சரத் பொன்சேகாவின் வீட்டு வேலைகளுக்கு முன்னாள் போராளிகள்!

பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு அரசாங்கம் போர் வெற்றிக்காக அன்பளிப்பாக வழங்கிய காணியில் வேலை புரிவதற்காக முன்னாள் போராளிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த காணியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீட்டின் கட்டட வேலைக்கான உதவியாளர்களாக பணியாற்ற வந்தவர்களில் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் நான்கு பேர் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நாராஹென்பிட்டி ஹிங்...

விஜயகலாவே என்னை காப்பாற்றினார்! : சுவிஸ்குமார் சாட்சியம்

யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா கொலையுண்ட பின்னர் யாழ். வேலணை மக்கள் தன்னைப் பிடித்து மரத்தில் கட்டிவைத்து அடித்த போது, ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனே தன்னை காப்பாற்றி குடும்பத்திடம் ஒப்படைத்தார் என வித்தியா கொலை வழக்கின் பிரதான சந்தேகநபர் எனக் கருதப்படும் சுவிஸ்குமார் சாட்சியமளித்துள்ளார். வித்தியா கொலை வழக்கின் எதிரிகள் தரப்பு சாட்சியப்பதிவு நேற்று...
Ad Widget

பாடசாலை மாணவர்கள் 6 பேர் உயிரிழப்பு தொடர்பில் ஐவர் கைது!!!

யாழ். மண்டைத்தீவு கடற்பகுதியில் பாடசாலை மாணவர்கள் 6 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, 5 மாணவர்கள் கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக 18 மாணவர்கள் குறித்த கடற்பரப்பில் படகு சவாரி செய்திருந்த நிலையில், படகு கவிழ்ந்து 7 பேர் கடலுக்குள் விழுந்துள்ளனர். அவர்களில் 6 பேர் உயிரிழந்துள்ளதோடு, ஒருவர் நீந்தி கரையை அடைந்துள்ளார். இந்நிலையில்,...

கொழும்பில் பிளாட் வாங்கவே மாமியாரால் சீதனக் கொடுமை! : உயிரை மாய்த்­தார் ஆசிரியை

‘கொழும்­பில் பிளாட் வாங்­கு­ வ­தற்­குப் பணம் தேவை­யா க­வுள்­ளது. சீத­னத் தொகையை 25 லட்­சம் ரூபா­வாக அதி­க­ரித்­துத் தாருங்­கள்’’ என்று மண­ ம­க­னின் தாயார் மண­ம­க­ளி டம் கேட்­டுள்­ளார். அதன் பின்­னரே முன்­பள்ளி ஆசிரியை உயிரை மாய்த்­தார் என்று இறப்பு விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டது. ஆசி­ரியை நேற்­று­முன்­தி­னம் அவ­ரது சகோ­த­ரி­யின் வீட் டின் குளி­ய­ல­றை­யில் தூக் கில்...

இலங்கை கிரிக்கெட்டை நிர்வகிப்போருக்கு எதிராக கூச்சலிடுங்கள் : அர்ஜுன

இந்திய ரசிகர்கள் போல் வீரர்களுக்கு எதிராக கூச்சலிட்டு வசைபாடுவதை இலங்கை அணி ரசிகர்கள் நிறுத்தி விட்டு இலங்கை கிரிக்கெட்டை நிர்வகித்துவரும் அதிகாரிகளுக்கு எதிராக கூச்சலடித்து அடித்து வசைபாடுமாறு இலங்கைக்கு உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்த தலைவரும் அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். கொழும்பிலுள்ள பெற்றறோலியக் கூட்டுத்தாபனத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத்...

மக்களே அவதானம்! இலங்கைக்கு செங்குத்தாக சூரியன் பயணிக்கவுள்ளது!!

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி வரையில் இலங்கைக்கு சூரியன் உச்ச வெப்பநிலையை கொடுக்கும் சாத்தியம் காணப்படுகின்றது. இதனால் வடக்கில் மேலும் வெப்பநிலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது, அடுத்த மாதம் 6 ஆம் திகதி வரையில் இலங்கைக்கு செங்குத்தாக சூரியன் பயணிக்கவுள்ளது....

டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு ஊசி

டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு ஊசியை பதிவு செய்வதற்காக முன்வைக்கப்பட்டுள்ள மருந்து தொடர்பில் ஆய்வுகள் நடைபெறுகிறது. தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது தேசிய ஒளடதங்கள் அதிகார சபையின் தலைவர் டொக்டர் ஹசித டி சில்வா இந்த விடயத்தை குறிப்பிட்டார். இந்த மருந்து வேறு நாடுகளில் பயன்படுத்துவது தொடர்பான விபரங்களும் விரிவாக ஆய்வு...

வித்தியாவை கடற்படையே கொன்றது!

யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவை கடற்படையினரே கொன்றனர் என்றும், தம் மீது வீண்பழி சுமத்தி மக்களை நம்ப வைத்து விட்டனர் என்றும் வித்தியா கொலை வழக்கின் சந்தேகநபரான மகாலிங்கம் சசீந்திரன் சாட்சியமளித்துள்ளார். வித்தியாவின் கொலை தொடர்பான வழக்கு விசாரணைகள், யாழ் மேல் நீதிமன்றத்தில் ட்ரயல் அட் பார் தீர்ப்பாயம் முன்னிலையில், கடந்த இரண்டு மாத...

மாணவர்கள் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியானது!

யாழ்ப்பாணம் - மண்டைதீவு கடற்பரப்பில் இடம்பெற்ற படகு விபத்தில் பாடசாலை மாணவர்கள் உயிரிழந்தமைக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது. குறித்த மாணவர்கள் பயணித்த படகு உரிய தரத்துடன் இல்லாமை மற்றும் மாணவர்கள் மதுபோதையில் இருந்தமையே இந்த அனர்த்தத்திற்கு காரணம் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. உயர்தர பரீட்சைக்கு தோற்றிய 7 மாணவர்கள், பிறந்த நாள் கொண்டாட்டம் ஒன்றுக்காக...

வித்தியாவின் நகக் கீறலுடன் ஒருவர் உலாவுகின்றார்!

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் நகக் கீறல்களுடன் ஒருவர் வெளியில் உள்ளாரென்றும், சட்டவைத்திய அதிகாரிகளை மீள அழைத்து சாட்சி விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் எதிரிகள் தரப்பு வழக்குத் தொடுநர் ஆறுமுகம் ரகுபதி நீதிமன்றில் தெரிவித்துள்ளார். மாணவி வித்தியாவின் கொலை தொடர்பில், எதிரிகள் தரப்பு சாட்சியப்பதிவு நேற்று (திங்கட்கிழமை) ஆரம்பமானது. இதன்போது, ஜின்டெக் நிறுவனம் வழங்கிய அறிக்கையின்...

கட்டுப்பாட்டு விலை நீக்கத்தால் அரிசியின் விலை உயர்வு!

கடந்த வாரம் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலைகள் நீக்கப்பட்டதையடுத்து வர்த்தகர்கள் விலைகளை உயர்த்தி வருவதாகப் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். புறக்கோட்டை மொத்த வியாபாரத்தில் அரிசிக்கான மொத்த விற்பனை விலை 75 தொடக்கம் 92 ரூபாவாகவும், இறக்குமதி செய்யப்பட்ட நாடு, பொன்னி, வெள்ளை அரிசி முறையே 65,75,80 ரூபாவாகவும், உள்நாட்டு சிவப்பரிசி 78 ரூபாவாகவும் சம்பா 92 ரூபாவாகவும்...

மீண்டும் டெங்கு பரவும் அபாயம்

மழையுடனான காலநிலை காரணமாக மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதன் முன்னேற்பாடாக சுகாதார தரப்பினருடன் இணைந்து டெங்கு நுளம்பை ஒழிப்பதற்கு தாயாராகவுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சுகததாச தெரிவித்துள்ளார். எதிர்வரும் காலங்களில் நாட்டில் மழையுடனான காலநிலை நிலவவுள்ளமையால் டெங்கு நுளம்பு பரவுவதை முற்றாக தடுப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது...

சீதனக் கொடுமையினால் முன்பள்ளி ஆசிரியை ஒருவர் தற்கொலை!

