நாளை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு , ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சந்திப்பு!

நாளை (30)தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு , ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இரண்டு கட்சிகளும் சந்திக்கவுள்ளதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பில் கூட்டமைப்பு தரப்பில் அதன் தலைவர் சம்பந்தன் , மாவை சேனாதிராஜா , சுமந்திரன் , செல்வம் அடைக்கலநாதன் , சிறீதரன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர் என கூட்டமைப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. இது வரை கிடைத்த செய்திகளின் படி...

தமிழ் மக்கள் பேரவையில் முஸ்லீம் பிரதிநிதிகளும் உள்வாங்கப்படுவார்கள்! கலாநிதி லக்ஸ்மன்!

 தமிழ் மக்கள் பேரவையில் முஸ்லீம் பிரதிநிதிகளும் உள்வாங்க படுவார்கள் என தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரான  வைத்தியர் பி. லக்ஸ்மன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவையின் இரண்டாம் கட்ட கூட்டம் ஞாயிறு காலை யாழ்.பொது நூலக மண்டபத்தில் இடம்பெற்றது. அக் கூட்டத்தின் முடிவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். அது...
Ad Widget

தமிழ் மக்கள் பேரவையின் 2ம் அமர்வு முடிவடைந்தது! 2016 மார்ச் இறுதியில் பேரவையின் தீர்வு முன்மொழிவு வெளியிடப்படும்

தமிழ் மக்கள்  பேரவையின் இரண்டாவது கூட்டத் தொடரானது இன்று(27)  யாழ்.பொதுநூலகக் கேட்போர் கூடத்தில் வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கலந்து கொள்வாரா மாட்டாரா என்ற சர்ச்சைக்கு மத்தியில் இன்று கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதில் புதிய அரசினால் உத்தேசிக்கப்பட்டுள்ள ஐனாதிபதி முறைமை ஒழிப்பு ,  மற்றும் புதிய தேர்தல் சட்ட முறை சம்பந்தமான விடயங்கள்  தேசிய இனப்பிரச்சனைக்கான  தீர்வு...

2016 ஆம் ஆண்டு ‪‎தமிழ் மக்களுக்கு‬ சரித்திர ஆண்டு ! சுமந்திரன் கூறுகின்றார்.

பிறக்க இருக்கும் 2016 ஆம் ஆண்டு சரித்திரம் வாய்ந்த ஒரு வருடமாக மாறும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். இன்று யாழ்ப்பாணத்தில் அரசார்பற்ற நிறுவனங்களின் பிரதி நிதிகளுடான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.ஜனாதிபதி அவர்களின் யோசனையின் கீழ் புதியதொரு அரசியல் சட்ட பொறிமுறையினை...

சம்பந்தனும் விக்கினேஸ்வரனும் சந்தித்து பேசினர்!

கொழும்பில் இன்று பிப 4.30 மணி தொடக்கம் 7.30 மணிவரை வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரனுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கும் இடையில் அவசர சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. இருவருக்கும முரண்பாடுகள் உச்ச கட்டம் அடைந்துள்ள நிலையில் பல மாதங்களின் பின்னர் அவர்கள் இருவருக்குமிடையிலான அவசர சந்திப்பு இன்று இடம்பெற்றது. இச்சந்திப்பு தொடர்பாக முதல்வர் தெரிவித்தாவது...

இணையத்தளங்களில் அவதூறு செய்தி வெளியிட்ட சந்தேகத்தில் யாழில் ஒருவர் கைது

இணையத்தளங்களில் அவதூறு செய்திகளை வெளியிட்டவர் எனும் சந்தேகத்தில் நபர் ஒருவரை ,இணைய குற்றத்தடுப்பு பொலிசார் கைது செய்துள்ளனர். இணையத்தளங்கள் மூலம் அவதூறுக்கு உள்ளானவர்களை யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளை பதிவு செய்யுமாறும் பொலிஸார் கோரியுள்ளனர். குறிப்பிட்ட இணையத்தளங்கள் சில தனிப்பட்ட நபர்களுக்கு அவதூறு ஏற்படுத்தும் செய்திகளை பாலியல் குற்றம் சார்ந்த செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. அவை தொடர்பில்...

இனி ரொக்கட்டுக்களும் பூமிக்கு திரும்பும்! சோதனை முயற்சி வெற்றி!

இவ்வளவு காலமும் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கு பயன்படும் ரொக்கட்டுக்கள் மீள பூமிக்கு திரும்புவதில்லை விண்வெளியிலேயே எரிந்து விடும் ஆனால் இனி அவை பூமிக்கு திருப்பப்பட்டு மீள் சுழற்சிப்பாவனைக்கு பயன்படுத்தப்படும். அதற்கான சோதனை ‪#‎SpaceX‬  தனியார் விண்வெளிக்கலங்கள் உற்பத்தி நிறுவனத்தால் நேற்று (21) வெற்றி கொள்ளப்பட்டுள்ளது.  இதன் மூலம் விண்வெளிப்பயணத்துக்கான செலவு குறைக்கப்படுகின்றது. ரொக்கட்டுக்கள் புவியீர்ப்பு விசைகெதிராக...

