தர்களால் “தாய் மடியே, தோழா” இறுவட்டு வெளியீடு (Photos, Video)

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 125 ஆவது ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு யாழ் இந்துக்கல்லூரி புகைப்பட கழகம் மற்றும் இளசுகள் அமைப்பின் ஒருங்கிணைந்த ஏற்பாட்டில் பழைய மாணவா்களான தமிழருவி கவிஞர் அ.உமாகரன் மற்றும் இசையமைப்பாளா் த.மதீசன் ஆகியோரின் கைவண்ணத்தில் “தாய் மடியே..” எனும் ஒளிப்பட இறுவட்டும், “தோழா” என்கின்ற இசைத்தட்டும் 26.09.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று கல்லூரியில் வைத்து வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் கல்லூரியின் பிரதிஅதிபா் சதா நிர்மலன், வடமாகாணசபை உறுப்பினா் பா.கஜதீபன் உட்பட பலா் கலந்து கொண்டனா்.

யாழ் இந்துவின் பாரம்பரியம், பெருமைகள், சாதனைகள் என்பன அதிரும் கவி வரிகளாக தமிழருவி கவிஞர் அ.உமாகரன் அவர்களின் கைவண்ணத்தில் உருவாகி இருக்கின்றன. அதற்கு மதீசனின் அதிரடியான இசையும், நிசாந்தனின் அழகிய ஒளிப்பதிவும் சிறப்புச் சேர்க்கின்றன.

Related Posts