- Sunday
- June 14th, 2026
வடக்கு, கிழக்கு மாகாணத்தில் வேலையில்லா பட்டதாரிகளின் போராட்டத்திற்கு தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். அதனை முகாமைத்துவ திணைக்களத்திற்கு அனுப்பி அதற்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான அமைச்சரவையின் அனுமதிகள் கிடைத்த பின்னர் அதற்கான விண்ணப்பக் கோரல்கள் இடம்பெறும் என்று சுமந்திரன் தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் செயலகத்தின் ஏற்பாட்டில் தமிழ்,...
இன்புளுவன்சா நோயாளிகளுக்கு வழங்கும் டெம்ப்லு மருந்துக்கு எந்தவொரு பற்றாக்குறையும் இல்லை என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஜெயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார். டெங்கு, வைரஸ் காய்ச்சல் மற்றும் இன்புளுவன்சா போன்ற நோய்களுக்கு வழங்கும் குறித்த மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம்சாட்டியிருந்தது. இது குறித்து அச் சங்கத்தால் வௌியிடப்பட்ட அறிக்கையிலேயே இந்த...
மீதொட்டமுல்லை குப்பை மேடு சரிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மக்கள் எல்லா பிரச்சினைகளுக்கும் என்னிடமே வருகின்றார்கள். நான் அமைச்சரும் அல்ல, அரசியல்வாதியும் அல்ல. ஒரு ஆளுநர் என வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று (18) மதியம் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஆளுநரிடம் பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு தொடர்பாக கேட்டபோதே இதனைத் தெரிவித்துள்ளார். பட்டதாரிகளுக்கு வேலை கொடுப்பது...
பல்கலைக்கழக ஊழியர் சங்கம் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.. 18.04.2017 தினசரியொன்றில் 'புதிய துணைவேந்தரிடம் பல்வேறு எதிர்பார்ப்புக்கள்' என்ற தலைப்பில் வெளியான செய்தியொன்றில் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் தெரிவித்ததாக சில விடயங்கள் வெளியாகியுள்ளன. மேற்படி விடயம் தொடர்பாக சங்கத் தலைவரோ அல்லது இணைச்செயலாளர்களோ பத்திரிகையில் வெளியிடும்பொருட்டு செய்தி எதனையும் வழங்கவில்லை என்பதோடு வெளிமாவட்ட மற்றும்...
கோடை வெயிலின் தாக்கம் ஆரம்பமாவதற்கு முதலாகவே ஏற்பட்டுள்ள வெப்பநிலையை அதிகரிப்பில் சிக்கி 21 பேர் பலியான அதிர்ச்சி சம்பவம் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் 43 பாகை செல்ஷியஸை தாண்டி வீசும் வெப்ப காற்றினால் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் சுமார் 21 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. மேலும்...
வடக்கு மாகாணத்தில் கணித, விஞ்ஞான பாடங்களுக்கு 308 வெற்றிடங்கள் காணப்படுகின்ற நிலையில், 294 பேரே இதற்கு விண்ணப்பித்துள்ளனர். இதனால் போட்டிப் பரீட்சை நடத்தாது, நேர்முகத் தேர்வை நேரடியாக நடத்தி நியமனங்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வடக்கு மாகாணப் பாடசாலைகளில் காணப்படுகின்ற கணிதம் மற்றும் விஞ்ஞானப் பாடங்களுக்குரிய வெற்றிடங்களை நிரப்புவதற்காக, பட்டதாரிகளிடமிருந்து மாகாணப் பொதுச்...
முல்லைத்தீவு கொக்குளாய் பகுதியில் சிங்கள மீனவர்களுக்கும் தமிழ் மீனவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. மீன்பிடிப்பதற்கான கரைவலைப்பாடு தொடர்பிலான அளவீட்டின் போதே, இந்த அமைதியின்மை இன்றைய தினம் ஏற்பட்டதாக அறியமுடிகின்றது. யுத்தத்தினால் கொக்குளாய் பகுதியில் பாரம்பரிய மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவந்த தமிழ் மீனவர்கள் இடம்பெயர்நத நிலையில், தமிழர்களின் கரைவலைப்பாடுகளை நீர்கொழும்பு, சிலாபம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்துவந்த...
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.விக்னேஸ்வரன் இயேசுக்கிறிஸ்துவை விமர்சித்து கருத்து வெளியிட்டமைக்கு பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது. பாலியல் வழக்கில் சிக்கியுள்ள பிறேமானந்த சுவாமியுடன் இயேசுவை ஒப்பிட்டு, வடக்கில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றுக்கு விக்னேஸ்வரன் வழங்கிய செவ்வி தொடர்பில் அந்த சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்...
காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களை நினைத்து தினமும் கண்ணீருடன் வாழும் தமக்கு, தமது உறவினர்களின் நிலை தொடர்பில் அறிவிக்குமாறு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) 58வது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இப் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள...