யாழ்ப்பாணம் தென்மராட்சிப் பகுதியில் சீதன வன்கொடுமையால் முன்பள்ளி ஆசிரியை ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பெண் இன்னும் சில நாட்களில் திருமணத்துக்குத் தயாராக இருந்த நிலையில் மாப்பிள்ளை வீட்டார் ஏற்கனவே கேட்ட சீதனத்திற்கு மேலதிகமாகக் கேட்டமையினாலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய் தந்தையை இழந்த குறித்த பெண்ணின் இந்த...

வன்முறைகளுக்கு உளவியல் தாக்கங்களே காரணம்: முதலமைச்சர் சி.வி.

இளைஞர்கள் மத்தியில் காணப்படுகின்ற வன்முறைகளுக்கு உளவியல் தாக்கங்களே காரணம் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட உளநலமருத்துவ விடுதி மற்றும் வைத்தியவர்களுக்கான விடுதி என்பனவற்றை இன்று (திங்கட்கிழமை) காலை திறந்துவைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய முதலமைச்சர், ”உளநலப் பிரச்சினைகளால்...

வடக்கில் இடம்பெற்ற குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி!

வடக்கில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருப்பதாகவும் அதற்காக நேரடியாக தலையிட்டதாகவும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர நேற்று (27) தெரிவித்துள்ளார். இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 150 ஆவது வருட நிறைவை முன்னிட்டு பதுளையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பொலிஸ்மா அதிபர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது, வடக்கில்...

வடமராட்சியில் யானை தாக்கி ஒருவர் பலி!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் உடுத்துறைப் பகுதியில் நேற்று நள்ளிரவு யானைத் தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன. மேலும் இந்த தாக்குதலுக்கு இலக்கான இருவர் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரியவந்துள்ளது. நேற்று நள்ளிரவு வேளையில் வடமராட்சி கிழக்கு ஆழியவளை மற்றும் வெற்றிலைக்கேணிப் பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் காணப்பட்டதாகவும் இதனை அறிந்த...

இந்திய அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி! தொடரையும் கைப்பற்றியது!!

இந்தியா-இலங்கை இடையிலான 3 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று தொடரினை கைப்பற்றியது. கண்டி பல்­லே­கலை சர்­வ­தேச கிரிக்கெட் மைதா­னத்தில் நேற்று பகலிரவு போட்டியாக இடம்பெற்றது. நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 217...

உயிலங்குளம் வீட்டுத்திட்டத்தில் இருந்த மக்கள் வௌியேற்றம்

முல்லைத்தீவு - துணுக்காய் - உயிலங்குளம் இந்திய வீட்டுத்திட்டத்தில் உள்ள மக்கள், அடிப்படை வசதிகள் இன்மை மற்றும் வீடுகள் ஆபத்தான நிலையில் காணப்படுதல் காரணமாக, இப்பகுதியில் இருந்து வெளியேறி வருகின்றனர். முல்லைத்தீவு - துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள உயிலங்குளம் கிராமத்தில், இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் அமைக்கப்பட்ட 50 வீட்டுத்திட்டத்தில், தற்போது 20...

திலீபனின் நினைவிடத்தில் துப்பரவு பணி

யாழ். நல்லூர் பின்வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைத்தூபியில் துப்பரவு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. திலீபனின் நினைவுதினம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் திலீபனின் நினைவிடத்தில் துப்பரவு பணிகளை மேற்கொண்டனர். திலீபனின் நினைவுத் தூபி அமைந்துள்ள இடம், எவ்வித பாதுகாப்பு வேலிகளோ பராமரிப்போ இன்றி காணப்படுகிறது. இந்நிலையில், குறித்த...

ராணுவ பாதுகாப்புடன் பயணிக்கும் யாழ். மக்கள்!

ராணுவ கட்டுப்பாட்டில் காணப்படும் யாழ். பருத்தித்துறை – பொன்னாலை வீதியில் போக்குவரத்து செய்ய மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். எனினும், இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேரூந்துகளில் ராணுவத்தின் பாதுகாப்புடனேயே மக்கள் தமது பிரயாணங்களை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாக ராணுவத்தின் கட்டுப்பாட்டில் காணப்பட்ட மயிலிட்டி துறைமுகம்,...
Loading posts...

All posts loaded

No more posts