- Saturday
- May 16th, 2026
கொழும்பில் காலிமுகத் திடலிலும், கோட்டை உலக வர்த்தக மையம் பகுதியிலும் மணலுடன் கூடிய மழை பெய்ததாகத் தெரியவருகிறது. மழை நீருடன் மணலும் கலந்திருந்ததால், மழையில் நனைந்தவர்கள் அசௌகரியங்களுக்கு உட்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, அப்பகுதிகளில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்களில் மணல் படிந்திருந்ததைக் காணக்கூடியதாக இருந்தாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கோட்டையிலிருந்து குருநாகல் நோக்கிய பணித்துகொண்டிருந்த ரயில், பொல்ஹாவலையில் தடம்புரண்டமையால், வடக்குக்கான ரயில் சேவைகள் யாவும் பாதிப்படைந்துள்ளன என்று ரயில்வே கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் வருடத்திற்கு 500 பேருக்கும் அதிகமானோர் தற்கொலைக்கு முயற்சிப்பதாக தெரியவருகின்றது. இவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி, இறந்து வருவதாகவும், யுத்தத்தின் பின்னரே தற்கொலைக்கு முயல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாகவும் வைத்தியசாலை புள்ளி விபரங்களிலிருந்து தெரிவிக்கின்றது. இச்சூழ்நிலையை அவசியம் கருதி, யுத்தப் பாதிப்புகளுக்குள்ளான யாழ் மாவட்டத்தில் தங்களது அமைச்சின் கீழ் உளவியல் ரீதியிலான...
43வது தேசிய விளையாட்டு விழா மாத்தறை - கொடவில மைதானத்தில் நேற்யை தினம் பிரதமர் ரணில்விக்கிரம சிங்க மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிரி ஜயசேகர ஆகியோர் தரலமையில் ஆரம்பமானது. விழாவில் முதல் நாள் இடம்பெற்ற போட்டியில் வட மாகாணத்தை சேர்ந்த அனித்தா ஜெகதீஸ்வரன் புதிய சாதனையை நிலைநாட்டினார். வட மாகாணத்தை சேர்ந்த அனித்தா ஜெகதீஸ்வரன் தேசிய...
நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் கையொப்பமிடப்பட்ட புதிய 5,000 ரூபா நாணயத்தாள் வெளியிடப்பட்டுள்ளது. நாணயத்தாள் அச்சிடும் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மார்ட்டின் சதர்லேண்ட் மூலம் குறித்த நாணயத்தாள் நிதி அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு திறைசேரியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுள்ளது. இது குறித்து நிதி அமைச்சர் “எனது கையொப்பத்துடனான முதல் 5,000 ரூபா நாணயத்தாள்” தனது...
உலகின் நீளமான திருமணச்சேலை எனும் கின்னஸ் சாதனைப் புரிவதற்காக 250 பாடசாலை மாணவர்களைப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாகத் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. கண்டி, கண்ணொருவ பிரதேசத்தில் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) குறித்த திருமண வைபவம், மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தலைமையில் நடைபெற்றது. இதன்போது, கின்னஸ் சாதனையை இலக்காக்கொண்டு,...
யாழ். மாவட்டத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வாக நீரை சேகரிக்கும் திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. வடமராட்சி களப்புக்கு அருகில் 78 சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் மழை நீரை சேகரித்து பாதுகாப்பாக பயன்படுத்துவதே அந்த திட்டம் எனவும் பிரதமரின் அலுவலகம் கூறியுள்ளது. பிரதமர் நியமித்துள்ள வடக்கு மாகாண அபிவிருத்திக்குழு மற்றும் கொள்கை...
சட்டவிரோதமாகப் படகு மூலமாக நியூசிலாந்துக்குச் செல்வதற்காக, இந்தோனேசியாவில் தங்கியிருந்த மட்டக்களப்பைச் சேர்ந்த 28பேர் இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள், கட்டுநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையத்தில், குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு, மினுவாங்கொடை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். அவர்களைத் தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப்பிணை யில் விடுதலை செய்ய மினு வாங்கொடை நீதிவான் நீதிமன்ற நீதிவான்...
நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் பணியாற்ற வைத்தியரின்மையினால் நோயாளர் பெரிதும் சிரமம் அடைந்துவருகிறார்கள். மேற்படி வைத்தியசாலையை நம்பி 4ஆயிரத்து 600 பேர் உள்ள நிலையில் சீரான வைத்தியரின்மையில் வைத்தியசாலை இயங்கி வருகிறது. இங்கு சிகிச்சை மேற்கொள்வதற்கு வருகை தரும் நோயாளர்கள் வைத்தியரின்மையால் திரும்பிச் செல்கின்றனர். இதனால் அவர்களின் உடல்நிலை மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுகின்றது. நெடுந்தீவு மக்கள் இம்மோசமான...
தமிழ் மக்களின் விடுதலைக்காக சாகும்வரை உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்த, தியாக தீபம் லெப்டினன் கேணல் திலீபன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தொடரில் நினைவுகூரப்பட்டுள்ளார். சட்டத்தரணி க.சுகாஸ் அவர்களினாலேயே தியாக தீபம் நினைவுகூரப்பட்டார். கூட்டத்தொடரில் உரையாற்றியிருந்த சட்டத்தரணி சுகாஸ், ”தியாக தீபம் திலீபனை மனதிலே நினைத்து” என தனது உரையினை ஆரம்பித்தார். இவர்...
