- Thursday
- August 20th, 2026
இலங்கைக்கு நேற்று வருகை தந்திருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்யத் அல் ஹூசைன் இன்று 07-02-2016 காலை யாழ்.குடாநாட்டுக்கு வருகை தந்துள்ளார். அங்கு வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை காலை 9.30 மணியளவில் முதலமைச்சரது உத்தியோகபூர்வ காரியாலயத்தில் சந்தித்து விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. இவ் விசேட சந்திப்பில் வடக்கு முதல்வரால் தமிழ்...
நேற்று நடந்த சம்பவம் மகிழ்ச்சி தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டமை சந்தோசம் சிறிய விடயமாக இருந்தாலும் சிங்கள தமிழ் சகோதரத்துவத்தில் வேறுபாடுகளுக்குள்ளும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது சிங்கள சகோதரர்கள் ஒரு அடி எடுத்து வைத்தால் நாங்கள் பத்து அடி எடுத்து வைக்க தயாராக இருக்கிறோம் என வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று(5) பௌத்த விகாரையில் வழிபாடுகளை...
தமிழ் மக்கள் பேரவையுடனான வடக்கு மாகாண முதலமைச்சரின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாதெனத் தெரிவித்து வடக்கு மாகாண சபையின் அமைச்சர்களும் உறுப்பினர்களும் கையெழுத்திட்டு வெளியிட்டதாகக் கூறப்படும் அறிக்கையில் தாம் கையெழுத்திடவில்லையென 11 உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ் மக்கள் பேரவை நேற்று வெளியிட்ட இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்ட முன்வரைபு வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொள்ளக்கூடாதென வலியுறுத்தி வடமாகாண முதலமைச்சருக்கு கடிதமொன்றை மாகாண...
தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட முன்வரைபு வெளியீட்டில் பேரவையின் இணைத்தலைவர் வைத்தியர் லக்ஸ்மன் ஆற்றிய உரை தமிழ் மக்கள் பேரவை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டு ஏறத்தாழ ஒன்றரை மாதங்களில் மீண்டும் உங்கள் அனைவரையும் இந்த இடத்தில் சந்திப்பதில் தமிழ் மக்கள் பேரவை பெருமகிழ்ச்சி அடைகிறது.அதிலும் குறிப்பாக , எமது மக்களுக்கான அரசியல் தீர்வு முன்வரைபு வரைதல் எனும்...
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக மாநாடு இன்று யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்றது. மேற்படி மாநாட்டில் இரண்டு விடயங்கள் தொடர்பில் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களால் தௌிவு படுத்தப்பட்டது. முதலாவது யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இராணுவம் மேற்கொண்டதாகக் கூறப்படும் குற்றங்கள் தொடர்பில் ஒரு சில விசாரணைகளை நாடத்தி சர்வதேச மட்டத்தில் இராணுவத்தின் நற்பெயரை...
தமிழ் மக்கள் பேரவை எந்தக்காலத்திலும் ஒரு அரசியல் கட்சியாக மாற்றம்பெறாது என வடமாகாணசபை உறுப்பினர்கள் சிலருக்கு உத்தரவாதம் வழங்கியதன் பின்னரே தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு திட்ட வரைபு மக்களுக்கு வெளியிடும் நிகழ்வில் கலந்துகொள்கிறேன். தமிழ் மக்கள் புத்திஜீவிகள் தமிழ் மக்கள் சார்பில் நடவடிக்கை எடுத்து மக்களுக்கு நன்மையளிக்கும் அரசியல் வழிமுறையை முன்வைப்பதனை பிழையான...
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடையத்தில் தமிழ் மக்கள் பேரவையினால் புதிய அரசியல் தீர்வு ஒன்று இன்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் வைத்து வெளியிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் க.வி. விக்கினேஸ்வரன் கலந்து கொண்டார். தமிழ் மக்கள் பேரவையின் தேசிய இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வை கண்டடைவது தொடர்பிலான...
நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு கடுவலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித்த ராஜபக்ஷ மற்றும் சீ.எஸ்.என். தொலைக்காட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகச் பேச்சாளருமான ரொஹான் வெலிவிட்ட, நிஷாந்த ரணதுங்க உட்பட்ட ஐவரையும் 14 நாட்கள் (எதிர்வரும் பெப்ரவரி 11ஆம் திகதிவரை) விளக்கமறியலில் வைக்குமாறு கடுவலை...
தமிழ் மக்கள் பேரவையின் நிபுணர்குழுவால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வுத்திட்ட முன்வரைபை தமிழ்மக்கள் முன்னிலையில், சம்பிரதாய பூர்வமாக வெளியிடும் நிகழ்வு நாளை 31 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெறும். தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவரும் வடக்கு மாகாண முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெறும் இந் நிகழ்வில், பெருந் தொகையான...
7 ஆவது வருடமாக யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பமாகின்றது இக் கண்காட்சி 29,30,31 திகதிகளில் யாழ்.மாநகரசபை மைதானத்தில் முற்பகல் 10 தொடக்கம் இரவு 8 மணி வரை நடைபெறவுள்ளது. இக் கண்காட்சியில் நிர்மாணம் உபசரிப்பு உணவு மென்பானவகை, பொதியிடல், வாகனங்கள், தகவல் தொடர்பாடல், தொழில்நுட்பம் ,நிதியியல் சேவைகள் ஆடைத்துறை விவசாயம் நுகர்வோர்...
யாழில் நடைபெற்ற தேசிய தைப்பொங்கல் நிகழ்வில் பிரதம அதிதியாகலந்துகொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆற்றிய உரையின் முழு வடிவம் வருமாறு, தைப்பொங்கல் விழா என்பது யாழ்ப்பாணத்திற்கானதோ அல்லது இந்துக்களுக்கு மட்டுமானதோ அல்லது தமிழ் மக்களுக்கான நிகழ்வோ அல்ல முழு நாட்டுக்கும் பொதுவான தேசிய நிகழ்வாகும். நாம் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சூரிய பகவானை தரிசிக்கின்றோம்....
[caption id="attachment_105210" align="aligncenter" width="1024"] (File Photo)[/caption] வடக்கு மாகாண சபையின் விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் நேற்று தைப்பொங்கல் நாள் அன்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் என்ற பெயரில் பசுமைக் கட்சி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. ஐங்கரநேசன் மாகாண சபையில் முதலமைச்சர் சீ.வீ. விக்கினேஸ்வரனுக்கு மிகவும் நெருக்கமானவராகக் கருதப்படுபவர். இதனால் மாகாண...
இரண்டு நாள் விஜயமாக யாழ்ப்பாணம் வருகைதந்துள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மகிந்த அரமவீர ஞாயிற்றுக்கிழமை (10) மீனவர் சங்கங்களின் பிரதிதிகளைச் சந்தித்து கலந்துரையாடினார். அப்போது இந்திய மீன்பிடிப் படகுகளால் தமது கடல்வளங்கள் அழிக்கப்படுவதாகவும் தம்மால் தொழில் செய்ய முடியாதிருப்பதாகவும் யாழ்ப்பாண மீனவர்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர். அவர்களிற்கு பதிளித்து உரையாற்றும் போதே அமைச்சர்...
வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட பகுதிகளை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேவரன் இன்று(7) மாலை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இன்று மாலை 4 மணியளவில் முதலமைச்சர் மேற்படி பகுதிகளை பார்வையிட்டதுடன், தெல்லிப்பளை பிரதேச செயலர் சிறீமோகனன் மற்றும் முன்னாள் வலி, வடக்கு பிரதேச சபை தவிசாளர் சுகிர்தன் ஆகியோருடனும் மீள்குடியேறியுள்ள மக்களிடமும் தேவைகள் மற்றும்...
