Ad Widget

ஐ.நாவில் நினைவுகூரப்பட்ட தியாக தீபம் லெப்டினன் கேணல் திலீபன்!

தமிழ் மக்களின் விடுதலைக்காக சாகும்வரை உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்த, தியாக தீபம் லெப்டினன் கேணல் திலீபன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தொடரில் நினைவுகூரப்பட்டுள்ளார்.

சட்டத்தரணி க.சுகாஸ் அவர்களினாலேயே தியாக தீபம் நினைவுகூரப்பட்டார்.

கூட்டத்தொடரில் உரையாற்றியிருந்த சட்டத்தரணி சுகாஸ், ”தியாக தீபம் திலீபனை மனதிலே நினைத்து” என தனது உரையினை ஆரம்பித்தார்.

இவர் தனது உரையிலே ஸ்ரீலங்கா அரசாங்கம் தமிழ் மக்களுக்கு மேற்கொள்ளத்தவறிய விடயங்களினைச் சுட்டுக்காட்டியிருந்தார். கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11ஆம் திகதி ரொய்ட்டர் செய்திச் சேவையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்பாக தெரிவிக்கப்பட்டிருந்த விடையங்களினைச் சுட்டிக்காட்டியிருந்தார்.

அதன்படி, ”மைத்திரிபால சிறிசேன இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தின்கீழ் பாதுகாப்பு அமைச்சராக இருந்துள்ளதோடு தற்பொழுதும் அவரே பாதுகாப்பு அமைச்சராக இருக்கின்றார்.

இறுதிப் போரின்போது ஸ்ரீலங்கா ஆயுதப் படைகளிடம் சரணடைந்தவர்களை விடுவிப்பதாக இந்த ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் திகதி உறுதியளித்திருந்தார். ஆனால் இதுவரை எதுவுமே நடக்கவில்லை. ஆகவே இது தொடர்பாக வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதற்காக தயவு செய்து முயற்சியினை மேற்கொள்ளவேண்டும்” என்றும் அவர் இதன்போது கோரிக்கையினை முன்வைத்தார்.

Related Posts