மக்கள் சார்பான ஜனநாயக செயற்பாடுகளை வரவேற்கிறோம்!சம்பந்தன்

மக்கள் சார்பான ஜனநாயக செயற்பாடுகளை வரவேற்பதாகவும், அதேவேளை, கட்சியின் கொள்கை, கோட்பாடுகளுக்கு பாதகம் ஏற்படாத வகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் இணைத்தலைமையில் தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பு யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக கொழும்பு தமிழ் நாளிதழ் ஒன்று எழுப்பிய...

அகில இலங்கை ஆசிரியர் விளையாட்டுப்போட்டியில் சண் தயாளன் சம்பியன்!

நுவரெலியாவில் நடைபெற்ற 2015 ம் ஆண்டுக்கான அகில இலங்கை ஆசிரியர் விளையாட்டுப்போட்டியில் யாழ்ப்பாணத்திலிருந்து பங்கு கொண்ட உடற்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர் சண் தயாளன் அவர்கள் இரண்டு தங்கப்பதங்களையும் ஒரு வெள்ளிப்பதக்கதையும் வென்று  சம்பியன் பட்டத்தை தனதாக்கிக்கொண்டார். இவர் யாழ் இந்துக்கல்லூரியின் பழையமாணவனும் முன்னாள் உடற்கல்வி ஆசிரியருமாவார். சிறந்த துடுப்பாட்ட,  உதைப்பந்தாட்ட வீரரும் மத்தியஸ்தருமாகிய இவர் கல்லுாரிக்காலத்தில் மைதான...

இந்திய இராணுவத்தின் யாழ் வைத்தியசாலை படுகொலை ! Tears of Gandhi என்ற பெயரில் ஆவணப்படம் வெளியாகியது.

இந்திய இராணுவத்தின் யாழ் வைத்தியசாலை படுகொலை தொடர்பில்  Tears of Gandhi என்ற பெயரில் ஆவணப்படம் வெளியாகி உள்ளது. அமைதிப்படையாக வந்த இந்திய இராணுவம் 1987 யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் பொதுமக்கள் மீது புரிந்த படுகொலைகளின் சாட்சியமாக உடகவியலாளர் ஜெராவின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஆவணப்படம் இதுவாகும்

தேசிய_பாதுகாப்பு‬ அச்சுறுத்தல் என கூறுபவர்கள் . வடக்கிற்கு வந்து மக்களை சந்திக்கலாம் வாகன உதவி செய்து தருகிறேன் ! ஜனாதிபதி அறைகூவல்

அரச நத்தார் கொண்டாட்டம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (20) பிற்பகல் யாழ் மாநகர சபை மைதானத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஜனாதிபதி கருத்து தெரிவிக்கையில். அரசாங்கம் முன்னெடுக்கும் கொள்கையை புத்திஜீவிகள் புரிந்து கொண்டுள்ளனர். மக்களும் புரிந்துகொண்டுள்ளனர். புரிந்துகொள்ள முடியா சில அடிப்படைவாதிகள் கொழும்பில் ஒரு ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தி எதுவேணுமென்றாலும் விமர்சனங்களை முன்வைக்கலாம்...

தமிழ் மக்கள் பேரவை ஒரு இயக்கம்! இது அரசியல் கட்சி அல்ல! சீ.வி. விக்னேஸ்வரன்

தமிழ் மக்கள் பேரவை ஒரு மக்கள் இயக்கம். பலவிதமான மக்கள் குழுக்களும், ஒன்றியங்களும், கட்சிகளும் சேர்ந்து நல்லை ஆதீனம் போன்ற மதாச்சாரியார்கள் உள்ளடங்கலாகத் தொடங்கியுள்ள ஒரு மக்கள் இயக்கம் அது என முதலமைச்சர் இன்று பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார் இதற்கு தலைமை வகிக்க ஏற்பாட்டாளர்கள் குழு என்னை அழைத்தார்கள். உண்மையில் இணைத்தலைவராகத் தான் என்னை...

கூட்டமைப்பு எம்.பிக்களும் மாவட்ட இணைத் தலைவர்கள் !

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வடக்கின் ஒவ்வொரு மாவட்டங்களுக்கு இணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டு ஜனாதிபதியினால் கடிதம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்டத்துக்கு, மாவை.சேனாதிராஜாவும், கிளிநொச்சி மாவட்டத்துக்கு சி.சிறீதரனும், முல்லைத்தீவு மாவட்டத்துக்கு க.சிவமோகனும், மன்னார் மாவட்டத்துக்கு சாள்ஸ் நிர்மலநாதனும், வவுனியா மாவட்டத்துக்கு செல்வம் அடைக்கலநாதனும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்துக்கு க.சிறீநேசன் இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்....