உலகத்தின் முதலாவது ஆளுடன் கூடிய தானியங்கி சிறிய ரக விமானத்தினை(Drone) சீன நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. உளவு பார்க்கும் சிறிய ஆளில்லா விமானங்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றோம்.மற்றும் Drone எனப்படும் கீழிருந்து கட்டுப்படுத்தப்படும் சிறிய ரக படமெடுக்கும் விமானங்களை பற்றிக்கேள்விப்பட்டிருக்கின்றோம் பார்த்திருக்கின்றோம் தற்போது Ehang என்ற சீன நிறுவனம் ஒன்று பயணி ஒருவரை காவிச்செல்லக்கூடிய தானியங்கி சிறியரக விமானத்தினை...
கடந்த 2015ம் ஆண்டு எனது அமைச்சுக்கு மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை (PSDG) மற்றும் பிரமாண அடிப்படையிலான நன்கொடை (CBG) மூலமாக 310.82 மில்லியன் ரூபா கிடைக்கப்பெற்றன. அதனடிப்படையில் கடந்த வருடம் ஏறத்தாழ 115 திட்டங்கள் நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டு; 31.12.2015 வரை அமைச்சு மற்றும் திணைக்களங்கள் ஊடாக செலவு செய்யப்பட்ட மொத்த நிதி 310.61 மில்லியன்...
அங்கம் -1 (குமார் பொன்னம்பலம் அவர்களின் 16ஆவது ஆண்டு நினைவு நாள் இன்றாகும். இதனை முன்னிட்டு இக்கட்டுரை தொடர் பிரசுரமாகிறது) குமார் பொன்னம்பலம் அவர்கள் படுகொலை செய்யப்பட்டு 16ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. ஆனால் கொலையாளிகள் இதுவரை தண்டிக்கப்படவில்லை, வழக்கு விசாரணையும் மூடப்பட்டு விட்டது. கொழும்பு நகரில் இருந்து கொண்டு தமிழ் மக்களின் நியாயபூர்வமான உரிமைகளுக்காகவும் மனித...
வடமாகாண விவசாய அமைச்சுக்கு உட்பட்ட திணைக்களங்களுக்கு கடந்த 2015ஆம் ஆண்டின் பாதீட்டில் ஒதுக்கப்பட்டிருந்த மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியில் 99.66 வீதம் செலவழிக்கப்பட்டிருப்பதாக வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஊடகங்களுக்கு விடுத்திருக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளார். வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன்; இன்று ஞாயிற்றுக்கிழமை (03.01.2016) வெளியிட்டிருக்கும் அந்த ஊடக அறிக்கையில், வடக்கு மாகாணசபையின் 2015ஆம்...
வடகிழக்கு தமிழர்களின் நீண்டகால் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு தமிழ் மக்கள் அவை உருவாக்கிய அரசியல் தீர்வு திட்டத்தை தயாரிப்பதற்கான உபகுழு இன்றைய தினம் உத்தியோகபூர்வமான தமது பணிகளை ஆரம்பித்துள்ளது.நல்லூர் மற்றும் யாழ்ப்பாணம் பேராலயங்களில் சிறப்பு வழிபாடுகளுடன் பணிகளைத் தொடங்கியுள்ளன. தமிழ் மக்கள் அவை மிகுந்த விமர்சனங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் மத்தியில் கடந்த வருடம் டிசம்பர் 27ம்...
உத்தேசிக்கப்பட்ட அரசியல் தீர்வில் தமிழ் முஸ்லிம் மக்களின் அபிலாசைகள் பூரணமாக நிறைவேற்றுவது குறித்தான முதலாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று (30.12.2015) தமிழ் அரசுக்கட்சிக்கும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் நடைபெற்றது. இந்த சந்திப்பு எதிர்க்கட்சித்தலைவரின் உத்தியோக பூர்வ இல்லத்தில் இன்று (30)இடம்பெற்றது. இந்தச்சந்திப்பு தொடர்ந்துமுன்னெடுக்கப்படும் என அறியவருகின்றது. சந்திப்பில் தமிழரசுக்கட்சி சார்பில் சம்பந்தன் சுமந்திரன் மாவை ஆகிய மூவரும்...
Loading posts...
All posts loaded
No more posts