பல்கலைக்கழகங்களுக்கான பிரவேசத்தில் ஆண் மாணவர்களின் தொகை, கடந்த காலங்களை விடவும் கணிசமான அளவு வீழ்ச்சியடைந்திருப்பதாக தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம் தெரிவித்துள்ளார். இந்த வீழ்ச்சிக்கு, தகவல் தொழில்நுட்பத்தை மாணவர்கள் தவறாக பயன்படுத்துவதும் காரணமாக அமையலாம் என்றும் அவர் கூறினார். இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் ஒன்லைன் ஊடாக பரீட்சை முடிவுகளை பார்ப்பதுபோன்ற ஒரு செயற்திட்டத்தை,...
கண்டியில் நேற்று நடைபெற்ற திருமணம்ஒன்றில் மணப்பெண் உலக சாதனைபடைத்துள்ளார்.மணமகள் 3,200 மீற்றர் நீளமான ஒசரிபுடவையை அணிந்து சாதனையை பதிவுசெய்துள்ளார்.. நேற்று முற்பகல் இந்த தம்பதியினர்கன்னொருவ சந்திக்கு வந்த பின்னர்,கின்னஸ் சாதனையை கண்காணிக்கும் குழுமுன்னிலையில் , ஒசரி புடவையின் நீளம்அளவிடப்பட்டுள்ளது. குறித்த புடவை கண்டி கெடம்பே சந்தியில்இருந்து ஈரியகம சந்தி வரை நீளமுடையதுஎன கணக்கிடப்பட்டுள்ளது. பாரவூர்தியொன்றில் கொண்டு...
தமிழ் மக்கள் தாம் இலங்கையர்களாகவும், தமிழர்களாகவும் இருப்பதற்காக உணர்வுகளுடன் இருந்ததை முன்னாள் தமிழ்த் தலைவர்களும், சிங்களத் தலைவர்களும் ஆரோக்கியமாக எடுத்துக்கொள்ளாததன் விளைவாகவே எமது நாடு வெறுக்கத்தக்க வன்முறைகளையும், பிரச்சினைகளையும் சந்திக்கும் நிலைமை ஏற்பட்டது என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இன்று அரசியலமைப்பு பேரவையில் தெரிவித்தார். பிரதமர் தலைமையிலான வழி...
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 2 ஆவது ஒருநாள் போட்டியில் 50 ஓட்டங்களால் வெற்றிபெற்ற இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்குமிடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டி கொல்கத்தாவின் ஈடன்காடன் மைதானத்தில் இடம்பெற்றது. இப் போட்டியில் நாணயச் சுழற்சியில்வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது....
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் மியன்மார் படுகொலைகளை நிறுத்தக் கோரி நேற்று காலை யாழில் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது. யாழ் கோவில் வீதியின் கைலாச பிள்ளையார் ஆலயம் முன்பாகநேற்று முற்பகல் 11 மணிக்கு இப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் இணைந்து முன்னெடுத்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவிலானோர் கலந்து கொண்டிருத்தனர். இவ்வாறு...
10 ஆயித்து 100 ரூபா கனேடியன் டொலர் போலி நாணயத்தாள்களை மாற்ற முற்பட்ட இருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்.பிரதிப் பொலிஸ்மா அதிபரின் தலைமையிலான புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்.நகரில் உள்ள நாணய மாற்று நிலையத்திற்கு இளைஞர் ஒருவர் 10 ஆயிரத்து 100 ரூபா பெறுமதியான கனேடியன்...
வலிந்து காணாமல் ஆக்கப்படுதலிலிருந்து மக்களை பாதுகாக்கும் சர்வதேச சமவாய திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தை அரசாங்கம் ஒத்திவைத்துள்ளமையானது, இலங்கை தீவில் தமிழர்களை நான்காம் தர பிரஜைகளாக அரசாங்கம் காட்டியுள்ளதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் அதன் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ராணுவம் மற்றும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த அமைப்பினரால் இத் திருத்தச் சட்டமூலத்திற்கு எழுந்த...
முன்னாள் ராணுவ தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித ஆதாரமும் இல்லையென இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றில் நேற்று (வியாழக்கிழமை) உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, ஜகத் ஜயசூரிய தொடர்பில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வெளியிட்டுள்ள கருத்துக்கள் யாவும் அவருடைய தனிப்பட்ட கருத்துக்கள் என்றும்...
பிரபாகரனுக்கு நந்திக்கடலில் ஒரு நினைவுத்தூபி அமைக்கப்பட வேண்டும் என்று ஞானசார தேரர் கூறியமை துட்டகைமுனு அன்று கையாண்ட விடயமாகும் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு – ஏறாவூர்ப்பற்று சவுக்கடி தமிழ் கிராமத்தில் இடம்பெற்ற தமிழினப் படுகொலையின் 27ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை...
பிளவுபடாத, பிரிக்கப்பட முடியாத ஐக்கிய இலங்கை என்ற உறுதியான கட்டமைப்புக்கு அமைவாக, யாவரும் சுயமாக விரும்பி ஏற்றுக்கொள்ள கூடிய வகையில் அரசியல் அமைப்பு உருவாக்கப்படும் என எதிர்க கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். உத்தேச அரசியல் யாப்பிற்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை நேற்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றில் சமர்பிக்கப்பட்ட பின்னர் உரையாற்றிய போதே சம்பந்தன் இதனை...
Loading posts...
All posts loaded
No more posts
