- Sunday
- June 14th, 2026
அன்பின் வெளிப்பாடான முத்தம் விலைமதிப்பற்றது. எனவே, விலைமதிப்பற்ற முத்தத்தை மூலதனமாக வைத்து, கிஸ் எப்.எம். வானொலி நிலையம் வித்தியாசமான போட்டி ஒன்றை நடத்தியது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம், ஆஸ்டின் நகரின் பிரபலமான இந்த வானொலி நிலையம், ‘கிஸ் ஏ கியா’ என்ற பெயரில், பிரபல கியா கார் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ‘கியா ஆப்டிமா’ காரை...
முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்காலை அண்டிய வட்டுவாகல் பகுதி ஸ்ரீலங்கா ஆயுதப்படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொது மக்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவிக்க கோரி மக்களால் நேற்று 19-04-2017 ஆரம்பிக்கப்பட்டுள்ள தொடர்போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்து கொண்டு ஆதரவு வழங்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து கேப்பாபிலவு சென்று அங்க தொடர்ச்சியாக காணி விடுவிப்பிற்காகப் போராவரும்...
தமிழ் மக்களின் உரிமைக்காக அகிம்சை வழியில் உண்ணாநோன்பிருந்து தனது இன்னுயிரைத் தியாகம் செய்த அன்னை பூபதி அவர்களின் 29ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நேற்று 19-04-2017 மாலை 5.30 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் அன்னையின் திருவுருவப்...
தென்மராட்சிப் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கொடிகாமம் அல்லாரை J/322 கிராம சேவையாளர் ஒருவர் மதுபோதைக் கும்பலால் தாக்கப்பட்டு பாதிக்கப்பட்ட நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேற்படி கிராம சேவையாளரைக் கடமை நேரத்தில் அவரைத் தாக்கியவர்கள் தொடர்பாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட போதிலும் அவர்களை இதுவரை பொலிஸார் கைது செய்யவில்லை எனத் தெரியவருகின்றது....
சாவகச்சேரி குடாரிப்பு பகுதியில் ஒரு தொகை கேரள கஞ்சாவை கடத்த முயன்ற நபரொருவரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். இலங்கை கடற்படைக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே குநித்த நபர் 6.265 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சாவை மோட்டார் சைக்கிளில் கடத்தும் போது கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட நபரையும் மோட்டார் சைக்கிள் மற்றும் கேரள கஞ்சாவையும் மேலதிக விசாரணைக்காக மருதங்கேணி...
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் சிலர் இன்று காலை மீதொட்டமுல்ல பிரதேசத்துக்கு விஜயம் செய்துள்ளனர். கடந்த 14 ஆம் திகதி ஏற்பட்ட குப்பை மேட்டு அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுதாபங்களைத் தெரிவிக்கவும், அவர்களின் தேவைகளை கேட்டறிந்து, அம்மகளுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் நோக்கிலும் இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது. இன்றைய தினம் பாதிக்கப்பட்ட மக்களின் முகாம்களுக்கு விஜயம்...
அகிம்சை போராட்டத்தின் மூலம் தமிழர்களின் போராட்டத்தை முழு உலகத்தையும் திரும்பிப் பார்க்கச் செய்த அன்னை பூபதியின் 29ஆவது ஆண்டு நினைவு தினம், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் கிளிநொச்சி அலுவலகமான அறிவகத்தில் இடம்பெற்றது. இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்ற இந் நினைவுதின நிகழ்வில், வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான சு.பசுபதிப்பிள்ளை, ப.அரியரத்தினம் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டு,...
‘நல்லிணக்க அரசு என்று போலித்தனமாக தமிழ் மக்களை ஏமாற்றாதே’ என கோஷம் எழுப்பியவாறு, மன்னார் மாவட்டத்தில் கடற்படையினரின் வசமுள்ள முள்ளிக்குளம் மக்களின் குடியிருப்பு நிலங்களை விடக்கோரியும், படையினரை வெளியேற்ற வலியுறுத்தியும் மன்னாரில் பாரிய கண்டனப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. புனித செபஸ்தியார் பேராலயத்திலிருந்து இன்று (புதன்கிழமை) காலை ஆரம்பமான குறித்த பேரணி, பிரதான வீதியூடாக மன்னார் பஸார்...
“எமது பிள்ளைகள் ராணுவத்தினரின் பிடியிலேயே உள்ளனர். இதற்கான போதிய ஆதாரங்கள் காணப்படுகின்ற நிலையிலும் அவர்கள் ஏன் இன்னும் விடுவிக்கப்படவில்லை?” என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கிளிநொச்சியில் கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (புதன்கிழமை) 59ஆவது நாளாகவும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது....
விஜய் சேதுபதியும் நயன்தாராவும் ‘நானும் ரவுடிதான்’ படத்தில் இணைந்து நடித்திருந்தார்கள். தற்போது மீண்டும் இருவரும் புதிய படத்தில் இணையப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ இயக்குனர் பாலாஜி தரணீதரன் இயக்கும் ‘சீதக்காதி’ என்ற படத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இப்படத்திற்கான பூஜை சமீபத்தில் சென்னையில் போடப்பட்டது. இப்படத்தில் கதநாயகி இருந்தாலும் விஜய்...
