Ad Widget

கைதிகள் விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியுடன் வடக்கு மாகாண அமைச்சரவை சந்திப்பு

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் கட்டம் கட்டமாக விடுதலை செய்யப்படுவார்கள் என வடமாகாண சபை முதலமைச்சர் விக்கினேஸ்வரனிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தலைமையிலான குழுவினர் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

சந்திப்பு பற்றி முதலமைச்சர் தெரிவிக்கையில்.

இச்சந்திப்பு ஒன்றரை மணித்தியாலங்கள் இடம்பெற்றதாகவும் நல்லதொரு நம்பிக்கையான கலந்துரையாடலாக அமைந்தது முதலில் நாங்கள் தமிழ் கைதிகள் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடனோம்.
அதன்போது ஜனாதிபதி தனக்கு இருக்கும் சட்ட சிக்கல் பற்றி எடுத்துக்கூறினார்.

தனக்கு தடுத்து வைக்கப்பட்ட கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற அவா நல்லிணக்கம் இருப்பதாகவும் தன்னால் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதுள்ளதாகவும் இதனால் தனக்கு அரசியல் ரீதியான பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.


12219595_1459384140755844_4026991904982489072_n

எனினும் முதலமைச்சர் இதுவரை காலமும் தமிழ் அரசியல் கைதிகள் குடும்பங்கள் பல இன்னல்களை சந்தித்துள்ளார்கள் இதனை மனதுக்குள் எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். ஜனாதிபதி அதனை ஏற்றுக்கொண்டார்.

தான் பல தரவுகளை திணைக்களங்களில் கேட்டுள்ளதாகவும் அவை தனக்கு தரப்படவில்லையென குறிப்பிட்டதுடன் உடனே சட்டமா அதிபரை அழைத்து நான் கேட்ட தரவுகள் ஏன் இதுவரை தரவில்லை இதனால் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது என வினாவிய போது அவர் அதற்கு தான் சகல தரவுகளையும் திங்கட்கிழமை தருவதாகவும் சொன்னார். திங்கட்கிழமை உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும் வடக்கு இராணுவ பிரச்சனைகள் காணி விடுவிப்பு , மீள்குடியேற்றத்துக்காக எனக்கூறி காடழிக்கப்படுவது போன்ற விடயங்கள் முதலமைச்சரால் சுட்டிக்காட்டப்பட்டதாகவும் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.


நன்றி : காணொளி – IBC Tamil

Related Posts