வேலை நிறுத்த முடிவை முக்கிய தொழிற்சங்கங்கள் கைவிட்டன

நாளை மேற்கொள்ளப்படவிருந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடவுள்ளதாக, தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத் தலைவர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்ட யோசனை தொடர்பில் எதிர்ப்பை வௌியிடும் வகையில் நாளை நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு பிரதமருடன் இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றியளிக்காமையால், அதன் பின்னர் இடம்பெற்ற...

கூட்டமைப்பின் தலைவராக விக்னேஷ்வரனை நியமிப்பதில் ஆட்சேபனை இல்லை; சம்மந்தன்

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கட்சித் தலைமைப் பொறுப்பினை ஏற்கலாம் அது அவரது உரிமை, இதனை தீர்மானிப்பது கட்சியும் மக்களுமே என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கட்சி ஆதரவாளர்களுக்கிடையிலான கலந்துரையாடல் இலங்கை தமிழரசுக் கட்சியின் மாவட்டக் காரியாலயத்தில் இடம்பெற்றது. இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின்...

மருத்துவ முகாம்களை சென்னையில் நடாத்துவதற்கு யாழ்ப்பாண றோட்டறிக்கழகம் திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தின் பின்னரான காலப் பகுதியில் மருத்துவ முகாம்களை சென்னையில் நடாத்துவதற்கு யாழ்ப்பாண றோட்டறிக்கழகம் திட்டமிட்டுள்ளது.வருகின்ற டிசம்பர் 14ம் திகதியளவில் குழு பயணமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது இது பற்றி விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் ரில்கோ விருந்தினர் விடுதியில் இடம்பெற்றதுடன், பொது மக்களின் உதவி கோரி யாழ்ப்பாண றோட்டறிக்கழகம் ஊடக...

வடக்கில் மாவீரர் தினம் மிகவும் அமைதியான முறையில் அனுஷ்டிக்கப்பட்டது – பொலிஸ் பேச்சாளர்

வடக்கில் மாவீரர் தினம் மிகவும் அமைதியான முறையில் அனுஷ்டிக்கப்பட்டதாகவும் சட்டத்தை மீறியமைக்காக எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். நல்லூர் கோவிலில் உயிரிழந்த தமது உறவுகளுக்காக சிலர் விளக்கு ஏற்றி அஞ்சலி செலுத்தினர். இது அவர்களின் தனிப்பட்ட விடயமாதலால் பொலிஸார் இதில் தலையிடவில்லை. மாவீரர் தினத்தை முன்னிட்டு வடக்கில் எவ்வித...

மாவீரர் நினைவாக மரங்களைப் போற்றுவோம் : வடக்கு விவசாய அமைச்சர்

தமிழினத்தின் விடுதலைக்காக உயிர் துறந்த உத்தமர்களின் நினைவாலயங்கள் நிர்மூலமாக்கப்பட்டுள்ளன. ஆனால், நினைவுச் சின்னங்களை அழித்தாலும் மக்கள் மனங்களில் இருந்து அவர்களது நினைவுகளை எவராலும் அழித்துவிட முடியாது. அவர்களின் நினைவாக மரங்களை நாட்டிப் போற்றுவோம் என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். மாவீரர் தினமான இன்று உயிர் ஈகம் செய்த போராளிகளை நினைவு கொள்ளும்முகமாக இத்தாவில்...

மொஹமட் ஷியாம் கொலை: வாஸ் உட்பட 6 பேருக்கு மரண தண்டனை

கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் சியாம் கொலை வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட முன்னாள் பிரதி காவற்துறை மா அதிபர் வாஸ் குணவர்த்தன அவரது புதல்வன் ரவிந்து குணவர்த்தன உள்ளிட்ட 6 பேருக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை கொழும்பு மேல்நீதிமன்றம் சற்று முன்னர் வழங்கியது. இது தொடர்பான வழக்கு விசாரணை மேல்நீதிமன்ற தலைவர் நீதிபதி...

ஆளும்தரப்பும், அரசியல் தலைவர்களும் செந்தூரனின் உயிருக்குப் பதில் சொல்ல வேண்டும்! பொ.ஐங்கரநேசன்

தொடர் ஏமாற்றங்களும், விரக்;திகளும் வஞ்சிப்புகளும் எஞ்சியிருக்கும் எமது இளைய தலைமுறையை மீண்டும் வன்முறைப் பாதையை நோக்கி உந்துகிறது என்பதைச் சகல தரப்புகளும் புரிந்து கொள்ள வேண்டும் என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். செந்தூரனின் உயிரிழப்பு தொடர்பாக அவர்விடுத்திருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில், வலிகளோடும் துயர்களோடும் வாழ்ந்து வருகின்ற தமிழினம், தன்...
Loading posts...

All posts loaded

No more posts