80-களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தனது தனித்துவமான, எதார்த்தமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர் சாருஹாசன். இவர் நடிகர் கமல்ஹாசனின் அண்ணனுமாவார். அதேபோல், 80, 90-களில் காமெடியில் மட்டுமில்லாது, குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் ஜனகராஜ். சாருஹாசன் தமிழ் சினிமாவில் தற்போதும் சில படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆனால், ஜனகராஜோ சினிமாவை விட்டு...
தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் ‘வடசென்னை’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்தகையோடு படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டது. ‘விசாரணை’ படத்தை ஆஸ்கர் பரிந்துரைக்காக அனுப்ப காலஅவகாசம் தேவைப்பட்டதால் இந்த படத்தின் படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருந்ததாக இயக்குனர் வெற்றிமாறன் விளக்கம் கூறியிருந்தார். ஆனால், இப்படத்தில் நடிப்பதாக கூறி முன்னதாக கால்ஷீட் கொடுத்த விஜய் சேதுபதி, படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போன நிலையில்...
இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் கிரிக்கெட் ஜாம்பவனுமாகிய குமார் சங்கக்கார எதிர்வரும் சம்பியன் கிண்ண கிரிக்கெட் தொடரில் புதிய அவதாரமெடுக்கவுள்ளார். இதனை சர்வதேச கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமான அறிவித்துள்ளது. இங்கிலாந்தில் எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள சம்பியன் கிண்ண தொடரில் குமார் சங்கக்கார கிரிக்கெட் வர்ணனையாளராக...
மீதொடமுல்ல குப்பை மேடு சரிவு அனர்த்தத்துக்கு முகம்கொடுத்த சகலரும்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாக இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் அஞ்ஜலோ மெதிவ்ஸ் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வனுதாபச் செய்தியை அவர் பகிர்ந்துகொண்டுள்ளார். இந்த அனர்த்த நிலைமைகள் மிக விரைவாக சீராகி மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும் எனவும் பிரார்த்தித்துள்ளார்.
நாட்டில் தற்பொழுது காணப்படும் சூடான காலநிலை அடுத்த மாதம் முதல் வாரம் வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. எமது நாட்டுக்கு சூரியன் உச்சம் கொடுத்திருப்பதும், மாலை நேரத்தில் பெய்வதற்கிருந்த மழை பெய்யாமல் இருப்பதும், மழை மேகங்கள் உயர்ந்திருப்பதும், காற்று குறைந்து காணப்படுவதும் இந்த சூடான கால நிலைக்கு காரணமாகும் எனவும் திணைக்களம் மேலும்...
மருதங்கேணி கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் சுற்றுச்சூழலை பாதிப்படையச் செய்யும் என விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் மேற்படி திட்டத்தை உடனடியாக நிறுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றய தினம் (செவ்வாய்கிழமை) நடைபெற்ற மேற்படி கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் தொடர்பான சாத்தியகூறு குறித்த ஆய்வு கூட்டத்திலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இரணைமடு- யாழ்ப்பாணம் குடிநீர் திட்டத்திற்கு...
காணாமல்போனோர் அலுவலகத்தை அமைப்பது குறித்த சட்டம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரைவில் முடிவெடுப்பார் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். நேற்று (செவ்வாய்கிழமை) கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “காணாமல்போனோர் அலுவலகத்தை நிறுவும் சட்டம் கடந்த வருடம் இறுதிப்...
இயேசு கிறீஸ்துவை இறை தூதனாக ஏற்றுப் பணிந்து வருபவன் நான்!! திரிவுபடுத்தப்பட்ட செய்திக்கு வருத்தம்!!!
கிறீஸ்தவ மக்களின் மனங்களை உண்மையில் புண்படுத்தி விட்டதென்றால் அதற்காக நான் மனவருத்தம் அடைகின்றேன். ஆனால் மன வருத்தம் அடைய வேண்டிய விதத்தில் எதுவும் சொல்லப்படவில்லை என்பதே என் வாதம். என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டு உள்ளார். முதலமைச்சரால் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது,...
மின்னஞ்சல் (email) வடிவத்தில் புதிய கணினி வைரஸ் இணையளத்தளங்களில் பரவிவருவதாக, இலங்கை கணினி அவசர நடவடிக்கைச் செயலணி அறிவித்துள்ளது. ஆகையால், உங்களுடைய மின்னஞ்சலுக்கு வரும், சந்தேகத்துக்கு இடமான மின்னஞ்சலைத் திறக்கவேண்டாம் என்றும் அவ்வாறு இருதாலே, அது பாதுகாப்பானதாகும் என்றும் அந்த செயலணியின் தலைமை தகவல் பொறியியலாளர் ரொஷான் சந்திராகுப்தா தெரிவித்தார். இந்த வைரஸ், ரன்சொம்வேர் (Ransomware)...
கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில், வெள்ளை வானில் தமிழர்கள் இருவர் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயக்கவிடம் விசாரணை மேற்கொள்ள, கொழும்பு நீதவான் நீதிமன்றம் மீண்டும் அனுமதியளித்தது. இந்த வழக்கு, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஜெயராம் ட்ரொஸ்கி முன்னிலையில் நேற்று( 18) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது....
Loading posts...
All posts loaded
No more posts
