Ad Widget

மீண்டும் டெங்கு பரவும் அபாயம்

மழையுடனான காலநிலை காரணமாக மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதன் முன்னேற்பாடாக சுகாதார தரப்பினருடன் இணைந்து டெங்கு நுளம்பை ஒழிப்பதற்கு தாயாராகவுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சுகததாச தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் காலங்களில் நாட்டில் மழையுடனான காலநிலை நிலவவுள்ளமையால் டெங்கு நுளம்பு பரவுவதை முற்றாக தடுப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

மீண்டும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமாயின் வைத்தியசாலை வசதிகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

Related Posts