பேருந்தில் பயணித்த சிறுபான்மையினத்தைச் சேர்ந்த பயணி மீது கொலை வெறித்தாக்குதலொன்று மேற்கொள்ளப்பட்டு பேருந்தில் இருந்து இழுத்து வீதியில் வீசப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கடந்த 15 ஆம் திகதி இரவு 10.20 மணியளவில் பொலநறுவை, செவனப்பிட்டியவில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிச்சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்திலேயே இச்சம்பவம் நடந்தேறியுள்ளது. முச்சக்கரவண்டியொன்றை வீதிக்குக் குறுக்கே...
“விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை இந்தியாவே செய்தது, அது என்னுடைய யுத்தம் மட்டும் அல்ல மாறாக இந்தியாவிற்கும் இதில் பாரிய பங்குள்ளது” என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய விசேட செவ்வியில் கருத்து வெளியிட்ட மஹிந்த ராஜபக்ஷ, விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்துக்கு நான் இந்தியாவை உதவி செய்யச்...
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பிலான விசாரணைகளை உள்நாட்டு நீதிபதிகளை கொண்ட குழுவினராலேயே முன்னெடுக்கப்படும் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள சிதம்பரம் ஆலயத்தில் வழிபாடு செய்த அவர் இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். உள்ள நாட்டில் இடம் பெற்ற...
அச்சம் என்பது மடமையடா படத்தை அடுத்து தனுஷ் நடிப்பில் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தை இயக்கி வந்தார் கெளதம்மேனன். திடீரென்று ப.பாண்டி படத்தை இயக்கும் பணிகளில் தனுஷ் பிசியாகி விட்டதால், விக்ரம் நடிப்பில் துருவநட்சத்திரம் படவேலைகளை தொடங்கினார் கெளதம் மேனன். அதோடு, படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே லண்டன் சென்று அப்படத்திற்கான பர்ஸ்ட் லுக், டீசரை...
விடுதலைப்புலிகளின் புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் பொட்டு அம்மானின் சடலம் கிடைக்கவில்லை என்பது உண்மை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். “பொட்டு அம்மான் உயிருடன் இருக்கின்றாரா?” என்பது குறித்து கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில், இறுதி யுத்தத்தின்போது பொட்டு அம்மானின் சடலம் கிடைக்கவில்லை....
வடக்கு காணி விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு, கள விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது. அந்தக் கள விஜயத்தின் பின்னரே, காணிப்பிரச்சினைக்கு உரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்கமுடியும் என்றும் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அதன்பிரகாரம், நாளை 19ஆம் திகதி முல்லைத்தீவுக்கும் மறுநாள் 20 ஆம் திகதி காலையில் யாழ்ப்பாணத்துக்கும், மாலையில் கிளிநொச்சிக்கும் சென்று...
"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதவி விலகுவது தான் தமிழ் மக்களுடைய பிரச்சனைக்குத் தீர்வாக இருக்குமென்றோ அல்லது தமிழ் மக்களுடைய பிரச்சனைகளுக்குத் தீர்வை ஏற்படுத்துவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதவி விலக வேண்டுமென்றோ இருந்தால், நாங்கள் அதனைச் செய்யத் தயங்க மாட்டோம். பதவி விலகுவதென்பது எங்களுக்கு புதிய விடயமல்ல. " என்று, தமிழரசுக் கட்சியின் தலைவரும் த.தே.கூவின்...
கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இம் மாதத்தின் 15 நாட்களில் 44 பேர் டெங்கு தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளதாக, பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், “கடந்த மார்ச் மாதம் 120 பேர் டெங்கு தாக்கத்துக்கு உள்ளாகியிருந்ததாக கூறப்படுகிறது. கரவெட்டி மத்தி, துன்னாலை மற்றும் கரணவாய் பகுதிகளில்...
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் மலையாள நடிகர் மம்மூட்டி இணைந்து நடித்த தளபதி படம் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பேசப்படும் ஒன்று. தற்போது நடிகர் மம்மூட்டி ஒரு பேட்டியில் பேசும்போது ரஜினியை இயக்குவது தான் தன்னுடைய வாழ்நாள் கனவு என கூறியுள்ளார். மேலும் பல வருடங்களுக்கு முன்பு ´பூதக்கண்ணாடி´ என்ற படத்தின் கதையை ரஜினியிடம் கூறியதாகவும், ஆனால்...
நல்லாட்சி ஆரம்பிக்கப்பட்டு சில வருடங்கள் கடந்துள்ள நிலையில் ஜனாதிபதி பல தடவைகள் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளார். இருப்பினும் நயினாதீவு நாகவிகாரைக்கு இதுவரை விஜயம் மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில் நயினாதீவு நாகவிகாரை விகாராதிபதியின் வேண்டுகோளுக்கிணங்க நேற்றய தினம் ஜனாதிபதி நயினாதீவு நாக விகாரைக்கு சென்று சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார். அத்துடன், நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற...
Loading posts...
All posts loaded
No more posts
